தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10264 topics in this forum
-
எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகுவது தொடர்பான தனது முடிவை சட்டசபை சபாநாயகர் தனபாலுக்கு பண்ருட்டியார் அனுப்பி வைத்துள்ளார். அதில், உடல் நிலை சரியில்லாததாலும், வயதானதாலும் எனது எம்.எல்,ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், தேமுதிக பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அதேபோல தீவிர அரசியலை விட்டு விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். சட்டசபைத தேமுதிக துணைத் தலைவராகவும், தேமுதிக அவைத் தலைவராகவும் இருந்து வந்தார் பண்ருட்டியார். பண்ருட்டி தொகுதியிலிருந்து 6 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். கடைசியாக ஆலந்தூர் தொகுதி…
-
- 5 replies
- 828 views
-
-
சென்னை: சென்னையில் நடைபெற்ற உயிர்வலி ஆவணத் திரைப்பட திரையீட்டு விழாவில் பங்கேற்ற அற்புதம்மாளிடம் சரமாரியான கேள்விகளை மாணவர்கள் கேட்டனர். சென்னை லயோலாக் கல்லூரி மாணவர் விடுதி அரங்கத்தில் கடந்த 05.12.2013 வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் "உயிர்வலி" ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவிற்கு, மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவரும் உயிர்வலி ஆவணப்படத்தின் இயக்குனருமான செல்வராஜ் முருகையன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், சேஷு சபையின் சென்னை மிஷனைச் சேர்ந்த அருட்தந்தை ஜெபமாலை, ஸ்டூடன்ஸ் ஜெராக்ஸ் உரிமையாளர் சௌரிராஜன் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர். உயிர்வலி ஆவணப்படம், விழாவில் பங்கேற்ற சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவர்களையும் அமைதியாக கட்டிப்…
-
- 0 replies
- 476 views
-
-
அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு எதிரான மனநிலை: ராமதாஸ் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு எதிரான மனநிலையே காணப்படுகிறது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தவாறே அமைந்துள்ளன. ஏற்காடு இடைத்தேர்தல் முடிவும் அப்படியே அமைந்துள்ளன. மத்தியில் 2-ஆம் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி மக்களை மதிக்காமல் நடந்துகொண்டது. நாட்டைப் பாதிக்கும் வகையில் அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவற்றைச் செய்த காங்கிரஸ் அரசு, மக்களைப் பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு என்று புதுப்புது பெயர்களில் வரிகள…
-
- 0 replies
- 515 views
-
-
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 21 சுற்றுகள் கொண்ட இந்த வாக்கு எண்ணிக்கையில், 15 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 1,08,298 வாக்குகள் பெற்றுள்ளது. திமுக 51,232 வாக்குகள் பெற்றுள்ளது. நோட்டோவுக்கு 3,299 வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிமுக 57 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளது. செய்தி :nakkiiran.
-
- 4 replies
- 867 views
-
-
BT பருத்தியும் தமிழகமும் கடந்த சில வருடங்களாக ஊடகங்களை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மான்சான்டோவின் மரபணு மாற்ற பருத்தியை எதிர்த்து இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் விவசாயிகள் மிக பெரிய அளவில் எதிர்த்து அதை தமிழகத்திலிருந்தே துரத்தி அடித்த செய்தி தெரிந்திருக்கும். இந்த மரபணு மாற்ற பருத்திக்கு எதிராக தினமும் ஊடகங்களிலும் செய்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த முறை இந்தியா சென்ற போது மரபணு பருத்தியின் எச்சங்கள் எங்காவது தென் படுகிறதா என்று எட்டி பார்க்கலாம் என பருத்தி நிறைய வளரும் ஆத்தூர் பக்கம் போய் பார்த்தேன்ஆத்தூரில் உள்ள பிரபல வேளாண் இடுபொருள் கடைக்கு சென்றிறுந்தேன். அந்த கடை நிறுவனரிடம் இப்பெல்லாம் இந்த பக்கம் எந்த பருத்தி அதிகம் பயிரிடுகிறார்கள் என்…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 952 views
-
-
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு எதிரான தமிழக அரசின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் கிரி தாக்கல் செய்த இந்த மனுவை நீதிபதிகள் சந்திர மௌலி, குரியன் ஜோசப் அடங்கிய குழு விசாரணை செய்தது. தமிழக அரசின் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=565022492306289846#sthash.OppsIsdJ.dpuf
-
- 2 replies
- 488 views
-
-
இலங்கை விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பிரச்சினையை எழுப்ப தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன. இலங்கைத் தமிழர் விவகாரம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் நடவடிக்கை, பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தீவிரமாக எழுப்ப தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தவிர்த்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. டி.ஆர். பாலு இது தொடர்பாக திராவிட முன்னேற்ற கழகத்தைச்சேர்ந்த டி.ஆர். பாலு கூறுகையில், இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது, இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்தியா பங்கேற்றது தொடர்பாக விளக்கம் கேட்டும் நோட்டீ…
-
- 0 replies
- 522 views
-
-
நிருபர்:இறுதி போரின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி தீடிரென்று ஏன் ஒரு உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார்?அல்லது எந்த அடிப்படையில் போர் நின்றுவிட்டது என்று உலகக்கு அறிவித்தார். மே 17 திருமுருகன் பதில்: கருணாநிதியின் இந்த உண்ணாவிரதத்திற்க்கு பின் மிகப்பெரிய ஒரு நாடகம் நடந்திருக்கிறது.அது என்னவென்றால் ஏப்ரல் 23’ 2009 அன்று போரில் நெருக்கடி அதிகமாகிறது.அதாவது 2009 ஏப்ரல் இராண்டாவது வாரத்தில் தாக்குதல் என்பது மிகக்கொடூரமாக நடக்கிறது பல்லாயிரக்காண மக்கள் கொல்லப்படுகிறார்கள்.இந்த நிலையில் அமெரிக்காவின் தூதர் பெர்லே இந்தியாவின் அதிகாரிகளான சிவசங்கர் மேனன் மற்றும் M.K.நாரயணன் ஆகியோரை கூப்பிட்டு இலங்கையில் உடனே போர் நிறுத்ததை கொண்டு வாருங்கள் என்று கேட்கிறார்.அதற்க்கு இவர்கள் இத…
-
- 0 replies
- 493 views
-
-
சென்ற சனியன்று (30/11/13) சென்னையில் உட்லண்ட்ஸ் ஓட்டல் மண்டபத்தில் ‘இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் மத்திய அரசின் நிலையும்’ என்கிற தலைப்பில் பேசும்போது மத்திய அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் சில விஷயங்களை வலியுறுத்திப் பேசினார். சுருக்கமாக - 1) இலங்கையில் இறுதிப் போரில் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இலங்கையின் உள்நாட்டுப் போரை நிறுத்த, இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்திய அரசின் முயற்சிக்கு இரு தரப்பினரும் உடன்பட்டிருந்தால், பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார். இனப் படுகொலை நடந்திருக்காது. (குறிப்பு - இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று திரு ப.சிதம…
-
- 0 replies
- 792 views
-
-
மரபணு மஞ்சள் வாழைப்பழம்: ----------------------------------- முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான். இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டு…
-
- 7 replies
- 1.4k views
-
-
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அண்ணன் சீமான். (facebook)
-
- 21 replies
- 1.6k views
-
-
மாவீரர் தின அனுஷ்டிப்புக்கு தடை விதித்த தமிழக பொலிஸாரை தாக்கிய இலங்கை அகதிகள் 7 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை தமிழர்கள் 47 பேர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 27ம் திகதி மாவீரன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக 26ம் திகதி முகாமில் உள்ள நினைவு தூண், இறந்தவர்கள் கல் வெட்டுகள் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் அதை இடித்தனர். இதை கண்டித்து 27ம் திகதி முதல் முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினர். 29ம் திகதி இரவு உண்ணாவிரதம் இருந்த போது மின்சார தடை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி கொண்ட இலங்கை தம…
-
- 0 replies
- 527 views
-
-
சென்னை: இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். இலங்கைத் தமிழரின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் இன்று (30ஆம் தேதி) நடந்தது. இதில் கலந்து கொண்டு, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, ''இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் உள்ள ஷரத்துக்களை சீர்குலைக்க இலங்கை அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதேவேளையில், 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 13வது சட்டத் திருத்தத்தையும், இலங்கைத் தமிழர்களையும் மத்திய அரசு என்றுமே கைவிடாத…
-
- 5 replies
- 847 views
-
-
மரணதண்டனை எதிர்ப்பிற்காக பேரறிவாளனின் வாழ்க்கையை ஆதாரமாக கொண்ட உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட வெளியீடு.. காலம்: 23.11.2013 நேரம்: 3pm - 9pm இடம்: சர் பிட்டி தியாகராயர் அரங்கு, தி.நகர், சென்னை கிருஷ்ணய்யர் 99 பிறந்த நாள் விழா, கிருஷ்ணய்யர் விருதுகள் வழங்கும் விழா. மரண தண்டனை எதிர்ப்பு விருது - மகா ஸ்வேதா தேவி மனித நேயர் விருது - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் செங்கொடி விருது - இடிந்த கரை பெண்கள், சுந்தரி, செல்வி, சேவியர் அம்மாள் https://www.facebook.com/events/218538531651761/?ref=notif¬if_t=plan_user_invited
-
- 1 reply
- 578 views
-
-
புதுடெல்லி: ஏற்காடு இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறிய தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, மைத்ரேயன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ஏற்காட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காக கடந்த 25 ஆம் தேதி தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு ரூ.500 பணம் கொடுத்தனர் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஏற்காடு தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வேட்டி-சேலையும், மதுவும் விநியோகம் செய்தனர். எனவே, தேர்தல் விதிகளை மீறிய தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். http://ne…
-
- 0 replies
- 480 views
-
-
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 5 பேர் இலங்கை சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது விடுதலையாகி தாயகம் திரும்புவார்கள் என கண்ணீருடன் காத்திருக்கின்றன அவர்களது குடும்பங்கள். இலங்கை சிறையிலுள்ள மீனவர் பிரசாத்தின் மனைவி ஸ்கெனிடா தனது குழந்தைகள் ரோசன் மற்றும் ஜெயஸ் உடன் நவம்பர் மாதம் 28, 2011 அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத் மற்றும் லாங்நெட் ஆகிய 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்கள் மீது இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. மீனவர்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு அப்பாவி மீனவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என உண…
-
- 0 replies
- 417 views
-
-
விசாரணையை கோர்ட் கண்காணிக்க கோரி பேரறிவாளன் மனு - 10 ஆம் திகதி தீர்ப்பு [Friday, 2013-11-29 10:13:24] ராஜீவ்காந்தி கொலை குறித்து பல்நோக்கு ஒழுங்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்தி வரும் விசாரணையை கோர்ட்டு கண்காணிக்கவேண்டும் என்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வருகிற டிசம்பர் 10-ந் தேதி பிறப்பிப்பதாக தடா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில், விடுதலை புலி இயக்கத்தின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உட்பட பலர் இன்றும் தேடப்படும் குற்றவாளியாக உள்ளனர். எனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை முடிந்த பின்னர், சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்டு பல்நோக்கு ஒழுங்குமுறை விசாரணை கண்காணிப்பு முகமையை (எம்.டி.எம்.ஏ.) 17-6-1999 அன்று மத்திய அரசு அமைத்தது. இந்த …
-
- 0 replies
- 717 views
-
-
புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 23 பேரையும் விடுதலை செய்து புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி கோவிலின் உள்ளே உள்ள தனது அலுவலகத்தில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், ரஜினிகாந்த், அம்பிகாபதி, பாஸ்கர், குமார், ஆனந்தகுமார், அனில்குமார், மீனாட்சி சுந்தரம், பழனி, குருவிரவி, ஆறுமுகம், தில்பாண்டியன்,…
-
- 9 replies
- 1.2k views
-
-
நவம்பர் 27 மாவீரர் தினம். இந்த நாளை உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் தமிழின உணர்வாளர்கள் அனுசரித்து வருவது வழக்கம். பொது இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகள் இருந்த போதிலும் கடந்த ஆண்டில் சென்னை கடற்கரை போன்ற இடங்களில் குழந்தைகள், மாணவர்கள் ஏராளம் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள். இந்த ஆண்டு துயிலகம் போல தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து உணர்வாளர்கள் கலந்த கொண்டனர்.மேலும் வெளிநாடுகளில் இருந்தும் உணர்வாளர்கள் வந்து கலந்து கொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=438512473527673286#sthash.rRmszMKE.dpuf
-
- 0 replies
- 842 views
-
-
இது தொடர்பான செய்திகளை இத்திரியில் இணையுங்கள். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சென்னை மாணவர்கள்! நவ 26, 2013 தமிழீழ தேசிய் தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்த நாளினை தமிழர்கள் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.இன்னிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் விடுதியில் மாணவர்கள் கேக் வெட்டி மாணவர்களுடன் பரிமாறி கொண்டாடியுள்ளார்கள். புலம்பெயர் தமிழர்களும், தமிழகத்திலும் பரவலாக தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் எழுச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 26.11.2013 இன்று 12 மணிக்கு தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கூறி கொண்டாடினர். அவரின் வயதுக்கு அளவான எண்ணிக்கையில் தின் பண்டங்களும் நிகழ்வில் பகிரப்பட்டன.…
-
- 11 replies
- 1.1k views
-
-
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிக்க தடை. சின்னங்களை இடித்து அகற்றிய காவல்துறை! செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆண்டுதோறும் மாவீரர் நாளில் போரில் இறந்த சொந்தங்களை நினைவு கூர்வது வழக்கம். அதற்காக அவர்கள் சிறப்பு முகாமில் உள்ளேயே நினைவு சின்னம் அமைத்து நவம்பர் 27 நாளில் மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்துவர். அணி அணியாக விளக்குகள் வைத்து மாவீரர்களுக்கு சுடர் வணக்கம், மலர் வணக்கம் செய்து வந்தனர். மஞ்சள் சிகப்பு வண்ண தோரணங்களை நினைவு சின்னம் சுற்றிலும் கட்டியிருந்தனர் . சென்ற ஆண்டும் மாவீரர் நாளை சிறப்பு முகாமில் இருந்த அனைவரும் அனுசரித்தனர். இதனால் யாருக்கும் இடையூறு இல்லை. காரணம் இது அவர்கள் தனிப்பட்ட நிகழ்வாகவே அனுசரித்து வந்…
-
- 4 replies
- 671 views
-
-
நவம்பர் 26 - தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள். இந்த நாளை கொண்டாடுவதற்கு உலகத் தமிழர்கள் கடந்த ஒரு வார காலமாகவே ஆயத்தமாகி வந்தனர். தமிழர் நலன் சார்ந்த பல கட்சிகள் இந்த நாளை தமிழின எழுச்சி நாளாக கொண்டாடுகின்றன. இருப்பினும் தமிழக அரசு பிரபாகரன் பிறந்த நாளை யாரும் கொண்டாடக் கூடாது என்றும் , பிரபாரகன் படத்தை பொது இடங்களில் வைக்கக் கூடாது என்று காவல்துறைக்கு கட்டளையிட்டு உள்ளது. என்ன தான் தமிழக அரசு தடை சொன்னாலும் , பிரபாகரன் தமிழினத்தின் தலைவர் , அவர் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடாமல் இருக்க மாட்டோம் என்று பல தமிழ் கட்சிகள் , இயக்கங்கள் , அமைப்புகள் ஏற்கனவே இந்த நாளை கொண்டாடி வருகின்றன. சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்துகள் ! தமிழக இணைய பயன்பா…
-
- 2 replies
- 3.8k views
-
-
சென்னை: திராவிட இயக்க கொள்கைகளுக்கு இன்னும் உயிர் சக்தி உள்ளதாக, திராவிட கழக பொருளாளர் சாமிதுரை படத்திறப்பு விழாவில் கருணாநிதி பேசினார். பெரியார் திடலில் இன்று திராவிடர் கழக பொருளாளர் சாமிதுரை படத்திறப்பு விழாவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, சாமிதுரை உருவ படத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது, ''சாமிதுரையின் புகழ் என்றென்றும் வாழும் என்று நாம் நம்பிக்கை பெறும் நாள். அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து ஆற்றுவோம் என்ற சூளுரையை நாம் இங்கிருந்து மேற்கொள்வோம். இங்கு பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நான் தன்னந்தனியாக வந்து சாமிதுரையின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதற்கு நன்றி தெரிவித்து நினைவு கூர்ந்தார். இது…
-
- 0 replies
- 334 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை கோருவது சரியல்ல: நாராயணசாமி பேட்டி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை கோருவது சரியல்ல என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உயர் அதிகாரிகள் திடீரென்று மாற்றுக் கருத்துக்களை கூறிவருகின்றனர். அரசு உயர் அதிகாரிகள் பதவியில் இருக்கும்போது ஒரு மாதிரியும், ஓய்வு பெற்ற பிறகு வேறு மாதிரியும் மாற்றி, மாற்றி பேசி வருவது சரியல்ல. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை முழுவதும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்ட நிலையில் திடீரென மறு விசாரணை கோருவது சரியல்ல என்றார்.…
-
- 4 replies
- 602 views
-