Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வாகனங்களின் வெளிப்புரத்தில்... ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்ட புகைப்படங்களை அகற்ற வேண்டும். இந்த விடயம் தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார், போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். வாகனத்தை பொலிஸ் சோதனை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் புகைப்படம் ஒட்டுகிறார்கள். மேலும் அரசியல் கட்சியினர், தேர்தல் நேரத்தில் மாத்திரம் கட்சி கொடிகளையும் தலைவர்களின் புகைப்படங்களையும்…

  2. அண்ணாமலையின் பதவி பறிப்பு…? தமிழக பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அண்ணாமலைக்கு பதில், புதிய மாநிலத் தலைவரை நியமிக்கவும் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்…

  3. கோவை, திருப்பூரில் ரூ.500 கோடி மோசடி? மொபைல் செயலி, வாட்ஸ்ஆப் மூலம் ஆள் சேர்த்து ஏமாற்றியது எப்படி? பட மூலாதாரம்,SHANMUGA VELAYUTHAN கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட பல்வேறு மாவட்ட மக்களை, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன் மீது முதலீடு செய்ததால் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறி, பேராசையைத் தூண்டி பல கோடி ரூபாயை நூதன முறையில் மோசடி செய்துள்ளது சைபர் க்ரைம் கொள்ளை கும்பல். மோசடி கும்பல் மக்களை ஏமாற்றியது எப்படி? கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த வாரம், 20-க்கும் மேற்ப…

  4. “மோதிப் பார்ப்போம்...” - திருச்சி எஸ்.பி விவகாரத்தில் சீமான் எச்சரிக்கை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். கோவை: திருச்சி எஸ்.பி வருண்குமார் விவகாரத்தில், “மோதுவோம் என்றாகிவிட்டது; மோதிப் பார்ப்போம்” என கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கலந்துரையாடல் கூட்டம் கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (டிச.5) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த…

  5. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: 'அ.தி.மு.கவின் சந்தர்ப்பவாதமே இந்தத் தோல்விக்குக் காரணம்' - 'இந்து' என். ராம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, என்.ராம் "அ.தி.மு.கவின் சந்தர்ப்பவாதமே இந்தத் தோல்விக்குக் காரணமெனக் கருதுகிறேன். வரவிருக்கும் தேர்தல்களிலும் தி.மு.கவின் ஆதிக்கம் தொடரும். பா.ஜ.கவை மக்கள் ஏற்கவில்லை" என்கிறார் மூத்த ஊடகவியலாளர் என். ராம். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து தி இந்து குழுமத்தின் முன்னாள் தலைவரும் மூத்த பத்திரிகை…

  6. இந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கோ, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்கோ மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அரசிதழில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டின் மனிதக் கழிவுகளை மனிதர்களை வைத்து அகற்றுவதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தின் 7வது பிரிவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தனி மனிதரோ, உள்ளூர் நிர்வாகமோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யவும் அபாயகரமான கழிவுகளை அகற்றவும் மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது. 2013ஆம் ஆண்டின் சட்டப்படி, இம்மாதிரியான பணிகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்தினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டன…

  7. மதுபான விற்பனை கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்: - வலுக்கும் மக்கள் போராட்டம் [Friday 2017-05-26 08:00] தமிழ்நாடு முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை புழல், லட்சுமிபுரம் பகுதியில் டாஸ்மாக் விற்பனை நேரத்துக்கு முன்னரும், பின்னரும் கூட மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு ஆட்கள் வருவதைக் கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர் . ஆனால் போலீசார், புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதே பகுதியிலுள்ள பச்சையப்பன் காலனியில் ரகசியமாக மக்கள் கண்காணித்தனர். அங்கே மதுபானங்கள் விற்பனை ஜரூராக நடப்பதைப் பார்த்த…

    • 0 replies
    • 356 views
  8. சுயநலத்திற்காக சசிக்கு ‛குட்பை': தினகரனின் ‛தில்லாலங்கடி' திட்டம் spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12 …

  9. இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இலங்கை தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கை பிரச்சனைக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான் என்பதை வலியுறுத்தியும், சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபச்சேவை போர்க்குற்றவாளி என அனைத்து நாடுகளும் அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் கனகராஜ், செந்தில், மாதேசா, யுவராஜ், அகிலன், பழனிகுமார், பாண்டி, சந்திரசேகர், இளவரசன், பழனிவேல், அமிர்தலிங்கம் என 11 பேர் கடந்த 12.03.2013 முதல் சென்னை புரசைவாக்கத்தில் விடுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். படங்கள்: ஸ்டாலின்

  10. சென்னை: மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, சிங்கள அரசு பல முனைகளிலும் தனது அக்கி…

  11. கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி கருத்துத் தெரிவிக்கையில் ”பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் காணாவிட்டால், இ…

  12. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய வரலாற்றில் மாலிக்காபூர் என்ற பெயர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குஜராத்தை சேர்ந்த ஓர் இந்துவான மாலிக்காபூர் சிறந்த போர் வீரர். கில்ஜி வம்சம் தென்னிந்தியாவில் கால் பதிக்க உதவிய படைத் தளபதியான மாலிக்காபூர், தமிழ்நாட்டில் குறிப்பாக நடுநாடு என்று அழைக்கப்படக்கூடிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட பகுதிகளுக்கும் படையெடுத்து வந்துள்ளதை உறுதி செய்யும் புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே சில நாட்களுக்கு முன்பாக கிடைத்த நடுகல்லுடன் கூடிய சதிக்கல் மிக முக்கிய ஆதாரமாக வரலாற்று ஆசிரியர்களால் பார்க்…

  13. Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 10:52 AM இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது திருச்சி விசேட முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தன் என அழைக்கப்படும் ரி சுரேந்திரராஜா திருச்சி முகாமில் தனதுவாழ்க்கைகுறித்து தெரிவிக்கும் கடிதமொன்றை எழுதியுள்ளார் சூரிய ஒளிகூட என் மேல் படுவதில்லை என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன் என அழைக்கப்படும் ரி சுரேந்திரராஜா - 2022 நவம்பர் 11 ம் திகதி அவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது, எனினும் அவர் பயஸ் முருகன் ஜெயக்குமாருடன் திருச்சி விசேட முகாமில் த…

  14. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு சிறப்புற பணிபுரியும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2013 ஆம் ஆண்டில் 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு…

  15. சென்னைக்குத் தேவை புதிய வடிகால் வடிவமைப்பு மிக்ஜாம் என்று இந்தப் புயலுக்குப் பெயர் சூட்டியது மியான்மர். அந்தப் பர்மீயச் சொல்லுக்குப் பல பொருள்களைச் சொல்கிறார்கள். அவற்றுள் இரண்டு முதன்மையானவை. அவை; வலிமை, தாங்குதிறன். இவ்விரண்டு பொருளும் இந்தப் புயலுக்குப் பொருத்தமானதாக அமைந்துவிட்டது. சென்னையைத் தாக்கிய புயல் மிக வலுவாக இருந்தது. அதைத் தாங்கும் திறன் நகருக்கு வெகு குறைவாக இருந்தது. டிசம்பர் 3 காலை முதல் டிசம்பர் 4 இரவு வரை நகரில் கொட்டிய தொடர் மழையின் அளவு சுமார் 500 மிமீ. இப்படியொரு மழை கடந்த 50 ஆண்டுகளில் பெய்ததில்லை என்றனர் சில ஆய்வாளர்கள். அப்படியானால் இது ஐம்பதாண்டு மழையா? இருக்கலாம். அதனினும் சக்தி வாய்ந்த நூறாண்டு மழையாகக்கூட இருக்கலாம். சரி, அதென்…

  16. கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்றுமுதல் மீன்பிடி தடைக்காலம் ஆரம்பம் April 15, 2019 கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழகத்தில் 15 ஆயிரம் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகின்ற நிலையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகின்றது கிழக்கு கடற்கரை பகுதிகளில் தடைகாலம் முடிந்த 15 நாட்களில் மேற்கு கடற்கரை பகுதிகளான கேரளா, கர்நாடகம், கோவா, மராட்டியம்…

  17. தமிழக உள்ளாட்சி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது! அக். 3 கடைசி நாள். சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளில் இருப் பவர்களின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக …

  18. தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்சே டிசம்பர் 9 ஆம் தேதி திருப்பதிக்கு வந்து, 10 ஆம் தேதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறானாம். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசியும், நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகளைச் செய்த மாபாவியுடன் நரேந்திர மோடி அவர்களின் இந்திய அரசு கொஞ்சிக் குலாவுகிறது. மத்திய அரசு கொடுக்கின்ற ஊக்கத்தினால்தான் இப்போது திருப்பதிக்கு வரப் போகிறான். மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு ராஜபக்சே வந்தபோது, தமிழகத்தில் இருந்து 1200 பேர…

  19. இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அரசை கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, மே 17 இயக்கத்தால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் திகதி இடம்பெற்ற இம்முற்றுகைப் போராட்டத்தில் இதில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் முன்னணியின் தோழர்கள் பொழிலன் மற்றும் அரங்க குணசேகரன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தோழர் கி.வே.பொன்னையன், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அருணபாரதி மற்றும் தோழர்கள், தமிழர் விடுதலை கழகத்தின் சுந்தரமூர்த்தி மற்றும் தோழர்கள், தமிழர் விடியல் கட்சியின் பாபு மற்றும் தோழர்கள், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் சிவகாளிதாசன் மற்றும் தோழர்கள்…

  20. பாக்கு நீரிணையை ஒரே நேரத்தில் நீந்திக் கடந்து ஏழு பேர் சாதனை ! Published By: T. SARANYA 14 MAR, 2023 | 10:16 AM தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 10 மணித்தியாலங்கள் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்தனர். குறித்த சாதனையை இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையைச் சேர்ந்த, பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா ஆகிய நான்கு நீச்சல் வீரர்கள், சுமா ராவ், சிவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி, மஞ்சரி சாவ்ச்சாரியா ஆகிய மூன்று நீச்சல் வீராங்கனைகளும் செய்துள்ளார்கள். …

  21. 16th May 2013 சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடந்தது. சென்னை தங்கசாலை அருகில் நடந்த கூட்டத்துக்கு தி.மு.க. வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:- சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறுகிற இந்த எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கிலே குழுமி உள்ள உங்களை காண்பதிலும், நீங்கள் அளிக்கின்ற உற்சாகமான ஆதரவை காண்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெறுகின்றேன். சேது சமுத்திர திட்டம் வருவதால் யாருக்கு என்ன பயன், திட்டத்தின் பலன் என்ன? பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கும். இப்படி நடந்தால…

  22. சேலம் மற்றும் தருமபுரியில் நில அதிர்வு சேலம் மற்றும் தருமபுரியில் சில இடங்களில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் 3.3 அளவு நில அதிர்வு பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டத்தை பொது மக்கள் உணர்ந்தனர். காலை 7.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு சில பகுதிகளில் 3 வினாடியும் பல பகுதிகளில் 5 வினாடிக்கு மேலும் நீடித்தது. நில அதிர்வு ஏற்பட்ட போது கட்டடங்கள் லேசாக அசைந்ததாகவும், சத்தம் கேட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர். சேலம் நகர் பகுதியான கருங்கல்பட்டி, ஆனத்தா பாலம், முள்ளுவாடி கேட், அஸ்தம்பட்டி, பேர்…

  23. அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் தொலைபேசி ஊடாக சசிகலா, கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார். இதன்போது சசிகலா மேலும் கூறியுள்ளதாவது, “தொண்டர்கள் அனைவரும் என்னுடனே இருக்கின்றனர். ஆகவே அவர்களை விரைவில் சந்திக்க தீர்மானித்துள்ளேன். எம்,ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் அவர்களுடன் இருந்திருக்கின்றேன். மேலும் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கூட அவருடன் இருந்து நானும் எதிர்கொண்டுள்ளேன். …

  24. இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு கமல் | கோப்பு படம்: எல்.சீனிவாசன் தனது இயக்கப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது என கமல் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து உடனடியாக கருத்துகளைத் தெரிவித்து வருபவர் கமல். அரசியலில் நிலவிவுள்ள மாற்றத்துக்கு ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதங்கத்தை அனுப்புமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கமல். இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுக கட்சியினரை கடுமையாக சாடினார். இது தொடர்பாக,…

  25. பழனிசாமியா... பன்னீர்செல்வமா..?! தீவிர ஆலோசனையில் பா.ஜ.க. தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியையே அந்தப் பதவியில் தொடர வைப்பதா அல்லது ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வர் பதவியில் அமரவைப்பதா என்ற ஆலோசனையில் பாஜகவின் டெல்லி மேலிடம் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.கவுக்குள் நடக்கும் பதவி,அதிகாரப்பகிர்வு மோதலில் தங்களுக்கு ஏதாவது பயன் கிடைக்குமா என்று தி.மு.க. எதிர்பார்ப்பதைவிட பா.ஜனதா எதிர்பார்ப்பதுதான் அதிகம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க.கட்சிக்குள்ளும் நடக்கும் உச்சக்கட்ட குழப்பங்கள், தமிழகத்தின் மாநில ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வகைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.