Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகத்தில் நெல்லை, மதுரை, தேனி உள்பட 14 இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையதாக தமிழகத்தை சேர்ந்த 14 பேர் துபாயில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 14 பேர் இல்லங்களிலும் சென்னை, மதுரை, தேனி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்த வருகிறது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்…

    • 0 replies
    • 626 views
  2. தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதால் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட மாணவருக்கு, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சீட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கருப்புசாமி என்ற மாணவர் தொடர்ந்த வழக்கில் மருத்துவக்கல்வி துறையின் முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ சீட் வழங்கவில்லை என்றும், தன் தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதால் தன்னை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றும் மாணவர் கருப்பசாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இன்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையின் போது, மாணவரின் பள்ளி, இருப்பிட சான்றிதழ்…

    • 0 replies
    • 520 views
  3. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்கு சென்ற 11 மீனவர்கள் நெடுஞ்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை படகு உடன் சிறைப்பிடித்தனர். காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாளை இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் 11 பேரும் ஆஜர்ப்படுத்தபட உள்ளனர். https://www.polimernews.com/dnews/98422/தமிழக-மீனவர்கள்-11-பேர்-கைது..!இலங்கை-கடற்படை-அட்டூழியம…

    • 0 replies
    • 442 views
  4. படக்குறிப்பு, திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் சமீபத்தில் சாதியின் பெயரில் நடைபெற்ற கொலை சம்பவங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இத்தகைய கொலைகளை தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணி கட்சிகள் கோரி வருகின்றன. இதில் அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருக்கும், ஆனால் அவர்கள் அதைக் கடந்து செயல்பட வேண்டும் என்கிறார் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளரான எஸ்.கருணாநிதி. அரசியல் கட்சிகளிலிருந்து அரசு நிர்வாகம் வரை அதன் செயல்ப…

  5. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து சிறப்பு மருந்து சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பதிவு: ஜூன் 19, 2020 08:16 AM சென்னை சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரோனா தொற்று தீயாய் பரவிய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், எந்தவித விதி மீறலிலும் ஈடுபடாமல் இருந்து சட்…

  6. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சுவாதிக்கு ஆதரவாகவும், ராம்குமாருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சுவாதி பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் இந்த வழக்கில் பலர் தங்கள் வசதிக்கேற்றவாறு விஷத்தகவலை பரப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொல்.திருமாவளவனுக்கும், எச்.ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உருவபொம்மை எரிப்பு எல்லாம் நடந்தேறியது. வாட்ஸ்அப் புகழ் யுவராஜ் வெளியிட்ட ஆடியோவில் சுப…

  7. அறிவியல் முதல் அரசியல் வரை அப்துல் கலாம்.... மின்னம்பலம் “கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னைத் தூங்க விடாமல் செய்வது எதுவோ, அதுவே இலட்சிய கனவு” என்று இளைஞர்களைத் தட்டி எழுப்பிய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவு தினம் இன்று. 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவர் அப்துல் கலாம். ராமநாதபுரத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த கலாம், விஞ்ஞானி, எழுத்தாளர், சிந்தனையாளர் என அவர் கால் பதிக்காத இடம் இல்லை. எவ்வளவு உயரம் சென்றாலும், அவருடைய எளிமைதான் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது என்று சொல்லலாம். குழந்தைகள், மாணவர்கள் மீது தனிப்பிரியம் கொண்ட அப்துல் கலாம் எப்போதும், இளைஞர்கள்…

  8. புதுக்கோட்டை கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்: நெடுமாறன், ரகுபதி நேரில் வாழ்த்து ஈழப் பிரச்சணையை முன்னிருத்தி புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் நேற்று செவ்வாய் கிழமை காலை கல்லூரி முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார்கள். இங்கு மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் தகவல் தமிழகம் எங்கும் பரவியதால் அனைத்து தமிழ் உணர்வாளர்களும் இந்த மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புதன் கிழமை காலை பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அதே போல தி.மு.க முன்னால் மத்திய இணை அமைச்சர் எஸ்.ரகுபதி நேரில் சென்று மாணவர்களுடன் இருந்து அவர்களுக்க வாழ்த்து கூறினார். மேலும் பல தலைவர்களும் வந்து கொண்டிரு க்கின்றனர். இந்த மாணவர்களுக்கு துணையாக மேலும் பல மாணவர்கள் அர…

  9. அரக்கோணம் அருகே சித்தேரியில் ரயில் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள சித்தேரி என்ற பகுதியில் இன்று காலை முஸராப்பூர் - யஷ்வந்த்பூர் ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டன. அதிகாலை 5.50 மணியளவில் விபத்து நடந்ததால், ரயிலில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். நிலைமையின் விபரீதத்தை உணரும்முன் ஏராளமானோர், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், காயமடைந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கி பீகாரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். ரயில் தடம்புரண்டதன் காரணமா…

  10. தமிழகத்தின் புதிய ஆளுநர் இவர்தானா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கி வருகிறது. இதனிடையே, தற்போது தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பு குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநாராகத்தான் இருக்கிறார். வித்யாசாகர் ராவ் தலைமையில்தான் ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அரசின் வழிநடத்துதலின் பேரில் வித்யாசாகர் ராவ் தமிழக ஆட்சியில் முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளார். இந்த நிலையில் புதிய ஆளுநர் நியமனத்திற்கான முடிவுகள் எடு…

  11. சிம்மக் குரலோன் டி.எம்.செளந்தரராஜன் உடலுக்கு இசைஞானி இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை டிஎம்எஸ்மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பல்துறையினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., சிவாஜியின் மறைவுக்குப் பின்னர் டி.எம்.எஸ்ஸின் மரணம் உலகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டி.எம்.எஸ்ஸின் வீட்டுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டி.எம்.சவுந்தரராஜன் குரல் மாதிரி இன்னொருத்தர் வரமுடியாது. தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய குரல். அவர் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது. எவ்வளவு புதியதாக பாடல்கள் வந்தாலும், அவருடைய பாடல்களை கேட்டு, ரசிக…

  12. வானதி சீனிவாசன் பாஜக- சிறப்பு பேட்டி

    • 0 replies
    • 558 views
  13. சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற இளம்பெண் கடத்தல்? அதிமுக சேர்மன் மீது சகோதரி புகார் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், புகாரை வாபஸ் பெற்ற பெண்ணைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மீது பரபரப்புப் புகார்களைத் தெரிவித்து அரசியல் அரங்கில் சூட்டைக் கிளப்பியவர், சசிகலா புஷ்பா. அ.தி.மு.க சார்பாக மாநிலங்களவை உறுப்பினரான இவர், ஜெயலலிதாவின் மரணத்தில் சதி இருக்கிறது எனத் தெரிவித்ததுடன், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சர்ச்சையை உருவாக்கினார். அத்துடன், அ.தி.மு.க.வின் பொதுச…

  14. தமிழகம்: இன்று முதல் கடுமையான முழு ஊரடங்கு! மின்னம்பலம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (மே 13) மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர், தொழில் மற்றும் வர்த்தகம் பாதிக்கக் கூடாது என்பதற்காக சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் ஊரடங்கு விதிகள…

  15. தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை – மத்திய அரசு தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில், இதுவரை உத்தியோகப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில், இது குறித்து மக்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி எழுப்பப்பட்டது. குறித்த கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்தை பிரிக்கும் எந்த கோர…

  16. மீண்டும் ரிசார்ட்டுக்கு படையெடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்! புதுச்சேரி நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் அதே ரிசார்ட்டுக்கு கூடாரத்தை மாற்றியிருக்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக் கூடாது என்பதற்காக கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் தனியார் ”பீச் ரிசார்ட்டில்” தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஆன்லைன் மூலம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரி 100 அடி சாலைய…

  17. இலங்கையில் இருந்து ஒரு வயது குழந்தையுடன் படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 4 பேர் இந்திய கடற்படையினரிடம் பிடிபட்டனர். இராமேஸ்வரம் முகாமில் இருந்து இந்திய கடற்படையினர் இன்று அதிகாலை ரோந்து சென்றனர். இராமேஸ்வரம் சேரான்கோட்டை கடல் பகுதியில் ரோந்து சென்ற போது அப்பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்றை கண்டனர். அந்த படகின் அருகில் சென்று பார்த்த போது அதில் இலங்கையை சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் இருந்துள்ளனர். இதையடுத்து அவர்களை கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த நிர்மலன் (24), இவரது மனைவி நிஷாந்தினி (23), இவர்களது ஒரு வயது குழந்தை மற்றும் நிர்மலனின் நண்பர் கலையரசன் (31) என தெரியவந்தது. மேலும் …

  18. யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 17 வயது புதுவை சிறுவன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புதுச்சேரியில் தாயைத் தவறாக பேசிய நபரை மிரட்டும் நோக்கில் யூடியூப் காணொளியைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அந்த நபரின் வீட்டில் வீசிய சிறுவனிடம் விசாரணை நடந்துவருகிறது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வயது 50. புதுச்சேரி நகர பகுதியில் சாலையோரத்தில் உள்ளாடைகள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ள…

  19. தயாளு அம்மாள் திடீர் சுகவீனம்.. மருத்துவமனையில் அனுமதி. திடீர் உடல்நல குறைவு காரணமாக, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தயாளு அம்மாளுக்கு 82 வயதாகிறது. சிறிது காலமாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் கருணாநிதி கட்சியிலிருந்து ஒதுக்க ஆரம்பித்த காலத்திலேயே தயாளு அம்மாளுக்கும் உடல் நலம் சரியில்லாமல் போனது. கருணாநிதி சென்னை, காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தபோது தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார். அப்போதும் அவர் வீல் சேரில்தான் அழைத்து வரப்பட்டார். எனினும், ஸ்டாலின் வேட்பு மனுதாக்கல் செய்தபோது தயாளு அம்மாள் விபூதி வைத்து ஆசி கூறி அனுப்பி…

  20. திடீர் திருப்பம்.. அதிமுகவுடன் இணைகிறார் ஜெ. தீபா அதிமுகவுடன் ஜெ தீபா இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா அவர் மறைந்தவுடன் ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தத்தில் இணையவிருந்தார். இந்நிலையில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு தீர்ப்பு வெளியானதும் இருவரும் சொல்லி வைத்தாற் போல் தனது ஆதரவாளர்களுடன் கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.இதையடுத்து ஓபிஎஸ் வீட்டுக்கு சென்ற அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டது. இந்நிலையில் திடீரென தீபா கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் ஆம் தேதி ஜெ. பிறந்தநாளன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் சசிகலா…

  21. பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயற்பட்டமைக்காக தமிழக அரசுக்கு 2 விருதுகள் January 25, 2019 பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயற்பட்டதற்காக, தமிழக அரசுக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கொண்டடப்பட்ட தேசிய பெண் குழந்தைகள் தினத்தினையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் டெல்லியில் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.இதேபோன்று மக்கள் மத்தியில் இந்த தி…

  22. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 1 மார்ச் 2024 மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர சைவ மடத்தின் மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவரது பெயரை நீக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அது உண்மையா, இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது தருமபுர ஆதீனம். இந்த ஆதீனத்தின் 27-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் மடாதிபதியாக இருந்து வருகிறார். மடாதிபதியின் சகோதரரான விருதகிரி என்பவர், அவருடைய உதவியாளரா…

  23. எங்க முதல்வருக்கு உடனே இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுங்க... மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை வைத்த ஆர்.பி..! முதல்வர் எடப்பாடிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வீடு விடுமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மத்திய அரசின் நல்ல திட்டங்களை எப்போதுமே வரவேற்கும் அதிமுக, தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து வருகிறது. நாட்டை ஆளும் மோடி மீது சில நாடுகள்…

  24. தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட கோனாம்பேடு பகுதியில் ஏராளமான குளங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் தற்போது ஓரளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஆனால் இப்பகுதியில் உள்ள குளங்களில் சிலர் சட்டவிரோதமாக டேங்கர் லாரிகள் கொண்டு தண்ணீரை திருடி அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கான நீராதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதையடுத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாமல் உள்ளன. எனவே கோனாம்பேடு பகுதிகளில் உள்ள குளங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்கவும், ஆக்கிர மிப்புக்களை அகற்றவும் உர…

    • 0 replies
    • 394 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.