Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை October 15, 2018 வைகை அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 66 அடியை எட்டியிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு மற்றும் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் தேக்கப்படுகிறது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம்; கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக 7 ஆண்டுகளுக்கு பின்னர் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 …

  2. சிங்கார சென்னை 2.0 திட்டம்: ரூ.98 கோடி ஒதுக்கீடு! SelvamFeb 11, 2023 12:27PM சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பெருநர சென்னை மாநகராட்சியில் 42 திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்திடும் வகையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தினை அறிவித்து இதனை செயல்படுத்திடும் வகையில் கடந்த 2021-2022ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்கள். நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள…

  3. இணைய களம்: மறைந்தவர்களும், மக்களின் நம்பிக்கையும்... கோப்புப் படம்: தி இந்து (ஆங்கிலம்) விநாயக முருகன் ஒருவர் இறந்ததும் உடனே அவரை விமர்சனம் செய்யலாமா என்று சில நண்பர்கள் நேற்று வருத்தப்பட்டார்கள். அதனால், இந்தப் பதிவை எழுத வேண்டியுள்ளது. இன்று என்னவெல்லாம் நடக்கிறதோ, அதைவிடப் பன்மடங்குக் கூத்துகள் எம்ஜிஆர் இறந்தபோது நடந்தன. உண்மையில், எம்ஜிஆர் அமெரிக்காவிலேயே இறந்துவிட்டார் என்றும், அவரை அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள் என்றும், பிறகு அவரைப் போலவே இருக்கும் ஒரு சினிமா டூப்பை அழைத்துவந்து சில நாட்கள் வைத்திருந்து, பிறகு சொத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அவரைக் கொன்றுவிட்டார்கள் என்றும் ஒரு …

  4. கலைஞருக்கு நினைவில்லம்: அரசாணை! மின்னம்பலம்2021-11-09 சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நினைவு இல்லம் கட்டுவதற்கான அரசாணை நேற்று (நவம்பர் 😎 பிறப்பிக்கப்பட்டுள்ளது.2018 ஆகஸ்டு 7 ஆம் தேதி கலைஞர் காலமானார். அப்போது அவரது இறுதி விருப்பமான தனது உடல் அண்ணா உடலின் அருகே புதைக்கப்பட வேண்டும் என்பதை வலிய்றுத்தி அப்போதைய திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து உருக்கமாக கோரிக்கை வைத்தார். ஆனால் எடப்பாடி மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுக்க மறுத்தார். பின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அதில் வென்று கலைஞர் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் தமிழ் வ…

  5. `என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்!' - கமல் சூளுரை சென்னையில், தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், `என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்' என்று பேசியுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில், சில நாள்களுக்கு முன்னர் நடந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் பேசிய கமல்ஹாசன், `ஜனவரி 26-ம் தேதி முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படித் தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்' என்று அறிவித்து, அரசியல் களத்தில் கவனம் ஈர்த்தார். இப்படி நேரடி அரசியலில் முழுவீச்சில் இறங்கியுள்ள கமல், வேளச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்…

  6. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் - 3 முக்கிய காரணங்கள் இவைதான் 42 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அரசுக்கே அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான தமது நிலைப்பாட்டையும், சைபர் அணுகல் விவகாரத்தில் ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையதொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது என்ற யதார்த்த நிலையையும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. …

  7. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு 10 பிப்ரவரி 2023 புதுப்பிக்கப்பட்டது 21 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய அனுமதியை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்திய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தடை செய்ய உச்ச நீதிமன்றத்திடம் நாங்கள் வழிகாட்டுதலைக் கோருகிறோம் என்று தெரிவித்தார். "இதுபோன்ற அணிவகுப்பை அனுமதிப்பது சட்டம் - ஒழுங்கு பிரச்ன…

  8. ‘அமைச்சரவையில் எனக்கு இடமே வேண்டாம்?!’ - எடப்பாடி பழனிசாமியை நெருக்கும் பி.ஜே.பி #VikatanExclusive அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. ‘இன்னமும் தினகரனை துணைப் பொதுச் செயலாளராக முன்னிறுத்துகின்றனர் பழனிசாமி அணியினர். இணைவது போலக் காட்டிவிட்டு, தனி ஆவர்த்தனம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் அமைச்சர்கள்' என்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர். எடப்பாடி பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிகாரப்பூர்வமாக மூன்று அணிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தொலைக்காட்சி விவாதங்களில் இந்த மூன்று அணிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். "சசிகலாவை முழுமையாக நீக்கிவிட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம்…

  9. நளினி தொடர்ந்த வழக்கு... தமிழக அரசை பதிலளிக்க சொல்கிறது உயர் நீதிமன்றம்! சென்னை: முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், வருகின்ற 27-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ''ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எனக்கு கீழ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதன் பின்னர், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு உத்தரவிட்டது. நான் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை மன…

  10. தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு: முழு விவரம்! மின்னம்பலம்2022-02-20 தமிழகத்தில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாகத் தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 12,838 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57,778 பேர் போட்டியிட்டனர். கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி 21 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 1.37 கோடி ஆண் வாக்காளர்களும், 1.42 கோடி பெண் வாக்காளர்களும், 4,323 திருநங்கைகளும் என மொத்தம் 2.79 …

  11. வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் – ஸ்டாலின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார். அத்துடன் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். 6 மாத காலமாக விவசாயி…

  12. ‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !! தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும். By புதிய ஜனநாயகம் - September 16, 2021 0 தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பரவலாக ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மற்ற கட்ச…

  13. மேகதாது அணைக்கு அனுமதி.. திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம். கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட அந்த மாநில அரசுக்கு அனுமதி அளித்ததை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ. 5900 கோடியில் புதிதாக அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இதற்கான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் ஏற்றுக் கொண்டது.இதையடுத்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழன…

  14. மன்னார்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்... குடும்ப அஸ்திரத்தை தனதாக்குவாரா தினகரன்?! #VikatanExclusive ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்து தமிழக அரசியலில் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளார் டி.டி.வி.தினகரன். வெற்றியின் மூலம் கட்சி தன் வசம்தான் இருக்கிறது என்பது போல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்த தினகரன், தற்போது குடும்பமும் தன் வசம்தான் உள்ளது என்பதை உரக்கச் சொல்ல மன்னார்குடியில் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். பொதுவாக புத்தாண்டை ஆதரவாளர்களுடன் அடையாறில் இருக்கும் தனது வீட்டில் கொண்டாடும் வழக்குமுடையவர் தினகரன். அன்று ஆதரவாளர்களுக்கு விருந்து கொடுப்பது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என்று இருப்பார். ஆனால், ஆர்.கே.நகர் வெ…

  15. 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த செப்டம்பர் மாதம், சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டரான சுரேஷ்குமார்(38) செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகிலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அவருடைய நண்பரும் எண்ணூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநருமான டெல்லி பாபு(39) என்பவரும் காணாமல் போனார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதியன்று வீட்டிலிருந்து புறப்பட்ட டெல்லி பாபு வீடு திரும்பவில்லை. இதனால் டெல்லி பாபுவை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி அவரது தாயார் லீலாவதி செப்டம்பர் 23ஆம் தேதியன்று எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே மகனின் நண்பர் என்ற முறையில், இறந்துபோன சுரேஷி…

  16. ஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வினை முதலமைச்சர் தலைமையேற்று திறந்து வைக்க இருப்பதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சபாநாயகர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்.கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/ஜெயலலிதாவின்-நினைவிடம்-27/

  17. எம்.ஜி.ஆரின் 108 ஆவது ஜனன தினம் இன்று January 17, 2025 11:36 am மறைந்த நடிகரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்த தினம் இன்று. இதனை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முயற்சித்தவர். மக்களுக்காக எம்.ஜி.ஆர் மேற்கொண்ட முயற்சிகளால…

  18. பட மூலாதாரம்,TN ASSEMBLY 14 மார்ச் 2025, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் 'ரூ' சேர்க்கப்பட்டது விவாதமாவது ஏன்? 'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் இந்திய மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம் திருக்குறளை மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடு திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க…

  19. யானை-மனித எதிர்கொள்ளல்: பாதுகாப்பில் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருவது ஏன்? பி.சுதாகர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யானை ஒரு நாளைக்கு சராசரியாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை நடக்கும். தினமும் 250 கிலோ வரை உணவு எடுத்துக்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். ஒரு இடத்தில் சாப்பிட்ட உணவின் மூலம், சாணத்தில் இருக்கும் விதைகளுக்கு உயிர்கொடுத்து புது செடிகளையும், மரங்களையும் மற்றொரு இடத்தில் வளர்க்கும் என்று சொல்லப்படுகிறது. யானைகளைக் குழந்தையைப் போல அன்பானது மற்றும் குறும்புத்தனம் கொண்டது என்று சொல்வதுண்டு. இன்று உலக யானைகள் …

  20. தமிழகத்தில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை... இரத்து செய்வதாக முதலமைச்சர் அறிவிப்பு தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வைத்தியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி வகுப்புகளுக்கான தகுதியாக 102 பொதுத்தேர்வுகள் மாத்திரமே கவனத்தில் கொள்ளப்படும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கின்றது. இருப்பினும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதி…

  21. அஷ்டமி, நவமி முடிந்து, வீடு திரும்புவார் கருணாநிதி. சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒவ்வாமை ஏற்பட்டதால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டார். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அவருக்கு நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனையடுத்து 7ம் தேதி கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் ஓய்வில் இருந்த கருணாநிதிக்கு சுவாசப்பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு, மீண்டும் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, மூச்சுத்திணறல் மற…

  22. ஈஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரிக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்தும் சிறப்பு கவனம்- முதல்வர் ஈஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரிக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயற்பட்டு வரும், அம்மா உணவகங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அவர், அங்கு விற்பனை செய்யப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், நலிவுற்ற மக்களுக்காக கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத் திட்டம் மூலம், நாளொன்றுக்கு நான்கரை இலட்சம் பேர் உணவு அருந்துகின்றனர் எனக் குறிப்பிட்டார்.…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், மகாலட்சுமி தி.ரா பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கொடைக்கானலில் வட்டக்கானல் என்ற மலைப்பகுதியில் மேஜிக் காளான்கள் எனப்படும் போதை காளான்களை விற்பனை செய்ததாக, ஐந்து பேரை கொடைக்கானல் காவல் துறை சமீபத்தில் கைது செய்தது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் போதை காளான்கள் கொரியர் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளியூர்களில் யார், யாருக்கு இது விற்பனை செய்யப்பட்டது என்பதையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டில் கேரளாவைச் சேர்ந்த இளைஞர…

  24. ‘பன்னீர்செல்வமே முதல்வராக இருந்திருக்கலாம்!’ -‘கொங்கு லாபி’யை கதிகலக்கும் தினகரன் #VikatanExclusive பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் டி.டி.வி.தினகரன். இந்தச் சந்திப்பில் அரசியல்ரீதியான விஷயங்கள் பேசப்பட்டதாகத் தகவல் வெளியானாலும், குடும்ப நிலை பற்றியே சசிகலா அதிகம் கவலைப்பட்டிருக்கிறார். ‘எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்தும் குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கை பற்றியும் சசிகலாவிடம் விரிவாக எடுத்துரைத்தார் தினகரன்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முதல்வர் ஜெயலலிதா குறித்தும் கட்சியில் தன்னுடைய செயல்பாடுகள் குறித்தும் சசிகலாவின் கணவர் நடராசன் அளித்த பேட்டி அ.தி.மு.கவுக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியு…

  25. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இதனால், அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்த வழக்கை, வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பேரறிவாளன் பரோல் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தமிழக அர…

    • 0 replies
    • 355 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.