Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய இலங்கை கடல் எல்லையில் 5 படகுகளில் 21 மீனவர்கள் மீன்பிடித்துகொண்டிந்த போது இலங்கை கடற்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் 3 மாதத்தில் 551 மீனவர்களை கடல் எல்லையில் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://virakesari.lk/?q=node/362671

    • 0 replies
    • 523 views
  2. ஆந்திரமும் தெலுங்கானமும் இணைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவை மீண்டும் ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாக பிரிக்க ஒப்புதல் நல்கியுள்ளது. இந்தியா 125 கோடி மக்கள் வாழும் மிகப் பெரியதொரு தேசமாகும். கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தியா ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பலம் பொருந்திய பொருளாதார சக்தியாக உருமாறி இருக்கின்றது. ஆன போதும் இந்தியா இன்னமும் கல்வி, உள்கட்டுமானம், சுகாதாரம், மருத்துவம், சுற்றுச்சூழல் போன்ற விடயங்களில் பாரிய முன்னேற்றத்தை எட்ட வேண்டியும் இருக்கின்றது. இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனையே அதன் அதீத மக்கள் தொகைப் பெருக்கம் தான். இவ்வாறான அதிகளவு மக்கள் தொகையை கொண்ட ஒரு தேசத்தில், சாமன்ய இந்திய குடிமகனுக்கும், அரசு…

  3. சிங்கள அரசின் கைக்கூலி சந்தோஷ் சிவன் - வைகோ கடும் தாக்கு! இனம் படம் பற்றி கடுமையான எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டுள்ள வைகோ, படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவன் சிங்கள அரசின் கைக்கூலி என்று கடுமையாக தாக்கிப்பேசியுள்ளார். இது குறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை வருமாறு: ‘இனம்’ எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ்சிவன் இயக்கி உள்ளார். ‘பயங்கரவாதி’ என்ற பெயரில் அவர் முன்பு வெளியிட்ட திரைப்படம், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, கேவலமான முறையில் சித்தரித்தது. இப்பொழுது அவர் இயக்கிய ‘இனம்’ எனும் திரைப்படத்தைப் பார்த்து விட்டு இயக்குநர் புகழேந்தி தங்கராசு என்னிடம் அது குறித்து விவரித்தபோது, தாங்கமுடியாத அதிர்ச்சிக்கு ஆளான…

  4. இந்திய மீனவர்களுக்கு இனிப்பு, மென்பானம் வழங்கி இன்பஅதிர்ச்சி கொடுத்த இலங்கை கடற்படை! – கச்சதீவில் மீன்பிடிக்கவும் அனுமதி. [Monday, 2014-03-31 09:17:41] இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்துள்ள நிலையில் இந்த அதிசயம் நிகழந்துள்ளது. நேற்று கச்சத்தீவிற்கு அருகாமையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அன்பாக உபசரித்தனர் என தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவிற்கு அருகாமையில் மீன்பிடிக்க அனுமதித்ததுடன் இலங்கைக் கடற்படையினர் இனிப்பு மற்றும் மென்பானம் வழங்கி மீனவர்களை உபசரித்தனர் என குறிப்பி…

  5. புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்: - தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு [saturday, 2014-03-29 14:02:01] புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்தியாவின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்கள் எந்தவிதமான பிரச்சினையும் இன்றி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியும் என அவர் …

    • 1 reply
    • 613 views
  6. சென்னை: நன்றி மறந்தவர்கள் மகனாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் தி.மு.க. மன்னிக்காது என அக்கட்சி தலைவர் கருணாநிதி கூறினார். திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6 மணி அளவில் சென்னை சிந்தாதிரி பேட்டையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தென்சென்னை, வடசென்னை மற்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய கருணாநிதி, திராவிட இயக்க வரலாற்றில் சென்னைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு என்றார். தொடர்ந்து பேசிய அவர், மதச்சார்பற்ற அரசை காண திமுக பாடுபடுவதாக கூறினார். மூன்றெழுத்து கொண்ட தி.மு.க., திராவிடர்களை ஒன்றுபடுத்தி, அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் இயக்கம் திமுக. தொண்டர்களை சந்திப்பதில் எனக்கு இறுமாப்பு கிடையாது. நான் திராவிடர்களின் தலைவன்…

  7. டெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. எனவே மாநில அரசுக்கு 7 பேரையும் விடுவிக்க அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி மரணதண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதையடுத்து, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பி…

  8. திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார் : கலைஞர் அதிரடி அறிவிப்பு. திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிருந்த மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கலைஞர் அதிரடியாக அறிவித்தார். ’’விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்காததால் அழகிரியை திமுகவில் இருந்து அறவே நீக்கும் முடுவு எடுக்கப்பட்டுள்ளது. நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் கலந்து பேசி அழகிரியை நீக்குவது என்று முடிவு எடுத்தோம்’’என்று கூறினார் கலைஞர். திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதை அழகிரி கடுமையாக சாடினார். இதனால், அவர் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை…

  9. Breaking News Update: வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் மனு தள்ளுபடி! புதுதில்லி: வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த ஜனவரி 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ம…

  10. ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றாலும், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்தியாவின் இலங்கை கொள்கையில் மாற்றம் வரும் என்கிறார் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பி சஹாதேவன். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன் மொழியப்பட்டிருக்கும் தீர்மானம் அடுத்தவாரம் ஐநா மன்றத்தின் மனித உரிமை அவையில் கொண்டுவரப்பட இருக்கும் சூழலில், இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகள், குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்த விவாதம் சூடுபிடிக்கத்துவங்கியிருக்கிறது.முன்பு சியாரோலியோன் விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்ட அதே அணுகுமுறை இலங்கையிலும் கடைபிடிக்க வேண்டுமென பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இவரது இ…

  11. மு.க. அழகிரி, வைகோ சந்திப்பு. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை 23.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை அவரது மதுரை இல்லத்தில் சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு கோரி மு.க.அழகிரியை சந்தித்தேன் என்றார். அழகிரி ஆதரவு தெரிவித்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அழகிரியின் மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என வைகோ பதில் அளித்தார். மு.க.அழகிரி கூறுகையில், ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியப் பிறகு, மதிமுகவுக்கு ஆதரவு தருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். ஆத…

  12. தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி: [sunday, 2014-03-23 19:24:13] தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் பெண்கள் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராகவும், தமிழீழத்திற்கு ஆதரவாகவும் பதாகைகளை பிடித்திருந்தனர். மேலும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி அவர்கள் கையெழுத்து பரப்புரையை மேற்கொண்டனர். தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையினை உடனே நடத்து, அயோக்கிய அமெரிக…

  13. "இந்திய ஐக்கிய நாடுகள்" என பெயர் மாற்றம் செய்வோம்: ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி. சென்னை: இந்தியாவின் பெயரை அமெரிக்கா போல 'இந்திய ஐக்கிய நாடுகள்" (United Staes of India) என பெயர் மாற்றம் செய்வோம்; கூடங்குளம் அணு உலைகளை மூடுவோம் என்று மறுமலர்ச்சி திமுகவின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் என்றும் ம.தி.மு.க தெரிவித்துள்ளது. சென்னையில் லோக்சபா தேர்தலுக்கான ம.தி.மு.க தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு" மீனவர் பிரச்சினை மீனவர் பிரச்னையில் கடுமையான நடவடிக்கை எடுக்க போராடுவோம். மீனவர் ந…

  14. சிவகங்கை தொகுதியில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு வெறும் 10 பேர் தான் வந்துள்ளனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் எண்ணிக்கையோ 100. ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க முட்டி மோதியது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை, இதையடுத்து தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது அந்த கட்சி வேட்பாளர்களை கூட அறிவிக்காத நிலையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். அப்பாவுடன் சேர்ந்து மகன் கார்த்தி சிதம்பரமும் பிரச்சாரம் செய்கிறார். சிவகங்கை தொகுதியில் உள்ள ஆலங்குடியில் சிதம்பரம் தனது பிரச்சாரத்தை துவங்கினார். அந்த கூட்டத்தில் அவர…

  15. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளின் பட்டியலை, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிமுகக் கூட்டம் சென்னையில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் தேமுதிக - 14, பாஜக - 8, பாமக - 8, மதிமுக – 7, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1, இந்திய ஜனநாயகக் கட்சி - 1 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார். யாருக்கு எந்தெந்த தொகுதி? தேமுதிக: திருவள்ளூர் (தனி), வடசென்னை, மத்திய சென்னை, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, தி…

  16. ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறையின் ரசாயனக் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை நிறுவனம் ஒன்றில் ரசாயன குழாய் அடைப்பை சரி செய்யும் பணியில் இன்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரசாயன குழாய் வெடித்தது. இதனால் சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை காப்பாற்றச் சென்ற 6 பேரையும் விஷவாயு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து …

  17. தமிழ் நாட்டில் காங்கிரஸ் தனிமை ஆக்கப்பட்டது எமக்கு கிடைத்த வெற்றி - சீமான் [Tuesday, 2014-03-18 12:47:55] தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சீமான் நிருபர்களிடம் கூறினார். பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தம¤ழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சீமான் நிருபர்களிடம் கூறினார். பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்ட…

  18. தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தங்கபாலு திட்டவட்டமாக அறிவிப்பு! [Friday, 2014-03-14 13:21:49] பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் தங்கபாலு அறிக்கையில் கூறியுள்ளார். தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவினை சேலம் உள்ளிட்ட எந்த தொகுதிக்கும் அளிக்கவில்லை. மூன்று மாவட்ட தலைவர்கள் தாங்களாகவே இந்த மனுக்களை அளித்துள்ளனர். 2011 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தார்மீக பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் அனுப்பினேன். உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வரும் சட்…

  19. தேர்தலில் போட்டியிட தமிழக காங்., தலைவர்கள் தயக்கம்! சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், இளங்கோவன், தங்கபாலு போட்டியில்லை! http://www.dinamalar.com/index.asp (தினமலரில் ஓடும் செய்தி) மக்கள் தீர்ப்பை சந்திக்க அவ்வளவு தைரியமற்ற கோழைகளா இவர்கள்?

  20. சென்னை அடையாரில் உள்ள ஐ.நாவின் யுனிசெவ் அலுவலகத்தை தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞரகள் கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் முற்றுகையிட்டனர். இன்று (13.02.14) 11.30 மணி அளவில் திடீரென முற்றுகையிட்ட அவர்கள் பின்னர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்து அங்கு இருந்த ஐ.நா அவையின் கொடிகளையும், அமெரிக்க கொடியையும் அகற்றினர். யாரும் எதிர்பாராத வகையில் உள்நுழைந்த மாணவர்கள் உள்பக்கமாக அனைத்து கதவுகளுக்கும் பூட்டு போட்டனர்... ஐநா அலுவலகத்தின் உள்ளே நுழைந்த மாணவர்கள் அங்கு காலவரையற்ற உண்ணாவிரதத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். இலங்கைக்கு ஆதரவான ஐ.நா வின் தீர்மானத்தை எதிர்த்தும், பொது வாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை கோரியும் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தை …

  21. அமெரிக்காவின் ”அயோக்கிய” தீர்மானத்திற்கு எதிராக மாணவர்கள் இன்று வேளச்சேரியில் இருக்கும் அமெரிக்க நிறுவனமான KFC ஐ பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தை சேர்ந்த 20 மாணவர்கள் முற்றுகையிட்டனர். 1) தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து. 2) இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை உடனே நடத்து. என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்களின் முற்றுகை அமைந்தது. கடையில் இருந்தவர்களிடம் இனப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு குறித்த விடயங்களை துண்டறிக்கைகளாக கொடுத்து அமெரிக்காவின் பொருட்களை புறக்கணிக்க கோரினர். கடைக்கு வெளியே கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியும், கடையில் அமர்ந்திருதவர்களுக்கு மத்தியில் சென்று இனப்படுகொலை மற்றும் தமிழீழம் தொடர்பான முழக்கங்களும் எழுப்பபட்டன.அதை கண்டு சாப்பிட …

  22. சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக வேடட்பாளர்கள் பட்டியலில், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆ. ராசா நீலகிரி தொகுதியிலும், தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு பேரையும் எதிர்த்து தங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக நிறுவனத் தலைவரான டேவிட் பருன்குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ள கூடங்கு…

  23. காங்கிரஸுக்கு 1991-ம் ஆண்டு வரலாறு 'கை' கொடுக்குமா? தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கைவிட்டதால் தனித்துவிடப்பட்ட காங்கிரஸ் கட்சி, இந்த மக்களவைத் தேர்தலில் விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கள படங்களை வைத்து இந்த கோரச் சம்பவத்துக்கு நியாயம் கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர் விவகாரம், விலைவாசி உயர்வு மற்றும் ராஜீவ் காந்தி கொலைக் குற்ற வாளிகளின் விடுதலையை எதிர்த்த விவகாரத்தால் தமிழ கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர எந்த கட்சிகளும் முன்வரவில்லை. அதனால், தமிழக காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்க தயாராகி வருகிறது. …

    • 1 reply
    • 987 views
  24. அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. FILE இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் இன்று மாலை செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுகவை சேர்ந்த யாரும் தங்களை தேடி வராததால் தாங்கள் அக்கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். இரு கட்சிகளும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கப் போவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. h…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.