தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
எடப்பாடியின் வெளிநாட்டு விஜயமும் திரைமறை தமிழக அரசியலும் எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 02 திங்கட்கிழமை, மு.ப. 11:22 Comments - 0 தமிழகத்துக்கு முதலீடுகள் திரட்டுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இலண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, 14 நாள்கள் பயணமாகப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். முதன் முதல் 2016இல் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், “அதிமுக ஆட்சி எத்தனை நாளைக்கு நீடிக்கும்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றவுடன், “எத்தனை மாதங்களுக்கு இந்த ஆட்சி நீடிக்கும்?” என்ற கேள்வியோடு பட்டிமன்றமே நடத்தப்பட்டது. இப்போது வெளிநாட்டுக்குச் சென்று முதலீடு திரட்டி வருவோம் என்று அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் பழனிச…
-
- 0 replies
- 546 views
-
-
கச்சதீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்! கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே வைகோ இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இது குறித்து வைகோ மேலும் தெரிவிக்கையில் ”இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண…
-
- 0 replies
- 111 views
-
-
கொரோனா ஊரடங்கு : மக்களுக்கான நிவாரண உதவிகளில் கரம் சேருங்கள் ! இரக்கம் உள்ள மனிதர்களும், உதவி தேவைப்படும் மக்களும் எல்லா இடத்திலும் நிறைய இருக்கிறார்கள். இவர்களை இணைக்கும் பணிகளில் நமது சென்னை மக்கள் உதவிக்குழு பாலமாக இருக்கிறது. கொரோனா தொற்றை காரணம் காட்டி, அரசு எந்தவித முன்தயாரிப்பும் செய்துகொள்ளாமல் ஊரடங்கை அறிவிப்பு செய்துவிட்டது. பெரும்பான்மை மக்களுக்கு முன்தயாரிப்பு செய்துகொள்ள போதிய நேரம் தரவில்லை. விளைவு பெரும்பான்மை மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி, வறுமையிலும் பசியிலும் தள்ளியுள்ளது. இந்நிலையில் மக்களை காப்பது நமது கடமை என்ற அடிப்படையில், சட்ட மாணவர்களும், இளம் வழக்கறிஞர்களும், கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்…
-
- 0 replies
- 433 views
-
-
இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு! – ஈழத்தாயக உறவுகளுக்கு சீமான் கடிதம். ⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂ ஈழத்தாயகத்தில் வாழும் என்னுயிர் உறவுகளுக்கு... வணக்கம்! இந்த உலகில் வாழ்கின்ற எல்லாத் தேசிய இன மக்களையும் போல எல்லா வித உரிமைகளையும் கொண்ட ஒரு சுதந்திர வாழ்வினை வேண்டித்தான் எழுபது ஆண்டுகளாக நம் தாய்மண்ணின் விடுதலைக்காக நாம் போராடி வருகிறோம். ஆனால் சிங்களவர்கள் நமக்கான உரிமைகளை மறுத்ததோடு மட்டுமல்லாமல், நாம் இந்த நிலத்தில் வாழ்ந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்துதான் நம்மை அழித்தொழிக்கும் வேலையைத் தொடங்கினார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னால் சிங்களப் பேரினவாத அ…
-
- 0 replies
- 873 views
-
-
தமிழக மக்கள் செய்யும் டாப் 5 வீண் செலவுகள்! ஒஹோ என்றிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் சில வருடங்களுக்குமுன் சடசடவென சரிந்தபோது, அதற்கு முக்கிய காரணமாக நிபுணர்கள் சுட்டிக் காட்டியது அந்நாட்டு மக்களின் ஊதாரித்தனத்தைத்தான். கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி வாங்கிக் குவித்ததால் வந்த அவல நிலை இது என்றார்கள். வீண்செலவுகள் ஒரு நாட்டை எப்படி பதம் பார்த்து விடுகிறது என்பதற்கு வாழும் உதாரணமாகிப் போனது அமெரிக்கா. இப்போது இந்தியா விலும் அந்த மனப்போக்கு குடியேறி வருவதாக எச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் விஷயம் தெரிந்த நிபுணர்கள். நம் கண்முன்னே நடப்பதைப் பார்த்தால் அது உண்மைதானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்…
-
- 0 replies
- 2.2k views
-
-
'வர்தா' புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் தீவிரம் கொண்டுள்ள வர்தா புயல் மேலும் இந்த 3 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க அல்லது ஊழியர்களை வீட்டிலிருந்த படியே பணிபுரிய வைக்க கூறி தமிழக அரசு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்புகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர தாலுக்கா பகுதிகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு கூறியுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் அதி தீவிர புயலான வர்தா, நாளை (திங்கள்கிழமை) சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெ…
-
- 0 replies
- 382 views
-
-
நான்கு நாட்களுக்கு முன்பு அத்துமீறி இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்தபோது 11 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு நாட்டு கடல் எல்லைக்குள் செல்கிறோம் என்ற அச்சம் சற்றும் இல்லாமல் இந்திய நாட்டு கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடித்த காரணத்தாலேயே இந்திய கடலோரக் காவல்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோரக் காவல்படையினர், இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த இலங்கை மீனவர்களை காக்கிநாடா கடலோரப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கிழக்கு கோதாவரி மாவட்டம் தும்முலபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் காவல் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இரண்டு போலீஸ்கார்கள காவலுக்கு இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மின் சப்ளை கட் ஆனதை தொடர்ந்து காற்று…
-
- 0 replies
- 680 views
-
-
தீ வைத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை! பேரவையில் முதல்வர் அதிரடி அறிவிப்பு ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும், தீ வைத்ததாக கூறப்பட்ட புகாரில் சிக்கிய காவலர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அப்போது, ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் விடுவிக்கப்படுவர் எனறும், வன்முறை மற…
-
- 0 replies
- 487 views
-
-
“ஆட்சியைப் பிடிக்க சசி குடும்பம் நடத்திய சதிகள்!” அதிர்ச்சி கிளப்பும் அட்வகேட் ஜோதி ‘‘அக்கா கோட்டைக்குக் கிளம்பி விட்டீர்களா... மதியம் சாப்பிட என்ன வேண்டும்’’ என ஜெயலலிதா விடம் கேட்ட சசிகலா, கோட்டையிலேயே உட்கார நினைத்தார். அதற்காக நடந்தவை அக்மார்க் அக்கப்போர்கள். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் அந்தக் கனவு தவிடுபொடியாகிவிட்டது. ‘‘அதிகாரத்தில் அமர வேண்டும் என்கிற சசிகலா குடும்பத்தின் சதித்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது’’ என்கிறார் ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் என்.ஜோதி. அவரிடம் பேசினோம். ‘‘1991-ல் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தபோதுதான், அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை அவர் பங்குதாரராக உள்ள நிறுவனம் வாங்கியது. ‘அரசுக்குச் சொந்தமான …
-
- 0 replies
- 1.6k views
-
-
ஆட்சி மாற்றம் என்பது இரண்டு பிரதான கட்சிகளையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவது அல்ல – சீமான் ஆட்சி மாற்றம் என்பது இரண்டு பிரதான கட்சிகளையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவது இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். போரூரில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஆட்சி மாற்றம் என்பது தி,மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளை மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவது அல்ல. அப்படி செய்வதால் ஆட்கள் மாறுவார்கள். ஆனால் நிர்வாகம் மாறாது. கடந்த 50 வருடங்களாக செய்யாத நல்லதை 5 ஆண்டுகளில் எப்படி செய்வார்கள் என நம்புகிறீர்கள். கல்வி மானுட உரிமை. அதை …
-
- 0 replies
- 479 views
-
-
சசிகலாவுக்கு எதிராகத் திரண்ட 3 சக்திகள்! -தியேட்டர் வில்லங்கமும் தீபக் கொந்தளிப்பும் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். 'சசிகலா குடும்பத்தில் அதிகாரப்போட்டி தலைதூக்கியுள்ளது. அதன் ஒரு பகுதிதான் தினகரனுக்கு எதிராக தீபக் கொந்தளித்தது. இதன் பின்னணியில் மூன்று பெரிய சக்திகள் உள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த 60 ஆட்களுக்குள் அ.தி.மு.கவில் அதிகாரப் போட்டி தலைதூக்கியது. சசிகலா தலைமைக்கு எதிராகப் பேட்டியளித்தார் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம். அதன்பிறகு அ.தி.மு.க நிர்வாகிகளும் பன்னீர்செல்வம் பக்கம் வர ஆரம்பித்தனர். எம்.எல்…
-
- 0 replies
- 414 views
-
-
கண்ணீர்விட்ட பன்னீர்... பழைய அஞ்சாநெஞ்சன் மது! ஜெயலலிதா பிறந்த நாள் அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிடுவதாக முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் வாக்குறுதி கொடுத்திருந்தனர். சொன்னபடி அதே நாளில், ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யைத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார் தீபா. ஆனால், ஓ.பன்னீர்செல்வம்? காலையிலேயே ஓ.பி.எஸ் வீட்டில் ஊடகங்கள் குவிந்துவிட்டன. காலை 7 மணிக்கெல்லாம் பளிச் வேட்டி - சட்டையுடன் சிரிப்பும் கும்பிடுமாய் ஆதரவாளர்களின் அரவணைப்பில் திணறிக் கொண்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். ‘‘அண்ணே, இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்திடணும்’’ என்று குரல் கொடுத்தவர்களை உதட்டில் கைவைத்து அமைதிகாக்கச் சொன்னார். ஆதரவாளர்கள…
-
- 0 replies
- 856 views
-
-
இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது! தமிழக மீனவரை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றதையடுத்து, இருநாட்டு கடற்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே கோடியக்கரையிலிருந்து 50 நாட்டிக்கல் மைல் தொலைவில் இரண்டு படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 10 மீனவர்களை, இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 10 பேரும் காரைக்கால் கொண்டு செல்லப்படுகின்றனர். http://www.vikatan.com/news/tamilnadu/82991-ten-srilankan-fishermen-arrested.html
-
- 0 replies
- 296 views
-
-
ஈழத்தமிழர்கள் படுகொலை: - வைகோவின் வேண்டுகோளை ஏற்ற ஐநா சபை [Friday 2017-04-28 13:00] ஈழத்தமிழர்கள் குறித்த வைகோ வேண்டுகோளை ஐநா சபை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளது. மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்களின் ஆய்வுக்கு சுற்றறிக்கையாக ஐநா அனுப்பியுள்ளது. இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வைகோ கோரிக்கை விடுத்திருந்தார் .http://www.seithy.com/breifNews.php?newsID=181338&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 477 views
-
-
சொத்துகுவிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா உள்ளிட்டோர் மறுசீராய்வு மனு தாக்கல் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். புதுடெல்லி: அ.தி.மு.க (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக சிறப்பு நீதிமன்ற விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்…
-
- 0 replies
- 333 views
-
-
மிஸ்டர் கழுகு: சேகர் ரெட்டி டைரி... செக் வைக்கும் பி.ஜே.பி! - கமிஷன் பட்டியலில் 18 அமைச்சர்கள் உற்சாகமாக நுழைந்த கழுகார், ஸ்டைலாக நாற்காலியில் அமர்ந்தார். ‘‘கடந்த இதழில்தான் ‘ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்!’ என சொன்னீர். உடனே, ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கப் போவதாக செய்தி வெளியாகி இருக்கிறதே?” என்றோம். ‘‘ஆமாம்! பத்தாண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கப் போகிறார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தச் சந்திப்பு நடப்பதாக இருந்து, பிறகு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மே 15-ம் தேதியிலிருந்து 19-ம் தேதி வரை 15 மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளார். ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் ரெடி. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் முதலில் ஒட்டும…
-
- 0 replies
- 1.4k views
-
-
கட்சி எங்களுக்கு... ஆட்சி பன்னீருக்கு...: சசி குடும்பம் யோசனை; பழனிசாமி கொந்தளிப்பு 'முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன்' என, முதல்வர் பழனிசாமி கூறியது, சசிகலா குடும்பத்தினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வில், சசிகலா குடும்பத்தினர் கோலோச்சுவதை, பா.ஜ., தலைவர்கள் விரும்ப வில்லை. எனவே, சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவிட்டு, பன்னீர் அணியுடன் இணையும் படி, முதல்வர் பழனிசாமி தரப்பினருக்கு, அவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தடைபட்டது ஆனால், முதல்வர் பதவியில் திடமாக அமர்ந்த பழனிசாமி, அதை துறக்க தயாராக இல்லை. இதன் காரணமாகவே, பன்னீர் அணியுடனான…
-
- 0 replies
- 361 views
-
-
January 2, 2014 சென்னை: பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துவிட்டதால் தற்போது சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சேதுசமுத்திரத்தைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மதிமுகவின் நீண்டகால கோரிக்கை. மதிமுகவின் தேர்தல் அறிக்கைகளில் இந்த கோரிக்கை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்தை கொண்டுவந்ததில் தமக்கே முக்கிய பங்கு என்று பலமுறை அறிக்கைகளில் கூறிவந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று அறிவித்த கையோடு சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோர…
-
- 0 replies
- 519 views
-
-
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசும்போது, ‘’ஊழலை ஒழிக்க முன்னோடியாக திகழ்பவன் நான். தமிழ்நாட்டில் போதிய சாலை வசதி உட்பட எந்த அடிப்படை வசதியையும் அரசு செய்து கொடுக்க வில்லை. எந்தக் கட்சியிலும் ஆரோக்கியமான போட்டியை பார்க்க முடியாது. ஆனால், தேமுதிகவில் தான் ஆரோக்கியமான போட்டியை பார்க்க முடியும். மத்தியில் யார் ஆளப்போகிறார்கள் என்பதை பார்ப்போம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிகவின் முடிவை பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் அறிவிப்பேன்’’ என்று தெரிவித்தார். http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=114645
-
- 0 replies
- 368 views
-
-
புதுக்கோட்டை கிராம குடிநீர் தொட்டியில் நாய் சடலம் - ஒருவர் கைது; மன நலம் பாதிக்கப்பட்டவரா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாய் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்ணீர் புகட்டுவதற்காக நாயை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு மேலே தூக்கிச் சென்றதாகவும், அப்போது நாய் தவறி உள்ளே விழுந்துவிட்டதாகவும் அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அந்த மேல்நிலை குடிந…
-
- 0 replies
- 745 views
- 1 follower
-
-
மிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை! ‘‘கவர்மென்ட் என்பது ‘கவர்னர்’மென்ட் என்று வேகவேகமாக மாறிக் கொண்டிருக்கிறது’’ என்று சொன்னபடியே என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘கிண்டி கவர்னர் மாளிகை மார்க்கமாகப் பறந்து வந்திருக்கிறீர்களா?’’ என வரவேற்புக் கொடுத்தோம். ‘‘மாநில கவர்னரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கவர்னர் மாளிகையிலிருந்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கவர்னர் மாளிகையை நோக்கி எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. முந்தைய கவர்னர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆனால், எப்போதுமே ராஜ்பவனிலிருந்து அறிக்கை வெளியானதில்லை. தமிழக அரசின் சார்பில…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழின் பெருமைகளைத் தமிழர்கள் உணரவில்லையென்றால்? நீதிமன்றம் கேள்வி… March 7, 2019 தமிழின் பெருமைகளைத் தமிழர்கள் உணரவில்லையென்றால், அடுத்த தலைமுறைக்குத் தமிழைச் சிறப்பாக எடுத்துச் செல்ல முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கொன்றில் மதுரையில் உலக தமிழ்ச் சங்கம் திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை என தெரிவித்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் மதுரை உலக தமிழ்ச் சங்கச் சிறப்பு அலுவலர் கே.எம்…
-
- 0 replies
- 761 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 20 நிமிடங்களுக்கு முன்னர் சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக-கலாசார காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் சென்னை ஐஐடி மேற்கொண்ட ஆராய்ச்சியொன்றில், இந்திய அளவில் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் 17.2% ஆக இருந்த நிலையில், 2016-2021க்கு இடைப்பட்…
-
- 0 replies
- 548 views
- 1 follower
-
-
சிதம்பரம் மகன் தொடர்புடைய நிறுவனங்களில் வருமானவரி சோதனை சர்ச்சையில் சிக்கியிருக்கும் கார்த்தி சிதம்பரம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் தொடர்புடைய சில நிறுவனங்களில் மத்திய அமலாக்கத் துறையும் வருமான வரித் துறையும் செவ்வாய்க் கிழமையன்று சோதனை நடத்தின. ஒரு தனியார் கண் மருத்துவமனை உட்பட மூன்று நிறுவனங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்களின் மீதான வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக வருமானவரித் துறையும் ஃபெமா எனப்படும் அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவும் இந்த சோதனைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கார…
-
- 0 replies
- 481 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் வரவு செலவு திட்டத்தின் மீது நேற்று (புதன்கிழமை) விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது இடம்பெற்ற விவாதம் வருமாறு… துரைமுருகன் – ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயற்படுகிறது. தர்மபுரி பேருந்து எரிப்பு விவகாரத்தில் அ.தி.மு.க. கட்சிக்காரர் மாட்டிக்கொண்ட வ…
-
- 0 replies
- 271 views
-