தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கொலையுண்ட நந்தினி 24 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை புறநகர் பகுதியில் சனிக்கிழமை இரவு பெண் மென்பொறியாளரை கை, கால்களைக் கட்டிப்போட்டு உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயில் கருகி உயிருக்குப் போராடிய பெண்ணை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். போலீசாரின் விசாரணையில், ஒருதலையாக காதலித்து வந்த அந்தப் பெண்ணின் பள்ளிப்பருவ நண்பர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன நடந்தது? …
-
- 0 replies
- 571 views
- 1 follower
-
-
Published By: VISHNU 24 DEC, 2023 | 12:42 PM போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பிரஜை உட்பட இருவரை இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சென்னை வலயப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 56 கிலோ போதைப்பொருளை பொலிஸார் கைப்ற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இலங்கையை சேர்ந்த உதயகுமார் மற்றும் பெரம்பூரை சேர்ந்த அக்பர் அலி எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சென்னையில் தங்கியிருந்த உதயகுமாரை கடந்த 10ஆம் திகதி, போதைப்பொருள் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ போதைப்பொருளையும் கைப்பற்றினர். அதன் பின்னரான விசாரணைகள…
-
- 1 reply
- 446 views
- 1 follower
-
-
பெரியார் நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை! SelvamDec 24, 2023 11:51AM தந்தை பெரியாரின் 50-ஆவது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, “பெரியாரின் கொள்கைகள் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறது. பெரியார் என்பவர் ஓர் தனி மனிதர் அல்ல, அவர் ஓர் தத்துவம். பெரியாரை பார்க்காதவர்கள் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதனை பேராயுதமாக பயன்படுத்துகிறார்கள். இந்த நேரத்திலும் பெரியார் பலருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். பெரியார் எனும் தத்துவம் சாதி பிணி நீக்கும் மருத்துவ…
-
- 1 reply
- 482 views
-
-
பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து புது வாழ்வைத் தொடங்க இருந்தார்கள் அந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள். திருமணமான புதிது என்பதால், ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் கடை வீதியில் உள்ள துணிக் கடைகளில் துணி வாங்கிவிட்டு வீடு திரும்பும்போது, மோட்டார் பைக்கில் வந்த மர்ம கும்பல் இருவரையும் வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிய அந்தக் கும்பல் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திலிருந்து பறந்தனர். பட்டப் பகலில், பேருந்து நிலையத்திற்கு அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் அந்த இளைஞர், …
-
-
- 4 replies
- 950 views
- 1 follower
-
-
பொன்முடிக்கும் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச.21) தண்டனை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம், அறிவித்துள்ளது. தண்டனை விவரம்: அதன்படி, பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலட்சுமிக்கும் தல…
-
- 13 replies
- 1.6k views
-
-
பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர், உமாங் போட்டார் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக உறுதி செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது ஒரு மாநிலத்தை மத்திய அரசு …
-
- 0 replies
- 757 views
- 1 follower
-
-
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வரை பயணித்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு ஆயத்தமான நிலையில் விமானத்தின் ஒரு சில்லில் காற்று இல்லாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக திருச்சி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் அனுப்பியுள்ளனர். இந்தநிலையில், உடனடியாக விமானம் தரை இறங்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள விமான நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். அத்துடன், தீயணைப்பு வாகனங்கள் உற்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உடனடியாக முன்னெடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து விமானிகளும் சாதுர்யமாக செயல்பட்டு, வேக கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரை இறக்கினர். இதனால் பாதுகாப்பான முறையில் விமானத்தில் …
-
- 0 replies
- 607 views
- 1 follower
-
-
மோடியை நேரில் சந்தித்த ஸ்டாலின் : முன்வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள் என்னென்ன? christopherDec 20, 2023 00:11AM Stalin met Modi in person பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நேற்று (டிசம்பர் 19) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் 4வது கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து பல்வேறு …
-
- 0 replies
- 247 views
-
-
பட மூலாதாரம்,PONMUDI 3 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக அமைச்சர் பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து குற்றவாளி என அறிவித்துள்ளது. இந்த வழக்கின் தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை வரும் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தற்போதுஎம்.எல்.ஏ.,வாக நீடிக்கும் தகுதியை பொன்முடி இழக்கலாம். ஆனால், சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்…
-
- 1 reply
- 524 views
- 1 follower
-
-
முருகனை லண்டனுக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்து, 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சோ்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோா் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கின்றனா். லண்டனில் வசிக்கும் மகளுடன் சோ்ந்து வாழ இந்த நிலையில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சோ்ந்து வாழ விரும்புவதால், கவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிப்பதற்காக தி…
-
- 1 reply
- 872 views
-
-
பட மூலாதாரம்,MK STALIN/X 18 டிசம்பர் 2023 தமிழ் சினிமா வரலாற்றில் காலம் கடந்து நிற்கும் பல படங்களை தயாரித்த நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். 1930-களில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டி.ஆர்.எஸ்) என்பவர் உருவாக்கிய இந்நிறுவனம், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாக்கப்படும் படங்களுக்கு முன்மாதிரியான, காலம்கடந்த படங்களை தயாரித்திருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் - கருணாநிதி இருவரும் தங்களின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்கள் மூலமாகவே தடம் பதித்தனர். குறிப்பாக, எல்லீஸ் ஆர். டங்கன் 1950-இல் எம்ஜிஆர் நடித்து கருணாநிதி வசனம் எழுதிய `மந்திரி குமாரி` திரைப்படத்தைக் கூறலாம். …
-
- 0 replies
- 458 views
- 1 follower
-
-
17 டிசம்பர் 2023, 14:43 GMT புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சமீபத்தில் தான் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட…
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 15 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது. தோனி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சம்பத் குமார் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில், …
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, கேரள செவிலியர் நிமிஷா கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 14 டிசம்பர் 2023, 06:07 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் ஏமன் நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுச் சிறையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியாவை விடுவிக்க அவரது குடும்பத்தின் தரப்பில் ஒரு பெரிய போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், நிமிஷாவின் குடும்பம், கொலை செய்யப்பட்ட ஏமன் நாட்டைச் சேர்ந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கினால் விடுதலை கிடைத்துவிடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில் இது ‘ஏமனில் கொலை செய்துவிட்டுப் பணம் கொடுத்த…
-
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளமும் 2023-ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளமும் தொடர்ந்து ஒப்பிடப்பட்டு வருகின்றன. இரு சந்தர்பங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்ததாலும் இந்த விவாதம் தீவிரமாக சமூக வலைதளங்களில் சூடாக பரவிவருகிறது. எந்த ஆண்டு அதிக மழை பெய்தது, எத்தனை நாட்கள் பெய்தது என எண்ணிக்கைகளைக் கொண்டு முரணான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. மிக்ஜாம் புயலின் போது பெய்த மழை 47 ஆண்டுகளில் இல்லாத மழை என்று தமிழக அரசு கூறியது. இந்திய வானிலை ஆய்வு மையம் X தளத்தில் வெளியி…
-
- 6 replies
- 905 views
- 1 follower
-
-
சென்னைக்குத் தேவை புதிய வடிகால் வடிவமைப்பு மிக்ஜாம் என்று இந்தப் புயலுக்குப் பெயர் சூட்டியது மியான்மர். அந்தப் பர்மீயச் சொல்லுக்குப் பல பொருள்களைச் சொல்கிறார்கள். அவற்றுள் இரண்டு முதன்மையானவை. அவை; வலிமை, தாங்குதிறன். இவ்விரண்டு பொருளும் இந்தப் புயலுக்குப் பொருத்தமானதாக அமைந்துவிட்டது. சென்னையைத் தாக்கிய புயல் மிக வலுவாக இருந்தது. அதைத் தாங்கும் திறன் நகருக்கு வெகு குறைவாக இருந்தது. டிசம்பர் 3 காலை முதல் டிசம்பர் 4 இரவு வரை நகரில் கொட்டிய தொடர் மழையின் அளவு சுமார் 500 மிமீ. இப்படியொரு மழை கடந்த 50 ஆண்டுகளில் பெய்ததில்லை என்றனர் சில ஆய்வாளர்கள். அப்படியானால் இது ஐம்பதாண்டு மழையா? இருக்கலாம். அதனினும் சக்தி வாய்ந்த நூறாண்டு மழையாகக்கூட இருக்கலாம். சரி, அதென்…
-
- 1 reply
- 362 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 28 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் விஜய் என்ற நபரை இரு வாரங்களுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நவம்பர் 30 ம் தேதி, விஜயின் மனைவி நர்மதாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3.2 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தர்மபுரி மாவட்டம் தும்பலஹள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த விஜயின் மாமியார் யோகராணியை கைது செய்தனர். அவரிடம் இருந…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 9 டிசம்பர் 2023 மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த பெரும் மழையினால் நகரின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்கு உள்ளாயின என்றால், எண்ணூர் பகுதி மக்கள் சந்தித்த பிரச்னை விபரீதமானதாக இருந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிறைய இடங்களில் மழை நீர் தேங்கியது மட்டுமில்லாமல் பலரின் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் தங்களது உடமைகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில், தொழிற்சாலைகளில் இ…
-
- 1 reply
- 516 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன்.க பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் பருவ மழை பெய்வது வழக்கம். அந்த மழை நமக்கு ஒரு வரலாற்றுப் படிப்பினையைத் தொடர்ந்து கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. ஓரிரு நாட்களில் பெய்த அதிகனமழை சென்னையைப் புரட்டிப்போட்டு விட்டது. இயற்கை நமக்கு வகுத்துக் கொடுத்த முறைகளை நாம் சரியாகப் பின்பற்றாததுதான் இது போன்ற பேரிடர்களுக்கு காரணம் என்கின்றனர் இயற்கையியலாளர்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. அவற்றுள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 124 ஏரிகளும், 34 கோவில் குளங்களும் உள்ளன. இதில் ஏரிகளின் மொத்த கொள்ளளவு சென்னை மாநகர பர…
-
- 0 replies
- 512 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னைக்கு தனி வானிலை மாடலை உருவாக்க 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பில் துல்லியம் குறைவா? உண்மையில் புதிய மாடலுக்கான தேவை உள்ளதா? இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் வானிலை முன்கணிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய வானிலை ஆய்வு மையம்தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. சென்னை, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், குவ…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைப்பு! christopherDec 08, 2023 12:08PM மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையை அடுத்து தற்போது வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக இன்று (டிசம்பர் 😎 அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2007-ல் நெல்லையில் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், திமுக இளைஞரணியின் 2-வது மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று நடைபெறும் முதல் மாநாடு என்பதாலும், முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்பதாலும் இதனை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநாடு …
-
- 0 replies
- 509 views
-
-
சாரதா வி பதவி,பிபிசி தமிழ் 5 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் பல்வேறு பகுதிகளை தீவிரமாக பாதித்துள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக் கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் நான்கு அடிக்கும் குறையாமல் இருந்தது. இந்த புயல் கடந்த எட்டு ஆண்டுகளில் சென்னை பார்க்காத அளவுக்கான அதிகனமழையை கொடுத்துள்ளது. இந்த புயல் மற்ற புயல்களிலிருந்து சில காரணிகளால் வேறுபட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் எப்படி வித்தியாசமானது? புயல்கள் கரைக்கு எவ்வளவு அருகில் இருக்கிறதோ அவ்வளவு அத…
-
- 0 replies
- 600 views
-
-
05 DEC, 2023 | 02:46 PM மறைந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வின்போது அதிமுக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமை…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
5 டிசம்பர் 2023, 05:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) தொடங்கி நேற்று முழுதும் (டிசம்பர் 4) பெய்த பெரும் மழை காரணமாக நகரத்தில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால், மாநகர் முழுதும் போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பித்தன. பல இடங்களில் மின்சாரம் இல்லாமலும், தொலைதொடர்பு இணைப்புகள் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டனர். பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் குடியிருப்பு வளாகங்களுக்குள்ளும் நீர் புகுந்ததாலும் மக்கள் சிரமத்திற்குள்ளாயினர் இந்நிலையில், இன்று (டிசம்பர் 5) சென்னையில் மழை நின்றிருக்கிறது. ஆனாலும் நகரின் பல இடங்களிலும் நீர் தேங்கி…
-
- 26 replies
- 2.2k views
- 1 follower
-
-
4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால்.. எந்த பயனும் இல்லை.! இபிஎஸ் கடும் விமர்சனம்.! வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக நிலைகொண்டுள்ள காரணத்தால் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பலவேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிருப்தியை எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித…
-
- 0 replies
- 339 views
-