தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப் படம் தொடர்பு மொழிப் பிரச்சினையில், அவசரப்பட்டு ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்திவிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது” என்ற தலைப்பில் ஓர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக முடிவெடுத்துள்ளது. வெளிநாடுகளின் தலை…
-
- 0 replies
- 488 views
-
-
குழந்தைகளை வேலைக்கு வைப்பது சட்டப்படி குற்றம் என்று அனைவரும் தெரிந்த விடயம்.தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் வீட்டில் குழந்தைகளை வேலைக்கு வைத்துள்ளதாக குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் ஆய்வு நடத்திய போது 2 சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த சிறுமிகளின் பெற்றோரின் அனுமதியுடன் தான் அவர்களை வேலைக்கு வைத்துள்ளதாக வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்த குழந்தைகள் நல அமைப்பாளர்கள் மீண்டும் கங்கை அமரன் வீட்டிற்கு செல்லவுள்ளனர். http://virakesari.lk/articles/2014/06/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%…
-
- 0 replies
- 1.4k views
-
-
எளிய மனிதர்கள் வாழ்வைத் திரைமொழிக்கு இடம்பெயர்ப்பதில் தனித்தடம் பதித்த இயக்குநர்களில் ஒருவர் தங்கர் பச்சான். கவர்ச்சிகரமான மேடைப்பேச்சுக்குரிய எந்த உத்தியையும் கையாளாமலேயே, தமிழர்கள் இழந்துவரும் மொழி, வாழ்முறை பற்றிய கருத்துகளை அதிர்வூட்டும் விதமாக எடுத்து வைப்பதில் தெளிந்த சிந்தனைக்காரர். இவரின் சமீபத்திய இலக்கு இளைஞர்கள். தேடித்தேடிப் போய் பேசுகிறார். குறிப்பிட வேண்டிய விஷயம் தன்னுடைய பேச்சில் சாதியத்துக்கு எதிரான போருக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார். மனிதரிடம் பேசவா விஷயம் இல்லை? பேசினேன். நடந்து முடிந்த தேர்தலைச் சிறப்பாக நடத்தியற்காகத் தேர்தல் ஆணையத்தை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பாராட்டுகிறார்களே? ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திருடன் கையிலேயே கொடுக்…
-
- 12 replies
- 1.9k views
-
-
நடிகை குஷ்பு | கோப்புப் படம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து விலகுவதாக, நடிகை குஷ்பு இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பான விலகல் கடிதத்தை, திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள். ஆனால், என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக…
-
- 8 replies
- 1.1k views
-
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்னுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக அதிக இடங்களைப் பிடித்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தில் அமர ஒரே தேசியக் கட்சி 10 சதவிகித இடங்களைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அந்த அந்தஸ்தையும் இழந்துள்ள நிலையில், இந்தக் கடிதத்தை சோனியாகாந்தி, சுமித்ரா மகாஜன்னுக்கு எழுதியுள்ளார். கடிதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்றும், 10 சதவிகிதம் பெரும்பான்மை இருக்க வேண்டும் என்கிற வரையறை எதுவும் இல்லை என்றும் குறி…
-
- 6 replies
- 714 views
-
-
ஜவஹர்லால் நேருவை ஆசியாவின் ஒளி என்று அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வர்ணித்தார். ஆனால் நீண்ட காலம் ஆசியாவின் ஒளியாக திகழ்ந்த நேருவின் குடும்பம், நாட்டின் எதரி்காலத்தை, காங்கிரஸ் கட்சியை தற்போது இருளில் தள்ளியுள்ளது. 2014, மே 16 அன்று பிற்பகலில் காங்கிரசின் மிக நீண்ட வெற்றிப் பயணம், இருள் சூழ்ந்த பாதையாக மாற்றப்பட்டது. தேசிய அரசியலில் தனிப்பெரும் பலத்துடன் அசைக்க முடியாத கட்சியாக திகழ்ந்த காங்கிரஸ் தற்போது தனித்து விடப்பட்டுள்ள நிலையில், அது தனது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல், மத்திய அரசுடன் முரட்டுத்தனமான போக்கை கடைபிடிக்குமா அல்லது நீரில் கரையும் உப்பைப் போன்று சூழ்நிலையை புரிந்து கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்ட…
-
- 0 replies
- 586 views
-
-
சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் வைகோ. உண்ணாவிரதப் பந்தலில் சந்திரபாபு நாயுடுவுடன் வைகோ. சீமாந்திரா முதல்வராக பதவி யேற்றுக்கொண்ட விழாவில் தனது நீண்டகால நண்பரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோவுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து கவுரவித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. சீமாந்திரா முதல்வராக சந்திர பாபு நாயுடு கடந்த 8-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவுக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்களோடு தனது நண்பர் வைகோவையும் சந்திரபாபு நாயுடு அழைத்திருந்தார். இதை ஏற்று, பதவியேற்பு விழாவில் வைகோவும் கலந்துகொண்டார். போராட்டத்திலும் கைகோத்தவர் இவர்கள் இருவரும் நீண்ட கா…
-
- 0 replies
- 602 views
-
-
நடிகர் அஜீத்குமார் தன்னிடம் வேலை செய்யும் 12 பணியாளர் களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். நடிகர் அஜீத் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் தன்னிடம் பணிபுரியும் வீட்டுக் காவலாளி, சமையல்காரர்கள், கார் ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை கேளம்பாக்கத்தில் நிலம் வாங்கி அவரவர்களின் பெயரில் சொந்தமாக வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். கடந்த 8 மாதங்களாக நடந்து வந்த இந்த புதிய வீடுகள் கட்டுமானப்பணி தற்போது முழு வேலைகளும் முடிந்து கிரகப் பிரவேசத்திற்கு தயாராய் உள்ளது. அஜீத் வீட்டில் பணிபுரியும் 12 பணியாளர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் விரைவில் குடியேறவுள்ளனர். http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%B5…
-
- 0 replies
- 970 views
-
-
கோவை: பொள்ளாச்சியில் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சார்பில் விடுதி ஒன்றும் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 3 மாணவிகள் உட்பட 20 மாணவர்கள் தங்கி இருக்கின்றனர். மலை வாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களாகிய இவர்கள் ஆதரவற்ற நிலையில் இங்கு தங்கி, அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் இரவு மாணவர்கள் அனைவரும் படித்து முடிந்ததும் தூங்கச் சென்று விட்டனர். இரவு திடீரென மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே விடுதியில் சோத…
-
- 1 reply
- 664 views
-
-
சென்னை: தமிழகத்தில் இயங்கும் 20 தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரம் தாழ்ந்து வருவது குறித்த புகார்களின் அடிப்படையில், சுமார் 40 கல்லூரிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் 20 கல்லூரிகளில் மாணவர்களுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என இந்த கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த கல்லூரிகள் அங்கீகரிக்கப்படாத பாடத் திட்டங்களை நடத்தி வந்ததும் சோதனையில் கண்டுப…
-
- 0 replies
- 358 views
-
-
இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்குத் திரும்பும் போக்கு தற்போது அதிகரித்திருக்கிறது. ஆர்கானிக் உணவு எனப்படும் ரசாயன எச்சங்கள் இல்லாத, இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவு பொருட்கள் மீது கவனம் திரும்பியிருப்பதும் அதன் ஒரு வெளிப்பாடுதான். இந்த ஆர்கானிக் உணவு மூலப்பொருட்களை எங்கே வாங்குவது, எப்படி வாங்குவது என்று 'பசுமை அங்காடி' பகுதி வழிகாட்டும். தொடர்புக்கு: uyirmoochu@thehindutamil.co.in ஆர்கானிக் பொருட்களைத் தொலைபேசி, இணையதளம் வழியாக வாங்க வழி செய்கிறது, சென்னை தி.நகரில் இருக்கும் எஃப் 5 ஸ்டோர் (F5 store). “பஞ்சப் பூதங்களின் எண்ணிக்கை, புத்துணர்ச்சி (F5- Refresh) ஆகியவற்றைச் சுருக்கமாகக் குறிக்கும் வகையில்தான் எஃப் 5 (F 5) என்ற பெயரை வைத்தோம். ஒரு தொலைபேசி அழைப்பில் வீட்டுக்கே …
-
- 1 reply
- 604 views
-
-
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ரூ. 2.58 கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. மத்திய கிராம சுகாதார திட்டத்தின் (என்.ஆர்.எச்.எம்) கீழ் ஜெய்ப்பூரில் கடந்த 2010-11 ஆம் ஆண்டுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக டெண்டர் அளிக்கப்பட்டிருந்தது. அது, அரசியல் தொடர்புகளின் காரணமாக ‘சிகித்சா ஹெல்த்கேர்’ எனும் நிறுவனத்துக்கு முறைகேடாக அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ரூ. 2.58 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் ஜெய்ப்பூரின் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஜெய்ப்பூர் மாநகராட்சி முன…
-
- 0 replies
- 645 views
-
-
ராஜ்நாத் சிங்குடன் ரங்கசாமி சந்திப்பு: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அப்போது புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த ரங்கசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். எங்கள் அரசாங்கத்தின் முக்கியமான கொள்கையாக இது தொடர்கிறது” என்றார். மாநில அந்தஸ்து வழங்கினால் மத்திய நிதி குறையும் என்று சந்தேகம் நிலவுவது குறித்து கேட்டபோது, அது உண்மையில்லை என்று ரங்கசாமி கூறினார். முன்னதாக நேற்று மோடியை சந்தித்தபோதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மற்றும் கூடுதல் நிதி தொடர்பாக ர…
-
- 0 replies
- 416 views
-
-
புதுடெல்லி: குஜராத்தைவிட, தமிழக வளர்ச்சி மாடலே சிறந்தது என முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் உரை நிகழ்த்தினார். அப்போது, குஜராத்தின் வளர்ச்சி மாடலை விட, தமிழக வளர்ச்சி மாடலே சிறந்தது என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்தை வரவேற்பதாக அவர் கூறினார். மேலும், "ஒரே வளர்ச்சி மாடலை நாடு முழுமைக்கும் அமல்படுத்த முடியாது. தற்போது கேரளாவில் நடைமுறையில் உள்ள குடும்பஸ்ரீ திட்டம் சிறந்த திட்டம். அதேபோல், தமிழகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு திட்டமும் பாராட்டப்பட வேண்டிய திட்டமாகும். தமிழகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு முழுமையும் …
-
- 1 reply
- 634 views
-
-
புதுடெல்லி, நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் கட்சிக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதற்காக வசதியாக அங்கு கட்சியை கூண்டோடு கலைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன திவிவேதி நேற்று வெளியிட்டார். அப்போது அவர், ‘‘உத்தரபிரதேசத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார கமிட்டிகள் அனைத்தும் கலைக்கப்பட்டு விட்டன. அதே நேரத்தில் கட்சியின் மாநிலத்தலைவர் பதவியில் நிர்மல் காத்ரி தொடர்வார்’’ என கூறினார். பாராளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து டெல்லி, அரியானா மாநிலங்களில் கட்சிக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் கட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டுள்ளன. --– htt…
-
- 2 replies
- 799 views
-
-
செம்மொழி நிறுவன விவகாரம்: கருணாநிதிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் செம்மொழி நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட சந்தேகங்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், இலங்கையில் தமிழ் இனம் அழிந்தபோது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய கருணாநிதி, செம்மொழி குறித்து முதலைக் கண்ணீர் வடித்து அறிக்கை விட்டிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. சென்னையில் அமைந்திருக்கும் செம்மொழி நிறுவனம் ஏதோ தமிழ்நாடு அரசின் நிறுவனம் போலவும், அந்நிறுவனத்தின் ஆட்சி அதிகாரமும், மாட…
-
- 0 replies
- 1.9k views
-
-
மத்திய அமைச்சர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் அமைச்சர்கள் யாரும் தங்களது உறவினர்களை அரசு சார்ந்த பொறுப்புக்களுக்கு நியமிக்கக் கூடாது என்றும் அந்த நடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்களது அசையும் சொத்து, அசையா சொத்து, தொழில் விபரம், பங்குகளின் விவரம், பணம் கையிருப்பு விவரம், நகைகள் கையிருப்பு விவரம் இவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். http://4tamilmedia.com/n…
-
- 0 replies
- 457 views
-
-
வேலூர்: குடியாத்தம் அருகே பயணிகள் ரயிலின் என்ஜின் தனியாக கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு-அரக்கோணம் பயணிகள் ரயில் இன்று வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள கூடநகரத்தில் வந்து கொண்டிருந்தபோது, அதன் என்ஜின் இணைப்பு உடைந்து பயணிகள் பெட்டிகள் துண்டிக்கப்பட்டது. பயணிகள் பெட்டிகளில் இருந்து என்ஜின் துண்டிக்கப்பட்டது தெரியாமல், ரயில் ஓட்டுநர்கள் குடியாத்தம் வரை வந்தனர். அங்கு வைத்து பார்த்தபோது, பயணிகள் பெட்டிகள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் பயணிகள் பெட்டியைத் தேடி சென்றபோது, அந்த ரயிலின் 15 பெட்டிகள் பயணிகளுடன் நடுவழியில் நின்றது தெரியவந்தது. இதையடுத்து, மீண்டும், ரயில் பெட்டிகளுடன் என்ஜினை இணைக்கு…
-
- 0 replies
- 419 views
-
-
கட்சி துவங்கி, கால் நூற்றாண்டை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், ம.தி.மு.க., தேர்தலுக்கு தேர்தல், தோல்வியை தழுவி வருவதால், அக்கட்சி தொண்டர்கள் நொந்து போய் உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலிலாவது, வெற்றியை ருசிக்க, கட்சி நிர்வாகத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கட்சி தலைமை உள்ளது. பொறுப்பு: தேசிய அரசியல், வெளி நாட்டு விவகாரங்களில் ஈடுபாடு காட்டும் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இனிமேல், தமிழக அரசியலில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு துணையாக, மகன் துரை வையாபுரிக்கு, மாநில இளைஞர் அணி செயலர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, மாவட்ட செயலர்கள் வலியுறுத்தும் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளில், வாரிசு அரசியல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. …
-
- 0 replies
- 1k views
-
-
தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று, நடிகர் ரஜினி, திடீரென சந்தித்து பேசினார். இருவர், சந்திப்பின் பின்னணியில், கருணாநிதியின் ரகசிய திட்டம் இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது. அதாவது, தி.மு.க.,விலிருந்து, டிஸ்மிஸ் செய்யப்பட்ட, முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரியிடம் பேசி, உட்கட்சி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கருணாநிதி விரும்புகிறார்.அதற்காக அழகிரியிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்க, தன்னுடைய தூதராக ரஜினியை தேர்ந்தெடுத்திருக்கிறார் கருணாநிதி. அது குறித்து பேசுவதற்காகத்தான், தன் இல்லத்துக்கு ரஜினியை வரவழைத்தார் கருணாநிதி என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நன்றி தெரிவித்தார் சமீபத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் 91வது ப…
-
- 0 replies
- 654 views
-
-
புதுடெல்லி, மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய மந்திரிசபை கடந்த மாதம் 26–ந் தேதி பதவியேற்றது. புதிய மந்திரி சபையில் 3–ல் ஒருவர் சட்டம் பயின்றவர் (வக்கீல்கள்) என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் கேபினட் மந்திரிகளான சுஷ்மா சுவராஜ் (வெளியுறவு), அருண் ஜெட்லி (நிதி), வெங்கையா நாயுடு (ஊரக மேம்பாடு), நிதின் கட்காரி (நெடுஞ்சாலை, போக்குவரத்து), சதானந்த கவுடா (ரெயில்வே), ராம்விலாஸ் பஸ்வான் (நுகர்வோர் நலன்) உள்ளிட்ட 15 பேர் சட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்சவர்தன் மற்றும் பிரதமர் அலுவலக விவகாரம், பென்சன் துறைக்கான இணை மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் மருத்துவப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் …
-
- 2 replies
- 613 views
-
-
சூட்கேஸ் பெட்டி ஸ்கூட்டர் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஒரு விவசாயி கண்டுபிடித்துள்ளார். பயணிகளின் போக்குவரத்தில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும், மாசடைதல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை இது குறைக்கும் என்றும் ஹேர்ல் யாங் சாய் என்னும் அந்த விவசாயி கூறியுள்ளார். தனது சூட்கேஸை அமெரிக்க விமானம் ஒன்றில் தொலைத்த பின்னர் 10 வருடங்கள் முயற்சி செய்து இவர் இதனை கண்டுபிடித்துள்ளார். இதற்கு ''சிட்டி கப்'' என்று அவர் பெயரும் வைத்துள்ளார். விமான நிலையத்தில் பார்க்கிங் பிரச்சினை, தள்ளுவண்டி பிரச்சின எதுவும் கூட இதலால் இல்லாது போய்விடுகிறது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இது பயணிக்கும். பட்டரியில் இயங்கும் இதில் வழிகாட்டும் கருவியான ஜிபிஎஸ் நவிகேசன் கூட இருக்கி…
-
- 1 reply
- 553 views
-
-
உலகளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நகரங்கள் பட்டியலை, சர்வதேச அளவில் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது global prime sector எனப்படும் Candy GPS நிறுவனம். இந்தப் பட்டியலில் இந்திய நகரங்களில் ஒன்றே ஒன்றுதான் இடம் பெற்றிருக்கிறது. அது தலைநகரமான டெல்லி அல்லது இந்தியாவின் கேட்வே எனப்படும் மும்பை அல்லது தகவல் தொழில்நுட்பத்துறை நகரமான பெங்களூரு என நீங்கள் நினைத்திருந்தால் சரியான யூகமல்ல... தமிழகத்தின் கலாசார நுழைவாயில் என்றழைக்கப்படும் சென்னைதான் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நகரம். சென்னையில், ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கான காரணங்கள் மற்றும் காரணிகள் குறித்து Candy GPS வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்…
-
- 0 replies
- 456 views
-
-
புதுடில்லி: லோக்சபா சபாநாயகராக, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, சுமித்ரா மகாஜன் இன்று தேர்வு செய்யப்படுகிறார். அதே நேரத்தில், துணை சபாநாயகர் பதவி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, தம்பிதுரைக்கு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., உடனான உறவுகளை வலுப்படுத்த, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும், பா.ஜ., திட்டமிட்டுள்ளது. பதினாறாவது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரின், இரண்டாவது நாளான நேற்று, புதிய எம்.பி.,க்கள் பதவியேற்றனர். எம்.பி.,க்கள் பதவியேற்பு இன்றுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, லோக்சபாவின் புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. மனு தாக்கல்:சபாநாயகராக, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, சுமித்ரா மகாஜன், 72, தேர்வு செய்யப்படுகிறார். இதற்காக நேற்ற…
-
- 0 replies
- 745 views
-
-
ஃபைசல், நாசர், லூத்ஃபுதின் ஃபைசலுடன் கமீலா நாசர் நடிகர் நாசரின் மூத்த மகன் நூருல் ஹசன் ஃபைசல் (24), மே 22 -ம் தேதி நண்பர்களு டன் சென்னை கடற்கரை சாலை யில் காரில் சென்றுகொண்டிருந்த போது பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று நண்பர்கள் பலியாக கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் நூருல் ஹசன் ஃபைசல். மகன் தீவிர சிகிச்சைப் பிரி வில் இருந்தாலும் தன்னால் தயாரிப்பாளர்கள் நஷ்ட மடையக் கூடாது என்பதால் வேதனையை இதயத்தில் அடக் கிக்கொண்டு படப் பிடிப்புகளுக்கு சென்று வருகி றார் நாசர். இந்நிலையில் மக னுக்கு பக்கத்திலே இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் நாசரின் மனைவி கமீலா நாசரை சந்தித்தோம். ‘‘எனது மற்ற இரண்டு மகன்க ளுக்கும் மூத்தவன் ஃபை…
-
- 0 replies
- 432 views
-