தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10291 topics in this forum
-
டில்லியில் இன்று நசீமை சந்திக்கிறார் பன்னீர்: பொது செயலர் விவகாரத்தில் இறுதி விசாரணை ஆர்.கே.நகர் தொகுதியில், நாளை மனு தாக்கல் துவங்க உள்ளதால், அ.தி.மு.க., பொதுச் செயல ராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்பதை, விரைவாக அறிவிக்கும்படி, தலைமை தேர்தல் கமிஷனரை நேரில் சந்தித்து வலியுறுத்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், இன்று டில்லி செல்கிறார். அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, தேர்தல் நடத்தி, கட்சி உறுப்பினர்களால், பொது செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், சசிகலா அவ்வாறு தேர்வு செய்யப்படவில்லை. ஐந்து ஆண்டுகள்மேலும், பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுபவர், கட்சியில் ஐந்து ஆண்டுகள் உறுப…
-
- 0 replies
- 262 views
-
-
கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு கோப்புப் படம் சென்னை: “எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் (பாஜக) முயல்கிறார்கள்” என்று கீழடி விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், ஏஎம்எஸ் (AMS) அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவை என்கிறார்கள் அவர்கள். இதற்கு நேர்மாறாக, மதிப்புமிக்க வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் கற்பனையான சர…
-
- 2 replies
- 262 views
- 1 follower
-
-
UGC டிஎஸ்பி சங்கர் கணேஷ் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 10 செப்டெம்பர் 2025, 13:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்வதற்கு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, செவ்வாய்க்கிழமைன்று (செப்டெம்பர் 9) சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மாவட்ட நீதிபதிக்கும் காவலர் ஒருவருக்கும் இடையேயான தனிப்பட்ட தகராறு காரணமாக, டி.எஸ்.பியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். என்ன பிரச்னை? காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவ…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,மாஞ்சோலை செல்வகுமார் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 23 ஜூலை 2023, 15:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் பசுமையான அழகுக்கு பின்னால் இருக்கும் சோகக்கதைகள் குறித்து பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. மேலை நாடுகளில் சுரங்கப்பாதை தொழிலாளர்கள் எந்த அளவு அடக்குமுறைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்களோ அதை விட அதிக சுரண்டல்களையும் கொடுமைகளையும் அனுபவித்தவர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். 1941 முதல் 1965 வரை வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் தலைமை மருத்துவராகப் பணிபுரிந்…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 1 05 Oct, 2025 | 11:32 AM இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது. குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (03) இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழகம் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும் அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. இது தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம்…
-
- 1 reply
- 261 views
- 1 follower
-
-
தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு! 28 Oct 2025, 8:18 PM தவெக பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பனையூரில் நாளை (அக்டோபர் 28) நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதமாக முற்றிலும் முடங்கின. இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகளும் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி குழம்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரம் வரவழைத்து சந்தித்த தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு, அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் வாக்…
-
- 0 replies
- 261 views
-
-
‘ஹாங்காங்கில் ஆவின்’ - கடல் கடந்து செல்லும் தமிழக பால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். இந்து தமிழ்: 'ஹாங்காங்கில் ஆவின்' படத்தின் காப்புரிமைAFP ஹாங்காங்கில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார் என்கிறது இந்து த…
-
- 0 replies
- 261 views
-
-
முதலமைச்சர் பற்றி தவறாக பேசிய தி.மு.க.வுக்கு கண்டனம் தெரிவித்தார் ராமதாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயாரை இழிவுப்படுத்தும் விதமாக தி.மு.க.துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியமைக்கு பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். ராமதாஸினால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தேர்தல் பிரசாரங்களின்போது ஒவ்வொரு கட்சியும் தங்களினால் மேற்கொள்ளப்பட அபிவிருத்தி செயற்பாடுகள், பொதுநல சேவைகள், கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளில் காணப்படுகின்ற குறைப்பாடுகள் குறித்து மக்கள் தெரியப்படுத்துவது நாகரீகமான விடயமாகும். ஆனால் அதனை விடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயாரை இழிவுப்படுத்த…
-
- 0 replies
- 261 views
-
-
ஜெயலலிதாவின் அமெரிக்கா சிகிச்சையை தடுத்தவர் விஜயபாஸ்கர்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு சென்னை: ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின்போது, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது, மேல்சிகிச்சைக்காக அ…
-
- 0 replies
- 261 views
-
-
போராட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை உலகத்திற்கு நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் – அய்ய நாதன் 28 Views முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் அய்ய நாதன் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் கேள்வி – போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவு கூரப்படும் இனப் படுகொலை நாளில் தமிழ் மக்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்? பதில் – அங்கே ஈழத்திலே 2009ஆம் ஆண்டு, மே மாதம் 18ஆம் திகதியுடன் முடிவுற்ற, திட்டமிட்ட இன அழித்தல் போரில் மிகப் பெரிய அளவிற்கு, கணக்கில் சொல்லப் போனால், ஒன்றே முக்கால் இலட்சம் மக்களை ஒர…
-
- 0 replies
- 261 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், செரிலன் மோலன் பதவி, பிபிசி நியூஸ், மும்பை 3 மணி நேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் விரைவில் தனது பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக, அதன் முன்னெடுப்புகளை நன்கறிந்த ஆதாரங்கள் வாயிலாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலேயே பிக்ஸல் ஸ்மார்ட்போன் உற்பத்தியை தொடங்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அத்துடன், தானே சொந்தமாக ட்ரோன்களை தயாரிக்கும் ஆலையை தமிழ்நாட்டில் நிறுவ கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவுக்கும், மேற்குலகிற்கும் இட…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
ஸ்ரீநகரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல்- மு.க.ஸ்டாலின் கண்டனம் Posted on December 14, 2021 by தென்னவள் 13 0 ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகர் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் போலீஸ் முகாம் அருகே நேற்று மாலை போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 2 ஆயுதம் ஏந்திய போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கவலைக்கிடமாக இருந்த வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. …
-
- 0 replies
- 260 views
-
-
‘இரட்டை இலைக்கு உரிமை கோரினாரா பன்னீர்செல்வம்?!’ - ஆணைய விவாதத்தில் என்ன நடந்தது? ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட 127 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 'தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கப்பட்ட கவலையில் இருந்து நிர்வாகிகள் முழுமையாக மீளவில்லை. தொப்பி சின்னத்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா?' என்ற கவலையும் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. கோடை வெயிலின் வெப்பத்தையும் தாண்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனன், இரட்டை மின் கம்பம் சின்னத்தை தேர்வு செய்திருக்கிறார். எ…
-
- 0 replies
- 260 views
-
-
பேனா நினைவுச்சின்னம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் christopherAug 01, 2023 12:31PM கலைஞர் பேனா நினைவுச் சின்னம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 1) உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து அண்மையில் பெற்றது. இந்த நிலையில், கலைஞர் பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, சென்னை தங்கம், நாகர்கோவில் ஆகியோரின் பொதுநல மனுக்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையீட்டு மனு ஆகியவை உச்சநீதிமன்றத…
-
- 0 replies
- 260 views
-
-
பெங்களூருவில் நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் கணவனை துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்ட மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹம்சா என்ற பெண் தனது கணவர் சாய்ராமுடன் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது திடீரென்று ஹம்சா தனது கணவர் சாய்ராமை காரின் உள்ளே இருந்த போது, தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். உயிர் தப்பி, காரின் கதவைத் திறந்து வெளியே குதித்த சாய்ராம், அவ்வழியே சென்ற பேருந்தில் தாவிக்குதித்து ஏறினார். இருப்பினும் காரை எடுத்துக் கொண்டு விடாமல் கணவரை துரத்தி, துரத்தி துப்பாக்கியால் சுட முயற்சித்தார். இதையடுத்து, பேருந்தை நிறுத்திய பயணிகள், அப்பெண்ணிடம் இருந்து கணவரைக் காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனு…
-
- 0 replies
- 260 views
-
-
எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் தகவல்கள் உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம். நெல்லையில் பட்டியல் பிரிவை சேர்ந்த மாணவர் மீது ஆதிக்க சாதியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. மாணவரின் தற்போதைய நிலை என்ன? இச்சம்பவம் குறித்து காவல்துறை கூறுவது என்ன? திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது மேலப்பாட்டம் கிராமம். இந்த கிராமத்தில் பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மேலப்பாட்டம் கிராமத்திற்கு அருகில் திருமலைக்கொழுந்து…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
அலங்காநல்லூர் வாடி வாசல் தயார்.. அடுத்த வாரம் ஜல்லிக்கட்டு.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்!அடுத்த வாரம் நடக்க இருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. சென்ற வருடம் ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகமே மெரினாவில் திரண்டது. மக்களின் அந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உலகமே திரும்பி பார்த்தது.இந்த நிலையில் நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது. எனவே இந்தமுறை பொங்கலுக்கு தமிழகம் முழுக்க பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. அதேபோல் வரலாற்று சிறப்புமிக்க மிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் இந்த முறை வழக்கம் போல நடக்க உள்ளது. இதற்கான ஏற்…
-
- 0 replies
- 260 views
-
-
தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் ‘பினாமி’ சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. எதிர்க்கட்சியினருக்கு எதிராக வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஏவி, பழிவாங்கல் நடவடிக்கையில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபட்டுவருகிறது என்ற குற்றச்சாட்டு அதிகரித்துவருகிறது. பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துவரும் தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களுக்கு எதிராகவும் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனைகளை நடத்திவருகின்றன. ஜெகத்ரட்சகன் …
-
- 0 replies
- 260 views
-
-
பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு,திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கட்டாயம் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 ஏப்ரல் 2025, 03:17 GMT இன்றைய (08/04/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஏப்ரல் 8ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக வலைத்தளங்களில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விம…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
முக்கிய நிர்வாகிகளின் மாறுபட்ட கருத்துகளால் அதிமுக அணிகள் இணைப்பில் தொடர்ந்து இழுபறி நீடிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம். அதிமுகவின் இரு அணி நிர்வாகிகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கட்சி, சின்னத்தை மீட்ப தற்காக அதிமுகவின் இரு அணி களையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இரு அணியி லும் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதே நேரத்தில், ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்காவிட்டால் இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை கிடையாது’ என ஓ.ப…
-
- 0 replies
- 260 views
-
-
Published By: Digital Desk 1 24 Nov, 2025 | 02:25 PM இந்தியா, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (24) இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற தனியார் பஸ் ஒன்றும், தென்காசியிலிருந்து கோவில்பட்டிக்குச் சென்ற மற்றொரு பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு பஸ்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த 28 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட…
-
-
- 2 replies
- 260 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, சென்னை அருகே ரயில்கள் மோதியதில் பெட்டிகள் கவிழ்ந்து கிடக்கும் காட்சி 11 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் சுமார் 13 பெட்டிகள் தடம்புரண்டன. ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து காரணமாக அவ்வழியே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து நேரிட்டது எப்படி? பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள் உரிய இடத்திற்குச் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து க…
-
- 2 replies
- 260 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிட உயர் நீதிமன்ற தடை விதித்துள்ளது. கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிடுவது, சமைப்பது, அசைவ உணவை எடுத்துச் செல்வது ஆகியவற்றுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அக்டோபர் 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இவ்வாறு பலியிடுவது என்பது இந்திய அரசின் பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தலங்களின் விதிகளை மீறுவதாக, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை, 'சிக்கந்தர் மலை' என அழைப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக, சிக்கந்தர் தர்கா நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெர…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிப்பதால் தற்கொலைகள் தடுக்கப்படுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளதால், கடைகளில் எளிதில் கிடைக்கும் ஆறு வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை மாநில அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளது. அந்த ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சாணி பவுடரை தடை செய்வதற்கான முயற்சியிலும் தமிழக அரசு தீர்க்கமாக இருப…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PA RANJITH/FACEBOOK படக்குறிப்பு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 22 ஜூலை 2024, 02:59 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு வீரவணக்கம் செலுத்துவது, அந்த படுகொலையை கண்டிப்பது போன்றவை விடுதலைச் சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். யாரோடும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியவர்,…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-