தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
தனி ஈழம் கோரிக்கையை முன் வைத்து வரும் மே மாதம் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள். அவர்கள் கூறுகையில், ‘‘1967ல் தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு எதிர்த்தது. அதுபோல இலங்கைக்கு எதிராக இருந்து தனித் தமிழ் ஈழம்…
-
- 0 replies
- 1k views
-
-
2ஜி ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே முடிவுகள் எடுக்கப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும், 2ஜி ஒதுக்கீட்டில் பிரதமரை அப்போதைய தொலை தொடர்புதுறை அமைச்சராக இருந்த ஆ. ராசா தவறாக வழிநடத்தினார் என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழிநடத்த …
-
- 1 reply
- 410 views
-
-
புதிய நாடாளுமன்றத்துக்கான எலெக்ஷன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராகிவருகிறது. காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இது வாழ்க்கைப் பிரச்னை. மற்ற கட்சிகளுக்கும் இது வாழ்நாள் பிரச்னை. எனவே, தங்களுடைய ரகசிய பேரங்களை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. டெல்லி முதல் சென்னை வரை நடக்க ஆரம்பித்திருக்கும் இந்தத் திரைமறைவு பேரங்களை யாரும் வெளிப்படையாக அவிழ்க்கத் தயாராக இல்லை. அந்தக் காட்சிகளின் முன்னோட்ட நிலவரம் இது... முடிவுக்கு வந்த அ.தி.மு.க.! 'நாளை நமதே... நாற்பதும் நமதே!’ என்ற குருட்டு தைரியத்தில், அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று முடிவு எடுத்து வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கடந்த டிசம்பர் கடைசி நாளில் அறிவித்தார் ஜெயலலிதா. என்ன சூழ்நிலையில், யார் கொடுத்த தைரியத்த…
-
- 0 replies
- 576 views
-
-
தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்தவர் சைலேந்தர். இவரும் இவருடைய தம்பி சிவக்குமாரும் கொண்டேன் அள்ளி கிராமத்தில் 3 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை கடந்த 2006-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சிவஞானம் என்பவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கினார்கள். அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் பக்கத்து நிலத்துக்காரர்களான ஆனந்தன், அவருடைய சகோதரர் பெருமாள் ஆகியோர் அந்த நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டு அடிக்கடி மிரட்டி வந்தனர். கடந்த 14.8.2011 அன்று சைலேந்தர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது ஆனந்த், பெருமாள் ஆகியோர் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டில் விடுத்தனர். இதுதொடர்பாக சைலேந்தர் தர்மபுரி நில ஆக்கிரமிப்பு …
-
- 0 replies
- 507 views
-
-
2ஜிஅலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் தொடர்பில்லை என்றும் இந்த முறைகேட்டிற்கான முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவையே சாரும் என்றும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் சி.பி.ஐ. தனி நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவும் தனியாக விசாரணை நடத்தியது. இந்த குழு, 2ஜி…
-
- 0 replies
- 422 views
-
-
ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் என வடக்கிலும்... கருணாநிதி, ஜெயலலிதா, அழகிரி எனத் தெற்கிலும் 'விக்கிலீக்ஸ்’ ஆவணங்கள் ஒவ்வொன்றும் கடந்த காலத்தைப் பெயர்த்தெடுத்துக் கிடுகிடுக்கவைக்கிறது. இந்திய ராணுவத்துக்கான போர் விமானங்கள் வாங்குவதில் ஸ்வீடன் நிறுவனம் ஒன்றுக்கு ராஜீவ் காந்தி இடைத்தரகராகச் செயல்பட்டார் என்பதில் தொடங்கி, இலங்கைக்கு அமைதிப் படை சென்ற சமயத்தில் இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது என்பது வரையிலும் விக்கி கசிவுகள் வரலாற்றின் இன்னொரு முகத்தை நமக்குத் திறந்து காட்டுகின்றன. நமது அரசியல் தலைவர்களின் இரட்டை வேடத்தைத் துல்லியமாக அம்பலப்படுத்துகின்றன. ஈழத் தமிழர்கள் விஷயத்தில் கருணாநிதியின் பலவீனமான நாடகம், ஜெயலலித…
-
- 0 replies
- 927 views
-
-
நெல்முடிகரை கிராம மக்கள் வைகை ஆற்றை காணவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நெல்முடிகரை கிராம மக்கள், தங்களது கிராமத்திலுள்ள வைகை ஆற்றைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் வைகை ஆறு, மதுரை, சிவகங்கை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்கிறது. மதுரையைக் கடந்து சிவகங்கை மாவட்டத்திற்குள் நுழைகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாடிய அவர்கள், வைகை ஆற்றின் சுமார் 7 ஏக்கர் பகுதியை தனியார் ஒருவருக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்திருப்பதை கண்டறிந்தனர். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால் வைகை ஆ…
-
- 2 replies
- 703 views
-
-
2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மே மாதம் 6ஆம் தேதி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளிக்க உள்ளார். 2ஜி ஊழல் வழக்கி கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் உள்ளிட்டவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, சில வாரங்களாக அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம், சி.பி.ஐ தரப்பு சாட்சியாக அட்டர்னி ஜெனரல் கூலம் இ.வாகனவதி உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். மேலும் விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ தரப்பு சாட்சிகளின் பட்டியலை நீதிபதி ஓ.பி. சைனியிடம் சி.பி.ஐ கடந்த 16ஆம் தேதி அளித்தது. அதில், தயாளுவின் பெயர் இடம்ப…
-
- 2 replies
- 443 views
-
-
அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் எதிரொலியாக நெல்லை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் ஆஜரானார். இதையடுத்து பிடிவாரண்டை ரத்து செய்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. நெல்லையில் கடந்த 6.8.2012 அன்று நடந்த தே.மு.தி.க. பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக கடந்த 6.8.2012 அன்று நெல்லை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் முத்துகருப்பன் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 10, பிப்ரவரி 28, ஏப்ரல் 4 ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோதும்…
-
- 0 replies
- 386 views
-
-
பிரிவு: அரசியல் கோவையில் திரும்புகிறது 1998’. கடந்த வாரத்தில் உளவுத் துறை அளித்த ஒற்றை வரி அலெர்ட் இது. கோவை மாநகரில் 1998-ல் நிகழ்ந்த மதக்கலவரத்தையும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையும் அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. அந்த வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், உளவுத் துறையின் இந்த எச்சரிக்கை மக்களை அதிரவைத்துள்ளது. எச்சரிக்கை செய்யும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்தது? கோவை போத்தனூரில் ஒரு திருமண நிகழ்ச்சி. அதற்கு முந்தைய நாள் இரவு மண்டபத்தில் சிலர் சீட்டு விளையாடியபோது பிரச்னை வெடித்தது. முஸ்லிம்கள் சிலரும் அதில் இருந்ததுதான் விவகாரமானது. மறுநாள் 7-ம் தேதி காலை திருமண மண்டபத்துக்குள் நுழைந்த சிலர், அங்கு இருந்தவர்களை சரமாரியாகத் தாக்கி, மண்டபத்தில் இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கர்நாடக சட்டப்பேரைவத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதுகுறித்து பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாஜக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. கோலார் தங்கவயலில் பாஜக எம்.எல்.ஏ ஒய்.சம்பங்கியின் தாயார் ஒய்.ராமக்காவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதோல் தொகுதில் கன்னட மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கோவிந்தகார்ஜோள் போட்டியிடுகிறார். மளவள்ளி தொகுதியில் குமாரசாமி, கிருஷ்ணராஜ்பேட்டையில் வரதராஜே கெüடா, ஹங்கலில் பசவராஜ் வீரப்பஹிரேமணி, கல்கட்கியில் வீரேஷ், யம்கன்மார்டியில் மாருதி மல்லப்பாஅஷ்டகி, நாக்தானில் நாகேந்திரமாயாவம்ஷி, கம்பளியில் சிவக்குமார், தேவனஹள்ளியில் சந்திரம்மா, மாலூரில் வெங்கடேஷ் கெüடா, ஹெப்ப…
-
- 0 replies
- 316 views
-
-
சென்னையில் நடக்கும் ஐபிஎல் தொடரில் இலங்கையை சேர்ந்த வீரர்கள் விளையாட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து வழக்கறிஞர் புகழ்ழேந்தி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட எதிர்ப்பு தெரிவித்தவர்களின், தொலைபேசிகளை தனியார் துப்பரியும் நிறுவனம் ஒன்று நவீன உபகரணங்களை கொண்டு ஒட்டு கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மட்டுமின்றி, வழக்கறிஞர்கள் சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறையினரின் தொலைபேசிகளும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாக புகழேந்தி மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடையாள…
-
- 1 reply
- 902 views
-
-
தர்மபுரி வன்முறை: மாறும் அரசியல் முகங்கள் ஸ்டாலின் ராஜாங்கம் நவம்பர் 7ஆம் தேதி தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள்மீது வன்னியர்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் சாதி முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும் குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசை வலியுறுத்துவதைவிட நடைபெற்ற வன்முறையை முன்வைத்து சமூக அரங்கில் உருவாகிவரும் புதிய அணிசேர்க்கைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கின்றன. தர்மபுரி வன்முறைக்குப் பாமகவின் சாதி அரசியலும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் கலப்புமணத்திற்கு எதிரான கருத்துகளும்தாம் காரணம் என்பதை முதன்…
-
- 0 replies
- 779 views
-
-
ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் பாஸ்டனில் நடத்தியதுபோல் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. புனே, டெல்லி, ஐதராபாத், பெங்களூர், மும்மை நகரில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14069:ipl-match&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 479 views
-
-
பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தாசில்தார் மீது அவரது மருமகள் மதுரை கலெக்டரிடம் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் முத்திரைத்தாள் தாசில்தாராக இருப்பவர் ஞானகுணாளன். இவரது மகனுக்கும், போடியைச் சேர்ந்த குருசாமி மகள் லட்சுமிபிரியாவுக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக லட்சுமிபிரியா போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தாசில்தார் ஞானகுணாளன், அவரது மகன் ராம் ஜவகர் உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், லட்சுமிபிரியா இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகார் மனுவில் "எனக்கும், ராம் ஜவகருக்கும் கடந…
-
- 0 replies
- 684 views
-
-
சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,"பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் தற்போது நிறுவப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அருகில் காலியாக உள்ள 10.50 ஏக்கர் நிலத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் …
-
- 0 replies
- 440 views
-
-
நாம் விரும்பாவிட்டாலும் தனிமனித வாழ்க்கையில் சில விசயங்கள் எப்படியோ நடந்துவிடுகின்றன. அரசியல், பொது விவகாரங்களிலும்கூட பல நேரங்களில் இது போல நேர்வது உண்டு. இந்திய தமிழ் மீனவர்களை கடல்நடுவில் வைத்து தாக்குவது, சுட்டுக்கொல்வது என இலங்கை அரச கடற்படையினர் நடத்தும் வன்செயல்கள் அண்மைக்காலமாக மீண்டும் அளவுகடந்து வருகிறது. குறிப்பாக, ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, தமிழகத்தில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு, ஒன்றன்பின் ஒன்றாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும் கைதுகளும் அரங்கேறிவருகின்றன. கடந்த மார்ச் 3ம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 16 பேர் கைதுசெய்யப்பட்டனர்.…
-
- 0 replies
- 396 views
-
-
டில்லி, நிஜாமுதீன் பகுதியில், பழமையான நினைவு சின்னங்கள் அதிகம் உள்ளதால், இப்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உயரமான கட்டடங்கள் கட்டவோ, ஏற்கனவே உள்ள வீடுகளில், மாடிகளை எழுப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில்தான், ஜனதா கட்சித் தலைவர், சுப்ரமணிய சாமி, அவரது மனைவி ரெக்சேனாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இருந்து, 28 மீட்டர் தொலைவில், ஒரு வரலாற்று நினைவு சின்னம் உள்ளது. தொல்லியில் துறையின் தடையை மீறி, சாமியும் அவரது மனைவியும், தங்கள் வீட்டில் இரண்டாவது மாடியை எழுப்பவதற்கான பணிகளை துவக்கினர்.சட்ட விரோதமாக கட்டப்படும், இரண்டாவது மாடியை இடிக்கும்படி, தொல்லியல் துறை, கடந்த, 2ம் தேதி, சாமிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து, சுப்ரமணிய…
-
- 0 replies
- 579 views
-
-
மைனர் பெண்ணை, "லாக்-அப்'பில் அடைக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கருத்துத் தெரிவித்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் பகுதியைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, கடந்த, 7ம் தேதி, தன் வீட்டிற்கு அருகேயுள்ள கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது, ஒரு நபர் அந்தச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். பாதிக்கப்பட்ட சிறுமியும், அவளின் பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க முற்பட்டபோது, சிறுமி பல மணி நேரம், போலீசாரால், "லாக்-அப்'பில் அடைத்து வைக்கப்பட்டாள்.இதுபற்றிய விபரம், மீடியாக்களில் வெளியானதும், அந்த நேரத்தில், பணியில் இருந்த, பெண் போலீசார் இருவர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அத்துடன், போலீஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர…
-
- 0 replies
- 356 views
-
-
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், நடத்தியவர்கள் கையை உடைத்து விடுவோம் என்று கூறியுள்ளார். புதுடெல்லியில் மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் அம்மாநில நிதி மந்திரி அமித் மித்ரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14035:mamtha-banarsi&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 481 views
-
-
தி.மு.க. தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியின் மருமகள் குரலில் பேசி கார் மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை மாநகர், மாவட்ட தி.மு.க. பொருளாளர் மிசா.பாண்டியன் கமிஷனரிடம் புகார் செய்திருக்கிறார். மு.க.அழகிரிக்கு இருக்கிற பிரச்னைகள் போதாது என்று, துரை தயாநிதியின் மனைவி அனுஷா பெயரைச் சொல்லி இன்னொரு பிரச்னை வந்துள்ளது. அழகிரியின் மருமகள் அனுஷா போல குரல் மாற்றிப் பேசி, தி.மு.க. முக்கியப்புள்ளிகள், தொழில் அதிபர்கள் சிலரிடம் அவசர உதவி என்ற பெயரில் பெரியளவில் மோசடி செய்ய முயன்றுள்ளது ஒரு கும்பல். இந்த விவகாரம் அங்கே சுற்றி இங்கே சுற்றி அனுஷாவின் காதுகளை எட்ட, அவர் பதறிப்போனார். அழகிரியின் ஆலோசனையின் பேரில், இதுதொடர்பாக அவசர அறிக்கை ஒன்று வெளியிட்ட அன…
-
- 0 replies
- 642 views
-
-
சென்னை: நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரை சூட்டுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் இன்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது: தமிழகத்தின் முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்து, முதலமைச்சராகவே மறைந்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு வைக்க வேண்டும் என்றும், இது குறித்த அறிவிப்பினை விமான நிலைய துவக்க விழாவிற்கு முன்பே வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி; மாண்புமிகு மத்திய விமானப் போக்க…
-
- 0 replies
- 545 views
-
-
ராமேஸ்வரம்: மீன் இனப்பெருக்கத்திற்காக 45 நாள் மீன்பிடிப்பதற்கான தடைகாலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் கடல்பகுதி வங்காள விரிகுடாவின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை பகுதிகளாகும். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின், நீரோடி கிராமம் வரை உள்ள இந்த கடல்பகுதியில் ஆண்டுதோறும் இடைவிடாது மீன்பிடி தொழில் நடக்கும். இதனால் கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் உள்ள கடல்வளம் குறைய தொடங்கியது. இதன் விளைவாக கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் குறைந்து போனது. ‘இதேநிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் மன்னார் வளைகுடா…
-
- 0 replies
- 517 views
-
-
மனிதம் காக்கச் சீறி எழுந்த மாணவர்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஈழத்தில் வதைபடும் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை மாணவர்கள் கையிலெடுத்துள்ளனர். இதுவரை தனித் தமிழீழ ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் கோரிக்கைகளாக உருப்பெற்றுள்ளன. இதன் தாக்கத்தையும் வீரியத்தையும் அலசும் முன் போராட்டத்தின் பின்னணியைப் பார்த்துவிடுவோம். இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முகாந்திரத்தில் தமிழர்களைக் கொன்று எஞ்சியவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிய ராஜபட்சே அரசு, 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்தது. அதன் பிறகு போர் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போன்ற மா…
-
- 2 replies
- 864 views
-
-
நெல்லை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இருதரப்பு மாணவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் கல்லூரியில் உள்ள லேப், கம்ப்யூட்டர் அறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ரூ. 30 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.நெல்லை மாவட்டம் பிரான்சேரி அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மாணவி ஒருவரிடம் பேசியது தொடர்பாக இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு விடுதியில் தங்கியுள்ள கேரள மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் உ…
-
- 5 replies
- 989 views
-