தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10264 topics in this forum
-
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 160 தொகுதிகளின் வெற்றி - தோல்விகளுக்கு, சமூக வலைத்தளங்களின் தாக்கம் மிக முக்கியக் காரணமாக இருக்கக் கூடும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 12 நாடாளுமன்றத் தொகுதிகளும் அடங்கும். மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்கு தொடர்பாக, ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிஷியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில், மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 160 தொகுதிகளில் வெற்றி - தோல்விகளை நிர்ணயிக்கும் அளவுக்கு சமூக வலைத்தளங்களின் தாக்கம் இருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளிலும்…
-
- 0 replies
- 551 views
-
-
புதுக்கோட்டை: மனிதன் உயிர் வாழும் வரை 2 வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். அவைகள், உண்பதும், சுவாசிப்பதும்தான். இதில் ஒன்று நின்றாலும் சுடுகாட்டுக்கு போவது நிச்சயம். ஆனால், உயிரோடு இருக்கும்போதே ஒரு கிராமமே சுடுகாட்டுக்கு குடிபெயர்ந்திருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கும் 3 வேலையும் உண்ணுவதற்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டதுதான் நியாயவிலைக் கடைகள். ஆனால், இன்றுவரை அந்த வசதிகள் கிடைக்காமல் அவதிப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு ரகுநாதப்பட்டி கிராமம். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.பாலக்குறிச்சி பஞ்சாயத்தில் இருக்கிறது ரகுநாதப்பட்டி கிராமம். இங்கு சுமார் அறுநூறு பேர் வசித்து வருகிறார்கள். 172 ரேஷன் …
-
- 0 replies
- 331 views
-
-
கடந்த 7 ஆம் தேதி இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் இன்று 5 வது நாளாக தொடருகிறது. கடந்த 7 ஆம் தேதி 500 விசைப்பபகுகளில் மீன் பிடிக்கச் சென்ற ராமேவரம் மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும், சில படகுகளில் இருந்த வலைகளை அறுத்தும், 5 படகுகளையும் அதிலிருந்த 30 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் எல்லை தாண்டி வந்ததாக வழக்குப் பதிவு செய்து மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 18 ஆம் தேதி வர…
-
- 0 replies
- 369 views
-
-
சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.உ.பி.க்கு ஒருமுறை அவர் வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும் அந்த அமெரிக்க கேபிள் தகவல் தெரிவிக்கிறது. 1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதரகம் அனுப்பிய கடிதத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை அடையாளம் தெரியதா நபர் ஒருவர் கொலை செய்வதற்கு மிகவும் சாதுரியமான முறையில் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது. அவசர நிலை காலகட்டத்தில் இந்த முயற்சி நடந்துள்ளது. மேலும் அதில் கூறுகையில், …
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது யாருக்கு நஷ்டமோ தெரியாது. ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பெருத்த நஷ்டம். கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதால், சிதம்பரம் தீராத சோகத்தில் இருக்கிறார்’ - சிவகங்கை காங்கிரஸ் வட்டாரத்தில் இதுதான் ஹாட் டாப்பிக். இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவகங்கை காங்கிரஸ்காரர்கள், ''மத்திய அரசில் முக்கிய இடத்தில் இருந்தும் ஈழப் பிரச்னையில் ப.சிதம்பரம் உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற கோபம் தொகுதி மக்களிடம் இருக்கிறது. அந்தக் கோபம்தான் கடந்த முறை அவரைத் தட்டுத்தடுமாறி ஜெயிக்கவைத்தது. அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், தி.மு.க. அணியில் நின்றாலாவது திக்குத் திணறிக் கரை ஏற வா…
-
- 0 replies
- 661 views
-
-
டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணவர் அமைப்பினர் நடத்திய தாக்குதலை கண்டித்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திட்டக்கமிஷன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில நிதியமைச்சர் அமித் மித்ராவுடன் வந்திருந்தார். அப்போது அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணவர் கூட்டமைப்பினர் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பினர். அமித் மித்ரா தாக்கப்பட்டார். போலீசார் தலையிட்டு மம்தாவை காப்பாற்றினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிண…
-
- 0 replies
- 559 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் இனவெறி கொலைகளுக்கு எதிராகவும் கோவை மாவட்ட ஆன்மீக சமய சமுதாய கலை இலக்கிய அமைப்புகள் ஒருங்கிணைத்து ஆதினங்கள் -சான்றோர்கள் முன்னிலையில் ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பு அறப்போரட்டதில் ஈடுபட்டுள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13943:kovai-tamileelam&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 463 views
-
-
பெரம்பலூர்: மின் தடையால் இரவில் வெந்து நொந்து கிடக்கும் மக்களை கொள்ளையர்கள் வேறுபடுத்தி எடுக்கிறார்கள். பெரம்பலூர் ஏரியாவில், காத்து வாங்க கதவை திறந்து போட்டு தூங்கும் மக்களை குறிவைத்து மீண்டும் ஜட்டி கொள்ளையர்கள் கிளம்பி இருக்கிறார்கள்! கடந்த வருடம் பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் ஜட்டி திருடர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டினார்கள். ஆளைப் பிடிக்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்த போலீஸார், பேருக்கு வழக்குகளை பதிவு செய்து ஒரு சிலரை கைதும் செய்தார்கள். போலீஸ் விழித்துக் கொண்டதும் ஜாகையை வேறு மாவட்டங்களுக்கு மாற்றிய ஜட்டி பார்ட்டிகள், இப்போது மீண்டும் பெரம்பலூருக்கு விசிட் அடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் அருண்கும…
-
- 0 replies
- 532 views
-
-
இதுகுறித்து அந்த அமைப்பின் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கை தமிழீழ விடுதலைக்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டமானது ஒ்ரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஐநா வாக்கெடுப்புக்குப் பி்ன்னர் மாணவர்களது போராட்டமானது ஈழத்தில் நடந்தவற்றை அதன் வரலாற்றை போராட்ட களத்தில் கலந்துகொள்ளாத சக மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் திறம்பட செய்துகொண்டுள்ளோம். அவ்வகையில் கல்லூரி திறந்த நாள் முதல் தினமும் காலை 11மணியிலலிருந்து 11:02 வரையிலான இரண்டு நிமிடங்களுக்கு இருக்கும் இடத்திலேயே எழுந்து நின்று மௌனம் கடைபிடிக்கிறோம். இது இறந்த தமிழர்களுக்கான அஞ்சலி அல்ல. நம் தமிழ் இனம் பட்ட வலியை இவ்வுலகம் உணர்வதற்காக நடத்தப்படும் மௌனப் போராட்டம். ஐநா மன்றம் மூடிய காது…
-
- 0 replies
- 740 views
-
-
வட இந்தியாவின் புலந்த்சாகரில், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான 10 வயது சிறுமி, பெற்றோருடன் காவல்நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த போது அவளை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், எப்படி ஒரு 10 வயது சிறுமியை சிறையில் அடைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த சம்பவம் குறித்து மாநில அரசு வரும் திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.கடந்த ஞாயிறன்று, கடைக்குச் சென்ற சிறுமி அடையாளம் தெரியாத ஒரு நபரால் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டார். இது குறித்து புகார் அளிக்கச் சென்ற சிறுமியை, அப்போது பணியில் இருந்த இரண்டு பெண் காவலர்கள் சிறை…
-
- 0 replies
- 846 views
-
-
(முகநூல்)
-
- 1 reply
- 572 views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
விக்கிலீக்ஸ்: தனித் தமிழ்நாட்டுக்கு அமெரிக்க ஆதரவைக் கோரிய திமுக அமைச்சர்! புதன், 10 ஏப்ரல் 2013( 14:14 IST ) ஐயா இது இப்போதைய மேட்டர் இல்லை! இந்திராகாந்தி நெருக்கடி நிலை கொண்டுவந்த காலத்தில் நிகழ்ந்தது. அப்போதைய திமுக அமைச்சர் ராஜாராம் இந்தியாவிலிருந்து தமிழகம் பிரியும் தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை அமெரிக்கா ஆதரிக்குமா என்று அமெரிக்க அதிகாரியிடம் கேட்டதாக ரகசிய அமெரிக்க கேபிள் மூலம் விக்கிலீக்ஸ் தெரியப்படுத்தியுள்ளது. இந்தியாவை உலுக்கிய எமெர்ஜென்சி என்ற இந்திராவின் பாசிச ஆட்சிக் காலத்தில் திமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய மோதல் இருதுவந்தது. இந்த நிலையில் அப்போதைய தொழிலாளர் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் கே.ராஜாராம் சென்னையில் உள்ள அமெரிக்க தூதுவ…
-
- 2 replies
- 715 views
-
-
காவல்துறை அராஜகம். இடுப்புக்கு கீழ் செயல்படாத ஈழத் தமிழர் பூந்தமல்லி சிறப்புமுகாமில் அடைப்பு. பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறப்புமுகாம்களில் இருப்பவர்களை விடுவிக்கவேண்டும் என்று போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சூழலில். புதிதாக நான்கு பேர் இன்று பூந்தமல்லி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சென்னை பல்லாவரம் பொழிச்சலூரில் விடுதலைபுலிகள் என்ற பொய் குற்றச்சாட்டில் உதயதாஸ், சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஸ்வரன் என்ற 4 ஈழ இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டப்படி அகதியாக தம்மை சங்கர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்துக்கொண்டு அமைதியான முறையில் நான்கு வருடங்களாக தமிழகத்தில் வாழ்க்கை நடத்திவந்த இவர்களை கடந்த டிசம்பர் மாதம் கியூ…
-
- 0 replies
- 501 views
-
-
அரக்கோணம் அருகே சித்தேரியில் ரயில் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள சித்தேரி என்ற பகுதியில் இன்று காலை முஸராப்பூர் - யஷ்வந்த்பூர் ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டன. அதிகாலை 5.50 மணியளவில் விபத்து நடந்ததால், ரயிலில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். நிலைமையின் விபரீதத்தை உணரும்முன் ஏராளமானோர், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், காயமடைந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கி பீகாரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். ரயில் தடம்புரண்டதன் காரணமா…
-
- 0 replies
- 496 views
-
-
திமுகவில் நடிகை குஷ்புவுக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களுக்கும் வராமல், சினிமாக்காரர்களின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தவறாமல் போய் வரும் அவருக்கு திமுகவில் நெருக்கடி அதிகரித்து வருவதால் அங்கிருந்து அவர் வெளியேறி காங்கிரஸில் புகலிடம் நாடலாம் என்று செய்திகள் கூறுகின்றன. ஒரு நேரத்தில் பெரும் ஆரவாரத்துடன், குதூகலத்துடன் திமுகவில் வரவேற்கப்பட்டவர் குஷ்பு. அவரை திமுகவுக்குக் கூட்டி வந்ததில் கட்சித் தலைவர் கருணாநிதிக்கு பெரும் மகிழ்ச்சி. சூட்டோடு சூடாக சட்டசபைத் தேர்தலிலும் குஷ்புவை பிரசாரக் களத்தில் இறக்கி விட்டனர். அவருக்கு கட்சியில் நல்ல முக்கியத்துவமும் தரப்பட்டது. ஆனால் இப்போது குஷ்புவுக்கு நேரம் சரியி…
-
- 1 reply
- 930 views
-
-
நெல்லை: "ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை எனது போராட்டம் தொடரும்" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கூறினார். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிதநல்லூரில் நேற்றிரவு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கபுலி பாண்டியன் ஓராண்டு நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது உலக கோடீஸ்வரன் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் அனில் அகர்வால் பல தலைவர்களை அசைத்து பார்த்துவிட்டாலும், அசைக்கமுடியாத ஆள் நான் ஒருவன்தான். வைகோவிடம் நெருப்பு கூட அண்டமுடியாது. ஆலையை மூடும்வரை என் போராட்டம் தொடரும். ஆலையை மூட ஐகோர்ட தீர்ப்பு வழங்கியது, உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் ஆலை தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டாலும், மார்ச் 30ஆம் தேதி பிறப்…
-
- 0 replies
- 435 views
-
-
முல்லைப் பெரியாறு அணை வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 23ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136ல் இருந்து, 142 அடிகளாக உயர்த்த வேண்டும் என்று 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத கேரள அரசு, அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் பல மாதங்களாக விசாரணை நடந்து வந்தது. இதனிடையே, முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் உள்ளது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழு 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. இந்த ஆய்வறிக்கை மீது தமிழகம், கேரளா அரசு வ…
-
- 0 replies
- 363 views
-
-
டெல்லி வந்த மம்தா பானர்ஜிக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், அவருடன் வந்த மேற்குவங்க மாநில நிதியமைச்சர் அமித் மித்ராவை தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், மாணவர் சங்க தேர்தலை நடத்த வலியுறுத்தி இந்திய மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது கைது செய்யப்பட்ட அச்சங்கத்தின் தலைவர் குப்தா போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தார். ஆனால் போலீஸ் தாக்குதலில் குப்தா உயிரிழக்கவில்லை என்றும், மின்கம்பத்தில் மோதியதால் அவர் உயிரிழந்தார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் தரப்பில் இதனை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் …
-
- 1 reply
- 491 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் - ப.சிதம்பரம் இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும், அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும், அதிகாரம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை என இந்திய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி, சென்னையில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்திற்கு நேற்று (07) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும் போதே ப.சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியபோது, காங்கிரஸ் கட்சி தனது நிலையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியில் இலங்கை தமி…
-
- 3 replies
- 637 views
-
-
சென்னை உயர்நீதிமன்றில், தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். டில்லியில், முதல்வர்கள் மற்றும் அனைத்து மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையில், நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநாட்டை, பிரதமர் மன்மோகன்சிங் தொடக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டில், தமிழக உள்ளாட்சிதுறை மற்றும் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.ப.முனுசாமி பங்கேற்று, முதல்வர் ஜெயலலிதாவின் உரையை வாசித்தார். அந்த உரையில், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருப்பதாவது: நம் நாட்டின், சிறந்த தலைவர்கள் உருவாக்கிய சட்டநெறி முறைகளின்படி, நமது நாடு, ஜனநாயகப் பாதையில் இயங்குகிறத…
-
- 0 replies
- 387 views
-
-
இலங்கை அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,இந்திய பெருங்கடல் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமையுடன் அங்கு தங்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழில் செய்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாவதை நான் மிகுந்த வேதனையுடன் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.இலங்கை அரசால் இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலை…
-
- 0 replies
- 428 views
-
-
கவிஞர் இன்குலாப் அவர்களுடன் இச்சந்திப்பை ஒரு மதியப்பொழுதில் அவரது ஊரப்பாக்கம் வீட்டில் நிகழ்த்தினோம். எளிமையான உருவம். மிகவும் பணிவோடு வரவேற்றார். அவருடைய கம்பீரத்தை மேடைகளில் பார்த்திருக்கிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் மிகத்தீவிரமாகப் பங்கெடுத்த மாணவர் தலைவர்களில் அவரும் ஒருவர். ஈழப்பிரச்னை சம்பந்தமாக இப்போது தமிழ்நாட்டில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் போராடிக்கொண்டிருக்கும் புதுக்கல்லூரி மாணவர்களைச் சென்று பார்த்து வந்திருக்கிறார். போராடும் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருப்பதாக மனம்திறந்து கூறுகிறார். ஈழத்தமிழர் பிரச்னை குறித்து அக்கறையோடு பேசுகிறார். ஈழத்தமிழ்மக்களின் வேதனை அவருக்கு சித்திரவதையைக் கொடுக்கிறது என்பதை…
-
- 0 replies
- 619 views
-
-
சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்கள் இரண்டு நாட்கள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று, தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணையை கட்டி நீரை, 160 ஏரிகளுக்கு திருப்புவதாக தி.மு.க குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கே.வி.ராமலிங்கம், காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தி.மு.க மீது குற்றச்சாட்டினர். அமைச்சரின் குற்றச்சாட்டை திரும்ப பெற வலியுறுத்தி சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், அவையின் கண்ணியத்தை கெடுக்கும் வகையி்ல் நடந்து கொண்டதாக கூ…
-
- 1 reply
- 435 views
-
-
சென்னையில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "மனதிலும், உடலிலும் உறுதியுள்ள இளைய தலைமுறையினரை உருவாக்குவதிலும், சர்வதேச அளவில் நமது நாட்டின் பெயரை நிலைநிறுத்துவதிலும் இன்றியமையாத் தன்மையை வகிப்பது விளையாட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இளைய சமுதாயத்திற்குத் தேவையான நற்பண்புகளை புகட்டி அவர்களை பொறுப்புள்ள மனிதர்களாக மலரச் செய்யும் விளையாட்டுத் துறைக்கு எனது தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இதன் ஒரு பகுதியாக, கடந்த 2011 ஆம் ஆண்டு உலக…
-
- 1 reply
- 565 views
-