Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை! புதுடெல்லி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று அறிவித்தார். அஸ்ஸாம் அதன்படி, அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 4-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதியும்…

  2. தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலையை ஜெயலலிதா கையில் எடுத்துள்ளார். ஜெயலிதாவின் அறிக்கைகள் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக அரசியல் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலலையில் மத்திய அரசுக்கு ஜெயலலிதா அனுப்பிய கடிதம் அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் கொலையில் கு…

    • 0 replies
    • 948 views
  3. நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் சற்று நேரத்தில் விடுவிப்பு? சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விரைவில் விடுவிக்கப்பட இருப்பதாகவும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நளினி, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரான புகழேந்திக்கு இன்று காலை தமிழக அரசிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அவரிடம் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக சொல்லப்பட்டதாகவும், இது தொடர்பான ஃபார்மாலிட்டி ( சம்பிரதாய) நடவடிக்கைகளுக்காக வேலூர் சிறைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார் என…

  4. உள்ளாடையை ஒழுங்காக துவைக்கவில்லை... நீதிபதி மெமோ கொடுத்தது உண்மைதானா? ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி, தன் உள்ளாடைகளை ஒழுங்காக துவைக்காத அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு மெமோ கொடுத்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது. அப்படி கொடுக்கப்பட்ட மெமோவில், '' உள்ளாடைகளை துவைக்க அருவருப்படைகிறீர்கள். இதற்காக உங்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது ? " என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த மொமோ கொடுத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது. அதற்கு அந்த அலுவலக பெண் உதவியாளர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கொடுத்த மெமொவுக்கு 4-ம் தேதி மன்னிப்பு கேட்டு கொடுத்த கடிதமும் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. …

  5. அதிகாரத்தை கைப்பற்ற அணி திரட்டினாரா ஓபிஎஸ்...? தமிழகத்தின் ஆளும் கட்சியான அஇஅதிமுகவின் உட்கட்சி பூசல்கள் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளாக மாறிப்போயுள்ளன. காணும் இடமெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவின் இதயமாக வலம் வரும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்குள் ஓரங்கப்பட்டுள்ளார். அவரின் ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள். இந்த நீக்கல் நடவடிக்கைகைகள் மேலும் தொடரும்.என்பதெல்லாம் அதிமுகவின் இப்போதைய ஹாட் நியூஸாக இருக்கிறது. எதேச்சையாக சந்தித்துக் கொள்ளும் அதிமுகவினர்கூட அம்மாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று தீவிர விவாதத்தில் இறங்கிவிடுகின்றனர். இந்த அளவுக…

  6. நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி சென்னை கோட்டையில் கால்நடைத்துறை அமைச்சர் அலுவலகத்தில் எப்போதும் போல வருகைப் பதிவேடு இன்றும் (மார்ச் - 3, 2016) களை கட்டிக் கொண்டிருந்தது. தேடி வந்தவர்களைப் பார்த்து பேசி அனுப்பி விட்டு சாப்பிட மேசை முன் மந்திரி டி.கே.எம். சின்னையா அமர்ந்த போது பகல் 2.30 மணி. செய்தித் துறையிலிருந்து பேசிய ஒரு குரல், "சார், சானலை மாத்தாமல், 'அம்மா', டி.வி. சானலை பாருங்க" என்றது. அப்போதுதான் மந்திரி சின்னையாவுக்கு முதல் கவளம் உணவு உள்ளே போய் இருந்தது. முதல் செய்தியாக, 'மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து மந்திரி சின்னையா விடுவிப்பு' என்றது டி.வி. அறிவிப்பு. அடுத்த கவளத்துக்கு இட…

  7. ஏழுபேரை விடுவிக்கும் விவகாரம் - மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக இந்திய மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துப் பேசினார். அவர், தமிழக அரசின் கடிதம் குறித்து மத்திய அரசு ஆலோசிக்கும். 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும்’’ என்று தெரிவித்தார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெக்ரிஷிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- ´´ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வி.ஸ்ரீதரன் என்ற முருகன், டி.சுதேந்திரராஜா என்ற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய மூவருக்கும்…

  8. நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னம் இன்று சென்னை சேப்பாக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டது.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளரகளையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். கடலூரில் சீமான் போட்டியிடுகிறார். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதால் ஒரே சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொண்டது.அதன்படி அக்கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை சீமான் இன்று சென்னை சேப்பாக்கத்தில் அறிமுகம் செய்தார். http://www.seithy.com/breifNews.…

  9. தொலைக்காட்சி விவாதத்தில் அரங்கேறிய அநாகரிக வார்த்தைகள் ( வீடியோ) தந்தி தொலைக்காட்சியில் நேற்று இரவு 9 மணியளவில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் பங்கேற்று பேசினர். விவாதத்தின் போது “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று சீமான் கூற அப்போது அருணணுக்கும் சீமானுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சீ…

    • 19 replies
    • 4.5k views
  10. தமிழக அரசியலில் உருவெடுக்கும் புதிய வாரிசுகள்! அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ராகுல் காந்தி, கார்த்தி சிதம்பரம், வாசன், அன்புமணி, பிரேமலதா, சுதிஷ் ஆகிய அரசியல் வாரிசுகள் நேரடி அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி அடுத்த தலைமுறை வாரிசுகளும் தேர்தல் களத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள். அதிமுக: போயஸ் கார்டனில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் 25 வயதேயான விவேக் ஜெயராமன். இளவரசியின் மகனான இவர் பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சுமார் ஓர் ஆண்டுக்கு முன்புவரை கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்குக்கூட இவரை தெரியாது. ஜெயலலிதா பெங…

  11. முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்று அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார். புதிய கட்சியின் பெயர் மற்றும் கட்சி கொடியை இன்று வெளியிட்டு தமிழகத்தில் ஊழற்ற ஆட்சியை அமைக்க தனித்து போட்டியிடப்படும் என்று தெரிவித்தார். ஏ.பி.ஜே அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் துவங்கப்பட்டுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியின் அறிமுக விழா ராமேசுவரம் பேக்கரும்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் புதிய கட்சியின் ஆலோசகர் பொன்ராஜ் தலைமை வகித்தார். பின்னர் துவங்கப்பட்ட புதிய கட்சியின் பெயரான அப்துல்காலம் வி.ஐ.பி (அப்துல்கலாம் லட்சி…

  12. 19 ஆண்டுகளாக ஜெயலலிதா வழக்கில் பணியாற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சம்பந்தம் நாளை ஓய்வு: கடைசி வரை வழங்கப்படாத பதவி உயர்வு? ஜி.சம்பந்தம் கடந்த 19 ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பணியாற்றி வரும் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஜி.சம்பந்தம் நாளை ஓய்வு பெறுகிறார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜி. சம்பந்தம் கடந்த‌ 27.9.1987 ம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர…

  13. 'அன்புமணி ஆகிய நான் ' ஒரு வேளை வியப்பை ஏற்படுத்துகிறாரோ? சென்னை வண்டலூரில் நடைபெற்ற பாமக மாநாட்டில், அன்பு மணி 'ஹைடெக்' மணியாக காணப்பட்டார். வழக்கமாக போடியத்தில் உள்ள மைக் முன்னாள் நின்றுதான் அரசியல்வாதிகள் பேசுவார்கள். ஆனால் அன்பு மணியோ காதில் 'ஜாக் 'மைக் பொருத்திக் கொண்டு ஒரு கால்பந்து நடுவர் போல நடமாடிக் கொண்டே பேசினார். அவரது பேச்சின் சராம்சம் இங்கே: '' தமிழ்நாட்டில் எந்த கட்சி மாநாட்டுக்கும் இவ்வளவு கூட்டம் வந்தது இல்லை. இந்த கூட்டம் பாசத்தால் மட்டுமே வந்த கூட்டம். அத்தனையும் இளைஞர்கள் நிரம்பிய கூட்டம். மேடையில்தான் சிலர் வெள்ளை முடியுடன் இருக்கிறார்கள். ஆனால் கூட்டத்தில் அப்படிய வெள்ளை முடியுடன் யாரும் இல்லை. மாற்றத்தை தேடி வந்த கூட்டம் இது.…

  14. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான அம்மா கைபேசித் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார். இன்று முற்பகல் 11 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி மூலம் பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் அதி நவீன வசதிகளுடன் அரசு பணியாளர்களுக்கான 700 குடியிருப்புக்கள் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தன. அதை இன்று முதல்வர் திறந்து வைத்தார். மேலும், பல்வேறு ஊர்களில் கட்டப்பட்டு இருந்த மேம்பாலங்கள், கட்டிடங்களைத் திறந்து வைத்தார் ஜெயலலிதா. அதோடு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான இலவச கைப்பேசிகளை வழங்கும் திட்டத்தையும் இன்று துவக்கி வைத்தார்.15 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டு இருக்கும் இந்தத் திட்டத…

  15. அமைச்சர்கள் முன்னிலையிலேயே கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை! (வீடியோ) முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னையில் சிறுமி ஒருவருக்கு கையில் பச்சை குத்தப்பட்டது. வேதனையை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுத சம்பவம் அமைச்சர்கள் முன்னிலையிலேயே நடந்துள்ளது மனித உரிமை ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் நலத் திட்ட உதவிகள், திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி முதல்வரின் பிறந்தநாளையொட்டி, வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்…

  16. நடிகையை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டுகிறார்கள்! நடிகர், நடிகையை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அதிமுக நிர்வாகி ஒருவர் கோயில் கட்டுகிறார். அரக்கோணம்- சோளிங்கர் நெடுஞ்சாலையில் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கிறது. தமிழகத்தில் நடிகர், நடிகைகளுக்கு கும்பாபிஷேசம், பாலாபிஷேகம் செய்து வருகின்றனர் அவர்களது ரசிகர்கள். இதற்கு ஒருபடி மேலேபோய், நடிகை குஷ்பு, நடிகர் விஜய் ஆகியோருக்கு ரசிகர்கள் கோயில் கட்டி அசத்தி விட்டனர். இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி, முகவூர் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள், மற்றவர்களை மிஞ்சும் வகையில் ஜெயலலிதாவை அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணர் போன்ற இந்…

  17. ரொட்டியிலும் ஜெ. ஸ்டிக்கர்! அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ரொட்டியிலும் ஸ்டிக்கர் ஒட்டி நீலகிரி மாவட்ட அதிமுகவினர் அமர்க்களப்படுத்தினர். அதிமுக அரசு மீது ஸ்டிக்கர் விமர்சனம் எழுந்துள்ள நிலையிலும், நீலகிரி அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நடந்த விழாவில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ரொட்டியிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஜெயலலிதா பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத், ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு, ஜெயலலிதா பிறந்த நாளன்று உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகள் பிறக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு ஒ…

    • 2 replies
    • 527 views
  18. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்: ஜெ. அதிரடி- பின்னணி என்ன? முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், வேளச்சேரி பகுதி செயலர் எம்.கே.அசோக் எம்எல்ஏ உள்பட ஐந்து பேரை கட்சி பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் நிதியமைச்சர் ஓபிஎஸ்-ஸின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவில் உட்கட்சி விவகாரங்களை களை எடுக்க கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார். நிதியமைச்சராக உள்ள ஓபிஎஸ் மீது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக ஜெயலலிதாவின் நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் துணை சபாநாயக…

  19. விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்- போட்டுத்தாக்கும் நிர்மலா பெரியசாமி விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம் என்று அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் அமர்க்களப்படுத்தி வருகின்றனர். கூடவே பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி எடத்தெரு கீழப்புதூரில் திருச்சி ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. ஏர்போர்ட் பகுதிகழக செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு த…

  20. நாக்கை துருத்தி... கையை ஓங்கி... தஞ்சை கோர்ட்டில் டென்ஷனான விஜயகாந்த்! தஞ்சாவூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பேனரை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஜாமீன் பெற தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் தேமுதிக நிர்வாகி ஒருவரை விஜயகாந்த் அடிக்க பாய்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க கோரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த தலைமையில் தஞ்சாவூர் தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, ஆர்ப்பாட்ட மேடை அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பேனரை…

  21. மாண்புமிகு முதல்வர் 'அம்மா' வுக்கு ஒரு தமிழனின் பகிரங்க கடிதம்! மாண்புமிகு முதல்வர் 'அம்மா' புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்! இந்தக் கடிதத்தின் வார்த்தைகளை நீங்கள் கருத்தில்கொள்ளாமல், அது எந்த உணர்வில், எந்த மனநிலையில் எழுதப்பட்டதோ, அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் அம்மா. ஆம்... ’அம்மா’தான். வெறும் உதட்டசைவில் மட்டுமல்ல; மனதின் அடியாழத்திலிருந்தே சொல்கிறேன். நீங்கள் எனக்கு அம்மாதான்... உங்களது மந்திரிகள், கட்சிக்காரர்களைப் போல் உங்களிடமிருந்து எனக்கு எந்த தேவையும் இல்லை. இருந்தாலும் நீங்கள் எனக்கு அம்மாதான். முதலில் உங்களுக்கு என் இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் நெடுநாள் வ…

  22. 'ராஜீவ் காந்தி கருப்பா சிவப்பா என்றே தெரியாது... !'- பரோலில் வெளியே வந்த நளினி உருக்கம்! ( படங்கள்) வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இன்று பரோலில் வெளியே வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி. இவரது தந்தை சங்கர நாராயணன். ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவர், நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (23-ம் தேதி) மாலை உடல் நலக்குறைவு காரணமாக 91 வயதான சங்கர நாராயணன் காலமானார். அவரி…

  23. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பச்சை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரது உருவப் படத்தை தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அசோக் (அமர்ந்திருப்பவர்) ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.கவினர் பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்திருக்கின்றனர். காலையில் துவங்க வேண்டிய நிகழ்ச்சி 7 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு துவங்கியது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அசோக், 668 பேர…

  24. நளினியின் தந்தை மரணம்: இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நளினியின் தந்தை சங்கரநாரயணன் இன்று உடல் நலக் குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பரோலில் செல்ல நளினிக்கு வேலூர் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடா நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை பெற்றவர் நளினி. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையால் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தற்போது வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன் …

    • 8 replies
    • 788 views
  25. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016 – உங்கள் ஓட்டு யாருக்கு?www.paahai.com இணையத்தளத்தில் பதிவுபன்னுங்கள்! Like&Share!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.