தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் அரசியல் படுகொலைகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை... பா.ஜ.க.வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரும், அவர்களோடு கொள்கை உறவு கொண்ட இந்து சமயக் கட்சியினர் சிலரும் அடுத்த டுத்து கொல்லப்பட்டுள்ளனர். இம்மாத தொடக்கத்தில் அக்கட்சியைச் சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் இதேபோன்று கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். மற்றொரு மாநில நிர்வாகியான காந்தி என்பவர் நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது பட்டப்பகலில் நடந்த கொலை முயற்சியில் இருந்து படுகாயத்துடன் தப்பியுள்ளார். தங்கள் கட்சியினர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை பட்டியலிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலர் தமிழ…
-
- 3 replies
- 828 views
-
-
தமிழர்களை பொறுக்கிகள் என இழிவுபடுத்தி பேசி தமிழர்களுக்கு எதிராக தன்னுடைய வாழ்நாள் பெரும்பகுதியை செலவளித்து வரும்  சுப்ரமணியசாமி கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவிற்கு வருகை தருவதை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் சுப்ரமணிய சாமிக்கு தமிழர்கள் சார்பில் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். சுப்ரமணிய சாமி படம் அச்சிடப்பட்ட பதாகைகளை கிழித்து எறிந்துள்ளனர். கறுப்புக் கொடி ஏந்தி சு.சாமிக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறைனர் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 20 பேர்களை கைது செய்துள்ளனர் .    http://dinaithal.com/tamilnadu/17443-cupramaniyacami-torn-banners-arrested-20-people-showed-black-flag.html
-
- 0 replies
- 473 views
-
-
புதுடெல்லியில் உள்ள கோர்ட்டில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் நடுத்தர வயது விதவை பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்து விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் மீதான விசாரணை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. அதனை விசாரணை செய்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி நிவேதிதா அனில் சர்மா என்பவர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் 7 வருட சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறியுள்ளார். டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார். இவர், கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 22ந் தேதி யமுனா பஜார் பகுதியில் ஆர்ய சமாஜ் மந்திரில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக 3 குழந்தைகளுக்கு தாயான விதவை பெண் தனது புகாரில் கூறியுள்ளார். மேலும், தனக்கு திருமணமானதை மறைத்து தான் ஒரு த…
-
- 0 replies
- 307 views
-
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது ராமநாதபுரம் நீதிமன்றம். கடந்த 2008ம் ஆண்டும் ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரையுலகினர் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் பேசிய சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு பதிவு செய்தது திமுக அரசு. இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார் சீமான். இன்றும் அவர் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி சதாசிவம், வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.  இதனால் சீமான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று வழக்கறிஞர்கள் வாட்டரங்கள் தெரிவிக்கிறனர் .http://dinaithal.com/tamilnadu/17406-seema-ramanathapuram-court-ordered-…
-
- 0 replies
- 305 views
-
-
ராமநாதபுரம்: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் உரையாற்றியதாக கூறி க்யூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சீமான் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து சீமானுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார். http://tamil.oneindia.in/news/2013/07/19/tamilnadu-arrest-warrant-against-see…
-
- 0 replies
- 557 views
-
-
போராட்டம் கை கொடுத்தது.. மதுரை நீதிமன்றத்தில் இனி தமிழில் வாதாட அனுமதி!! சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை திரும்பப் பெறுவதாக நீதிபதி மணிக்குமார் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இனி அந்த நீதிமன்றத்தில் தமிழில் வாதாட முடியும். உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞர் பகத்சிங் என்பவர் 2 வழக்குகளை தொடர்ந்திருந்தார். இந்த 2 வழக்குகளும் நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் தமிழில் வாதாடினார். ஆனால் இதற்கு நீதிபதி மணிக்குமார் அனுமதி மறுத்தார். தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்று கூறி 2 வழக்குகளையும் நீதிபதி தள்ளுபடியும் செய்தார். இது கடும் எதிர்ப்பை உருவாக்கி…
-
- 0 replies
- 276 views
-
-
பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மதுபானியில் உள்ள ஒரு பள்ளியிலும் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்திலும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி என்.எல்.சி. மகளிர் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் உடனடியாக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளி…
-
- 0 replies
- 391 views
-
-
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை : Â இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மவுனியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி; இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவினை இலங்கை நாட்டிற்கு தாரைவார்த்தது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்று 2008 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம். Â Â அதற்குப் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பிய போது, தமிழக அரசின் சார்பாகவோ அல்லது தான் தாங்கிப் பிடித்திருந்த மத்திய அரசின் சார்பாகவோ, தமிழகத்திற்கு சாதகமான ஒரு மனு…
-
- 0 replies
- 384 views
-
-
தர்மபுரியில் ரயிலில் பாய்ந்து, இளவரசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மது அருந்தியதாக ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்டதன் மூலம், தர்மபுரியில் பெரும் கலவரம் உருவாக காரணமாக இருந்த திவ்யா-இளவரசன் ஜோடி இம்மாத தொடக்கத்தில் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜூலை 5ம் திகதி, தர்மபுரியில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப் பட்டார் இளவரசன். அவரது உடலுக்கு அருகே சில மதுபாட்டில்கள் கிடந்தன. மேலும் அவரது சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்ட கடித்ததில் இருப்பது அவரது கையெழுத்துத் தான் என்பது உறுதியான நிலையில் அவரது மரணம் தற்கொலை தான் என நிரூபணமானது. இந்நிலையில் தனது மகனுக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை என சந்தேகம் தெரிவித்தார் இளவரசனின் அப்பா. இது குற…
-
- 0 replies
- 572 views
-
-
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள மீத்தேன் வாயு திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளார். முழுமையாக ஆய்வு செய்து முடிவெடுக்க தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு குறித்து ஆய்வு செய்து, உற்பத்தி செய்ய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திட் டம் செயல்படுத்தப்பட்டால், மண் வளம் பாதிக்கும், நிலத்தடி நீர் குறையும், விளைநிலம் உப்பளமாக மாறிவிடும். மீத்தேன் வாயு நச்சுத்தன்மை வாய்ந்ததால், வாயு கசிவு ஏற்பட்டா…
-
- 0 replies
- 680 views
-
-
வடசென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் தண்ணீரில் நெருப்பை கொளுத்தி போட்டால் கபகப என்று பற்றி எரிகிறது. துணியை அலசி போட்டு, அதில் நெருப்பை வைத்தால் அதுவும் எரிகிறது. சென்னை தண்டையார்பேட்டை டிஎச் சாலை பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியின் அருகில் உள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலைக்கு, துறைமுகத்தில் இருந்து குழாய் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, நிலத்தடி நீரில், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் கலந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் தீப்பிடித்து எரியும் தன்மையி…
-
- 3 replies
- 841 views
-
-
மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா தன்னுடைய ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் படித்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1080 மதிப்பெண்கள் எடுத்தார். மிகவும் ஏழ்மையான சூழலில் தான் பொறியியல் கல்லூரில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட செல்வி தினுசியவிற்கு தமிழ் உணர்வாளர்கள் உதவி செய்ய முன்வந்தனர் . இரு வாரங்களுக்கு முன் அகரம் அறக்கட்டளையில் மேல் படிப்பிற்காக முறையிட சென்னை வந்த போது நாமும் நம் நண்பர்களும் இவரையும் இன்னும் பிற முகாம் மாணவர்களையும் அகரம் அறக்கட்டளைக்கு அழைத்து சென்று வந்தோம் . அகரம் நிறுவனமும் அடுத்த ஒரு வாரத்தில் அகதிகள் முகாமை சென்று பார்வையிட்டு அவர்களால் முடிந்த உதவியை செய்வதாக கூறினார்கள் . இந்நி…
-
- 11 replies
- 923 views
-
-
சென்னை: "மக்களின் நியாயமான எதிர்ப்பைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப் போக்கில் கூடங்குளம் அணுஉலையை இயக்கி அதனால் ஏற்படும் கதிர்வீச்சு உள்ளிட்ட அனைத்து விளைவுகளுக்கும் மத்திய அரசும், அணுசக்தித் துறை அதிகாரிகளும்தான் பொறுப்பாளிகள்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (16ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுஉலையை அகற்றக்கோரி, சுதந்திர இந்தியாவில் இதுவரை எங்கும் நடைபெற்றிடாத வீரம் செறிந்த அறவழிப்போராட்டத்தை, 700 நாட்களாகத் தொடர்ந்து அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், பொதுமக்களும், குறிப்பாக மீனவப் பெருமக்களும், இடிந்தகரையை அறப்போர்க்களமாக்கி நடத்தி வருகின்றனர். துளி அளவும் வன்முறை இல்லாத இந்த அறப்போரை நசுக்குவதற்கு, ம…
-
- 0 replies
- 375 views
-
-
மதுரை: மதுரையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் திமுகவில் இருந்து வந்து தற்போது ஆளுங்கட்சியில் இருக்கும் பரிதி இளம்வழுதியை மேடையில் வைத்துக் கொண்டே அக்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் அசிங்கப்படுத்தினார். பதிலுக்கு பரிதி திமுகவினரை அசிங்கப்படுத்தி பேசினார். மதுரையில் அதிமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய பரிதி இளம்வழுதி மற்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பேசிய அதிமுகவினர் சிலருக்கு பரிதியின் பெயரை சரியாக உச்சரிக்க தெரியவில்லை. இந்நிலையில் கூட்டத்தில் பேசிய மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் கூறுகையில்…
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் குழந்தை தொழிலாளர்கள் 40514089da49c9eacbc393905cc43715
-
- 1 reply
- 641 views
-
-
கொலை முயற்சி வழக்கு; விஜயகாந்த் திடீர் மாயம் தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்தில், பல்வேறு திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென அங்கிருந்து மாயமானார். ரிஷிவந்தியம் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைப்பதற்காக வியாழக்கிழமை காலை விஜயகாந்த் வந்திருந்தார். பிறகு திட்டமிட்படி தோப்புச்சேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கண்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து அகண்டை கூட்ரோட்டில் ரிஷிவந்திய ஊராட்சி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் மாற்றுத் திறனாளிகள் 8 பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கினார். 51 அங்கன்வாடி மையங்களுக்கு கேஸ் அடுப்பு மற்றும் க…
-
- 0 replies
- 511 views
-
-
தனி ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய தமிழக மாணவர் போராட்டம் பற்றிய 'அறப்போர்' ஆவணப்படம், பிரிட்டன், ஜெர்மன், ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் சப் டைட்டிலுடன் வெளிவர இருக்கிறது . அது பற்றி இயக்குனர் வே.வெற்றிவேல் அவர்கள் :- தமிழர்களின் அரசியலும், பொதுவாழ்வும் சீர்குலைந்து கிடக்கின்ற நேரத்தில் இன்றைய இளைய தலைமுறை அது பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கிறதே என்கிற ஆதங்கம் சமூக ஆர்வலர்களுக்கு இருந்தது. வீட்டில் இருந்து பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்டு, மாலை மீண்டும் அதே கல்லூரி பேருந்தில் வீடுகளுக்கு கொண்டுவிடப்பட்ட மாணவ மாணவியர் தங்களுடைய எதிர்காலம் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்; தங்களுடைய வருமானம், வளமான வாழ்வு பற்ற…
-
- 4 replies
- 1.1k views
-
-
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையிலுள்ள பேரறிவாளனின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதற்கானகாரணங்களை மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை என மத்தியத் தகவல் ஆணையம் கூறியிருக்கிறது. கருணை மனுக்கள் குறித்த மத்திய அமைச்சரவையின் பரிந்துரைகளுக்கு தகவலறியும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, எனவே பேரறிவாளன் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்த விபரங்கள் அளிக்கப்பட்டேயாக வேண்டும் என வற்புறுத்த முடியாது என தகவல் ஆணையர் சுஷ்மா சிங் தீர்ப்பளித்திருத்திருக்கிறார். ஆனால் ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்த நீதிபதி ஜெயின் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி உருவாக்கப்பட்ட பல்முனை கண்காணிப்ப…
-
- 0 replies
- 454 views
-
-
சென்னை: இளவரசனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா விரும்பினால் உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இளவரசனின் உறவினர்கள் அதிகம் பேர் இருப்பதால் இறுதிச் சடங்கில் திவ்யா கலந்து கொள்ள இயலாமல் உள்ளது என்று வழக்கறிஞர் வைகை சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இளவரசன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பினால், அது குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் திவ்யா தரப்பினர் அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், அங்குள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னையை கணக்கில் எடுத்துக் கொண்டு மனு குறித்து பரி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னை: கருணாநிதியின் தத்துப்பிள்ளை, கனிமொழியின் தம்பி மு.க. மணி எங்கே என்று அதிமுக செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் வளர்மதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய அதிமுக செயற்குழு உறுப்பினருமான பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது, திமுகவில் இருப்பதோ கும்பல். ஆனால் அதிமுகவில் இருப்பதோ கூட்டம். கும்பல் கூடி கலைந்துவிடும். கூட்டமோ நிலையாக நிற்கும். நானும் உங்களுடன் நிலையாக நிற்பேன். தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படும் தேர்தலில் தான் திமுக எளிதில் வெற்றி பெறும். ஆரோக்கியமாக தேர்தல் நடந்தால் திமுக வெ…
-
- 0 replies
- 577 views
-
-
தண்டவாளத்தில் கிடந்த தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் உடல்- தற்கொலையா? தர்மபுரி: தர்மபுரி கலவரம் வெடிக்கக் காரணமான காதல் ஜோடியில் இளவரசனின் உடல் இன்று ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி என்பவரின் மகள் திவ்யா. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடினார். இதையடுத்து தலித் மக்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. 3 தலித் கிராமங்கள் ஒட்டுமொத்தமாக சூறையாடப்பட்டன. இந்த விரக்தியில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந் நிலையில் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் தாக்கல் செய்தார். இதையடுத்து, நீதிமன்ற உத…
-
- 8 replies
- 1.2k views
-
-
சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த்தோ, அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விஜயகாந்த் ஜாமீனில் வெளியே வரமுடியாத படி பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இதையடுத்து, பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் கடந்த 3ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்…
-
- 0 replies
- 440 views
-
-
திருச்சி: மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து, அனைத்து பெட்டிகளும் பலத்த சோதனைக்கு பின்னர் சுமார் 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது. மதுரையில் இருந்து இன்று காலை சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு வைத்திருப்பதாக திருச்சி ரயில் நிலைய மேலாளருக்கு நாகராஜ் என்பவர் செல்போன் மூலம் தகவல் சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து, வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் நிறுத்தப்பட்டது. திருச்சியில் இருந்து வெடிகுண்டு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை முழுவதுமாக சோதனை செய்தனர். அந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாததால் அது வெறும் …
-
- 0 replies
- 516 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக குமரன் பத்மநாபனிடம் விசாரித்தால் பல தகவல்கள் வெளியாகும் என சென்னையை சேர்ந்த ஜெபமனி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மேலும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் எதுவும் வரவில்லை என்று ஜெபமனி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. http://dinaithal.com/tamilnadu/16706-kp-padmanabha-inquire-at-the-rajiv-gandhi-assassination-case-the-petition.html
-
- 8 replies
- 775 views
-
-
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து தமக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தாக்கல் செய்த மனு விசாரணையை முடக்கும் நோக்கம் கொண்டது என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் கலைஞர் தொலைக்காட்சி ஆதாயம் அடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தயாளு அம்மாளை சிபிஐ அரசு தரப்பு சாட்சியாக சேர்த்துள்ளது. இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தயாளு அம்மாளுக்கு உடல்நிலைக் குறைவு என்றும் அவரால் எதையும் உணரக் கூட முடியாது என்றெல்லாம் கூறி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை சிப…
-
- 0 replies
- 451 views
-