Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. டெல்லியிலிருந்து கிடைத்த சிக்னல்; திடீர் உற்சாகத்தில் தினகரன் #VikatanExclusive டெல்லியிலிருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்னல் கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் சசிகலா அணியினர் உள்ளனர். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க-வில் நிலவும் உள்கட்சிப் பூசல், அதிகாரப் போட்டி ஆகியவற்றால் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் அ.தி.மு.க-வினர் திணறுகின்றனர். சசிகலா அணியினருக்கு நெருக்கடி கொடுத்துவந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமரசமானதும், ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார் தினகரன். …

  2. திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி ( தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி 50 ஆண்டுகள் நிறைவடையும் இந்த ஆண்டில் , திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ்.காம் வெளியிடுகிறது. அதில் முதல் கட்டுரை இங்கு பிரசுரமாகிறது-- பிபிசி தமிழ்) படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM Image captionசமூக நீதிக்கு திராவிட ஆட்சிகளின் பங்களிப்பு 100 ஆண்டுகள் நிறைவெய்தியுள்ள திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அடையாளம் நீதிக்கட்சி ஆகும். மாகாணங்களுக்குக் குறைந்த அதிகாரங்களே வழங்கப்பட்ட நிலையிலும் 1921இல் ஆட்சி அ…

  3. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசும்போது, ‘’ஊழலை ஒழிக்க முன்னோடியாக திகழ்பவன் நான். தமிழ்நாட்டில் போதிய சாலை வசதி உட்பட எந்த அடிப்படை வசதியையும் அரசு செய்து கொடுக்க வில்லை. எந்தக் கட்சியிலும் ஆரோக்கியமான போட்டியை பார்க்க முடியாது. ஆனால், தேமுதிகவில் தான் ஆரோக்கியமான போட்டியை பார்க்க முடியும். மத்தியில் யார் ஆளப்போகிறார்கள் என்பதை பார்ப்போம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிகவின் முடிவை பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் அறிவிப்பேன்’’ என்று தெரிவித்தார். http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=114645

  4. தமிழீழ அகதிகள் விரும்பினால் மட்டுமே இலங்கை அனுப்ப வேண்டும் : இளங்கோவன் தமிழகத்தில் உள்ள தமிழீழ அகதிகள் அவர்களாக விருப்பப்பட்டால் மட்டுமே இலங்கை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழீழ அகதிகளை அரசு கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக் கூடாது. அவர்களாக விரும்பினால் இலங்கை செல்லலாம். இலங்கை அகதிகள் இந்தியாவிலேயே தங்கியிருக்க விரும்பினால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தினமணி டிஸ்கி: தமிழீழமா...? என்ன இந்தாள் 'போட்டு'கிட்டு உளருகிறாரா? மத்தியில் ஆளும்போது 'தமிழீழம்' என்ற சொல்லையே எ…

  5. இலங்கைத்தமிழ் அகதிகளையும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளையும் ஒன்றாக கருத முடியாது : இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது என இந்திய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து ஆயிரக்கணக்கில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவுக்கும் குடிபெயர்ந்திருந்தனர். இந்நிலையில், இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என ரோஹிங்கியா முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். குறித்த வழக்கு தொடர்பில் இந்திய மத்திய அரசு நே…

  6. எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழுமா? எம்எல்ஏ-க்களின் கூட்டல், கழித்தல் கணக்கு! அ.தி.மு.க. அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க-விலிருந்து ஓரங்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்களது விசுவாசிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குக் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரண்டு துருவங்களாக இருந்து செயல்பட்டுவருகின்றனர். சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைக்குப் பிறகு, ஓ…

  7. கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெங்களூரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியின் இ-மெயில் முகவரிக்கு நேற்று பிற்பகல் ஒரு தகவல் வந்தது. அதில் ‘‘அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் கோவையில் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் கோவை விமான நிலையத்தை தகர்க்க போகிறார்கள். இதனை நான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு வந்த 2 பேர் பேசிக்கொண்டிருந்த போது கேட்டேன்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இ-மெயில் தகவல் விமான நிலைய அதிகாரிகளுக்கும், கோவை மாநகர போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. மறு நிமிடமே போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. விமான நிலைய தொழிற்பாதுகாப்பு படையினர் விமான நி…

  8. எழுவர் விடுதலையை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி மனித சங்கிலிப் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு Published : 03 Mar 2019 13:02 IST Updated : 03 Mar 2019 13:02 IST சென்னை வேல்முருகன்: கோப்புப்படம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திடாதிருப்பது அரசமைப்புச் சட்டத்தையே மீறுவதாகும். தமிழர்களுக்கு இழைக்கும் இந்தப் பச்சைத் துரோகத்தைக் கண்டித்து வரும் 9-ம் தேதி நடக்கும் தமிழகம் தழுவிய மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''28 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிரு…

  9. இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக்கோரியும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காஞ்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ராசன் தலைமையில் 40 பேர் பல்லாவரம் தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ராஜபக்சேவின் உருவபொம்மையும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்திய 40 பேரை கைது செய்தனர். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19783:2013-03-24-14-48-03&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  10. முதல்முறையாக களத்திற்கு சென்று மக்களை சந்திக்கும் விஜய்: எங்கு? எப்போது? ByKavi Jan 18, 2025 தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2023 முதல் இவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பரந்தூர் போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவுதெரிவித்து வ…

  11. அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை - தேமுதிக தலைவர் விஜயகாந்த்...

  12. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய வரலாற்றில் மாலிக்காபூர் என்ற பெயர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குஜராத்தை சேர்ந்த ஓர் இந்துவான மாலிக்காபூர் சிறந்த போர் வீரர். கில்ஜி வம்சம் தென்னிந்தியாவில் கால் பதிக்க உதவிய படைத் தளபதியான மாலிக்காபூர், தமிழ்நாட்டில் குறிப்பாக நடுநாடு என்று அழைக்கப்படக்கூடிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட பகுதிகளுக்கும் படையெடுத்து வந்துள்ளதை உறுதி செய்யும் புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே சில நாட்களுக்கு முன்பாக கிடைத்த நடுகல்லுடன் கூடிய சதிக்கல் மிக முக்கிய ஆதாரமாக வரலாற்று ஆசிரியர்களால் பார்க்…

  13. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார் எல்லைத் தாண்டி மீன்பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய அபராதத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, ‘பெற்றோல் டீஸல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 46 ஆண்டு நிறைவடைந்து 47 ஆம் ஆண்டின் தொடக்க விழா காண்கிறது. இந்த இயக்கமானது பவள விழாக்கண்டு , நூற்றாண்டையும் எட்டிப் பிடிக்கும். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு வாயில் மண் தான். அ.த…

  14. திமுக - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை... புதுவையில்! புதுவை: புதுவை சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. புதுவை சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த 30 தொகுதிகளில் 344 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள 930 வாக்குச்சாவடிகளில் இறுதி நிலவரத்தின்படி 84.08 சதவீதம் வாக்குகள் பதிவானது. மொத்தம் உள்ள 9 லட்சத்து 41 ஆயிரத்து 395 வாக்காளர்களில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 511 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 68 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 22 ஆயிரம் பேரும் அடங்கும். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று …

  15. கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 18 நவம்பர் 2023 திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மூன்று மாவட்டங்களிலும் 75-க்கும் மேற்பட்ட மாங்கூழ் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 72 மாங்கூழ் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கிருஷ்ணகிரியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மா சாகுபடி செய்து வருகின்றனர். வருடத்திற்கு மூன்று லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் மா உற்பத்தியாகின்றது. மாங்கூழ் தொழிற்சால…

  16. Thirumurugan Gandhi ”ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்கிறோம் ”, விடுதலை சார்ந்த அரசியல் கோரிக்கையும், இனப்படுகொலைக்கான விசாரணைக்கோரிக்கையும் விட வாழ்வுரிமைக் கோரிக்கையையும், இலங்கையர்களாக ஒன்றுபட்டு சமரசம் செய்து வாழ்வது என்கிற அரசியல் தேர்தல் ஊடாக முன்வைக்கப்பட்டு தமீழிழ குடிமக்களிடம் இலங்கையின் அரசியல் சாசனமும், நீதி பரிபாலனையையும் ஏற்கச்சொல்லி நயவஞ்சகமாக தீர்வுகளை இந்தியாவும், சர்வதேசமும் முன்வைக்கிறது. வேட்டையாடப்பட்டவர்களாக நிற்கும் எம் தமிழீழச் சமூகம் எந்தக்கொள்ளிக்கட்டையை எடுத்துக் கொள்வது என்கிற பிரச்சனையில் நிறுத்தப்பட்டுள்ளது. 2009க்கு பின்பு தொடர்ச்சியாக நாம் என்ன கேட்கவேண்டும், அல்லது, என்ன தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டுமென்று சர்வதேசம் …

  17. தமிழகத்தில் தொழிற்சாலைகளைப் படிப்படியாக ஆரம்பிக்கத் திட்டம்- முதல்வர் ஆலோசனை by : Litharsan கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் சிலவற்றைப் படிப்படியாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் காணொளி தொடர்பாடல் மூலம் தொழில் அதிபர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில் துறை செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இணைந்திருந்தனர்…

    • 0 replies
    • 370 views
  18. அ.தி.மு.க.,வில், எதிரும் புதிருமாக உள்ள சசிகலா - பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இடையே, திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தில், இரு தரப்பினரும் சகஜமாக பேசி, பழைய நட்பை வெளிப்படுத்தினர். சசிகலா நியமனம், இரட்டை இலை சின்னம் போன்ற விவகாரங்களில், தேர்தல் கமிஷன் தீர்ப்பு நெருங்குவதால், சசி தரப்பினர், பன்னீர் அணியினர் மீது பாசம் காட்ட துவங்கி உள்ளனர். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பால், தினகரன் வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது. சட்டசபையில், நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. கேள்வி நேரத்தின் போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, 'சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' …

  19. அ.தி.மு.க.வுக்கே இரட்டை இலைச் சின்னம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கே இரட்டை இலைச் சின்னம் என டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் டில்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓ.பி.எஸ். – இபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிக்கு அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த…

  20. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 20-1-2014 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி முறையாக செய்து, 30-1-2014 அன்று மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுத் தொகுதி வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் - ரூ.25,000/- தனித் தொகுதி மற்றும் மகளிர் விண்ணப்பக் கட்டணம் - ரூ.10,000/- விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.1000/-வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கூற…

  21. ராஜீவ் கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு: நிராகரித்த உயர் நீதிமன்றம் 17 ஜூன் 2022, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நளினி ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த 7 பேரையும் அரசமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்வது என 2018ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து அந்த முடிவை ஆளுநர் …

  22. ஜெயலலிதாவைத் தவறாக வழிநடத்திவிட்டார்கள்! - பி.வி. ஆச்சார்யா சிறப்புப் பேட்டி பி.வி. ஆச்சார்யா. நாட்டின் மூத்த, முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர். 80 வருஷ வாழ்க்கையில், 60 வருஷங்களைச் சட்டப் புத்தகங்களோடு கழித்திருப்பவர். ஐந்து முறை அட்வகேட் ஜெனரல், பார் கவுன்சில் தலைவர், இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னதாக அரசுத் தரப்பில் வாதாடி, தொடர் நெருக்கடிகள் காரணமாக விலகியவர். ஓர் இளம்காலைப் பொழுதில் ஆச்சார்யாவைச் சந்தித்தேன். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர் நீங்கள். இப்போது அன்றைய ‘மெட்ராஸ் நாட்கள்’ நினைவுக்கு வருவது உண்டா? என்னுடைய சொந்த ஊர் உடுப்பி பக்கம், ஒரு அழகான கிராம…

  23. தீபா ஆதரவாளர்கள், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரில், புதிய கட்சியை, ஈரோட்டில் நேற்று துவங்கினர். கட்சிக்கு, கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. தீபாவுக்கு நாளுக்கு நாள் பெருகும் ஆதரவால், சசிகலா வட்டாரங்கள் கலக்கத்தில் உள்ளன. அ.தி.மு.க., பொதுச்செயலராக பொறுப்பேற் றுள்ள சசிகலாவை, அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால், 'ஜெ.,யின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வர வேண்டும்; ஜெ., விட்டு சென்ற பணிகளை தொடர வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, தமிழகம் முழுக்க பல இடங்களில், தீபா பெயரில் பேரவை துவங்கி, ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோ…

  24. ஆளுநர் பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி இரண்டு பேர் பலி! போலீஸ் வாகனத்தை நொறுக்கிய பொதுமக்கள்! கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது வண்டிப்பாளையம் பகுதியில் திடீரென காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி, அருகில் உள்ள வீட்டின் பாத்ரூமில் நுழைந்தார். அப்போது குளித்துக்கொண்டிருந்த பெண்மணி அதிர்ந்து வெளியே ஓடினார். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்கு முன்பே ஆளுநரின் வாகனம் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆய்வுப் பணியை மேற்கொள்வதற்காகக் கடலூருக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆய்வுப்பணியை முடித்…

  25. தமிழகத்தின் முக்கிய துறைமுகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இந்திய கரையோரப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடத்தப்படக் கூடுமென்ற புலனாய்வு பிரிவு எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மூன்று முக்கிய துறைமுகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி மற்றும் என்னூர் ஆகிய துறைமுகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் அச்சுறுத்தல்களை முறியடிக்கத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் தீவிரவாத குழுவொன்று இலங்கையைக் களமாகக் கொண்டு தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக அநாமேதய தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுக்கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.