தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
சென்னை மழை : 97 ஆண்டு கால சாதனை முறியடிப்பு! வடகிழக்கு பருவமழை யின் தீவிரத்தால், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னையில் மீண்டும் அடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று மாலையில் இருந்து விடிய விடிய மழை பெய்தது.இன்னும் 3 நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக 118 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 1918-ஆம் ஆண்டு சென்னையில் நவம்பர் மாதத்தில் 108.8 சென்டி மீட்டர் மழை பெய்து இருந்தது. இதன் காரணமாக தற்போது 97 ஆண்ட…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிதம்பரம் மகன் தொடர்புடைய நிறுவனங்களில் வருமானவரி சோதனை சர்ச்சையில் சிக்கியிருக்கும் கார்த்தி சிதம்பரம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் தொடர்புடைய சில நிறுவனங்களில் மத்திய அமலாக்கத் துறையும் வருமான வரித் துறையும் செவ்வாய்க் கிழமையன்று சோதனை நடத்தின. ஒரு தனியார் கண் மருத்துவமனை உட்பட மூன்று நிறுவனங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்களின் மீதான வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக வருமானவரித் துறையும் ஃபெமா எனப்படும் அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவும் இந்த சோதனைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கார…
-
- 0 replies
- 482 views
-
-
தமிழகத்தில் இருந்து இத்தனை அவதூறு வழக்குகள் ஏன்?- அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி "ஆட்சி நிர்வாகம் பற்றிய கொள்கையின் மீதான விமர்சனங்களே தவிர, இவை தனிநபருக்கு எதிராக இல்லை. பிறகு ஏன் இந்த குற்ற அவதூறு வழக்குகள்?" என உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி. தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் கொட்டப்பட்டுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தன் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி.பன்ட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. …
-
- 0 replies
- 688 views
-
-
பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி! பாடகர் கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. "மூடு டாஸ்மாக்கை மூடு" பாடலை இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை, கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் காவல்துறையினர் கைது செய்து செய்தனர். இதையடுத்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கோவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில், குற்றப்பிரிவு காவல்துறையினர் மனுத்தாக்…
-
- 0 replies
- 331 views
-
-
சென்னை எண்ணூரில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 61 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். இந்த நிறுவனத்தில் உள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு லட்டு கொடுத்து தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள். அசோக் லேலண்டன் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழீழ உணர்வு தொழிலாளர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு லட்டு வழங்கி தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்தவக…
-
- 0 replies
- 179 views
-
-
மீடியாவை சாடும் சித்தார்த்தின் துணிச்சல்! சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெகுவாக மழைபெய்துவருகிறது. இம்மழையால் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இதுகுறித்து சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார். சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தேசிய உடகங்களே, மழை வெள்ளத்தால் சென்னையும் தமிழகப் பகுதிகளும் பாதிப்படைந்துள்ளது. சென்னையும் இந்தியாவின் ஒரு பகுதிதான். அமீர்கான், ஷீனா விவகாரத்தை விட இது முக்கியானது. எங்களையும் கவனியுங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள்” என்று கூறியுள்ளார். சென்னை தவிர மற்ற தேசிய ஊடகங்களில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை குறித்த எந்த செய்தியும் அதிகமாக இடம்பெறவில்லை…
-
- 0 replies
- 358 views
-
-
நாமக்கல் அரசுப் பள்ளியில் வளாகத்திலேயே மது அருந்தியதாக 4 மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் தேர்வு அறையில் மது அருந்திய நிலையில் இருந்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த மாணவிகளுடன் இருந்த மேலும் 3 மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் மறைத்ததால் நீக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த 21-ம் தேதி நடந்துள்ளது. திருச்செங்கோடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 2,500 மாணவிகள் பயில்கின்றனர். பள்ளியில் கடந்த 16-ம் தேதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கனமழை காரணமாக அன்று தேர்வு ஒத…
-
- 0 replies
- 231 views
-
-
விகடன் இதழ், முரசொலி, கருணாநிதி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தமிழில் வெளிவரும் பிரபல வாரப் பத்திரிகையான ஆனந்த விகடன், தி.மு.கவின் அதிகாரபூர்வ இதழான முரசொலி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பிரச்சனையில் சிக்கிய விகடன் கட்டுரை சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இது தொடர்பாக இரண்டு வழக்குகளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். கடந்த வாரம் வெளிவந்த நவம்பர் 25ஆம் தேதியிட்ட இதழில், 'என்ன செய்தார் ஜெயலலிதா' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. இந்தக் கட்டுரையில் தமிழக அரசுக்கும், முதல் அமை…
-
- 1 reply
- 721 views
-
-
மந்திரி தந்திரி! - 30 கேபினெட் கேமராவிகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பரபரப்பு கூடியிருந்த நேரம். தே.மு.தி.க., இடதுசாரிகள் எல்லாம் சேர்ந்து அ.தி.மு.க தலைமையில் 'மெகா கூட்டணி’ உருவாகியிருந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகி, கூட்டணிக் கட்சிகள் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சிகள் அரண்டுபோயின. தமிழகத் தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இப்படி நடந்தது இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல், கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்த... 'ஜெய…
-
- 0 replies
- 775 views
-
-
7 மணி நேர நரகமாக மாறிய சென்னை போக்குவரத்து நெரிசல்! கடந்த 10 நாட்களாக தினமும் கொட்டிவரும் வடகிழக்குப் பருவமழை இதற்கு முன்பு சென்னையில் பெய்ததா என்பது சந்தேகமே. ஒட்டுமொத்த சென்னையே மழைநீரின் வடிகாலாக மாறிவிட்டதோ என்று கூறுமளவிற்கு உள்ளது. மழை அவசியமான ஒன்றே... யாரும் மறுப்பதற்கில்லை. அதனால்தான் 'மா மழை போற்றுதும்....' என்றும், 'பெய்யெனப் பெய்யும் மழை என்றும்...' நமது இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் அளவுக்கு மிஞ்சிய மழை என்பது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகத்தையே ஏற்படுத்தும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அந்த நிலை சென்னைக்கு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, நேற்று(திங்கள்) பெய்த கனமழையால் சென்னை வாகன ஓட்டிக…
-
- 0 replies
- 486 views
-
-
கொட்டித் தீர்த்த மழை... கொண்டாட வேண்டியவர்கள்... திண்டாடிய சோகக் கதை! 'பேய்ஞ்சு கெடுக்கும்... இல்லனா, காய்ஞ்சு கெடுக்கும்' என்று மழையைப் பார்த்து திட்டித் தீர்ப்பது நம்மவர்களின் வழக்கம். ஆனால், 'கொடுக்காட்டியும் திட்டுவானுங்க... கொடுத்தாலும் திட்டுவானுங்க' என்று நம்மைப் பார்த்து மழை சொல்லும் நிலைதான் நீடிக்கிறது தமிழகத்தில்! ஆம், கடந்த இரு வாரங்களில் பரவலாக பேய்மழைக் கொட்டித் தீர்த்துள்ளது தமிழகத்தில்! அதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 90 சதவிகித நீரும் கடலுக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறதே தவிர... அதை சேமித்து வைத்து பிற்காலத்துக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை பயன்…
-
- 1 reply
- 365 views
-
-
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவும், பொருளாளராக ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் பொதுச் செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கட்சியின் பொருளாளராக ஒ.பன்னீர்செல்வத்தையும், அவைத் தலைவராக மதுசூதனனையும் ஜெயலலிதா நியமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளராக பா.வளர்மதியும், அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரன், க…
-
- 0 replies
- 147 views
-
-
இலங்கை கடற்படையினர் தாக்குதல்: ராமேசுவரம் மீனவர் மண்டை உடைப்பு காயமடைந்த மீனவர் வர்க்கீஸ் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேசுவரம் மீனவரின் மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இதில் அலெக்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வர்க்கீஸ், மார்டோ, முருகேசன், மாடசாமி ஆகியஆகியோரும் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கப்பலில் ரோந்து வந்…
-
- 0 replies
- 246 views
-
-
சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று வெள்ளிக்கிழமை [20-11-15] அன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழவில் இசைஞானி இளையராஜாவிற்கு ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விருதினை மத்திய நிதி, பெருநிறுவன அலுவல்கள் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினர். விருதினை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய இசைஞானி இளையராஜா, அரசாங்கம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஏதேனும் நான…
-
- 0 replies
- 230 views
-
-
“துன்பத்தை பரிசாக தரவேண்டாம்” விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! “துன்பத்தை பரிசாக தரவேண்டாம்” விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! மரியாதைக்குறிய விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு வணக்கம்! இந்த பூமிப்பந்தின் மூத்த மொழியான எங்களின் தமிழ் மொழியை பேசிய ஒரே காரணத்திற்காக ஈழ மண்ணில் லட்சக்கணக்கான எங்கள் தமிழ் உறவுகளை ஈவு இரக்கமின்றி கொண்று குவித்தது இலங்கை அதிகார வர்க்கம். அதனை தடுத்து நிறுத்தவே நெருப்பென தலைத்தூக்கி எங்கள் மண்ணை, மானத்தை, உரிமைகளை, உயிர்களை பாதுகாத்தவர்கள் எங்கள் போராளிகள். வீரம் செறிந்த அந்த விடுதலைப்போரட்டத்தில் அறுபத்தியெட்டாயிரம் பேர் தங்கள் உயிர்களை “தற்கொடை”களாக தந்து வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
சொந்தப்புத்திய கடன் குடுத்துட்டு, ‘செய்திகளை’ மட்டும் வெச்சிப் பாத்தோம்னா சென்னை அழிஞ்சுக்கிட்டு இருக்கிற மாதிரி ஒரு பீல் வருது. அரசியல்வாதிகளும், சமூக வலைத்தளங்களும் அடிக்கிற கூத்தப் பாத்தா, அல்ரெடி சென்னை அழிஞ்சே போயிட்ட மாதிரி தோணுது. உண்மையில, அங்க நியாயமா வடகிழக்கு பருவ காலத்துல எம்புட்டு மழ பெய்யணுமோ அந்தளவுக்குத் தான் (79 செ.மீ) பெஞ்சிருக்கு. நிலமே இல்லாட்டாலும் கிராமத்தான் மழயப் பாத்து சந்தோஷப்படுறான். ஆனா, பட்டணத்தானோட ரியாக் ஷன் எல்லாம் எப்பவுமே வேற மாரி இருக்கு. “சென்னை எப்பேற்பட்ட ஊரு. இங்க மழ பெய்யலாமா? பெஞ்சாலும் ரோட்டுல தண்ணி ஓடலாமா?”ன்னு நினைக்காங்க. மொத்தமா பந்தல்போட்டு, மழத் தண்ணியை கடலுக்கோ, வீராணம் ஏரிக்கோ கொண்டு போகச் சொல்றாங்க போல. செ…
-
- 0 replies
- 322 views
-
-
'டாஸ்மாக்கை மூடு' பாடலைப் பாடியவர் தே.பா.சட்டத்தில் கைது! திருச்சி: மது ஒழிப்பிற்காக "டாஸ்மாக்கை மூடு' என்று பாடல் இயற்றி பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் கடையை உடைத்தது, அதன்பிறகு மதுவிலக்கை வலியுறுத்தி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் மரணம், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடை உடைப்பு என்று கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் மது ஒழிப்பு போராட்டங்கள் தீவிரமாக நடந்தன. இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் மதுவிலக்கு கோரி போராட்டங்களை நடத்தின. இவை மட்டுமல்லாமல், "மூடு டாஸ்மாக்கை..!" என மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்துவ…
-
- 18 replies
- 5.1k views
-
-
இலங்கை தமிழர் விடுதலை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம். சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று, பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடித விவரம்:இலங்கை, தமிழ் தேசியக் கூட்டணி தலைவர் சம்பந்தனிடம், தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதாக, இலங்கை அதிபர் சிறிசேன சொன்னதை நம்பி தான், தமிழர்கள் அவருக்கு ஓட்டளித்தனர். அதனால், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளில், இலங்கை சிறைகளில், நீண்டகாலமாக வாடும் தமிழர்களை, விடுதலை செய்வதும் ஒன்று. இதற்கு, 1971ல், சிங்கள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்த நிகழ்வு முன்னுதாரணமாக எடுத்துச் சொல்லப்பட்டது.அதன்படி, 12ம் தேதி, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அதிபர் சிறிச…
-
- 1 reply
- 418 views
-
-
சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவிலிருந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தோடியது பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. சென்னை நகரில் நேற்று இரவிலிருந்து மழை தொடர்ச்சியாக பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடுவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக, ரயில் பாதைகளின் கீழுள்ள பல சுரங்கப் பாதைகள் மழையில் மூழ்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மழை பெய்துவருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட…
-
- 3 replies
- 1.1k views
-
-
விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்திருக்கின்றது பாலாறு. பல ஆண்டுகளுக்குப்பின் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டு கடலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது. பாலாறு என்றாலே வறண்ட மணல் படுகைகளும், மணல் கொள்ளையும்தான் கண்முன் வந்து நிற்கும். ஆற்றில் மீன் பிடித்தது, ஆற்றில் இறங்கி விளையாடியது, பாசனத்திற்கு நீர் பாய்ச்சியது எல்லாம் இளைய தலைமுறை காணாத ஒன்று. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டில் பெய்த மழையால் சில நாட்கள் பாலாற்றில் வெள்ளம் சென்றிருக்கின்றது. 2005-ம் ஆண்டு பெய்த மழையில் லேசான வெள்ளம் சென்றிருக்கின்றது. மற்றபடி எப்போதும் பாலாறு வறண்ட ஆறுதான். இரண்டு நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ஒரேநாளில் 34 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கண்கொள்ள…
-
- 0 replies
- 678 views
-
-
முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்பு! [Wednesday 2015-11-11 20:00] கோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி புதிய பேருந்து நிலையில் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவரது உடலையும் அங்கிருந்த துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டாரா? என்பது …
-
- 0 replies
- 203 views
-
-
பேருந்துகள் உடைப்பு- போலீஸ் தடியடி: அஜித் ரசிகர்களால் போர்க்களமான மதுரை! (வீடியோ) மதுரை: மதுரையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு, 5 பேருந்துகளை உடைத்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த சம்பவங்களால் மதுரையில் உள்ள தியேட்டர்கள் வளாகங்கள் போர்க்களம் போல் காட்சி அளித்தது. நடிகர் அஜித்குமாரின் வேதாளம் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் பேனர்கள் வைத்து தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். மதுரையில் ரசிகர்கள் பேருந்துகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் உள்ள தமிழ் ஜெயா, திருநகரில் உள்ள மணின்பாலா உள்ளிட்ட பல்வேறு தியேட்டர்களில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ரசிகர்களுக்கு என்று பி…
-
- 8 replies
- 517 views
-
-
சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை விழுந்தது: 54-வது முறையாக விபத்து சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள், கிரானைட் கற்கள், மேற்கூரை விழுவது தொடர் கதையாக இருக்கிறது. இதுவரை நடந்த 53 விபத்துகளில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் 54-வது முறையாக விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில் கன்வேயர் பெல்ட்டுக்கு மேலே இருந்த மேற்கூரை (பால்ஸ் சீலிங்) நேற்று பகல் சுமார் 1.30 மணி அளவில் பெயர்ந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயமில்லை. சென்னையில் பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீரை அகற்…
-
- 2 replies
- 304 views
-
-
அன்பார்ந்த!!! எனது திருவாரூர் நண்பர்களே!!! நமது மாவட்டத்தை பசுமையாகவும், சுகதாரமாகவும் வைக்க வாட்ஸ்அப்பில் '' திருவாரூர் -பசுமை தமிழகம்'' என்ற பெயரில் ஆரம்பித்து திருவாரூர் மாவட்டத்தை பசுமையுள்ள மாவட்டமாக்க இயற்கை ஆர்வலர்களாகிய திருவாரூர் இளைஞர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நமது இந்தக்குழு தமிழகம் முழுவதும் அந்த அந்த மாவட்டத்தின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு தமிழகத்தை பசுமை உள்ள மாநிலமாக மாற்றுவதே நமது குழுவின்(பசுமை தமிழகம்) நோக்கம். ஒவ்வொரு மாவட்டம் தோறும் 50 இலட்சம் மரங்கள் நடுவதே நமது பசுமை தமிழகம் குழுவின் இலக்கு... திருவாரூர் மாவட்ட பசுமைக் குழுவின் எண். 8883335220 ''வாழ்க தமிழ்'' ''வளர்க தமிழகம்''குறிப்பு: உங்களுக்கு குழுவில் இணைய விருப்பம் இல்லையென்றாலும் நீ…
-
- 0 replies
- 1.8k views
-
-
என்னை சீண்டினால் புலியாக மாறுவேன்: குஷ்பு ஆவேசம்! திருப்பூர்: "தில் இருந்தால் நேரடியாக பேச வேண்டும். பார்க்க அமைதியாகத்தான் இருப்பேன். சீண்டினால் புலியாக மாறிவிடுவேன்" என ஹசீனா சையத்துக்கு எதிராய் குஷ்பு ஆவேசமாய் பேசினார்.நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என கார்த்தி சிதம்பரம் சொன்ன கருத்துக்கு பதிலளித்த குஷ்பு, "ப.சிதம்பரம், தங்கபாலு, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களை நம்பி காங்கிரஸ் இல்லை" என கருத்து தெரிவித்திருந்தார். குஷ்புவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ''காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து, உழைத்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற…
-
- 9 replies
- 2.6k views
-