தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
திடீர் சுகவீனம் - மருத்துவமனையில் வைகோ! சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடல் நல பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே மருத்துவமனையில்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நெஞ்சு வலி காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த்துக்கு முன்பாகவே வைகோவுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு அவரை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலப் பிரச்சினை குறித்த விவரம் தெரியவில்லை. - தற்ஸ் தமிழ் - வைகோ அவர்கள், பூரண சுகம் பெற்று, வீடு திரும்ப பிரார்த்திக்கின்றேன்.
-
- 7 replies
- 831 views
-
-
ஆயிரங்கண் போதாது வண்ணக் கிளியே குற்றால அழகை நான் காண்பதற்கு வண்ணக்கிளியே" என்பது வெறும் திரைப்படப்பாடல் மட்டுமன்று. திருக்குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடராசப்ப கவிராயர் இந்த மலையின் வளத்தை வியந்து பாடியுள்ளார். "வானரங்கள் கனி கொடுத்து..." என்னும் வரிகளோடு தொடங்கும் அந்தப் பாடல் நீர்நிலைகள், பாறையிடுக்குகளில் பொதிந்திருக்கும் தேன்கூடுகள், புள்ளினங்கள், தாவரங்கள், விலங்குகள் என மலையில் காணும் இயற்கையின் பல்லுயிர்களையும், காலந்தோறும் தொடரும் இதமான சாரலையும் அதன் எழிலையும் பாடி... திருகூடமலை எங்கள் மலையே" என்று அவர் பெருமிதம் கொள்கிறார். அவர் இயற்றிய திருக்குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம் இன்றைக்கும் அரங்கேறுகிறது. மஞ்சள் கடம்பு, கரையான் அரிக்காத விடத்தேரை போன்ற மர வகைகளும்,…
-
- 0 replies
- 684 views
-
-
சென்னை: தமிழே படிக்காமல் அல்லது தெரியாமல் தமிழ்நாட்டில் பி.எச்.டி.பட்டம் வாங்க முடியும். இந்தக் கேவலம் உலகில் எங்குமில்லை. இந்த நிலை மாற தமிழ்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும்," என்றார் நடிகர் சிவகுமார். ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளையும் அகரம் பவுண்டேஷனும் இணைந்து 35வது ஆண்டு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு சூழலிலிருந்து சிரமப்பட்டு கல்வி பயிலும் 25 மாணவர்களுக்கு பரிசுத் தொகை தலா பத்தாயிரம் வீதம் இரண்டரை லட்சம் வழங்கப்பட்டது. திண்டிவனம் 'தாய்தமிழ்ப் பள்ளி'க்கு ஒரு லட்சமும், 'வாழை' அமைப்புக்கு இரண்டு லட்சமும் வழங்கப்பட்டது . என் கதையைக் கேட்டால்... இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், "இங்கு வந்திருக்கும் பல மாணவர்கள் வறும…
-
- 0 replies
- 904 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியான நளினி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட நால்வர் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடையதாக சந்தேகப்படும் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை ரத்தாகி இவர்கள் மூவரின் விடுதலையை மாநில அரசு முடிவு செய்துக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்ற முந்தைய தலைமை நீதிபதி பி.சதாசிவம் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, மேற்கண்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்திருந்தது. ஆனால், இவர்களின் விடுதலைக்கு எதிராக அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உச்ச …
-
- 0 replies
- 397 views
-
-
சென்னை: குற்றாலம் சொகுசு பங்களாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த, சசிகலாவின் கணவர் நடராஜனை, சிற்ப வல்லுனருக்கு பேசிய பணத்தை தராமல், கொலை மிரட்டல் விடுத்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். அவரை சைதாப்பேட்டை நீதிமன்றம்உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவின், நெருங்கிய தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் மீது, கராத்தே மாஸ்டரும், சிற்ப வல்லுனருமான ஹூசைனி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு அளித்து இருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:தஞ்சை மாவட்டம், விளாரில், முள்ளி வாய்க்கால் முற்றத்தில், 98 லட்சம் ரூபாய் செலவில், 'மறுமலர்ச்சி கரங்கள்' அமைக்க, சசிகலாவின் கணவர் நடராஜன், அவரது நெருங்கிய நண்பர் இளவழகன், 'ஏர்போர்…
-
- 0 replies
- 335 views
-
-
விளைநிலங்கள் ஊடாக எரிவாயுக்குழாய் பதிப்பு முயற்சிக்குத் தடை நீட்டிப்பு தமிழகத்தில் விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிக்கு விதிக்கப்பட்ட தடையை, இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமை மேலும் மூன்று வார காலத்திற்கு நீட்டித்துள்ளது. வேளாண் நிலங்களுக்கு இந்த திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், மத்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க மூன்று வார காலம் கோரப்பட்டது. இதனால் எரிவாயு திட்டத்திற்கான குழாய்களை தமிழ் நாட்டின் விவசாய வேளாண் நிலங்கள் வழியாக பதிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்த…
-
- 0 replies
- 500 views
-
-
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை படகுகளை விடுவிக்கவும், கச்சத்தீவில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தியும ஜூலை 26ம் திகதி படகுகளில் வெள்ளைக் கொடிகளை கட்டி கச்சத்தீவில் தஞ்சமடைவது என ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவ சங்ககூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் 150-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். 46 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 2 ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகு இலங்கை கடற்படையினரால் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றத…
-
- 0 replies
- 338 views
-
-
சென்னை: இயற்கை சட்டைகள், தேங்காய் ஓடு கிண்ணங்கள், களிமண் டம்ளர் என சென்னையில் நடந்த உணவுத் திருவிழாவில் ருசிகர காட்சிகள் இடம் பெற்றிருந்தன. சென்னை அண்ணாநகர் டவர் பார்க்கில் ஜூலை 5ஆம் தேதி இயற்கை உணவு திருவிழா மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சென்னையில் இருக்கும் பல இயற்கை அங்காடிகள் பங்கேற்றன. மேள தாளத்தோடு, துடும்பாட்டமும் உணவுத் திருவிழாவை கலகலப்பாக்கியது. விழாவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மக்களை மிகவும் கவர்ந்தது. இந்த ஆடைகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியால் நெய்யப்பட்டது. இயற்கையாக கிடைக்கும் காய், பழங்கள் மூலம் கிடைக்கும…
-
- 0 replies
- 2.7k views
-
-
சென்னை: நதிநீர் பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைத்து, தன்னுடைய அரசியல் அறியாமையை தனது அறிக்கையின் மூலம் கருணாநிதி வெளிப்படுத்தி இருப்பதிலிருந்து "அரசியல் அரைவேக்காடு யார்?" என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியல் ஆதாயம் அடையலாம் என்று எதிர்பார்த்து "நதிநீர்ப் பிரச்னையில் கேரளமும், தமிழகமும்" என்ற தலைப்பில் ஒரு வெத்துவேட்டு அறிக்கையை வெளியிட்டு, வாங்கிக் கட்டிக் கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, "அரைவேக்காடு யார்?" என்ற தலை…
-
- 0 replies
- 591 views
-
-
ஆயுள் கைதிகள் விடுதலையில் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை: உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு! Posted Date : 14:41 (07/07/2014)Last updated : 14:53 (07/07/2014) புதுடெல்லி: ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டிய தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று பிறகு ஆயுள் தண்டனையாக குறைக்கப் பெற்ற நளினி, உச்ச நீதிமன்றத்தி்ல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "எனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 2000ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நான் கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். எனக்க…
-
- 0 replies
- 417 views
-
-
சன் செய்தி தொலைக்காட்சியின் முன்னாள் ஆசிரியரான ராஜாவுக்கு, பிணையில் வர முடியாத பிடியாணை (வாரண்ட்) பிறப்பித்துள்ளது சென்னை, சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றம். சன் செய்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்த அகிலா தொடுத்த பாலியல் குற்ற வழக்கில் ராஜாவுக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டிருந்தது. அதில் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க… கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சன் செய்தியில் மறுபடியும் ராஜா சேர்ந்துவிட்டார் என்பது ஊடக உலகிலேயே இன்னும் பலருக்குத் தெரியாத செய்தி. சன் டி.வி ராஜா ராஜாவால் அகிலாவுக்கு நேர்ந்த பாலியல் பிரச்சினை குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ராஜா, அகிலா இருவரைய…
-
- 0 replies
- 824 views
-
-
மீண்டும் பயங்கரம் : சென்னைக்கு அருகே கட்டிட விபத்தில் 11 பேர் பலி. சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் கட்டிட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் 11 பேர் பலியானார்கள். மழை பெய்ததால் தனியார் குடோனின் 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை மீது சுவர் இடிந்து விழுந்ததால் 11 பேர் பலியானார்கள். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கியவர்கள் ஆந்திராவைச்சேர்ந்தவர்கள் என தக வல். சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடத்தின் பயங்கர விபத்தின் மீட்பு பணி தற்போதுதான் முடிந்துள்ள நிலையில…
-
- 9 replies
- 715 views
-
-
திருநெல்வேலி : நெல்லையில், தாமிரபரணி ஆற்றின் ஜீவாதாரத்தை உறிஞ்சி, குடிநீர் பாட்டில் தயாரிக்கும், 'பெப்சி' நிறுவன ஆலை துவங்கப்படுவதற்கு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர், விவசாய தேவைக்குமான ஒரே ஆதாரமாக தாமிரபரணி நதி உள்ளது. இந்த ஆற்றை நம்பித் தான் ஆண்டுக்கு, இரண்டு போக நெல் சாகுபடி மற்ற உணவு உற்பத்தியும் நடக்கிறது. திறக்கப்படவில்லை: ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து பொய்த்து வரும் மழையினால், தாமிரபரணி ஆற்றின் நீர் நிலையும் குறைந்து வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் தேதி, கார் நெல் சாகுபடிக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு, ஜூன் மாதம் முடிந்தும், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்ப…
-
- 0 replies
- 472 views
-
-
இந்த பதிவு மாநகரன் என்பவரால் பதியப்பட்டது ஆனால் மூலம் ஜூனியர் விகடன் ஸ்ரீரங்கம் சீர்மிகு அரங்கமாக மாறிக் கொண்டு இருக்கிறது! கொள்ளிடக் கரை, பஞ்சக்கரை சாலை அருகே உள்ளது யாத்ரி நிவாஸ். திருவானைக்காவல், சமயபுரம், ஸ்ரீரங்கம் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் இங்கே தங்கிச் செல்லலாம். திருப்பதி போன்ற பிரபல கோயில்களில் உள்ளதைப்போல பிரமாண்ட கட்டடம். ''கொள்ளிட ஆற்றில் குளித்துவிட்டு ரங்கநாதரைத் தரிசித்தால் புண்ணியம் கிடைக்கிறது. அதனால்தான், பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். அவர்களின் வசதியை மனத்தில் வைத்து முதல்வர் செயல்படுத்தியதுதான் யாத்ரி நிவாஸ். ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தங்கிச் செல்லலாம். காலங்காலத்துக்கு முதல்வர் பெயரை பக்தர்கள் உச்சரிப்பார்கள்'' என்கிறார் சுந்தர்…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழகத்தில் மகிந்த ராஜபக்ச கலாச்சாரம் மற்றும் வணிகத்துறை மூலம் கால் பதிக்க முயற்சிக்கிறார் அதை தமிழீழ ஆதரவு அமைப்புக்கள் ஒருபோதும் அனுமதிக்காது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் கூறியுள்ளார். அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலை காணொளில் பார்வையிடலாம். http://www.pathivu.com/news/32196/57//d,article_full.aspx
-
- 0 replies
- 367 views
-
-
சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த, 11 அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை இடிபாடுகளில் இருந்து 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. கட்டடம் இடிந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து தெளிக்கப்பட்டும், மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டும் வருகிறது. சென்னை காவல்துறை, தீயணைப்பு துறை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினை சே…
-
- 3 replies
- 633 views
-
-
என் செருப்பு எங்கே?: இடிபாடுகளில் இருந்து 72 மணிநேரம் கழித்து மீண்ட நபர் கேட்ட முதல் கேள்வி! சென்னை: மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியிருந்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் 72 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டவுடன் கேட்ட கேள்வி என் செருப்பு எங்கே? என்பது தான். சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி 72 மணிநேரமாக தவித்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர் திங்கட்கிழமை மீட்கப்பட்டார். கட்டடம் இடிந்தபோது இரண்டாவது மாடியில் வேலை பார்த்த குமார்(29) இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். அவ…
-
- 3 replies
- 608 views
-
-
மன்னவனூரில் வனத்துறை சார்பில், புதிதாக 4 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள டிரெக்கிங் பாதையை சுற்றிப் பார்க்கும் சுற்றுலா பயணிகள். டிரெக்கிங் செல்லும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டுள்ள குடில்கள் கொடைக்கானல் வனப்பகுதியில் 2006-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட டிரெக்கிங் (மலையேறும் நடைப் பயணம்) சுற்றுலா கோடை ஆப் சீசனில் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதற் காக வனத்துறை ரூ.37 லட்சம் மதிப் பீட்டில், புதிய டிரெக்கிங் மலையேற்றப் பாதைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சவால்கள் நிறைந்த சாகசம் இந்தியாவில் உள்ள 75 சிறந்த கோடை வாசஸ்தலங்களில் கொடைக் கானல் முக்கிய இடத்தைப் பெற் றுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில், ஓய்வு நேரங்களில் அந்நாட்டு அரசு அதிகாரிகள், ராணுவ அதிகார…
-
- 0 replies
- 584 views
-
-
கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கச்சத்தீவில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர் பாதுகாப்பு பேரவை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று மத்திய அரசு கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கச்சத்தீவில் வலைகளை உலர்த்த, மீனவர்கள் ஓய்வெடுக்க உரிமை உள்ளது என்றும், அதே நேரத்தில் கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 1974-1976 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தப்படி பாரம்பரிய உரிமை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்க…
-
- 6 replies
- 616 views
-
-
அய்யா பழ.நெடுமாறன் அவர்களினால தொடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழர் தேசியக் கட்சியி தொடர்பில் இயக்குனர் கௌதமன் அவர்கள் வழங்கிய நேர்காணல் http://www.pathivu.com/news/32066/57//d,article_full.aspx
-
- 2 replies
- 594 views
-
-
லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின், வைகோ, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். லோக்சபா தேர்தலில், போட்டியிட்ட ம.தி.மு.க., கடும் தோல்வி அடைந்தது. இந்நிலையில், தோல்விக்கு பின், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, ஒவ்வொரு மாவட்டமாக சென்று, கட்சித் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்கவிருக்கிறார். அப்போது, கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்தும், கட்சியினர் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கிறார், வைகோ. கூடவே, நிறைய நிகழ்ச்சிகளிலும் வைகோ பங்கேற்கிறார்.இதன் முதல்கட்டமாக, ஜூலை 3ல், திருநெல்வேலியில் உள்ள கட்சி அலுவலகத்தில், தொண்டர்களை வைகோ சந்திக்கிறார். அதன்பின், விருதுநகர் உட்பட பல ஊர்களுக்கும் செல்கிறார…
-
- 4 replies
- 516 views
-
-
பழ.நெடுமாறன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி உதயம்! ஜூன் 29, 2014 இன்று தஞ்சாவூர் முள்ளிவாய்க்கள் நினைவு முற்றத்தில் தமிழ் தேசிய இயக்கங்கள் ஒன்றிணைந்து பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள தமிழர் தேசிய இயக்கங்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக தமிழ்தேசிய முன்னணி என்ற பெயருடன் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற மண்டபத்தில் ஒன்று திரண்ட தமிழ்தேசிய இயக்கங்களை சார்ந்தவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தினை உருவாக்கியுள்ளார்கள். இது தொடர்பாக பழ.நெடுமாறன் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சி…
-
- 2 replies
- 707 views
-
-
முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய 4 அணைகளும் கேரளாவுக்கே சொந்தம் என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கொச்சியில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: முல்லைப்பெரியாறு உள்ளிட்ட 4 அணைகளையும் தமிழகம் பராமரிக்கிறது. ஆனால் அந்த அணைகளை தமிழகம் உரிமை கோர முடியாது. 4 அணைகளும் கேரளாவுக்கே சொந்தம். இந்த விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்றார். 4 அணைகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் உம்மன்சாண்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். http://tamil.thehindu.com/tamilnadu/4-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%…
-
- 0 replies
- 602 views
-
-
சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் ஜெயலலிதா. படம்: இஸ்ரோ சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா நேரில் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்வின்போது, தமிழக ஆளுநர் ரோசய்யா உடன் இருந்தார். பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் 5 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை திங்கள்கிழமை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது. ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்…
-
- 0 replies
- 693 views
-
-
செருகுடியில் உள்ள சிவலிங்கம் மற்றும் நந்தி. சண்டிகேசுவரர். சோழ மன்னர்கள் நிர்மாணித்த சிவாலயங்களில் சில மட்டுமே இன்னமும் வழிபடும் நிலையில் உள்ளன. பெரும்பான்மையான கோயில்கள் பிற்கால மன்னர்களின் படையெடுப்பு மற்றும் காலவெள்ள த் தில் கரைந்து போய் காணக் கிடைக்காமல் போய்விட்டன. எங்கேயோ எப்போதோ அக் கோயில்களின் சிதிலங்கள் வெளிப் பட்டு அதன் தொன்மைத் தன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன. அப்படி ஒரு சிதிலம் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் கிடைத்திருக்கிறது என்கின்றனர் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டத்தார். கும்பகோணம் வட்டத்தில் கோவிலாச்சேரிக்கு அருகில் உள்ள சிறிய கிராமமான செருகுடியில் ஒரு குளக்கரையின் ஓரம் சிவலிங்கம், நந்தி, சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகள் காணப்படுகின்…
-
- 0 replies
- 634 views
-