தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா.| கோப்புப் படம். கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது பிரதமர் நரேந்திர மோடி அரசு சிறப்புக் கவனம் செலுத்தியதாகக் கருதப்படுகிறது. அவர் வந்த நாளில் டெல்லியில் நேரிட்ட விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே உயிரிழந்ததால் முதல்வர் ஜெய லலிதாவின் சந்திப்புகளில் மாற்றம் இருந்ததே தவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு டெல்லி வந்த ஜெயலலிதாவுக்கு முண்டேவின் மரணம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சாணக்கியபுரியின் புதிய தமிழக இல்லத்துக்கு மதியம் 12 மணிக்கு அவர் வந்தார். இதனிடையே கோபிநாத் முண்டேவின் மறைவையொட்டி டெல்லியில் அரசு சார்…
-
- 0 replies
- 625 views
-
-
கன்னியாகுமரி: திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் மணப்பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் வயநாடு மானந்தாவடி பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவர் வயலாங்கரையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிரியாராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பிலோமினா. இவர் முதுகலை பட்டதாரி. வறுதட்டுவிளை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இவர் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர் பாதிரியார் வேலை பார்க்கும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பாதிரியார் பீட்டருக்கும், பிலோமினாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் செல்போனிலு்ம் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது காலபோக்கில் காதலாக மல…
-
- 6 replies
- 823 views
-
-
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று 91வது வயதில் அடியெடுத்து வைத்தார். அவருக்கு தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் இன்று காலை 5.30 மணிக்கு கேக்வெட்டிய கருணாநிதி பின்னர் மரக்கன்று ஒன்றை நட்டார். பின்னர் கோபாலபுரம் இல்லம் சென்ற கருணாநிதி, அங்கும் கேக் வெட்டி மரக்கன்றை நட்டார். பின்னர் அங்கிருந்த தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றார். இதைத் தொடர்ந்து, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்ற கருணாநிதி, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்ற கருணாநிதி, அங்கிருந்த பெரியார் சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, …
-
- 14 replies
- 2.7k views
-
-
வடசென்னை நெட்டுக்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருட உலகச் சுற்றுச்சூழல் நாள் கருப்பொருள், ‘கடல் மட்டத்தை உயர்த்தாதீர்கள், குரலை உயர்த்துங்கள்' என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அறிவித்துள்ளது. அதாவது, உலக வெப்பநிலை அதிகரிப்புக்கு நாம் காரணமாக இருப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. அதனால் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு நம் குரலை உயர்த்துவோம் என்பதுதான், இதில் அடங்கியுள்ள செய்தி. அது சரி, கடல் மட்டம் உயர்வது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? காரணம் இருக்கிறது. எதிர்காலத்தில் கடல் மட்ட உயர்வு சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகக் கடற்கரைப் பகுதியைப் பாதிக்கக்கூடும். மே…
-
- 0 replies
- 561 views
-
-
புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா. முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த, மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். சுமார் 50 நிமிடம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, நீண்ட காலமாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்து, மனு ஒன்றையும் பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "…
-
- 0 replies
- 310 views
-
-
இந்தியா நரேந்திரமோடி - தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று மாலையே இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசில் புதிதாக நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே இன்று காலை டில்லியில் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, இந்தியப் பிரதமர் மோடி - தமிழக முதல்வர் ஜெயலலிதா இடையே இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெறவிருந்த சந்திப்பு இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் ஜெயலலிதாவுக்குமிடையில் பிற்பகல் 2.30 மணிக்குச் சந்திப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இன்று காலை டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் அங்கு த…
-
- 1 reply
- 569 views
-
-
மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர் ஹவில்தார் மோகன் குமாரின் (40) உடல் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை பகலில் விமானத்தில் கொண்டுவரப்பட்டது. மே 29ம் தேதி இரவு நடந்த சண்டையில் மோகன்குமார் வீரமரணம் அடைந்ததாக ராணுவத் தரப்பு தெரிவித்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் விமானம் மூலம் மோகன் குமாரின் உடல் வந்தது. விமான நிலைய வளாகத்திலேயே மோகன்குமார் உடலுக்கு, அதிகாரிகள் லெப்டினன்ட் கர்னல் சுரேஷ்குமார், கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கோட்டாட்சியர் குணசேகரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது உடல் சொந்த ஊரான கோவை மாவட்டம் கோவைப்புதூர் வசந்தம் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ரூ.10…
-
- 0 replies
- 385 views
-
-
-
பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் 2 முறை எம்பியாக இருந்து, இந்தமுறை போட்டியிட்ட வேட்பாளர்களில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் சிபி.ராதாகிருஷ்ணன். இவர் முன்னாள் மாநில தலைவராகவும் நாடாளு மன்ற நிலைக்குழு (ஜவுளித்துறை) தலைவராகவும் இருந்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு வந்து, சில எதிர்பார்ப்புகளுடன் டெல்லியின் புதிய தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டிருந்த அவர் 'தி இந்து'வுக்கு அளித்த பேட்டி. தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்ததற்குக் காரணம் என்ன? பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததாக நான் கருதவில்லை. பாஜக தனித்து போட்டியிட்டபோது இருந்ததை விட இப்போது வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல், இதற்கு முன் இருந்த…
-
- 0 replies
- 525 views
-
-
சென்னை: தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் உள்பட பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோடிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்க நதிகளை இணைக்க நடவடிக்கை வேண்டும். தமிழ்நாட்டுக்கான மின் ஒதுக்கீட்டை அதிகரித்து தர வேண்டும். தமிழக தென் கடற்கரையோர மாவட்டங்களில் கனிம வளத்தை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் தரமான மருத்துவ வசதி அளிக்க வேண்டும். தேசிய…
-
- 0 replies
- 440 views
-
-
சென்னை: தமிழக மக்கள் என்னை லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்காத நிலையில் வேறு மாநிலங்களிலிருந்து ராஜ்யசபாவுக்கு செல்ல மாட்டேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. வின் உயர்நிலை ஆட்சி மன்ற மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம் சென்னை தாயகத்தில் நேற்று நடந்தது. இதில் லோக்சபா தேர்தலுக்கான தோல்வி மற்றும் மோடி அரசின் செயற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வைகோ கூறுகையில்; தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ம.தி.மு.க. அங்கம் வகிப்பதை பா.ஜ. தலைவர்கள் வரவேற்கின்றனர். லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி பா.ஜ. தலைவர்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பா.ஜ. தலைவர்கள் ம.தி.மு.க.வை மிகுந்த மரியாதைய…
-
- 2 replies
- 621 views
-
-
புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு…
-
- 0 replies
- 446 views
-
-
அரியலூர்: அரியலூர் அருகே பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். அரியலூர் ஒட்டக்கோவில் அருகே இன்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. அரியலூரில் இருந்து செந்துறை சென்ற அரசுப் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காயமடைந்த அப்பேருந்தில் பயணித்த 9 பேர் பலியாகினர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 13 பேரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். http://n…
-
- 0 replies
- 1.6k views
-
-
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=122213
-
- 31 replies
- 2.5k views
-
-
துக்ளக் ஆசிரியர் சோ திடீர் சுகவீனம்... ஏன்..? சென்னை: துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக திடீர் திடீரென முக்கியஸ்தர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 2ஜி வழக்கில் மே 26ம் தேதி அதாவது நாளை கோர்ட்டில் ஆஜராகவேண்டிய நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும், அவரது மகள் கனிமொழிக்கும் அடுத்தடுத்து சுகவீனம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாளை மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று கருதப்பட்ட துக்ளக் ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகரும், மோடி மற்றும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவருமான சோ ராமசாமி திடீர…
-
- 13 replies
- 2.3k views
-
-
சென்னை: முதல் வரிசையில் இடம் தராததால் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் புறக்கணித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதான கட்சியான தே.மு.தி.க. 14 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும் தனது கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியாவது பெற்று விட வேண்டும் என்று விஜயகாந்த் டெல்லி சென்றார். மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதும் அவருக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தார். மோடியும் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, மனைவியுடன் சிறந்த முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி பாராட்டினார். மோடியின் பாராட்டை வைத்து தே.மு.தி.க.வுக்கு ஒரு அமைச்சர் பதவி அல்லது மாநிலங்…
-
- 2 replies
- 803 views
-
-
டெல்லி : மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் கல்வித் தகுதி விவகாரம், பா.ஜ.க, மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 12ம் வகுப்பு மட்டுமே படித்தவர் எவ்வாறு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சராக முடியும் என்ற காங்கிரஸ் கட்சியின் கேள்விக்கு பதில் கேள்வியாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள மத்திய அமைச்சர் உமாபாரதி, அமைச்சர் ஸ்மிருதி ராணி கல்வித் தகுதி குறித்து காங்கிஸ் சார்பில் தெரிவிக்கப்படும் விமர்சனங்களை சோனியா காந்தி கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி இல்லாவிடில் சோனியா காந்தி அவரது கல்வித் தகுதிகளை வெளியிட வேண்டும், என்றும் கூறி உள்ளார். http://www.di…
-
- 3 replies
- 773 views
-
-
இணையத்தை கலக்கும் சோனியா அண்டி , ராகுல் மாமா நடித்த ''நான் ஒரு ராசியில்லா ராஜா. '' என்ற சூப்பர் ஹிட் சோகப் பாடல் ... பார்த்து மகிழுங்கள் .
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: விஜயகாந்த் டெல்லி சென்ற போதிலும், நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததற்கு, மைத்துனர் சுதீஷுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததுதான் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் வீசிய நரேந்திர மோடி அலையில் தமிழ்நாட்டிலும் அரசியல் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்த்து, பா.ஜனதா தலைமையில் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணியும் கணிசமான இடங்களை கைப்பற்றும் என்ற கனவுடன் இருந்தது. ஆனால் அது கனவாக வந்து கனவாகவே போய்விட்டது. கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா), தர்மபுரியில் அன்புமணி (பா.ம.க) ஆகிய இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். பெரிய மாநிலமான தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு ஒ…
-
- 9 replies
- 950 views
-
-
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளாதது பா.ஜனதாவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும்., தமிழகத்தின் உணர்வுகளை மனதில்கொண்டு அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியின் ஆதரவை பெற பா.ஜனதா தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், கடந்த காலங்களில் சந்தித்த பிரச்னைகள் காரணமாக ரஜினி பிடிகொடுக்காமல் நழுவிவிட்டார். இருப்பினும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுப்பார் என்று தமிழக பா.ஜனதா தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்குபோதெல்லாம் கூறிவந்தனர். ஆனால் அதற்கும் ரஜினி தரப்பில் எவ்வித ரியாக்ஷனும் வெளிப்படவில்லை. ஆனாலும் மனம் தளராத பா.ஜனதாவினர் மோடியிடம் பேசி, …
-
- 0 replies
- 1.9k views
-
-
தஞ்சை: தஞ்சாவூர் பெரிய கோயில் பாதுகாப்பு கருதி ரூ.1.30 கோடி மதிப்பில் 31 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நேற்று முதல் செயல்பட துவங்கியது.தஞ்சை பெரிய கோயில், யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.இந்தநிலையில், கூடுதல் பாதுகாப்பு கருதி கோயில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை பெரிய கோயில் மராட்டா நுழைவு வாயில், கேரளந்தான் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில், விமான கோபுரம், நந்தி மண்டபம், கோயில் திருச்சுற்று என்று 31 இடங்களில் கண்காணிப்ப…
-
- 0 replies
- 533 views
-
-
சி.பி.ஐ., வழக்கு நிலுவையில் இருப்பதால், பா.ம.க.,வின் அன்புமணிக்கு அமைச்சர் பதவி அளிக்க பா.ஜ., முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணி, ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்தவர் என்பதால், மோடி அமைச்சரவையில் இடம் பெற முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, புதுச்சேரி அனந்தராமன் ஆகியோருடன், டில்லியில் முகாமிட்டிருந்தார். இணை அமைச்சர் பதவியாவது...: அமைச்சர் பதவி வேண்டி, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை, பா.ம.க., குழு சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அப்போது, கேபினட் அமைச்சர் இல்லையென்றாலும், இணை அமைச்சர் பதவியாவது அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால், பா.ம.க.,வின் கோரிக்கையை, பா.ஜ., தலைமை ஏற்றுக் கொள்ளவில…
-
- 0 replies
- 568 views
-
-
சென்னை: மோடி பிரதமராக பதவியேற்க தயாராகும் நேரத்தில் கிட்டத்தட்ட அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் போல மாறிவிட்டார் திமுக பிரச்சார பீரங்கியான நடிகை குஷ்பு. மோடியின் கொ.பா.சேவாக 'மாறிய' குஷ்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக கூட்டணி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நிலவியது. திமுகவின் பிரச்சார பீரங்கியான நடிகை குஷ்பு, பாஜகவையும், மோடியையும் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், இப்போது குஷ்புவின் மோடி மீதான நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. நரேந்திரமோடியின் டுவிட்டர்களை ரீடுவிட் செய்வதிலேயே குஷ்பு இன்று பெரும்பொழுதை கழித்தார் என்றால் அது மிகை கிடையாது. "நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண்கள் பங்களிப்பு அவசியம். வீ…
-
- 0 replies
- 642 views
-
-
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் சரக்கு ரயில் மீது கோரக்பூர் விரைவு ரயில் மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் பலியானார்கள். சன்ட் கபிர்நகர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக வந்த கோரக்பூர் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து ரயில்வே மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மோடி இரங்கல் இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்ததும், இன்று மாலை பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், கேபினட் செயலாளரை தொடர்பு கொண்ட அவர், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான உதவி…
-
- 0 replies
- 798 views
-
-
புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ம…
-
- 0 replies
- 779 views
-