தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
சென்னை: மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு எதிராக எழிலரசு என்ற வக்கீல் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.மணிக்குமார் விசாரித்தார். மனுவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். தனது மனுவில், "ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்த "மெட்ராஸ் கபே' திரைப்படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களை தீவிரவாதிகள் போன்று சித்திரித்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய அமைதிப் படைக்கு எதிராக தமிழர்கள் செயல்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படம் வெளியிடப்பட்டால் தமி…
-
- 1 reply
- 442 views
-
-
சென்னை: காமல்ன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து, தமிழர் இனபடுகொலைக்கு காரணமான இலங்கையை நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க மாணவர் அணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ம.தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னை தாயகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்: 'நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் மாணவர்களிடையே மாவட்ட, மாநில அளவில் போட்டி நடத்துவது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.7 லட்சம் பரிசு மற்றும் விருதுகளை வைக்கோ மூலம் வழங்குவது. 18 வயது ஆகும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி…
-
- 1 reply
- 405 views
-
-
இடிந்தகரையில் இன்று அணு உலையை மூட கோரி நடு உச்சி வெயிலில் சாலையில் முழங்கால் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர் இடிந்தகரை மக்கள். இப்படி ஒரு அறவழிப் போராட்டத்தை தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலகமே சந்தித்தது அல்ல. சொந்த நாட்டில் தமிழர்கள் அவர்கள் வாழ்வுரிமைக்காக போராடுகிறார்கள். அவர்கள் போராட்டத்தை கடுகளவும் தமிழக இந்திய அரசுகள் மதிக்கவில்லை. இந்தியாவின் மக்கள் விரோத கொள்கையும், மாநில வளங்களை சுரண்டுதலையும் தடுக்கவே மாநில அரசுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தமிழக அரசோ இந்திய அரசுக்கு தப்பாமல் தாளம் போட்டு தமிழர்களை நசுக்கிறது . இத்தனை கொடுமைகள் இந்த அரசுகள் செய்தாலும் இடிந்தகரை மக்கள் சலிக்காமல் தங்கள் எதிர்கால சந்ததிக்காக போ…
-
- 8 replies
- 642 views
-
-
கச்சதீவில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 67ஆவது சுதந்திர தினமான இன்று, தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததன் பின்னர் அங்கு உரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் சார்பில் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன் எடுத்து வைத்தது. தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டும் உன்னதமான சாதனைகளை இந்த அரசு செய்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அதே வழியில் கச்சதீவில் நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்…
-
- 2 replies
- 471 views
-
-
Thirumurugan Gandhi ”ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்கிறோம் ”, விடுதலை சார்ந்த அரசியல் கோரிக்கையும், இனப்படுகொலைக்கான விசாரணைக்கோரிக்கையும் விட வாழ்வுரிமைக் கோரிக்கையையும், இலங்கையர்களாக ஒன்றுபட்டு சமரசம் செய்து வாழ்வது என்கிற அரசியல் தேர்தல் ஊடாக முன்வைக்கப்பட்டு தமீழிழ குடிமக்களிடம் இலங்கையின் அரசியல் சாசனமும், நீதி பரிபாலனையையும் ஏற்கச்சொல்லி நயவஞ்சகமாக தீர்வுகளை இந்தியாவும், சர்வதேசமும் முன்வைக்கிறது. வேட்டையாடப்பட்டவர்களாக நிற்கும் எம் தமிழீழச் சமூகம் எந்தக்கொள்ளிக்கட்டையை எடுத்துக் கொள்வது என்கிற பிரச்சனையில் நிறுத்தப்பட்டுள்ளது. 2009க்கு பின்பு தொடர்ச்சியாக நாம் என்ன கேட்கவேண்டும், அல்லது, என்ன தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டுமென்று சர்வதேசம் …
-
- 0 replies
- 366 views
-
-
காட்பாடியில் சித்தூர் ரோட்டில் ஆந்திர எல்லை அருகில்Â தி.மு.க அமைச்சர் துரை முருகன் நடத்தி வரும் கிங்ஸ்டன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஆந்திராவில் பந்த் நடந்து வருவதால் சித்தூரில் இருந்து மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். சித்தூரை சேர்ந்தவர் ஷர்வான்குமார் கல்லூரி மாணவர். இவர் கடந்த செவ்வாய்கிழமை கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நடந்த சாலை விபத்தில் ஷர்வான்குமார் படுகாயம் அடைந்தார். அப்போது உடன் இருந்த மாணவர்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை கேட்டுள்ளனர். ஆம்புலன்சை அனுப்ப கல்லூரி நிர்வாகம் மறுத்ததாக க…
-
- 0 replies
- 725 views
-
-
சென்னை: சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசாணை எண் 92ன் படி கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது இந்திய மாணவர் கழக மாணவர்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி இன்று 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது, மாணவர்களை உள்ளே விட மறுத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினரிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை தரதரவென இழுத்து சென்று போலீசார் வேனில் ஏற்றினர். அப்போது, காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் கைது ச…
-
- 0 replies
- 366 views
-
-
சென்னை: கோவையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, பட்டினிப்போர் நடத்தியவர்களை கைது செய்ததற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: "கோவை அருகே வெள்ளலூர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கினால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். தினமும் 800 டன் குப்பைகள் இந்தக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக (சுமார் 70,000 மக்கள்) வசிக்கின்ற பகுதிகளை ஒட்டி இந்த குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டபோதே அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமலும், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கருத்துகளைக் கேட்காமலும…
-
- 0 replies
- 259 views
-
-
டி.ஆர்.பாலுவை காரில் 'பிக்கப்' - 'டிராப்' செய்து விட்டு ஜெ.வை சந்தித்த தம்பிதுரை! Kia 2013 Range View the 2013 Kia Range. Book a Test Drive Today! Kia.com.au Unconventional Wisdom Unique Financial Thinking - Independent thought leadership www.unconventional-wisdom.com.au சென்னை: திமுக எம்.பி. டி.ஆர். பாலுவுடன் ஒரே காரில் சென்ற அதிமுக எம்.பி. தம்பிதுரை பின்னர் நேராக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் விழி உயர்த்தி பார்க்கப்படுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. அந்த கூட்டம் முடிந்ததும் அதிமுக எம்.பி.யும், நாடாளுமன்ற கட்சிக்குழு தலைவருமான தம்பிதுரை தனது காரில் கிளம்பினார்.…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கு மதப் பிரசாரம் செய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் வருகிறார். அவர் வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். எனவே அவருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் தர்ம பிரசார சமிதி என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் மாநில அமைப்பாளர் ஜி.எஸ்.ராஜகுரு தலைமையில், நிர்வாகிகள் குழு ஒன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதுதொடர்பாக மனு அளித்துள்ளது. அதில், ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு மதப்பிரசாரம் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மதப் பிரசாரம் செய்யும் கூட்டங்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அதனால் ஈரோடு மாவட்டத்துக்குள் உமா சங…
-
- 0 replies
- 571 views
-
-
சென்னை: மணல் மாஃபியாக்களின் சுயநலத்திற்காக, கிராமங்களில் பிரிவினைகள் தூண்டப்படுகின்றன; சமூக நல்லிணக்கம் கெடுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே கடற்கரை மணல் செல்வம் கொள்ளை போவதைத் தடுக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென்தமிழகத்தின் கடலோரங்களில் இருக்கின்ற, கனிம வளம் பொருந்திய கடற்கரை மணல், அதன் கெட்டித் தன்மையால், கடலோரப் பகுதிகளில் ஒரு தடுப்பு அணையாக, கடல் நீர் உட்புகாத வண்ணம் அப்பகுதி மக்களைக் காத்து வந்தது. அந்த மணலை அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட முறைகேடாக, தங்கு தடையின்றி மணல் அள்ளியதைத் தொடர்ந்து, தங்கள் வாழ்வாத…
-
- 0 replies
- 936 views
-
-
மதுரையில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள தமிழ் தாய் சிலை நிறுவ இடம் தேடுதலில் குழப்பம் நீடிக்கிறது. வைகை நதிக்கரை ஓரம் துவரிமான் கண்மாயில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மதுரையில் ரூ.100 கோடியில் 160 அடி உயரமுள்ள தமிழ்த்தாய் சிலையும், அதை சுற்றிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் மாதிரி தோற்றம், தமிழ்த்தாய் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கடந்த மே மாதம் அறிவித்தார். தமிழ்த்தாய் சிலையும் தண்ணீருக்கு நடுவில் அழகிய இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடந்த 3 மாதங்களாக கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். முதலில் வண்டியூர் கண்மாய் ஏற்றதாக இருக்கும் என கருதப்பட்டத…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: திருத்தணி தேமுதிக எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியத்தின் மகளை காதலித்து மணந்த தனது மகனை கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார் சென்னையைத் சேர்ந்த ஒரு பெண். சென்னை வடபழனியில் வசித்து வரும் ராஜகுமாரி என்பவர் வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- திருத்தணி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண்சுப்பிரமணியன் மகளை காதலித்து திருமணம் செய்த எனது மகன் ரமேசுக்கு, அருண் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் இருந்து மிரட்டல் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எனது மகன் ரமேசை 2 நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த புகார் மனுவில் ரமேசின் தாயார் ராஜகுமாரி கூறியுள்ளார். அருண் சுப்பிரமணியனின் …
-
- 0 replies
- 333 views
-
-
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் பாரதியஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் திட்டமிட்டே படுகொலை செய்யப்படுகின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கிறிஸ்துவ-இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதைபோல இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பாரதிய ஜனதா மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் திட்டமிட்டே கொடூரமான முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த கொலைகள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. இந்த கொலைகளுக்கு சுயகாரணம் தனிப்பட்ட வெறுப்பு, பழிவாங்கும் நடவடிக்கை என்று தம…
-
- 1 reply
- 393 views
-
-
சென்னை: தேமுதிகவில் விஜயகாந்துக்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய மூத்த தலைவர் அக்கட்சியை விட்டு விலகி முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் தேமுதிகவின் 29 எம்.எல்.ஏக்களில் 6 பேர் ஏற்கெனவே அதிமுக ஆதரவு அணிக்குப் போய்விட்டனர். மதுரை மத்திய தொகுதி சுந்தர்ராஜ், திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், பேராவூரணி அருண்பாண்டியன், செங்கம் தொகுதி சுரேஷ்குமார், சேந்தமங்கலம் சாந்தி, விருதுநகர் மா.ஃபா பாண்டியராஜன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பகிரங்கமாக விஜயகாந்தை விமர்சிக்கவும் செய்தனர். இந் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு அடுத்த இடத்தில் உள்ளவரும் அரசியலில் பழுத்த பழமாக இருப்பவரும் கூட விரைவில் ஜெயலலித…
-
- 2 replies
- 616 views
-
-
மதுரை: பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், ஒளிந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் மதுரை புதூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர் திருமங்கலம் அருகே பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி சென்ற வழியில், ஆலம்பட்டி பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவற்றில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த வழக்குகளில், மதுரையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், மேலப்பாளையம் பன்னா இஸ்மாயில் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுரை புதூர் பகுதியில், போலீஸ் பக்ருதீன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஒர…
-
- 0 replies
- 370 views
-
-
எங்கள் தமிழ் மக்கள் கட்டாயமாக பார்க்கவேண்டிய ஆவணப்படம்: அறப்போர் 29.06.2013 சுவிஸ், ரிசினோ (Ticino) மாநிலத்தில் நடைபெற்ற மாணவர் எழுச்சி நாள் அன்று, அறப்போர் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படம் அங்கு கூடியிருந்த எல்லா மக்களின் கவனத்தையும் எட்டிப்பிடித்தது. அறப்போர் ஆவணப்படம் மூலம், தமிழ் இனத்திற்கு எங்கள் பிரச்சனைகளை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். அன்றில் இருந்து இன்று வரை தமிழ் மக்கள் எதற்காக போராடுகிறார்கள், மாணவர்கள் எதற்காகக் குரல் எழுப்புகிறார்கள் என்று, இந்த ஆவணப்படத்தில் சரியான வசனத்தோடு, சரியான காட்சிகளோடு கூறி இருக்கிறார்கள். தமிழ் இனத்திற்கு நடக்கின்ற பல பிரச்சனைகளில் ஒன்றை எடுத்து நன்றாக காட்டி இருக்கிறார்கள். நான் பலரிடமிருந்து தெரிந்து கொ…
-
- 5 replies
- 997 views
-
-
திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்க கட்டி பறிமுதல். சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் விமான நிலைய இமிகிரேசன் பிரிவு அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர் தாமரை சென்றார். அப்போது கழிவறையில் ஒரு தங்க கட்டி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அவர் விமான நிலைய மேலாளர் கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்த போது அந்த தங்க கட்டி 1 கிலோ எடை இருக்கும் எனவும் தெரியவந்தது. 24 கேரட் கொண்ட அந்த தங்க கட்டியின் மதிப்பு ரூ.29 லட்சம் இருக்கும் என…
-
- 1 reply
- 605 views
-
-
தமிழ்நாட்டுக்கு அதிகம் பொருந்தும் விடயங்கள்! ========================================== 1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும். 2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும். 3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. 4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது. 5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி. 6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு. 7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க. 8. கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண். 9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை. 10) ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து அதேபானியில் படம் …
-
- 5 replies
- 620 views
-
-
சென்னை: முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வெளிப்படையான செயல்பாடுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு விசிடி தயாரித்து விற்றவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். திருட்டு டிவிடி தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளனர் போலீசார். இதற்காக போலீசுக்கு விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: திருட்டு சிடி தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும். அன்பு ரசிகர்களே, தமிழ்நாட்டில் இன்னும் தலைவா படம் வெளியிடப்படவில்லை. அதற்குள் யாராவது திருட்டு சிடி விற்றாலோ, தயாரித்தாலோ அவர்களை பற்றி காவல் துறைக்கு தெரிவியுங்கள். சிறப்பான ஆ…
-
- 3 replies
- 375 views
-
-
சென்னை: ஆந்திராவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் சித்தூர், நகரி, விஜயபுரம் உள்ளிட்டவற்றை தமிழகத்துடன் இணைக்கக் கோரி தமிழர் எழுச்சி இயக்கத்தின் சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் சித்தூர், நகரி, விஜயபுரம் உள்ளிட்ட பல பகுதிகள், 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது தமிழகத்தின் சற்றொப்ப 32,000 சதுர மீட்டர் நிலப்பரப்பிலான பகுதிகள், ஆந்திரப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன. தற்போது, ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படுகின்ற சூழலில், சித்தூர், நகரி, விஜயபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட தமிழர்கள் பெரும்பான்மையா…
-
- 9 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியா செல்லும் ஆசையில் உள்ள அகதிகளை குறிவைத்து, தமிழக அகதிகள் முகாம்களில் முகவர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இவற்றை, “கியூ” பிரிவு பொலிஸார் தீவிரமாக கண்காணித்து, புதியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.இருப்பினும், உள்ளூர் முகவர்களை பிடிப்பதில், தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில், பெரும்பாலானோர், அவுஸ்திரேலியா செல்ல விருப்பமாக உள்ளனர். அதற்காக, பல லட்சம் ரூபாய் வரை கொடுக்க தயாராக உள்ளனர். இதை அறிந்த முகவர்கள் முகாம்களில் உள்ள வசதியான அகதிகளை கண்டறிந்து, அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி, பணம் பெறுகின்றனர். பின், விசைப்படகில், அவர்களை அழைத்துச் சென்று, ஏதாவது ஒரு கடற்கரை பகுதியில் இறக்கிவிட்டு, அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்…
-
- 1 reply
- 399 views
-
-
சென்னை: சுதந்திர தினத்தன்று சென்னை, கோவை, மதுரை ஆகிய தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் கூடுதலாக பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திர தினம் கொண்டாடப்படும் இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மக்கள் கூடும் பகுதிகளான விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கவும் புலனாய்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில்…
-
- 0 replies
- 249 views
-
-
கேள்வி: குடும்பத்தினரைப் பற்றி ஜெயலலிதா ஒவ்வொரு அறிக்கையிலும் சுட்டிக் காட்டுவதைப் பற்றி நீங்கள் கேட்டதற்கு, உங்கள் குடும்பத்தில் மகன்கள், மகள், பேரன் என எல்லோருமே அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், கழகமே குடும்பம் என்றிருந்த நிலைமை மாறி குடும்பமே கழகம் என்று ஆகி விட்ட நிலையில் குடும்பத்தைப் பற்றிப் பேசாமல் இருப்பது எப்படி என்று ஜெயலலிதா கேட்கிறாரே? கருணாநிதி: குடும்பத்திலே உள்ளவர்கள் அரசியலிலே ஈடுபட்டிருக்கும்போது, அவர்கள் தவறு செய்தால், அதைப்பற்றிப் பேசுவதிலே தவறில்லை. ஆனால் இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டிப் பேசக் கூடாதல்லவா? மேலும் நான் அரசியலிலே இருப்பதால், என்னுடைய குடும்பத்தினரில் சிலர் அரசியலிலே ஈடுபடுகிறார்கள். இந்திய அரசியலில் எடுத்துக் கொண்டால்…
-
- 3 replies
- 720 views
-
-
சென்னை விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. சென்னை விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனையம் ரூ.2,200 கோடியில் அண்மையில் கட்டப்பட்டது. இந்தநிலையில், இண்டிகோ விமானத்திற்கான பயண அட்டை பெறும் இடத்தில் இருந்த மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. 300 அடி நீளமும், 6 அகலமும் கொண்ட இந்தக் கூரையானது 100 மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மழை மற்றும் ஏசி தண்ணீர் தேங்கியதால் இடிந்து விழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால், பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 3 மாதத்திற்கு முன்னால் இதே பகுதியில் மேற்கூறை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. நன்றி நக்கீரன்.
-
- 7 replies
- 683 views
-