தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
செம்மொழி நிறுவன விவகாரம்: கருணாநிதிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் செம்மொழி நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட சந்தேகங்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், இலங்கையில் தமிழ் இனம் அழிந்தபோது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய கருணாநிதி, செம்மொழி குறித்து முதலைக் கண்ணீர் வடித்து அறிக்கை விட்டிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. சென்னையில் அமைந்திருக்கும் செம்மொழி நிறுவனம் ஏதோ தமிழ்நாடு அரசின் நிறுவனம் போலவும், அந்நிறுவனத்தின் ஆட்சி அதிகாரமும், மாட…
-
- 0 replies
- 1.9k views
-
-
மத்திய அமைச்சர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் அமைச்சர்கள் யாரும் தங்களது உறவினர்களை அரசு சார்ந்த பொறுப்புக்களுக்கு நியமிக்கக் கூடாது என்றும் அந்த நடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்களது அசையும் சொத்து, அசையா சொத்து, தொழில் விபரம், பங்குகளின் விவரம், பணம் கையிருப்பு விவரம், நகைகள் கையிருப்பு விவரம் இவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். http://4tamilmedia.com/n…
-
- 0 replies
- 457 views
-
-
வேலூர்: குடியாத்தம் அருகே பயணிகள் ரயிலின் என்ஜின் தனியாக கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு-அரக்கோணம் பயணிகள் ரயில் இன்று வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள கூடநகரத்தில் வந்து கொண்டிருந்தபோது, அதன் என்ஜின் இணைப்பு உடைந்து பயணிகள் பெட்டிகள் துண்டிக்கப்பட்டது. பயணிகள் பெட்டிகளில் இருந்து என்ஜின் துண்டிக்கப்பட்டது தெரியாமல், ரயில் ஓட்டுநர்கள் குடியாத்தம் வரை வந்தனர். அங்கு வைத்து பார்த்தபோது, பயணிகள் பெட்டிகள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் பயணிகள் பெட்டியைத் தேடி சென்றபோது, அந்த ரயிலின் 15 பெட்டிகள் பயணிகளுடன் நடுவழியில் நின்றது தெரியவந்தது. இதையடுத்து, மீண்டும், ரயில் பெட்டிகளுடன் என்ஜினை இணைக்கு…
-
- 0 replies
- 419 views
-
-
கட்சி துவங்கி, கால் நூற்றாண்டை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், ம.தி.மு.க., தேர்தலுக்கு தேர்தல், தோல்வியை தழுவி வருவதால், அக்கட்சி தொண்டர்கள் நொந்து போய் உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலிலாவது, வெற்றியை ருசிக்க, கட்சி நிர்வாகத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கட்சி தலைமை உள்ளது. பொறுப்பு: தேசிய அரசியல், வெளி நாட்டு விவகாரங்களில் ஈடுபாடு காட்டும் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இனிமேல், தமிழக அரசியலில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு துணையாக, மகன் துரை வையாபுரிக்கு, மாநில இளைஞர் அணி செயலர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, மாவட்ட செயலர்கள் வலியுறுத்தும் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளில், வாரிசு அரசியல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. …
-
- 0 replies
- 1k views
-
-
தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று, நடிகர் ரஜினி, திடீரென சந்தித்து பேசினார். இருவர், சந்திப்பின் பின்னணியில், கருணாநிதியின் ரகசிய திட்டம் இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது. அதாவது, தி.மு.க.,விலிருந்து, டிஸ்மிஸ் செய்யப்பட்ட, முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரியிடம் பேசி, உட்கட்சி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கருணாநிதி விரும்புகிறார்.அதற்காக அழகிரியிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்க, தன்னுடைய தூதராக ரஜினியை தேர்ந்தெடுத்திருக்கிறார் கருணாநிதி. அது குறித்து பேசுவதற்காகத்தான், தன் இல்லத்துக்கு ரஜினியை வரவழைத்தார் கருணாநிதி என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நன்றி தெரிவித்தார் சமீபத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் 91வது ப…
-
- 0 replies
- 654 views
-
-
புதுடெல்லி, மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய மந்திரிசபை கடந்த மாதம் 26–ந் தேதி பதவியேற்றது. புதிய மந்திரி சபையில் 3–ல் ஒருவர் சட்டம் பயின்றவர் (வக்கீல்கள்) என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் கேபினட் மந்திரிகளான சுஷ்மா சுவராஜ் (வெளியுறவு), அருண் ஜெட்லி (நிதி), வெங்கையா நாயுடு (ஊரக மேம்பாடு), நிதின் கட்காரி (நெடுஞ்சாலை, போக்குவரத்து), சதானந்த கவுடா (ரெயில்வே), ராம்விலாஸ் பஸ்வான் (நுகர்வோர் நலன்) உள்ளிட்ட 15 பேர் சட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்சவர்தன் மற்றும் பிரதமர் அலுவலக விவகாரம், பென்சன் துறைக்கான இணை மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் மருத்துவப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் …
-
- 2 replies
- 613 views
-
-
சூட்கேஸ் பெட்டி ஸ்கூட்டர் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஒரு விவசாயி கண்டுபிடித்துள்ளார். பயணிகளின் போக்குவரத்தில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும், மாசடைதல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை இது குறைக்கும் என்றும் ஹேர்ல் யாங் சாய் என்னும் அந்த விவசாயி கூறியுள்ளார். தனது சூட்கேஸை அமெரிக்க விமானம் ஒன்றில் தொலைத்த பின்னர் 10 வருடங்கள் முயற்சி செய்து இவர் இதனை கண்டுபிடித்துள்ளார். இதற்கு ''சிட்டி கப்'' என்று அவர் பெயரும் வைத்துள்ளார். விமான நிலையத்தில் பார்க்கிங் பிரச்சினை, தள்ளுவண்டி பிரச்சின எதுவும் கூட இதலால் இல்லாது போய்விடுகிறது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இது பயணிக்கும். பட்டரியில் இயங்கும் இதில் வழிகாட்டும் கருவியான ஜிபிஎஸ் நவிகேசன் கூட இருக்கி…
-
- 1 reply
- 555 views
-
-
உலகளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நகரங்கள் பட்டியலை, சர்வதேச அளவில் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது global prime sector எனப்படும் Candy GPS நிறுவனம். இந்தப் பட்டியலில் இந்திய நகரங்களில் ஒன்றே ஒன்றுதான் இடம் பெற்றிருக்கிறது. அது தலைநகரமான டெல்லி அல்லது இந்தியாவின் கேட்வே எனப்படும் மும்பை அல்லது தகவல் தொழில்நுட்பத்துறை நகரமான பெங்களூரு என நீங்கள் நினைத்திருந்தால் சரியான யூகமல்ல... தமிழகத்தின் கலாசார நுழைவாயில் என்றழைக்கப்படும் சென்னைதான் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நகரம். சென்னையில், ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கான காரணங்கள் மற்றும் காரணிகள் குறித்து Candy GPS வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்…
-
- 0 replies
- 457 views
-
-
புதுடில்லி: லோக்சபா சபாநாயகராக, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, சுமித்ரா மகாஜன் இன்று தேர்வு செய்யப்படுகிறார். அதே நேரத்தில், துணை சபாநாயகர் பதவி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, தம்பிதுரைக்கு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., உடனான உறவுகளை வலுப்படுத்த, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும், பா.ஜ., திட்டமிட்டுள்ளது. பதினாறாவது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரின், இரண்டாவது நாளான நேற்று, புதிய எம்.பி.,க்கள் பதவியேற்றனர். எம்.பி.,க்கள் பதவியேற்பு இன்றுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, லோக்சபாவின் புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. மனு தாக்கல்:சபாநாயகராக, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, சுமித்ரா மகாஜன், 72, தேர்வு செய்யப்படுகிறார். இதற்காக நேற்ற…
-
- 0 replies
- 746 views
-
-
ஃபைசல், நாசர், லூத்ஃபுதின் ஃபைசலுடன் கமீலா நாசர் நடிகர் நாசரின் மூத்த மகன் நூருல் ஹசன் ஃபைசல் (24), மே 22 -ம் தேதி நண்பர்களு டன் சென்னை கடற்கரை சாலை யில் காரில் சென்றுகொண்டிருந்த போது பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று நண்பர்கள் பலியாக கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் நூருல் ஹசன் ஃபைசல். மகன் தீவிர சிகிச்சைப் பிரி வில் இருந்தாலும் தன்னால் தயாரிப்பாளர்கள் நஷ்ட மடையக் கூடாது என்பதால் வேதனையை இதயத்தில் அடக் கிக்கொண்டு படப் பிடிப்புகளுக்கு சென்று வருகி றார் நாசர். இந்நிலையில் மக னுக்கு பக்கத்திலே இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் நாசரின் மனைவி கமீலா நாசரை சந்தித்தோம். ‘‘எனது மற்ற இரண்டு மகன்க ளுக்கும் மூத்தவன் ஃபை…
-
- 0 replies
- 433 views
-
-
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா.| கோப்புப் படம். கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது பிரதமர் நரேந்திர மோடி அரசு சிறப்புக் கவனம் செலுத்தியதாகக் கருதப்படுகிறது. அவர் வந்த நாளில் டெல்லியில் நேரிட்ட விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே உயிரிழந்ததால் முதல்வர் ஜெய லலிதாவின் சந்திப்புகளில் மாற்றம் இருந்ததே தவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு டெல்லி வந்த ஜெயலலிதாவுக்கு முண்டேவின் மரணம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சாணக்கியபுரியின் புதிய தமிழக இல்லத்துக்கு மதியம் 12 மணிக்கு அவர் வந்தார். இதனிடையே கோபிநாத் முண்டேவின் மறைவையொட்டி டெல்லியில் அரசு சார்…
-
- 0 replies
- 625 views
-
-
கன்னியாகுமரி: திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் மணப்பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் வயநாடு மானந்தாவடி பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவர் வயலாங்கரையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிரியாராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பிலோமினா. இவர் முதுகலை பட்டதாரி. வறுதட்டுவிளை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இவர் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர் பாதிரியார் வேலை பார்க்கும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பாதிரியார் பீட்டருக்கும், பிலோமினாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் செல்போனிலு்ம் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது காலபோக்கில் காதலாக மல…
-
- 6 replies
- 823 views
-
-
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று 91வது வயதில் அடியெடுத்து வைத்தார். அவருக்கு தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் இன்று காலை 5.30 மணிக்கு கேக்வெட்டிய கருணாநிதி பின்னர் மரக்கன்று ஒன்றை நட்டார். பின்னர் கோபாலபுரம் இல்லம் சென்ற கருணாநிதி, அங்கும் கேக் வெட்டி மரக்கன்றை நட்டார். பின்னர் அங்கிருந்த தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றார். இதைத் தொடர்ந்து, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்ற கருணாநிதி, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்ற கருணாநிதி, அங்கிருந்த பெரியார் சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, …
-
- 14 replies
- 2.7k views
-
-
வடசென்னை நெட்டுக்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருட உலகச் சுற்றுச்சூழல் நாள் கருப்பொருள், ‘கடல் மட்டத்தை உயர்த்தாதீர்கள், குரலை உயர்த்துங்கள்' என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அறிவித்துள்ளது. அதாவது, உலக வெப்பநிலை அதிகரிப்புக்கு நாம் காரணமாக இருப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. அதனால் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு நம் குரலை உயர்த்துவோம் என்பதுதான், இதில் அடங்கியுள்ள செய்தி. அது சரி, கடல் மட்டம் உயர்வது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? காரணம் இருக்கிறது. எதிர்காலத்தில் கடல் மட்ட உயர்வு சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகக் கடற்கரைப் பகுதியைப் பாதிக்கக்கூடும். மே…
-
- 0 replies
- 562 views
-
-
புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா. முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த, மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். சுமார் 50 நிமிடம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, நீண்ட காலமாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்து, மனு ஒன்றையும் பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "…
-
- 0 replies
- 311 views
-
-
இந்தியா நரேந்திரமோடி - தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று மாலையே இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசில் புதிதாக நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே இன்று காலை டில்லியில் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, இந்தியப் பிரதமர் மோடி - தமிழக முதல்வர் ஜெயலலிதா இடையே இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெறவிருந்த சந்திப்பு இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் ஜெயலலிதாவுக்குமிடையில் பிற்பகல் 2.30 மணிக்குச் சந்திப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இன்று காலை டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் அங்கு த…
-
- 1 reply
- 569 views
-
-
மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர் ஹவில்தார் மோகன் குமாரின் (40) உடல் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை பகலில் விமானத்தில் கொண்டுவரப்பட்டது. மே 29ம் தேதி இரவு நடந்த சண்டையில் மோகன்குமார் வீரமரணம் அடைந்ததாக ராணுவத் தரப்பு தெரிவித்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் விமானம் மூலம் மோகன் குமாரின் உடல் வந்தது. விமான நிலைய வளாகத்திலேயே மோகன்குமார் உடலுக்கு, அதிகாரிகள் லெப்டினன்ட் கர்னல் சுரேஷ்குமார், கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கோட்டாட்சியர் குணசேகரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது உடல் சொந்த ஊரான கோவை மாவட்டம் கோவைப்புதூர் வசந்தம் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ரூ.10…
-
- 0 replies
- 385 views
-
-
-
பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் 2 முறை எம்பியாக இருந்து, இந்தமுறை போட்டியிட்ட வேட்பாளர்களில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் சிபி.ராதாகிருஷ்ணன். இவர் முன்னாள் மாநில தலைவராகவும் நாடாளு மன்ற நிலைக்குழு (ஜவுளித்துறை) தலைவராகவும் இருந்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு வந்து, சில எதிர்பார்ப்புகளுடன் டெல்லியின் புதிய தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டிருந்த அவர் 'தி இந்து'வுக்கு அளித்த பேட்டி. தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்ததற்குக் காரணம் என்ன? பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததாக நான் கருதவில்லை. பாஜக தனித்து போட்டியிட்டபோது இருந்ததை விட இப்போது வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல், இதற்கு முன் இருந்த…
-
- 0 replies
- 525 views
-
-
சென்னை: தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் உள்பட பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோடிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்க நதிகளை இணைக்க நடவடிக்கை வேண்டும். தமிழ்நாட்டுக்கான மின் ஒதுக்கீட்டை அதிகரித்து தர வேண்டும். தமிழக தென் கடற்கரையோர மாவட்டங்களில் கனிம வளத்தை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் தரமான மருத்துவ வசதி அளிக்க வேண்டும். தேசிய…
-
- 0 replies
- 441 views
-
-
சென்னை: தமிழக மக்கள் என்னை லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்காத நிலையில் வேறு மாநிலங்களிலிருந்து ராஜ்யசபாவுக்கு செல்ல மாட்டேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. வின் உயர்நிலை ஆட்சி மன்ற மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம் சென்னை தாயகத்தில் நேற்று நடந்தது. இதில் லோக்சபா தேர்தலுக்கான தோல்வி மற்றும் மோடி அரசின் செயற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வைகோ கூறுகையில்; தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ம.தி.மு.க. அங்கம் வகிப்பதை பா.ஜ. தலைவர்கள் வரவேற்கின்றனர். லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி பா.ஜ. தலைவர்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பா.ஜ. தலைவர்கள் ம.தி.மு.க.வை மிகுந்த மரியாதைய…
-
- 2 replies
- 621 views
-
-
புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு…
-
- 0 replies
- 446 views
-
-
அரியலூர்: அரியலூர் அருகே பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். அரியலூர் ஒட்டக்கோவில் அருகே இன்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. அரியலூரில் இருந்து செந்துறை சென்ற அரசுப் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காயமடைந்த அப்பேருந்தில் பயணித்த 9 பேர் பலியாகினர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 13 பேரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். http://n…
-
- 0 replies
- 1.6k views
-
-
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=122213
-
- 31 replies
- 2.5k views
-
-
துக்ளக் ஆசிரியர் சோ திடீர் சுகவீனம்... ஏன்..? சென்னை: துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக திடீர் திடீரென முக்கியஸ்தர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 2ஜி வழக்கில் மே 26ம் தேதி அதாவது நாளை கோர்ட்டில் ஆஜராகவேண்டிய நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும், அவரது மகள் கனிமொழிக்கும் அடுத்தடுத்து சுகவீனம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாளை மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று கருதப்பட்ட துக்ளக் ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகரும், மோடி மற்றும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவருமான சோ ராமசாமி திடீர…
-
- 13 replies
- 2.3k views
-