தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
நளினி முருகன்: உறவினர்களுடன் வீடியோ காலில் பேச அனுமதி! மின்னம்பலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் இருவரும் உறவினர்களுடன் வாடஸ் அப் காலில் பேச அனுமதி அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக 30 ஆண்டுகளாக நளினி மற்றும் முருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2020 ஏப்ரல் மாதம் இறுதியில் முருகனின் தந்தை இலங்கையில் உயிரிழந்தபோது இறுதிச் சடங்கைக் கூட வீடியோ காலில் பார்க்கத் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா, ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் முருகன், நளினி இருவரும்…
-
- 0 replies
- 623 views
-
-
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக அந்நாட்டிற்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை வெளியேறக்கோரி பித்த பிக்குகள் நடத்தியுள்ள போராட்டம் சிங்கள பெளத்த இனவெறி அரசியலின் முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. ராவண பலய்யா என்ற அந்த சிங்கள பெளத்த இன வெறி அமைப்பின் பின்னால் இருப்பது மகிந்த ராஜபக்சாவின் இனவெறி அரசுதான் என்பது இலங்கை அரசியலை புரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். கொழும்புவில் உள்ள ஐ.நா. தூதரக அலுவலகத்திற்குள் இந்த அமைப்பைச் சேர்ந்த புத்த பிக்குகளும் சிங்கள இன வெறியர்களும் உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்த முயன்றுள்ளனர். எப்போதெல்லாம் தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் நிலை உருவாகிறதோ அப்போதெல்லாம்…
-
- 0 replies
- 523 views
-
-
கொடநாடு கொலை விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்த சசி நடப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.கவினர் இரண்டு நாட்களுக்கு சட்டப்பேரவை புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலையில் கூடியதும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கொடநாடு விவகாரம் தொடர்பாக பேசத் தொடங்கினார். ஆனால், இதற்கு சபாநாயகர் அப்பாவு ஒப்புதல் தரவில்லை. இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக பதாகைகளை ஏந்தி அ.தி.மு.கவினர் கோஷங்களை எழுப்பி வெளிநடப்புச் செய்தனர். சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் முன்பாக அமர்ந்து கோஷங்களையும் எழுப்பி…
-
- 0 replies
- 332 views
-
-
குட்கா விவகாரத்தில் சிக்கிய, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக் களை, வருமான வரித்துறை முடக்கியதால், அவரது அமைச்சர் பதவிக்கு, மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் பணம் வினியோகம் நடந்ததாகக் கூறி, வருமான வரித் துறையினர் அவர் வீட்டில், 'ரெய்டு' நடத்தியபோதும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இப்போது, அவரை அமைச்சர வையில் இருந்து வெளியேற்றும்படி, கட்சி யினரிடமிருந்தே, முதல்வருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அரசியல் குழப்பங்கள் தீர்ந்த பின், முதல்வர் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில், சுகா…
-
- 0 replies
- 611 views
-
-
பா.ஜனதா தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்து பேசிய வைகோ, பாராளுமன்ற தேர்தலில் 250–க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறும் என்று கூறினார். பா.ஜனதாவுடன் கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. போட்டியிடுகிறது. இதற்காக டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த வைகோ, கூட்டணிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில், கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று டெல்லி சென்ற வைகோ, மீண்டும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாள…
-
- 0 replies
- 483 views
-
-
நடிகர் சிவாஜி கணேசனின் சொத்து விவகாரம் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சிவாஜியின் மகள்களான சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளது. எனவே, பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை ராம்குமார், பிரபு விற்றுள்ளனர். அந்த விற்பனை பத்திரங…
-
- 0 replies
- 250 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இப்போது வெளியானது ஒன்றும் இறுதித் தீர்ப்பு அல்ல என்று பாஜக கருத்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: “இது ஒன்றும் இறுதித்தீர்ப்பு அல்ல. நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் இது. தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது. இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது துரதிர்ஷடவசமானது” என்றார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “தீர்ப…
-
- 0 replies
- 684 views
-
-
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ, அந்தக் கூட்டணி வெற்றிபெறாது என்கிற பார்வை தமிழக அரசியல் களத்தில் ஒரு சாராரிடம் உண்டு. பல தேர்தல்களில் வைகோ இடம்பெற்ற கூட்டணிகள், தோல்வியையே தழுவியுள்ளன. அதனால், வைகோ சேரும் கூட்டணி வெற்றிபெறாது என்கிற சென்டிமென்ட் பொதுவாக உண்டு. `வைகோ சென்டிமென்ட்’ என்று சொல்லி, மாற்றுக்கட்சிகளின் மேடைகளிலும், சமூகவலைதளங்களிலும் வைகோவைக் கிண்டல் செய்யும் நிலையும் இருந்துவந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி என்கிற ஓர் அணியை அமைத்தனர். அதில் தே.மு.தி.க-வையும் த.மா.கா-வையும் கொண்டுவருவதில் வைகோ பெரும் பங்க…
-
- 0 replies
- 978 views
-
-
காளான் வளர்ப்பில் கல்லா கட்டும் இன்ஜினியர் பெரம்பலூர்: காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத்தாவர உயிரினம். பலநாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பலதரப்பட்ட சூழல்களி லும் வளரக்கூடியது. எப்போதாவது இடியிடித்து மழைபெய்தால் அபூர்வமாக முளைக் கும் காளான்களை சமைத்து உண்பதில் ஆர்வம்காட்டும் இந்தியர்களினவ் முக்கிய உணவுப் பொருளாக காளான்கள் அசைவ உணவுக்கு மாற்றாக மாறி வருகிறது. இதில் சிப்பிக்காளான், பால் காளான், பட்டன் காளான் என ஆயிரக்கணக்கான வகைகள் காளான்களில் இருந்தாலும், சிப்பிக் காளான்களுக்கும், பால் களான்களுக்கும் மட்டுமே மவுசு அதிகரித்துள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே ஆடம்பர உணவாகக் காணப்பட்ட காளான்கள் இப்போது நடுத்த…
-
- 0 replies
- 661 views
-
-
81 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் மல்லிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள். தஞ்சாவூர் மீன்பிடித் தடைக்காலம், கரோனா ஊரடங்கு ஆகியவற்றால் 81 நாட்கள் கடந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் சுமார் 150 விசைப்படகுகள் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமை என வாரத்தில் 3 நாட்களும், மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில், கரோனா காரணமாக…
-
- 0 replies
- 400 views
-
-
வீரப்பன் வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ???- வில்லன் போல் சித்தரித்த விபசார ஊடகங்கள் .............!!! இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய…
-
- 0 replies
- 1.4k views
-
-
இடிக்கப்படும் மற்றுமொரு பழமையான மதுரை திரையரங்கு மதுரை நகரில் உள்ள கீழவெளி வீதியில் அமைந்துள்ள பழமையான திரையரங்கமான சிந்தாமணி திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டுவருகிறது. மறையும் மற்றுமொரு மதுரை சினிமா திரையரங்கு- சிந்தாமணி 1930களின் இறுதியில் கட்டப்பட்ட இந்தத் திரையரங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்டது. அதற்குப் பிறகு ஜவுளி நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்ட இந்த திரையரங்கம், சரக்குகளை வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இந்தத் திரையரங்கத்தை இடிக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. மதுரை நகரின் பல பழமையான திரையரங்குகள் இடிக்கப்பட்டோ அல்லது மூடப்பட்டுவிட்ட நிலையில்,…
-
- 0 replies
- 462 views
-
-
பிரதமர் மன்மோகன் சி்ங், இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவிகளை எரித்து மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட 4 இயக்கத்தினர் சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையி்ல் மக்கள் கலை இலக்கியம் கழகம், புரட்சிக்கர மாணவர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு கூடினர். அப்போது, இலங்கைக்கு எதிரான கோஷமிட்ட அவர்கள், திடீரென…
-
- 0 replies
- 311 views
-
-
இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால், இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஐ.மு., கூட்டணியில் இருந்து தி.மு.க., விலகியதன் எதிரொளியாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையின் சென்செகஸ் குறியீட்டு எண் 201.13 புள்ளிகள் சரிந்து 19092.07 புள்ளிகளோடும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 64.90 புள்ளிகள் சரிந்து 5770.35 புள்ளிகளோடும் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.77 புள்ளிகள் அதிகரித்து 19279.43 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.70 புள்ளிகள் அதிகரித்து 5850.95 புள்ளிகளோடு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 628 views
-
-
கேட்டது ₹40,000 கோடி; கிடைத்தது ₹9,000 கோடி... பேரிடர் நிவாரணத்தில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! நமது நிருபர் vardah cyclone ( Photo: Vikatan / Nivedhan.M ) 2010-11 முதல் 2019-20 வரை தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைத்த பேரிடர் நிவாரண நிதி குறித்து விவரங்கள் அளிக்கும்படி தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டிருந்தோம். அதற்கு அளிக்கப்பட்ட விவரங்கள் உண்மையில் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கின்றன. வெள்ளம், புயல், கனமழை எனத் தமிழகம் தொடர்ந்து இயற்கைச் சீற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கிறது. ஜல், தானே, நீலம், நடா, வர்தா, ஒகி, கஜா என புயல்களும் மழையைப் போல இயல்பாக வந்துபோகத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு புயலும் ஏற்படுத்த…
-
- 0 replies
- 452 views
-
-
முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவிற்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, கோட்டை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா இருந்த வரை, அவரது நம்பிக் கைக்குரியவராக, முதல்வர் பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருந்து, விலக நேரிட்ட போது, பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்.அந்த ளவுக்கு இவர், ஜெயலலிதாவிடம் செல்வாக்கு பெற்றது, சசிகலா குடும்பத்தினருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, பன்னீர்செல்வம் மீது, ஜெயலலிதா வைத்துள்ள நம்பிக்கையை குலைக்கும் வகை யில், பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டனர். கடந்த, அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது, ஜெய…
-
- 0 replies
- 297 views
-
-
டெல்லி மேல்சபை தேர்தலுக்கு அ.தி.மு.க. 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எதிர்கட்சியான தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் தங்கள் தரப்பில் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறது. இரு கட்சிகளுக்கும் தலா 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய இரு கட்சிகளும் கூடுதலாக 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி கனிமொழியை மீண்டும் எம்.பி.யாக்க முயற்சித்து வருகிறார். இதற்காக காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று தெரிகிறது. காங்கிரசில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுவரை யாரும் காங்கிரசிடம் ஆதரவு கேட்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார். ஆனால் டெல்லி காங்கிரஸ் மேலிடம் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் என்று தெரிகிறது. …
-
- 0 replies
- 422 views
-
-
-
எல்லா அதிகாரிகளுமே யோக்கியமானவர்களா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்! -சாவித்திரி கண்ணன் உண்மையிலே ஒரு நல்லாட்சி தர வேண்டும் என்ற நோக்கமும், ஆர்வமும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிகிறது. அவருடைய நோக்கத்திற்கு உகந்ததாக அதிகாரிகள் நியமனங்கள் இருக்கின்றனவா..? திமுக ஆட்சியின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பான பாராட்டுகள் ஊடகங்களில் குவிகின்றன. அமைச்சர்கள் நியமனங்கள், அதிகாரிகள் நியமனங்கள் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளன. புதிதாக பதவியேற்ற ஆட்சியாளர்களின் நோக்கங்களும், அணுகுமுறைகளும் அவர்கள் மீது நம்பிக்கையையும், மரியாதையையும் ஏற்படுத்துகின்றன…! உண்மை தான்! மாற்ற…
-
- 0 replies
- 753 views
-
-
“தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! “சித்தியிடம் கேட்டு முடிவு சொல்கிறேன்” என அமைச்சர்களிடம் தினகரன் தரப்பு சொன்ன கால அவகாசம் முடிந்தது தான் தங்கமணி வீட்டில் நடந்த அவசர கூட்டத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இருந்தே தினகரன் மீது அமைச்சர்கள் சிலர் வருத்ததில் இருந்துள்ளார்கள். மக்கள் செல்வாக்கும் இல்லை, கட்சியினர் செல்வாக்கும் இல்லை, எதற்காக இவர் கட்சியை கைப்பற்ற துடிக்கின்றார் என்று மூத்த அமைச்சர்கள் சிலரே முணுமுணுத்தனர். அடுத்து இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதும் அ.தி.மு.கவில் அடித்தளத்துக்கே ஆபத்து வந்ததை அக்கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் உணரத்துவங்கினார். சின்னத்தை மு…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொடநாடு... கொலை நாடு - முதல்வரைக் கை காட்டும் கனகராஜ் அண்ணன்! ஜூ.வி லென்ஸ் ஜெயலலிதா மரணத்தின் மர்மமே விலகாத நிலையில், கொள்ளை, கொலை, விபத்துகள் என கொடநாடு பங்களா மர்மம் கூடிக்கொண்டே போகிறது. கொடநாடு எஸ்டேட் பங்களா, உச்சபட்சப் பாதுகாப்பு கொண்டது. எஸ்டேட் உரிமையாளர் ஜெயலலிதா இறந்துவிட்டார். அதற்கு உரிமை கொண்டாடிய இருவர் சிறைக்குப் போய்விட்டார்கள். இந்தச் சூழ்நிலையில்தான், கொடநாடு பங்களா காவலாளி கொல்லப்பட்டு கொள்ளையும் அரங்கேறியது. ஆனால், ‘கொள்ளை போனது என்ன?’ என்பது பற்றி விவரம் வெளியாகவில்லை. இதற்கிடையே கொலை, கொள்ளையில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட இருவர் திடீரென அடுத்தடுத்து விபத்துகளில் சிக்குகிறார்கள். அதில் ஒருவர் ம…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஜெ. சிகிச்சை பெற்றபோது எடுத்த படத்தை வெளியிட விரும்பவில்லை: ரத்த வாரிசுகளுக்கே போயஸ் இல்லம் சொந்தம் - டிடிவி தினகரன் திட்டவட்ட அறிவிப்பு டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன். மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் படம் எங்களிடம் உள்ளது. ஆனால், அதை எந்த விதத்திலும் வெளியிட விரும்ப வில்லை என அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். போயஸ் தோட்ட இல்லம், ஜெய லலிதாவின் ரத்த வாரிசுகளுக்கே சொந்தம் என்றும் அவர் கூறி யுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘வேதா நிலையம்’ அமைந்துள்ள போயஸ் த…
-
- 0 replies
- 180 views
-
-
சென்னை: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் தமிழகத்தில் அதிமுக 28. திமுக 5, காங்கிரஸ் 1 தொகுதியையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி ஏராளமான கருத்துக் கணிப்புகள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வருகின்றன. கடந்த ஜூலை மாதம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் சி வோட்டரும் இணைந்து இந்தியா முழுவதும் கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தன. அதில் பாரதிய ஜனதா கட்சி 131 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தது. தற்போது பாஜக மட்டும் 162 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய மாநிலங்களில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளைக் கைப்பற்றக் கூடும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள…
-
- 0 replies
- 817 views
-
-
திவாகரன் - தினகரன் திடீர் கைகோர்ப்பு முதல்வர் பழனிசாமி அணியினர் கலக்கம் எலியும், பூனையுமாக சமீபகாலம் வரை இருந்த, திவாகரனும், தினகரனும், திடீரென கை கோர்த்துக் கொண்டுள்ளது, முதல்வர் பழனி சாமி அணியினரிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலராக தன்னை அறிவித்துக் கொண்ட, சசிகலா சிறைக்கு சென்றதும், அவர் குடும்பத்தில், அதிகார போட்டி தலை துாக்கியது. சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும், அக்கா மகன் தினகரனுக்கும் இடையே, கடும் போட்டி ஏற்பட்டது. சசிகலா உதவியுடன், அ.தி.மு.க., துணை பொதுச்செயல ரான தினகரன், கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்; திவாகரனை ஒதுக்கினார். இரட்டை இலை சின்…
-
- 0 replies
- 355 views
-
-
சிறையில் முறைகேடு: ரூபாவிடம் ரகசிய விசாரணை பெங்களூரு:பெங்களூரு மத்திய சிறையில், நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையிலான குழுவினர், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி., ரூபாவிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா, பெங்களூரு மத்திய சிறையை ஆய்வு செய்து, சிறையில் சட்ட விரோத சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அனுபவிக்கும், அ.தி.மு.க., சசிகலா, முத்திரைத்தாள் மோசடி வழக்கின் தெல்கி போன்றோருக்கு, வி.ஐ.பி…
-
- 0 replies
- 426 views
-