Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரும் வழக்கு; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்- தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையையும் அதனால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து அப்பகுதியை ஆய்வு செய்யவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்ப…

  2. பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு - இன்று விசாரணை. டெல்லி: ராஜீவ்காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப் பட்டது. பின்னர், அவர்களின் கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில்கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால், இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ராஜீவ் க…

  3. தமிழை வளர்க்கிறோம், வாழ வைக்கிறோம் என்று ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழைக் கட்டாயமாக்க இயலவில்லை: அன்புமணி editorenglishFebruary 27, 2025 தமிழைக் கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தெலுங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும் இன்று வரை அந்தச் சட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காத…

  4. புரட்சியின் வித்து தனிச்சிந்தனையே:டுவீட்டரில் நடிகர் கமல் கருத்துப்பதிவு சென்னை:விம்மாமல், பம்மாமல் ஆவன செய், புரட்சியின் வித்து தனிச்சிந்தனையே என டுவீட்டரில் கருத்துப்பதிவு வெளியிட்டுள்ளார் நடிகர் கமல். டுவீட்டரில் வெளியிட்டுள்ள கருத்துப்பதிவு விம்மாமல் பம்மாமல், ஆவன செய்.... புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே.... ஓடி எனைப்பின் தள்ளாதே களைத்தெனைத் தாமதிக்காதே. .. கூடி நட, வெல்வது நானில்லை நாம்...... பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே... மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு . தேசியமும் தான். இவ்வாறு அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் நடிகர் கமல் http://www.dinamalar.com/news_detail.asp?id=1831…

  5. தமிழகத்தில் புதிதாக 2.86 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்: வாக்காளர் எண்ணிக்கை 5.82 கோடியை தாண்டியது - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 620 பேர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 138 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலி…

  6. தமிழகத்தில்... 800க்கும் மேற்பட்டவர்களுக்கு, கறுப்பு பூஞ்சை தொற்று! இந்தியாவில் கறுப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் 847 பேர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள ஆம்போடெரிசின் – பி என்ற மருந்து தற்போதுவரை 2 ஆயிரத்துத்து 470 குப்பிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் கூடுதலாக 30 ஆயிரம் மருந்து குப்பிகளை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்கள் கறுப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு அச்சத்தை ஏற்…

  7. இலங்கை காவலில் உள்ள 128 இயந்திர மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சமும், நாட்டுப்படகுகளின் உரிமையாளர்கள் 17 பேருக்கு தலா 1.5 இலட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களால் ஏற்பட்ட சேதத்திற்கு ரூபாய் 5.66 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்வேறு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலினை சந்தித்து, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 20 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மீன்பிடி மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ண…

  8. தமிழ் நிலத்தின் தொன்மையும், ஸ்டாலினின் அரசியல் அறைகூவலும்! Jan 29, 2025 பாலசுப்ரமணியம் முத்துசாமி அண்மையில் தமிழ்நாடு தொல்லியல் துறை, தமிழ்நாட்டில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இரும்பு கால நாகரீகம் என்பது 5000 ஆண்டுகளுக்கு முந்தய ஒன்று என்னும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. சிவகளை, மயிலாடும்பாறை, ஆதிச்ச நல்லூர் முதலிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளின் வழியே கிடைத்த பொருட்கள், மூன்று முக்கியமான ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் காலம் அறிவியற்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Antiquity of the Tamil Land திலீப் குமார் சக்ரவர்த்தி இந்த ஆய்வு முடிவுகள் ஒரு புத்தகமாக அண்மையில் தமிழ்நாடு முதல்வர் ஸ…

  9. ஜெயகுமார் மீது... மேலும் ஒரு வழக்கினை, பதிவு செய்ய நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது மேலும் ஒரு வழக்கினை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவர் மீது மற்றுமோர் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் அமைச்சராக இருந்தபோது, திருவொற்றியூர் தண்ணீர் ஓடை குப்பம் பகுதியை சேர்ந்த 83 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது. இது குறித்து சட்ட வல்லுனர்கள், பொலிஸார் ஆலோசித்து வருவதாகவ…

  10. படக்குறிப்பு, சென்னை அருகே ரயில்கள் மோதியதில் பெட்டிகள் கவிழ்ந்து கிடக்கும் காட்சி 11 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் சுமார் 13 பெட்டிகள் தடம்புரண்டன. ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து காரணமாக அவ்வழியே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து நேரிட்டது எப்படி? பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள் உரிய இடத்திற்குச் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து க…

  11. சென்னை: மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் மேற்கொள்ள உள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (24.09.2013)சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாட்டு அரசியலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கனவுகளை நனவாக்கும் இயக்கமாக, திராவிட இயக்கத்தின் காலத் தேவைக்கான புதிய பரிமாணமாக வார்ப்பிக்கப்பட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. தனது இருபது ஆண்டு கால அரசியல் பயணத்தில், இடைவிடாத போராட்டங்களால், மகத்தான தியாகத்தால், தன்னலமற்ற நேர்மை நெறியால், கணக்கற்ற அல்லல்களையும் இன்னல்களையும…

  12. தமிழ்நாடு: ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறா? - அரசின் ஆய்வு எழுப்பும் சந்தேகங்கள் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதாக அதிர்ச்சியூட்டக் கூடிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. 'அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் சில சந்தேகங்கள் இருந்தாலும் சிறுநீரக நோய்கள் அதிகமாவதற்கு நவீன உணவு முறைகளும் வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன' என்கின்றனர் மருத்துவர்கள். ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன? தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு ஒ…

  13. வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு : வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு! தேனி மாவட்டம் வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதை அடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வைகை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அணைக்கு வரும் உபரிநீரான ஆயிரம் கன அடி நீர் வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணையில் உள்ள 7 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் ஆறு வழியாக செல்வதால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். https://athavannews.com/2021/1249037

  14. பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு: 'போராட்டத்தைக் கைவிடவில்லை; பேரணி மட்டுமே தற்காலிக வாபஸ்' 6 மணி நேரங்களுக்கு முன்னர் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் இன்று (அக்டோபர் 15) அமைச்சர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, சென்னையில் அக்டோபர் 17ம் ஒருங்கிணைத்திருந்த விமான நிலைய எதிர்ப்பு நடை பயணம் மற்றும் பேரணியை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ஏகனாபுரம் கிராமத்தில் 80 நாட்களை கடந்து நடைபெற்றுவரும் மாலை நேரப் போராட்டம் தொடர்வதாகவும், அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்துதான் அந்த போராட்டம் பற்றி கிர…

  15. உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது. தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது. இதில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த காளைகளை பிடிக்க 900 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பித்த 1,100 காளைகள் உரிமையாளர்களால் இன்று 5 மணி முதல் அவனியாபுரத்திற்கு அழைத்து வரப்பட்டன. காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்பின் அவிழ்த்து விடப்பட்டது. அதேபோல் காளைகள் பி…

  16. பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 38 ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க! வைகோ கோரிக்கை By RAJEEBAN 23 SEP, 2022 | 03:06 PM பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சிங்கள அரச பயங்கரவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆட்பட்டு வருகின்றார்கள். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கப்பல் மூலமாக கனடாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சிங்கள இந்திய ஏஜென்ட்கள் பல லட்சக்கணக்கான ரூபாயைப் பெற்றுக் கொண்டு, 38 ஈழத் தமிழர்களை இலங்கையில் இருந்து படகில் ஏற்றி வந்…

  17. வேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு வேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கடை உரிமையாளர் மற்றும் அவரது பேரன்கள் இருவருமே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். காட்பாடியை அடுத்த லத்தேரியில் பேருந்து நிலையம் அருகே மோகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு விற்பனை மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின்போது மோகனின் பேரன்கள் தனுஷ், தேஜஸ் ஆகியோர் உள்ளே இருந்ததால் அவர்களை வெளியே அழைத்து வர மோகன் உள்ளே சென்றுள்ளார். இதன்போது பட்டாசு அனைத்தும் வெடித்துச் சிதறியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்துக் குறித்து …

  18. சட்டமன்றத்தில் இருந்து ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள் தி.மு.க உறுப்பினர்கள் . ' அ.தி.மு.க உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் சபையை நடத்திக் கொள்ளட்டும்' எனக் கொந்தளிக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி. சட்டசபை தேர்தலுக்கு முன்னர், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட 'நமக்கு நாமே' பயணம் குறித்து, அ.தி.மு.க உறுப்பினர் குணசேகரன் விமர்சித்ததால் சட்டப்பேரவையில் கொதித்தனர் தி.மு.க உறுப்பினர்கள். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியே கொண்டு வந்தனர் அவைக் காவலர்கள். 'ஒருவாரம் தி.மு.க உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக' அறிவித்தார் சபாநாயகர் தனபால். அதேநேரத்தில், சபையில் இருந்து காங்கிரஸ் …

  19. படக்குறிப்பு, ஒவ்வொரு சிறப்பு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமாக சொல்லிக் கொடுக்கிறார் ஆசிரியர் பாக்கியலட்சுமி. கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆசிரியர் என்றதும் உங்கள் மனதில் ஏற்படும் பிம்பங்கள் எதிலும் பொருந்தாத, சவால்கள் நிறைந்த நிஜவாழ்க்கையை வாழ்பவர் சென்னையை சேர்ந்த பாக்கியலட்சுமி(56). மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்து, அவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைக்கும் ஆசிரியர்களை அதிகமாக கொண்டாடும் சமூகத்தில், இவரின் சாதனை வித்தியாசமானது. சென்னையில், பல மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், மற்றவரின் துணை இன்றி, உடை உடுத்தவும், உணவை தாங்களாகவே உண்ணவும், சிறுநீர் கழ…

  20. பட மூலாதாரம்,X கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 பிப்ரவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் காவல்துறையினர் தேர்வில் இருந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதால், தனது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் தனது அறை எரிக்கப்பட்டதாக தமிழக ஏடிஜிபி ஒருவர் குற்றம்சாட்டிய கடிதம் வெளியாகியிருக்கிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை காவல் துறை மறுத்திருக்கிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஏடிஜிபி மற்றும் உறுப்பினராக இருந்தவர் கல்பனா நாயக். சென்னை எழும்பூரில் உள்ள அவரது அலுவலக அறை, கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில்…

  21. ஏழுபேரை விடுவிக்கும் விவகாரம் - மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக இந்திய மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துப் பேசினார். அவர், தமிழக அரசின் கடிதம் குறித்து மத்திய அரசு ஆலோசிக்கும். 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும்’’ என்று தெரிவித்தார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெக்ரிஷிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- ´´ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வி.ஸ்ரீதரன் என்ற முருகன், டி.சுதேந்திரராஜா என்ற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய மூவருக்கும்…

  22. கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் பரவலாக மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாகக் கன்றுகள் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாடுகளுக்கு பெரியம்மை நோய் பரவக் காரணம் என்ன? பெரியம்மை பாதித்த மாடுகளைப் பராமரிப்பது எப்படி? மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மாடுகள் இருக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் மாடுகளின் தோல் முழுவதிலும் கொப்புளம் கொப்புளமாக பெரியம்மை பாதிப்பு (LSD-Lumpy Skin Di…

  23. இலங்கை கடற்படையினர் தாக்குதல்: ராமேசுவரம் மீனவர் மண்டை உடைப்பு காயமடைந்த மீனவர் வர்க்கீஸ் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேசுவரம் மீனவரின் மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இதில் அலெக்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வர்க்கீஸ், மார்டோ, முருகேசன், மாடசாமி ஆகியஆகியோரும் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கப்பலில் ரோந்து வந்…

  24. இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட் சென்னை: 'யு டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில், இசையமைப்பாளர் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில், தன் புகைப் படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'என்னை அடையாளப்படுத்தும் வகையில், என் புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என, எதையும் பயன்படுத்தக் கூடாது. 'சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி புகைப்படத்தை பயன்படுத்தியதன் வாயிலாக கிடைத்த வருமான விபர…

  25. தினகரன் அணியுடன் மோதல் முற்றுகிறது: வாரிசு அரசியலை சசிகலா உருவாக்கியதை ஏற்க மாட்டோம் - முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் திட்டவட்டம் நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை மற்றும் வெற்றிவேல் எம்எல்ஏ ஆகியோரின் செயல்பாடுகளைக் கண்டித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் முதல்வர் கே.பழனிசாமி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் | படம்: ம.பிரபு வாரிசு அரசியலை சசிகலா உருவாக் கியதை நாங்கள் ஏற்கவில்லை. எனவேதான் நாங்கள் புறக்கணிக் கிறோம் என்று அதிமுகவில் முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளதால், முதல்வர் பழனிசாமி - தினகரன் இடையில் மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. முன்னாள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.