தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
ராமேஸ்வரத்தில் இருந்து கச்சதீவிற்கு இந்திய தேசிய கொடியுடன் பேரணியாக வர முயன்ற 50க்கும் மேற்பட்ட பாரத் மக்கள் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு கச்சதீவு பகுதியில் உள்ள பாரம்பரிய உரிமையை நிலைநாட்டும் விதமாக 68 வது சுதந்திர தினத்தில் கச்சத்தீவு சென்று இந்திய தேசிய கொடி ஏற்ற கோவையில் இருந்து பாரத் மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணாத்துரை தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரம் வந்தனர். இதனையடுத்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து இந்திய தேசிய கொடியுடன் பேரணியாக கடற்கரை சென்று படகு மூலம் கச்சதீவு சென்று இந்திய தேசிய கொடியை ஏற்றி பாரம்பரிய உரிமையை நிலை நாட்ட இருந்தனர். இந்த நிலையில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக கடற்…
-
- 1 reply
- 394 views
-
-
மக்கள் மனது வைத்தால் முதல்வராக முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லிங்கா பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்க டேஷுடன் நடிகர் ரஜினிகாந்த் கடந்த புதன்கிழமை மங்களூர் பாஜ்பே சர்வதேச விமான நிலை யத்துக்கு வந்தார். விமான நிலைய நிர்வாகம் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அப்போது அவர் கன்னடத் தில் அளித்த பேட்டி வருமாறு: ‘‘ஷிமோகாவில் நடைபெறும் ‘லிங்கா' ஷூட்டிங்கிற்காக மங்களூர் வந்துள்ளேன். 22 வருடங்களுக் குப் பிறகு மங்களூர் விமான நிலையத்துக்கு வந்தது மகிழ்ச்சி யளிக்கிறது. ‘லிங்கா' ஷூட்டிங் ஏற்கெனவே மைசூர், மாண்டியா, மத்தூர், மேல் கோட்டை என பல இடங்களில் நடந்தது. இப்போது ஷிமோகாவில் ஜோக் அருவி அருகில் 21 நாட்கள் ஷூ…
-
- 2 replies
- 630 views
-
-
தமது தந்தையைப் பணி செய்ய விடாமல் ராகுல் காந்தி முட்டுக்கட்டைப் போட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து, காங்கிரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. கட்சிக்குள் நடைப்பெற்ற குளறுபடிகளை அக்கட்சியின் முக்கியத் தலைவர்களே விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் மகள் தமன் சிங்கும் இப்போது பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமது தந்தை பிரதமராக இருந்தபோது அவரை பணி செய்ய விடாமல், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மற்றும் தலைவர் சோனியா காந்தி பலமுறை முட்டுக்கட்டைப் போட்டுள்ளனர் என்றும் தமன் சிங் கூறியுள்ளார். மேலும், தேர்தலில் அதிக செலவு செய்ய வேண்டும் என்பதற்காகவ…
-
- 12 replies
- 883 views
-
-
தமிழக காங்கிரஸ் தலைவர்ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இந்திய ஜனநாயகத்தின் மாண்பை சிதைத்து ஒரு தனிநபருக்கு முழு அதிகாரம் என்ற தத்துவத்தை பாஜ அரசு அரங்கேற்ற முயலுகிறது. தேர்தலின் போது தமிழகம் வந்த மோடி, மீனவர் பிரச்னை, தான் ஆட்சிக்கு வந்த பிறகு தீர்ந்துவிடும் என்றும், தமிழக மீனவர்கள் எந்தவித பாதிப்புமின்றி மீன்பிடிக்க செல்லலாம் என்பதை போல பேசினார். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் 93 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 62 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்களும் படகுகளும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தேர்தல் வாக்குறுதி வேறு, நடைமுறை வேறு என்பதை பாஜ வ…
-
- 2 replies
- 357 views
-
-
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இனப்படுகொலையை நடாத்திய இலங்கை அரசுக்கு ஆதரவாக நிற்கும் லைக்கா மொபைல் நிறுவனம் தயாரிகிறது. இதை கண்டித்து சில தமிழ் அமைப்புகள் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டை முற்றுகையிட போவதாக தகவல்கள் பரவின. இதையடுத்து நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. http://www.pathivu.com/news/33059/57//d,article_full.aspx
-
- 0 replies
- 642 views
-
-
சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின் லஞ்ச வழக்கில் புஷான் ஸ்டீல் நிறுவனத்தின் துணைத்தலைவர் நீரஜ் சிங்காலை சில நாட்களுக்கு முன்பு சிபிஐ கைது செய்தது. இந்த நிலைமையில் புஷான் ஸ்டீல் நிறுவனத்துக்கு 51 வங்கிகள் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் கொடுத்திருக்கிறார்கள். இந்த கடன் கேள்விக்குறியாகி இருக்கிறது. வொர்க்கிங் கேபிடலுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமையில் வங்கிகள் கடன் கொடுத்திருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமையில் இன்னும் சில வங்கிகள் புஷான் ஸ்டீல் நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருக்கின்றன. இந்த நிலைமையில் புஷான் ஸ்டீல் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகளின் சந்திப்பு நிகழும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா …
-
- 0 replies
- 741 views
-
-
மத்திய அரசின் அழுங்குப் பிடியை ஆட்டம் காணவைத்த தமிழ்நாடு [ ஞாயிற்றுக்கிழமை, 10 ஓகஸ்ட் 2014, 08:59.14 AM GMT ] தமிழ்நாட்டுக்கும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கும் எந்தளவுக்கு எட்டாப் பொருத்தம் என்பதை இங்கு விபரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இலங்கை அரசாங்கத்தை, தமிழ்நாடும், தமிழ்நாட்டை இலங்கை அரசும் எந்தளவுக்கு மோசமாக விமர்சிக்க முடியுமோ, அந்தளவுக்கு மோசமாக விமர்சித்து வந்த வரலாற்றை எவராலும் இலகுவில் மறக்க முடியாது. இங்குள்ள தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இருந்து கொடுக்கப்படும் குரலை, இலங்கை அரசாங்கத்தினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதுபோலவே, இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதத்தை தமிழ்நாட்டினால் சகித்து…
-
- 0 replies
- 489 views
-
-
கோயில் திருவிழாவில் நடந்த கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த போது மைக் ஷாக் அடித்து பாடகர் பலியானார். ஆலந்தூரை அடுத்த மடுவின் கரை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடித் திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் இரவு கோயில் வளாகத்தில் ராம் ரிதம்ஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கச்சேரிக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி தொடங்கியது. கச்சேரிக்கு முன்னதாக மழை பெய்திருந்ததால் மேடையும் மின்சார ஒயர்களும் ஈரமாக இருந்துள்ளன. அத்துடன் மின்சாரமும் வந்து போய்க் கொண்டு இருந்துள்ளது. இந்நிலையில் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ரகுகுமார் திடீரென்று அலறியவாறு மேடையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்…
-
- 0 replies
- 732 views
-
-
கினியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த 25 வயது நபர் ஒருவர் சென்னை அரசு மருத்துவமனையில் எபோலா வைரஸ் தாக்கப்பட்டதான அறிகுறிகள் இருந்ததாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனியைச் சேர்ந்த இந்த நபர் நேற்று இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனியான அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவிலிருந்து இந்த நபர் தனது சொந்த ஊரான தேனிக்குச் செல்ல சென்னை வந்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் எபோலா வைரஸ் நோய் தலைவிரித்தாடுவதால் சென்னை விமான நிலையத்தில் மருத்துவ நிபுணர்கள் அங்கிருந்து வரும் பயணிகளை பரிசோதித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை…
-
- 0 replies
- 331 views
-
-
தமிழர் தேசிய முன்னணி கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’தமிழர் தேசிய முன்னணி, புதிய கட்சியோ, புதிய அமைப்போ அல்ல. 30 வருடங்களுக்காக தமிழக மக்களுக்கு பணியாற்றி வருகிறது. தற்போது இளைஞர்களுக்கு அரசியல் குறித்த பயிற்சி முகாம் நடத்துவதற்காக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்து மக்களுக்கான திட்டங்களை சரிவர செயல்படுத்தாமல் வருகிறது. அந்த கட்சிகளுக்கு மாற்று முயற்சியை ஏற்படுத்துவோம். நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. மேலும் இயற்கையை சூறையாடுகின்ற செயலும் அதிகரித்த…
-
- 0 replies
- 289 views
-
-
கெரகம் தலைக்கு ஏறுனா, கெண்டை தோளுக்கு ஏறுதாம் என்கிற மாதிரியாகியிருக்கிறது விஜய் நிலைமை. கத்தி படத்தை தயாரித்தது ராஜபக்சேவின் நண்பர். அவரது தம்பிக்கு தொழில் பார்ட்னர் என்றெல்லாம் நாடு முழுக்க கொந்தளிப்பு. இந்த நேரத்தில் ஆளுங்கட்சியின் தயவும் அம்மாவும் கனிவும் இல்லாமல் கதை நடக்காது என்பதை புரிந்து கொண்ட விஜய் ஊருக்கு முன் முதல் ஆளாக வந்திருந்தார் இலங்கைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள. அவ்வளவு செய்தாலும் மேலிடம் டிக் செய்யுமா கத்தியை என்பதுதான் பெரும் சவலாக இருக்கிறது. ஏன்? படத்தில் இரண்டு விஜய்கள். ஒருவர் நல்லவர். இன்னொருவர் கெட்டவர். அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தும் நல்லவரை, யாரோ கடத்திக் கொண்டு போய்விட, யதார்த்தமாக அங்கு வருகிறாராம் கெட்டவர். பிறகு அந்த போர…
-
- 0 replies
- 484 views
-
-
இனப்படுகொலையை நடாத்திய இலங்கை அரசுக்கு ஆதரவாக நிற்கும் லைக்கா மொபைல் நிறுவனத்தை தமிழகத்தில் ஒருபோதும் கால்பதிக்க அனுமதிக்க மாட்டோம். கத்தி திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட மாணவர்களாகிய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இத்திரைப்படத்தையொட்டிப் பல போராட்டங்களை நடாத்த தமிழ்நாட்டில் திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (10-08-2014) விஜய் வீட்டை முற்றுகையிட மாணவர்கள் ஆகிய நாம் தீர்மானித்திருக்கிறோம். -தமிழ்நாடு மாணவர்- http://www.seithy.com/breifNews.php?newsID=114608&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 645 views
-
-
ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகளின் உளவாளி இருந்தார் என்று முன்னாள் உள்துறைச் செயலாளர் ஆர்.டி. பிரதான் தனது புத்தகத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட் டுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் 36 ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.டி.பிரதான், 1998 முதல் 2003 வரை சோனியா காந்தியின் அலுவலகப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் எழுதிய ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அண்ட் சோனியா’ என்ற புத்தகம் அண்மையில் வெளியானது. அந்தப் புத்தகத்தில் ஆர்.டி. பிரதான் கூறியிருப்பதாவது: 1991 மே 21-ம் தேதி பெரும் புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்…
-
- 1 reply
- 424 views
-
-
இனப்படுகொலையை நடாத்திய இலங்கை அரசுக்கு ஆதரவாக நிற்கும் லைக்கா மொபைல் நிறுவனத்தை தமிழகத்தில் ஒருபோதும் கால்பதிக்க அனுமதிக்க மாட்டோம். கத்தி திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட மாணவர்களாகிய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இத்திரைப்படத்தையொட்டிப் பல போராட்டங்களை நடாத்த தமிழ்நாட்டில் திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (10-08-2014) விஜய் வீட்டை முற்றுகையிட மாணவர்கள் ஆகிய நாம் தீர்மானித்திருக்கிறோம். http://www.pathivu.com/news/32977/57//d,article_full.aspx
-
- 1 reply
- 436 views
-
-
எபோலா வைரஸ் ஏதோ ஆப்பிரிக்க நாட்டில் பரவும் நோய் என்று அலட்சியமாக நாம் இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கும் கட்டுரை. எபோலா காய்ச்சல்பற்றி பீதி கிளம்பியிருக்கும் வேளையில், முதலில் நம்மில் பலர் நினைப்பது: “அதெல்லாம் ஆப்பிரிக்காவுலேர்ந்து இங்க வராது, வந்தாலும் நாம சமாளிக்க முடியாதா?” இவை இரண்டுமே தவறான கருத்துகள். முதலாவது, கொடிய தொற்றுநோய்கள் ஆப்பிரிக்கா விலிருந்துதான் வர வேண்டும் என்பதில்லை. ஈரான், உக்ரைன், கஜகஸ்தான் போன்ற மருத்துவ உள்கட்டமைப்புகள் குறைந்த நாடுகளிலும் எபோலா போன்ற நோய்கள் தோன்றிப் பரவியுள்ளன. இரண்டா வது, நமது மருத்துவ வசதியெல்லாம் இதுபோன்ற தொற்றுநோய்களை வென்றுவிட முடியாது. எபோலா, கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல் (சி.சிஹெச்.எஃப்), லஸ்ஸா போன்ற …
-
- 0 replies
- 500 views
-
-
Franklin Herbert நண்பர் நவரத்னம் பிரசாந்தன் அவர்கள் இலங்கை. பிரச்சனையில் கூறியிருக்கின்ற கருத்துக்களை ஆராய்ந்துப்பார்த்தால் .... கலைஞர் எதிர்ப்பு மனநிலை அவர் மனதிலே வேரூன்றி நிற்பது நன்கு புரிகிறது. இலங்கை பிரச்சனைக்கு திமுக அரசு துணை நின்று புலிகளை ஆதரித்து என்பதை காரணம் காட்டி கலைக்கப்பட்டது.திமுக புலிகளுக்கோ இலங்கை பிரிச்ச்சனைகளுக்கோ தேவையற்ற வாக்குறுதிகள் தந்து புலிகளை ஏமாற்ற்றவில்லை. ஆனால் பேச வேண்டிய இடங்களில் பேசினார்.செய்ய வேண்டியவற்றை செய்தார்.அப்பொழுது அவர் ஆட்ச்சியை கலைக்க மதிய அரசுக்கு ஜெயலலிதா விண்ணப்பித்தார். என்னவென்று.. திமுகவும் கலைஞரும் விடுதலப் புலிகளுக்கு உதவுகிறார்கள் ...புலிகள் நடமாட்டம் தமிழத்தில் அந்த சமயத்தில் அதிகமாக இருந்தது என்று...... அது பொ…
-
- 0 replies
- 825 views
-
-
சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் நுழைய நிலவும் ஆடை கட்டுப்பாட்டை நீக்கும் வகையில் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா புதிய சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். புதிய சட்டம், ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தரும் என முதல்வர் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வேட்டி அணிந்து சென்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மூத்த வக்கீல்கள் காந்தி, சுவாமிநாதன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேட்டி அணிந்து சென்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு கிரிக்கெட் கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், வேட்டி கட்டி நுழைபவர்களை தடு…
-
- 0 replies
- 575 views
-
-
தமிழக மீனவர்களிடம் இலங்கைக் கடற்படை நடந்துகொள்ளும் அணுகுமுறை உலகில் வேறு எந்த இரு நாடுகளுக்கு இடையிலும் காண முடியாதது. நெருக்கமான கடல் எல்லையைக் கொண்ட இரு நாடுகளிடையே கடலோடிகள் எல்லை தாண்டிச் செல்வது எங்கும் நடக்கக் கூடியது. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், இந்தப் பக்கம் எப்படி மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்கிறார்களோ, அதேபோல, அந்தப் பக்கம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், இலங்கை அரசைப் போல பாகிஸ்தான் அரசு கொடூரமாக நடந்துகொள்ளவில்லை. அதேபோல், இந்திய எல்லைக்குள் தவறி வரும் எந்நாட்டு மீனவர்களையும் நாம் கண்ணியமாகவே கையாள்கிறோம். இலங்கை அரசின் அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகரித்திருக் கின்றன. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவத…
-
- 0 replies
- 511 views
-
-
New How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi? கொழும்பு : இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முதல் பக்கத்தில் வாசகர் கடிதம் பகுதியில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் தலைப்பிட்டு புகைப்படத்துடன் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அண்டை நாட்டின் தலைவரை இவ்வளவு மோசமாக சித்தரித்து, மற்றொரு நாடு, தன்னுடைய அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இவ்வாறு வெளியிட்டிருப்பது, சர்வதேச நெறிமுறைகளுக்குப் புறம்பானது. இலங்கையுடன் நட்புறவை வலுப்படுத்துவோம் என்று தற்போதைய மத்திய அரசும் கூறி வரும் சூழ்நிலையில், நமது நாட்டுத் தலைவர்களை இப்படி மோசமாக இலங்கை அரசின் இணையதளம் விமர்சித்திருப்பது அதிர்ச்ச…
-
- 27 replies
- 2.2k views
-
-
தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக் குறித்த அவதூறுக் கட்டுரைத் தொடர்பாக, இலங்கைத் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் நலன் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவ்வப்போது கடிதம் எழுதி வருகிறார். இதை அவமதிக்கும் வகையில் இலங்கை அரசின் பாதுகாப்புப் படைக்கு சொந்தமான இணையத் தளத்தில் கட்டுரை வெளியாகியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த வேளையில், இலங்கை அரசு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. இருப்பினும் மேற்கண்ட பிரச்னையை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை எம்பிக்கள் எழுப்பி அவையில் அமளி கிளப்பினர். இதையடுத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இலங்கைத் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. http://4tamilmedia.…
-
- 0 replies
- 376 views
-
-
ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள் எனப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்களில் 16 வயதுக்குட்பட்ட அணியினர் இன்று தமிழகம் வந்தபோது அவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். இங்குள்ள மைதானத்தில் அவர்கள் பயிற்சிக்கு வந்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த ஜூனியர் கிரிக்கெட் அணியினரின் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கிய நேரத்தில், தமிழகத்தில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. எனவே, தமிழகத்தில் இவர்களுக்கு தனியாக பாதுகாப்பு வழங்குவது கடினம் என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில், வீரர்கள் மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். த…
-
- 0 replies
- 1.5k views
-
-
முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை மூடக்கோரியும் நடிகர் விஜய் உள்பட தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு பந்தல் அமைத்து திரையுலகினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேஆர் மற்றும் இப்ராகிம் ராவுத்தர் உள்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110196/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 924 views
-
-
வட மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக கற்பிக்க நடவடிக்கை! - உத்தர்கண்ட் எம்பி வலியுறுத்தல் டெல்லி: திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்க வேண்டும், வட மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தர்கண்ட் எம்பி தருண் விஜய் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் வியாழக்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வரும் நேரத்தில், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேச அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது: "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்திய மொழிகள் தனித் தன்மையும், சிறப்பு வாய்ந்தவையுமாகும். அந்த வகையில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தென் மாநிலங்களில் உள்ள ஏதேனும் ஒரு ம…
-
- 2 replies
- 498 views
-
-
தமிழக அகதி முகாம்களில் உள்ள 62 இலங்கை மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு அனுமதி! [sunday 2014-08-03 09:00] தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதி மாணவர்களில் 62 பேர் 2014-15-ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 40 பேர் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இலங்கையிலிருந்து அகதிகளாகக் குடியேறுபவர்களின் குழந்தைகள் தமிழகத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 110 அகதி முகாம்களைச் சேர்ந்த 2,200 மாணவ, மாணவிகள் இப்போது பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். …
-
- 0 replies
- 365 views
-
-
தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரையுலகினர் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி போராட்டத்தில் குதிக்கின்றனர். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் நடிகைகள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். திரளாகப் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர்கள் சங்கத்தினர் இந்தப் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டனர். அதில், "தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பவரான நமது தமிழக முதல்வரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாகச் சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது. எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு இப்போது நி…
-
- 0 replies
- 441 views
-