Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. செம்மரங்களை வெட்டச்சென்றதாகக் கூறி 84 தமிழர்கள் ஆந்திராவில் கைது பகிர்க ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டிக்கடத்துவதற்காகச் சென்றதாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த 84 பேரை ஆந்திர காவல்துறை கைதுசெய்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் என்ற இடத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். செம்மரங்களை வெட்ட கூலித் தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, செம்மர கடத்தல் தடுப்பு காவல்துறையினர், திருப்பதி - கடப்பா சாலையில் வந்த ஒரு லாரியை சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு துரத்திச் சென்றனர். …

  2. ஜெயலலிதாவின் மரண விசாரணை: ஆணையகத்தில் முன்னிலையானார் பொன்னையன் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் ஆணையகத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொன்னையன் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பெறுவதற்காக ஓய்வுபெற்ற ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகம் சம்மனொன்றை பொன்னையனுக்கு அனுப்பியுள்ளது. அதனடிப்படையிலேயே அவர் இன்று ஆணையகத்தில் முன்னிலையாகியுள்ளார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது, அவர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் தொடர்பிலேயே ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பொன்னையனிடம் பெறும் பதில்களை வாக்கும…

  3. சசிகலா பரோல் மனு நிராகரிப்பு! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பரோல் கோரிக்கை மனுவை கர்நாடகச் சிறைத்துறை நிராகரித்தது. கணவர் நடராஜனின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தனக்கு 15 நாள்கள் பரோல் விடுப்பு அளிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் கர்நாடகச் சிறைத்துறைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு சிறைத்துறை அதிகாரிகளின் பரிசீலனையில் இருப்பதாகவும், அதுதொடர்பாக அக்டோபர் 5-ம் தேதியன்று கர்நாடகச் சிறைத்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், சசிகலாவின் பரோல் மனு கோரிக்கையைச் சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளன. கணவர் உடல்நிலையைக் காரணம் காட்டி பரோல் கோரியுள்…

  4. பழனிசாமி அரசை மிரட்டும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்! அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும், அரசை மிரட்ட துவங்கியுள்ளனர். சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, பன்னீர்செல்வத்திற்கு ஆதர வாக, 12 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்கள், பழனிசாமி அரசுக்கு எதிராக, பகிரங்க போர்க்கொடி துாக்கி உள்ளனர். பழனிசாமி அரசுக்கு, 122 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதில், தினகரனுக்கு ஆதரவாக, எட்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்கள், பழனிசாமிக்கு கட்டுப்படாமல், கட்சிக்குள் தனி அணியாக செயல்படுகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எம்.எல்.ஏ., க்கள், 27 பேர், தங்கள் சமுதாயத்திற்கு, கூடுதலாக அமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர். அவர்களும், தனி அணியாக உள்ளனர். முன்னாள் அம…

  5. இந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சியில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறப்பு இந்தியாவிலேயே முதன் முறையாக திருச்சியில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா முன்னிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த், குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையத்தை திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஆனந்த், இந்தியாவில் 11 இடங்களில் குழந்தைகளுக்கான காவல் நிலையம் திறக்க உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் தமிழகம் 7வது இடத்தில் இருப்பதாக தெரிவித்த அவர், குழந்தைகள் காவல் நிலையங்கள் …

  6. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அனைவருக்கும் வீடு: முதல்வர் பழனிசாமி மத்திய அரசுடன் இணைந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வீடில்லாத மக்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், தலைவாசலில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழக முதல்வர் தொடக்கி வைத்தார். இதன்பின்னர் அங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்களுக்கு நிவர்த்தி காணப்படும். பெரும்பாலான மனுக்கள் முதியோர் ஓய்வூதிய கோரிக்கை மனுக்களாக உள்ளன. வயது முதிர்ச்சியால் உழைக்க முடியாத முதியோரு…

  7. இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் ஜெயலலிதா 20 நிமிடம் பேசினாரா: விசாரணையில் கேள்வி சென்னை:''சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 2016 டிச., 3ல், எய்ம்ஸ் மருத்துவர்களுடன், ஜெயலலிதா, 20 நிமிடம் பேசினார். மறுநாள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுஉள்ளது,'' என, சசிகலா வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் தெரிவித்தார். ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், சசி உறவினர்கள், கிருஷ்ணப்பிரியா, விவேக் மற்றும் ஜெ., உடலை, 'எம்பார்மிங்' செய்த, டாக்டர் சுதா சேஷய்யன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி,வெங்கட்ரமணன், அரசு மருத்துவர், சுவாமிநாதன் ஆகியோரிடம், நேற்று குறுக்கு விசாரணை நடந்தது.விசாரணைக்கு பின், ராஜா செந்துார் பா…

  8. டாஸ்மாக் கடையை துவம்சம் செய்த பொதுமக்கள்! அதிர்ந்துபோன திருப்பூர் போலீஸ் திருப்பூர் முதலிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை, பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து அடித்து நொறுக்கினார்கள். இதில், ஏராளமான பெண்களும் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் அகற்றப்பட்டன. ஏற்கெனவே, நீண்ட நாள்களாக தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் முதலிப்பாளையம் பகுதியில், டாஸ்மாக் கடை ஒன்று இருந்து வருகிறது. …

  9. சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கேன் குடிநீர் நிரப்பும் நிறுவனங்கள் தரச்சான்றிதழ் பெற்றுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு பதிலளிக்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தரமற்ற வகையில் குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதையடுத்து, பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக கொண்டு பசுமை தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து தரமற்ற குடிநீர் நிரப்பும் நிறுவனங்களை மூட மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை, புறநகர் பகுதிகளில் தரமற்ற 200க்கும் மேற்பட்ட குடி…

  10. தமாகா போட்டியிடும் 26 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு வாசன் | கோப்புப் படம் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். அக்கட்சி போட்டியிடும் 26 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்: 1. ராயபுரம் - பிஜூ சாக்கோ 2. மைலாப்பூர் - ஏ.எஸ். முனவர் பாட்சா 3. காட்பாடி - டி.வி.சிவானந்தம் 4. அணைக்கட்டு - பி.எஸ். பழனி 5. வாணியம்பாடி - சி.ஞானசேகரன் 6. பர்கூர் - எம்.ஆர…

  11. அரசியல் புயலுக்கு ரெடியாகவும்.. நாளை மறுநாள் வெளியாகிறது தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு? 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், 19 எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதில், ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன்பாக ஆஜராகி…

  12. கிணற்றுக்குள் கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள் ; பரபரப்பில் ஊர் மக்கள் தமிழகத்தின் செங்கோட்டை அருகே, கிணற்றுக்குள் கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர் இருளப்ப தேவர். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவருக்கு சொந்தமான தோட்டம் பெரியபிள்ளைவலசை செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று (27ம் திகதி) மாலை, இருளப்ப தேவர் மகன் அய்யப்பன் என்பவர் தோட்டத்தில் உள்ள தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். மின்மோட்டாரை ‘ஒன்‘ செய்து தண்ணீர் பாய்ச்சியபோது, கிணற்றில் இருந்த தண்ணீர் வற்றியது. அப்போது, கிணற்றுக்குள் சில மோட்டார் ச…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்க சாதி மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட 17 வயது பட்டியல் சாதி மாணவர் மற்றும் அவரது 14 வயது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 11 ஆகஸ்ட் 2023, 12:05 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று பாடநூல்கள் கூறுகின்றன. ஆனால், கல்வி பயிலச் சென்ற பள்ளியில்தான் ஒரு பட்டியலின மாணவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதையும் மீறி பள்…

  14. அமைச்சர்கள் கைது எப்போது? போலீஸ் அதிகாரிகள் மும்முரம் சென்னை:வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியது உள்ளிட்ட வழக்குகளில், அமைச்சர் களை கைது செய்ய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ஏப்., 7ல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, இடைத்தேர்தல் நடக்க இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு, 89 கோடி ரூபாய், பணம் பட்டுவாடா செய்வதற்கான ஆதாரங்கள் சிக்கின. அப்போது, அமைச்சர்கள்காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், விஜயபாஸ்கர் வீட்டிற்குள்…

  15. ‘எங்கே சென்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்?’ - அமைச்சர்களை குறிவைக்கும் ரெய்டுகள் நுங்கம்பாக்கம், வருமான வரித்துறை அலுவலகம் அதிகாரிகள் யாருமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. 'ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் இருந்தாலும், ஆளுநர் உத்தரவின்பேரிலேயே அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன" என்கின்றனர் ராஜ்பவன் வட்டாரத்தில். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார். அவருடன் நட்பில் இருந்து பல ஆயிரம் கோடிகளை ஈட்டிய சேகர் ரெட்டி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். ராமமோகன ராவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் வர்த்தக தொடர்புகளும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. அதிலும், புதிய இரண்டாயிரம…

  16. பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு, தலைவெட்டி முனியப்பனாக மாற்றப்பட்ட புத்தர் சிலை கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 59 நிமிடங்களுக்கு முன்னர் 2022-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக தமிழ் பௌத்தர்கள் கருதுகின்றனர். சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைந்திருக்கும் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் வழிபடப்படும் முனியப்பன் சிலை, உண்மையில் புத்தர் சிலை என்பது தான் அந்த தீர்ப்பு. ஆனாலும், தீர்ப்பு வந்த 2 வருடங்கள் கழித்து, தற்போது தான் தலைவெட்டி முன…

  17. தினகரன் கைது: ஆட்சிக் கலைப்புக்கு வழிவகுக்குமா? #VikatanExclusive இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக 50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாகக் கூறி, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கைது செய்யப்பட்ட அவரை டெல்லி போலீஸார் நேற்று சென்னைக்கு அழைத்து வந்து, அவரது வீட்டில் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, பெங்களுரு, கொச்சி ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் சென்னைக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்புவரை, தினகரனு…

  18. சிவகாசியில் 3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்ற சிறுவர்கள்: என்ன நடந்தது? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகாசியில் விளையாட்டால் ஏற்பட்ட சண்டையில் 3 வயது குழந்தையை பக்கத்து வீட்டு சிறுவர்கள் இருவர் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சிறுவர்களையும் கைது செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த விஸ்வநத்தம் ஊராட்சி திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் பட்டாசு ஆலையில் வேன் ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி கவியரசி. இவர்களுக்கு பிரியதர்ஷன், தீனதயாளன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. …

  19. ஜெயலலிதா சமாதிக்கு அனுமதி பெறப்பட்டதா? சர்ச்சையைக் கிளப்பும் சூழலியலாளர்கள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து, அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 10-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடி ரூபாயில் நினைவு மண்டபம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறையான முன் அனுமதியின்றி மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலாவதாக, எம்.ஜி.ஆர் சமாதி அமைந்துள்ள பகுதியானது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் சி.ஆர்.2 பகுதியில் வருகிறது. அதாவது, வளர்ச்சியடைந்த ப…

  20. சென்னை: சென்னையில் கோயம்பேடு உள்பட பல்வேறு இடங்களில் கடைகளை அடைக்கமாட்டோம் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி நாளை தமிழம் முழுவதும் கடையடைப்பு நடத்தப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். ஆனால், ஈழத் தமிழர் பிரச்னையில் எல்லோருக்கும் அக்கறை உண்டு. வியாபாரிகளும் ஆதரவு அளிக்கிறார்கள். அதற்காக கடைகளை அடைத்தால் ஒவ்வொரு கடைக்காரர்களும் தனிப்பட்ட முறையில் நஷ்டப்படுவார்கள். எனவே ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல், பேரணி நடத்துங்கள். அதற்கு ஆதரவு அளிக்கிறோம். அதை விட்டுவிட்டு கடைகளை அடைக்க யாரும் வற்புறுத்தக்கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர…

  21. ராமேஸ்வரம்: சிங்களக் கடற்படையினர் துரத்தி வந்ததால் பயந்து போன ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேர் கடலில் படகோடு கவிழ்ந்து விழுந்தனர். இதில் 2 பேர் கடலில் மூழ்கி விட்டனர். 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள படையினர் துரத்தியதில் கடலில் விழுந்த 2 ராமேஸ்வரம் மீனவர்கள்- 30 பேர் சிறை பிடிப்பு காயமடைந்த மீனவர்கள் தப்பி வந்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கடலில் மூழ்கிய இரு மீனவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் உயிரிழந்திருப்பார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மீனவர்கள் நடந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், சிங்களக் கடற்…

  22. சசிகலாவின் சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்திய‌ கைதிகள் சிறையில் தாக்கப்பட்டது உண்மை: மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்திருக்கிறார் என முன்னாள் டிஐஜி ரூபா கடந்த ஜூலை மாதம் புகார் தெரிவித்தார். அப்போது சிறையில் சசிகலா, தெல்கி உள்ளிட்ட விஐபி கைதிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு வசதிகள் தொடர்பாக கைதிகள் ரூபாவிடம் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார், அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் கைதிகளை சரமாரியாக த…

  23. அதிகார போட்டியில் வெல்லப் போவது யார் ஒட்டு மொத்த தமிழக மக்களும் காத்திருப்பு சென்னை:''அ.தி.மு.க.,வில் நடக்கும் அனைத்து விபரங்களையும், கவர்னரிடம் தெரிவித்தோம்; அவர் நல்ல முடிவை அறிவிப்பார். நமக்கு நல்லதே நடக்கும்,'' என, கவர்னரை சந்தித்த பின், முதல்வர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவும், கவர்னரை சந்தித்து பேசியுள்ளார். எனவே, இரு தரப்புக்கும் இடை யிலான இந்த அதிகாரப் போட்டியில், வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆளும், அ.தி.மு.க.,வில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில், சசிகலா தரப்பு…

  24. 81 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் மல்லிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள். தஞ்சாவூர் மீன்பிடித் தடைக்காலம், கரோனா ஊரடங்கு ஆகியவற்றால் 81 நாட்கள் கடந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் சுமார் 150 விசைப்படகுகள் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமை என வாரத்தில் 3 நாட்களும், மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில், கரோனா காரணமாக…

  25. நாடு முழுவதும் 71வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். சுதந்திர தினத்தன்று பள்ளிகளிலும் தேசியக் கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில், ராஜஸ்தானில் புஷ்கர் என்ற நகரில் உள்ள பள்ளியில் ஆகஸ்ட் 15ம் தேதி, கொடியேற்றத்துக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பள்ளி மாணவ - மாணவியர் அணி வகுத்து, தாளாளர் வருகைக்காகக் காத்திருந்தனர். அதற்குள் எங்கிருந்தோ இரு குரங்குகள் அந்தப் பகுதிக்கு வந்தன. அவை, என்ன நினைத்ததோ தெரியவில்லை கொடி கட்டப்பட்டிருந்த கயிற்றை மிக நேர்த்தியாக இழுத்து, தேசியக் கொடியைப் பறக்க விட்டு விட்டு சென்று விட்டன. யாரும் அந்தக் குரங்குகளை விரட்டவில்லை. குரங்குகள் கொடியேற்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.