தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10254 topics in this forum
-
தனி தமிழீழ கோரிக்கையோடு அறவழியில் போராடிய திருச்சி சட்டக்கல்லூரி மாண வர்கள் டிவி.எஸ். டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார்கள். நான்கு முனை சந்திப்பையும் அடைத்து நின்று மறியல் செய்தனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அறவழியில் போராடிய சட்டக் கல்லூரி மாணவர்களில் ஒருவரை காவல்துறை ஆய்வாளர் அடித்ததால் மாணவர்கள் கடும் கொந்தளிப்பு. சட்டக் கல்லூரி மாணவர்கள் திருச்சி,டோல்கேட் பகுதியில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது . காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர் . மாணவர்களின் உணர்வுமிக்க போராட்டத்தை மத்திய அரசு காவல் துறையை ஏவி திசைதிருப்ப முயல்கிறது. மாணவ சமுதாயமே விழித்துக்கொள். நமது இலக்கு ஒன்றுதான்....... இனத்…
-
- 3 replies
- 347 views
-
-
கூட்டணியில் இருப்பதால்தானே மிரட்ட முடிகிறது: கருணாநிதி விளக்கம் திமுக மத்திய ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால்தானே, அதை மிரட்டி தமிழக நலன்களுக்காக சிலவற்றை சாதித்துக் கொள்ள முடிகிறது; 6 வது முறையாக திமுக மிரட்டல் என்று தினமணி கேலிக்காகக் கூறினாலும், அதனால் விளைந்த நன்மைகளை யாரும் மறைக்க முடியாதே என்று திமுக தலைவர் கருணாநிதி புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தி.மு. கழகம் மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி தமிழ்நாட்டிலே உள்ள ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு சில கட்சிக்காரர்களையும், ஒரு சில ஊடகங்களையும் கடுமையான வயிற்றெரிச்சல் வாட்டிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக, மத்திய அரசை எதற்காகவாவது குறை சொல்ல வேண்டுமென…
-
- 7 replies
- 1.3k views
-
-
திருகோணமலை ஊடாக தமிழ்நாட்டை நோக்கி நகரவுள்ள புரவி புயல்! இலங்கையின் திருகோணமலை அருகே நாளை புரவி புயல் கரையை கடக்கும் நிலையில், கன்னியாகுமரி-பாம்பன் இடையே வரும் நான்காம் திகதி புயல் கரை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புரவி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை மாலை அல்லது இரவு இலங்கையின் திருகோணமலை அருகே கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 75 முதல் 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தப் புயலால் தென்தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும…
-
- 0 replies
- 469 views
-
-
சசி பாரதம் தொடக்கம்! ‘மக்களால் நான்... மக்களுக்காக நான்’ எனச் சொன்ன ஜெயலலிதா, பொதுமக்களை கார்டனில் சந்தித்தது அபூர்வம்தான். எம்.ஜி.ஆரின் அரவணைப்பு, ஜெயலலிதாவின் பரிவு என நவரசங்களையும் தொட்டார் சசிகலா. கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா பெரியம்மாவாக மாறிக்கொண்டிருக்கிறார். பொதுக்குழு நடந்த ஏரியாவில் ஜெயலலிதாவின் பிரமாண்டமான பேனர் இருந்தது. ‘சசிகலா பொதுச்செயலாளர்’ என்றதும் ஜெயலலிதாவை மறைத்துவிட்டு (!) சசிகலாவின் பேனர் உதயமானது. சட்டப்படிதான் நடக்குறாங்களாம். ராமரின் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி நடத்திய பரதன் காட்சி ரிப்பீட் ஆனது. ஜெ. இல்லாத பொதுக்குழுவுக்கு ஜெயலலிதா பயன்படுத்திய குஷன் நாற்காலியையும் டீப்பாயையும் காரில் பத்திரமாகக் கொண்…
-
- 1 reply
- 659 views
-
-
இலங்கைக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சதீவில் போராட்டத்திற்கு முஸ்தீபு (ஆர்.யசி) இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீறுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் இம்மாதம் 23 ஆம் திகதி தமது மீன்பிடி விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கச்சத்தீவு நோக்கி சென்று போராட்டம் நடத்தவுள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 26 இந்திய இராமேஸ்வரம் மீனவர்களை நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றம் வி…
-
- 1 reply
- 729 views
-
-
மூன்று நிமிட பேச்சுக்கு 3 மணி நேரம் காத்திருக்கச் செய்வதா?* சசிகலா கூட்டத்தில் பங்கேற்ற, 'மாஜி'க்கள் கொதிப்பு சசிகலாவின் மூன்று நிமிட பேச்சை கேட்க, மூன்று மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால், 'மாஜி' அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 'மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சந்திப்பு, கசப்பானதாக முடிந்து விட்டது' என்றும், கொதிப்புடன் கூறினர். அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலாவுக்கு, பல மட்டத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைச் சமாளிக்க, தலைமை அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து வருகிறார். நேற்று காலை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். மதியம், முன்னாள் அமைச்சர்கள்…
-
- 0 replies
- 415 views
-
-
‘மறுக்கப்பட்ட’ பதவி... ‘கைப்பற்றிய’ தளபதி! ப.திருமாவேலன் ‘ஒட்டுமொத்தமான உங்களுடைய கரவொலி, கலைஞர் வீற்றிருக்கும் அவருடைய இல்லம் வரை கேட்கும் என நான் தெரிவித்து, ஸ்டாலின் அவர்களை செயல் தலைவராக இங்கே உரையாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ - அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இருந்து பேராசிரியர் அன்பழகன் சொன்னார். தன் மகன் வயதுள்ள ஸ்டாலினை வரவேற்று அன்பழகன் பேசினார். அவர், கருணாநிதியைவிட ஒரு வயது மூத்தவர். திருவாரூரில் சாதாரணத் தொண்டராகக் கட்சிப் பணி ஆற்றிவந்த கருணாநிதி, அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த அன்பழகனை அழைத்துவந்து தனது ஊரில் கூட்டம் பேசவைத்தார். அதே அன்பழகன், இன்று கருணாநிதியின் மகன் ஸ்டாலினை, கட்சியின் செயல் தலைவராக 70 ஆண்டுகள் கழித்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சசிகலா நடராஜன் அதிரடி பேச்சு அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி 'குடும்ப ஆட்சி நடத்துவோம்' என, சசிகலா நடராஜன் பேசியது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கு, எதிராக வரிந்து கட்ட தயாராகி வருகின்றனர். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க.,வை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஜெயலலிதா உடல், மக்கள் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தபோது, அவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, சசிகலா குடும்ப உறுப்பினர்கள் சுற்றி நின்றனர். இது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரி…
-
- 0 replies
- 473 views
-
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் இருப்பதையும், இக்கடிதத்தின் வாயிலாகத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கடந்த பல ஆண்டுகளாக, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பரப்பிலும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். மீன்பிடி படகுகளைச் சேதப்படுத்தி, வலைகளை அறுத்து எறிகின்றனர். இந்நிகழ்வுகளை, நான் பலமுறை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்து இருக்கின்றேன். இதுவரையிலும், 578 தமிழக மீனவர்கள், இலங்கை…
-
- 0 replies
- 454 views
-
-
சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு செக் வைத்த உயர் நீதிமன்றம் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது கீழ் நீதிமன்றம் விடுவித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சுசீலா என்பவரிடம் உரிய அனுமதியின்றி பணம் பெற்றதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை விடுவித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று …
-
- 0 replies
- 413 views
-
-
காரைக்கால் எம்.எம்.ஜி நகர், என்ஜினியர்ஸ் கார்டனை சேர்ந்தவர் ஜெய பாலன் மகள் வினோதினி (24). சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்திருந்த அவர், தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி விட்டு சென்னை செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தபோது வினோதினி மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சிகிச்சை பலனின்றி கடந்த பிப்.12-ந் தேதி அதிகாலை வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். வினோதினி மீது ஆசிட் வீசியதாக காரைக்கால் திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் குமார் (27) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் வினோதினியை சுரேஷ் குமார் ஒருதலையாக காதலித்ததும், அவரது காதல் நிறைவேறாதத…
-
- 0 replies
- 485 views
-
-
உதயநிதியின், சொத்து மதிப்பு குறித்து விபரம் வெளியானது..! சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டலின் வேட்பு மனுவில் அவரது சொத்துக்கள், வருமான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். உதயநிதி பெயரில் 21 கோடியே 13 இலட்சத்து ஒன்பதாயிரத்து 650 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்பில் அசையாச் சொத்துக்களும் உள்ளன. உதயநிதியின் மனைவி கிருத்திகா பெயரில் ஒரு கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 ரூபாய் மதிப்புக்கு அசையும் சொத்துக்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் உதயநிதியின் மொத்த வருமானம் 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் என்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வருமானம் 17 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் என்றும் அ…
-
- 3 replies
- 658 views
-
-
சோனியா காந்திக்கு கலைஞர் நன்றி ராஜ்யபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பிய கடி ததத்தில், ‘’காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். காரணம் மேல்–சபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அறிவித்ததற்காக நன்றி கூறி கொள்கிறேன்’’என்று கூறி உள்ளார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=102387
-
- 6 replies
- 737 views
-
-
ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் இல்லை: சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும் - மாஃபா பாண்டியராஜன் சூசகம் மாஃபா பாண்டியராஜன் | படம் உதவி: மாஃபா பாண்டியராஜன் ட்விட்டர் பக்கம். ‘ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. விரைவில் சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும்’ என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மாஃபா க.பாண்டியராஜன் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘அம்மா கல்வியகம்’ என்ற இணையதளத்தை தனது வீட்டில் நேற்று தொடங்கி வைத் தார். அதன்பின் நிருபர்களிடம் பாண்டியராஜன் கூறியதாவது: நாட்டிலேயே முதல்முறை யாக, இலவசக் கல்வி இணைய தளத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங…
-
- 0 replies
- 228 views
-
-
"ஸ்டெர்லைட்" ஆலை, ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியது! ஸ்டெர்லைட் ஆலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் இருந்து ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக டேங்கர் லொறிகளும், ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது விநியோகமும் ஆரம்பமாகியுள்ளது. 4.820 டன் ஒக்சிஜன் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2021/1215553
-
- 0 replies
- 722 views
-
-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய குற்றப் பிரிவு விசாரிக்கும் வழக்குகள், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்குகள் தவிர பிற வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதியன்று மிகப் பெரிய ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் நடைபெற்றன. அது கலவரமாக மாறியதையடுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அ…
-
- 0 replies
- 556 views
-
-
வேட்பாளர்களின் செலவுக் கணக்கு... ஆர்.கே. நகரில் இறுக்கும் தேர்தல் ஆணையம்...! தேர்தல் என்றாலே வாக்கு இயந்திரம், வேட்புமனு, வேட்பாளர், சின்னம், கட்சி, பிரசாரம் என்று பல விஷயங்கள் இருக்கும். தேசியக்கட்சி, மாநிலக்கட்சி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேட்சை என்ற அடுத்தக் கட்ட விஷயங்களும் அங்கே காணப்படும். அடுத்ததாக சொல்வதென்றால், அது தேர்தல் ஆணையம்தான். தேர்தல் ஆணையம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போதெல்லாம் தவறாமல் நினைவில் வந்து விடுகிற பெயர் டி.என்.சேஷன். கட்சிக் கொடி கட்ட, போஸ்டர் ஒட்ட, கட்-அவுட் வைக்க, மைக் கட்டி பிரசாரம் செய்ய என்று அனைத்துக்கும் வேட்பாளர்கள் பயந்து நடுங்கிய காலகட்டம் அது. வாய்க்கு ரு…
-
- 0 replies
- 266 views
-
-
வாட்ஸப்பில் பரவும் முதல்வர் ப்ளஸ் அமைச்சர்கள் செல்போன் எண்! - பன்னீர்செல்வம் அணியின் விஷமமா? சசிகலா குடும்பத்தை விரட்ட ஏன் தயக்கம் என்ற கேள்வியை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கேளுங்கள் என்ற பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கேள்வியைக் கேட்க அவர்களின் செல்போன் நம்பர்களும் அந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளானது. சசிகலா தலைமையிலான அணி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலா அணியினருக்குத் தொடர்ந்து நெருக்கடியைக் கொடுத்து வந்தனர். சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து விரட்ட வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை …
-
- 0 replies
- 400 views
-
-
தமிழகத்தின் முக்கிய துறைமுகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இந்திய கரையோரப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடத்தப்படக் கூடுமென்ற புலனாய்வு பிரிவு எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மூன்று முக்கிய துறைமுகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி மற்றும் என்னூர் ஆகிய துறைமுகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் அச்சுறுத்தல்களை முறியடிக்கத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் தீவிரவாத குழுவொன்று இலங்கையைக் களமாகக் கொண்டு தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக அநாமேதய தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுக்கப…
-
- 0 replies
- 366 views
-
-
திமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ரூ 200 கோடி அளவு முறைகேடு என்ற புகாரில் முகாந்திரம் இருப்பின் அது குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. திமுக தலைவர் மு கருணாநிதி கோவையில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு பலரின் கவனத்தை ஈர்த்தது. வழக்கறிஞர் ரமேஷ்குமார் தான் அம் மாநாட்டுச் செலவுகள் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது அக்கௌண்டட் ஜெனரல் அலுவலகம் ரூ 151.22 கோடி செலவழிக்கப்பட்டதாக தெரிவித்தது, ஆனால் அம்மூன்றுநாள் மாநாட்டிற்காக 350 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக அன்றைய முதல்வர் மு கருணாநிதி சட்ட…
-
- 1 reply
- 480 views
-
-
சென்னை: 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்க தடை கோரிய மனுவிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சமூக நீதி அமைப்பு சார்பில் பாலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 21 வயதுக்குட்பட்டோர், பள்ளி மாணவர்களுக்கு மது விற்க கூடாது என சட்டம் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், சட்டத்தை மீறி 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்கப்படுவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் அக்டோபர் 9ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/tamilnadu/liquor-sale-hc-…
-
- 0 replies
- 290 views
-
-
அரசியல் நெருக்கடியில் தமிழக நிர்வாகம் முடக்கமா? முரளீதரன் காசி விஸ்வநாதன்செய்தியாளர் தமிழ்நாடு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துவரும் நிலையில், தமிழக அரசு அதனை எதிர்கொள்ள எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அரசு நிர்வாகம் முழுமையாக முடங்கியது. அவர் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் எந்தவித அரசுப் பணிகளும் நடக்கவில்லையென்றே கூறலாம். அவரது மறைவுக்குப் பிறகுப் பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா பதவியில் இருந்…
-
- 0 replies
- 389 views
-
-
சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இலங்கையில் நடந்த உள்ளாட்டு போரில் பலியான ஈழ தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக விளார் பஞ்சாயத்து நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி முள்ளிவாய்க்கால் முற்றம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக அனுப்ப…
-
- 0 replies
- 493 views
-
-
ராஜீவ் மரணம்: தொடரும் பரமபத விளையாட்டு! “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்பட்ட வெடிகுண்டு குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ளாதது ஏன்... அதுபற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை முகமை (MDMA) இத்தனை ஆண்டுகளில் நடத்திய விசாரணைகள் என்ன? இதுபற்றி மத்திய அரசு முழுமையான அறிக்கை தரவேண்டும்’’ என இப்போது கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு குறித்த விசாரணை அறிக்கையை, கடந்த 23-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ. ராஜீவ் மரணம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், அந்த வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசியாக இருக்கும் பேரறிவாளன் தொடுத்த வழக்கில்தான் இப்படிப் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். உ…
-
- 1 reply
- 724 views
-
-
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கவுன்சிலர்கள் ஆகும் 2K கிட்ஸ் முதல் வயோதிக தம்பதிவரை - சுவாரஸ்ய தகவல்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, ஆரணி பேரூராட்சியில் வெற்றி பெற்ற 21 வயது ரேவதி தமிழ்நாட்டில் குடும்பம், குடும்பமாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள். கட்சி சார்பாகவும் சுயேச்சையாகவும் போட்டியிட்டு வென்ற 22 வயது இளம்பெண்கள் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 மாநகராட்சிகளுக்கான நகர்ப்ப…
-
- 4 replies
- 537 views
- 1 follower
-