Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று வெள்ளிக்கிழமை [20-11-15] அன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழவில் இசைஞானி இளையராஜாவிற்கு ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விருதினை மத்திய நிதி, பெருநிறுவன அலுவல்கள் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினர். விருதினை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய இசைஞானி இளையராஜா, அரசாங்கம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஏதேனும் நான…

  2. திமுக Vs பாஜக: தமிழ்நாட்டில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தந்து தமிழ் பின்னுக்குத் தள்ளப்படுகிறதா? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தந்து தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதாக திமுக மீது குற்றம் சுமத்தியிருந்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. தமிழ்மொழியை வளர்ப்பது யார், அழிக்க நினைப்பது யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும் என்று அவருக்கு பதில் தந்திருந்தார் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி. உண்மையில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறதா? அது தமிழை அழித்து விட்டதா? …

  3. புதுவையில் திமுகவின் தொய்வு எப்படித் தொடங்கியது? மீண்டும் அது முன்னிலை பெறுமா ? கட்டுரை தகவல் எழுதியவர்,நடராஜன் சுந்தர் பதவி,பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN / V. NARAYANASAMY FACEBOOK புதுச்சேரியில் பலமுறை ஆளும் கட்சியாகவும், காங்கிரசுக்கு பிரதான போட்டியாளராகவும் இருந்துவந்த திமுக சிறிது சிறிதாக புதுச்சேரியின் அதிகாரப் போட்டிக்கான உரையாடலில் இருந்து காணாமல் போயிருந்தது. புதுவை அரசியல் பரபரப்பான புதிய திசையில் போய்க் கொண்டிருக்கும் நிலையில் திமுக சோம்பல் முறித்துக்கொள்ளுமா? அதன் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? …

  4. சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி இந்தியமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2024-ம் ஆண்டில் தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்இ என்று முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் நவ.9ம் தேதி அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (நவ.12) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு…

  5. ஒரே வாரத்தில் 40 தமிழக மீனவர்கள் கைது; இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் - அன்புமணி 09 Dec, 2024 | 11:52 AM சென்னை: “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கூட கடுமையான போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில், மேலும் 8 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது என்றால், அது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை அவர்களின் வி…

  6. உலக பசி குறியீட்டில் இந்தியா 107-ஆவது இடம் கவலையளிக்கிறது - ராமதாஸ் டுவீட் 2022ஆம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து, பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளதாவது: ‘’2022ஆம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக உயர்ந்துள்ள இந்தியா, ஏழை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகியவற்றை விட பின்தங்கியிருப்பது கவலையளிக்கிறது! உலக பசி குறியீடு என்பது பசி, பட்டினியை…

    • 0 replies
    • 228 views
  7. போயஸ் கார்டன் வீட்டுக்கு மீண்டும் போலீஸ் குவிப்பு! சசிகலா தங்கியுள்ள, சென்னை, போயஸ் கார்டன் வீட்டுக்கு, மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, போயஸ் கார்டன், வேதா இல்லத்தில் வசித்து வந்தார். அங்கு, தற்போது தோழி சசிகலா தங்கி உள்ளார். பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டதால், ஜெ.,வுக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மாநில காவல் துறை, முதல்வர் பாதுகாப்பு பிரிவு உட்பட, தினமும், 500 போலீசார்,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டிச., 5ல், ஜெ., மரண அறிவிப்பு வெளியானதும், மத்திய அரசு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பை திரும்ப பெற்றது. ஆனால், மாநில போலீசார், ஜெ., மறைவுக்கு பின்னரும், போயஸ் கார்டனில் தங்கியுள்ள சசிகலா…

  8. மாநிலங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை – ஸ்டாலின் மாநிலங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழக அரசு இப்போது ஐந்து இலட்சம் கோடி கடனில் உள்ளது. அந்த நிதி நிலையைக் சரி செய்தாக வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா என்ற கொடியை தொற்று நோய் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அந்த தொழில்களை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர போராடி வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார். …

  9. பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 ஜனவரி 2025 எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 43 வயதான நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதில் சிறுமியின் பாட்டிக்கு பிரதான பங்கு உள்ளதாகக் கூறுகிறார், அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா. வழக்குப் பதிவான ஓராண்டில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. போக்சோ வழக்குகளில் முன்னுதாரண வழக்காக இது இருப்பதாகக் கூறுகின்றனர், குழந்…

  10. வெள்ளம் பாதித்த கடலோர மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கை துரிதம்: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பத்திரமாக மீட்பு சென்னையின் மீட்புப் பணிகள். | படம்: ஏ.எஃப்.பி வடசென்னையில் சுணக்கம்: ஆயிரக்கணக்கானோர் தவிப்பு * வெள்ளம் சூழந்த சென்னையில் இதுவரை ஏறத்தாழ 2,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி இன்று பிற்பகல் வரை மழை பெய்யாததால் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்றன. கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ள…

  11. கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் முக்கொம்பு சுற்றுலா தளம் அமைந்து உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை ஜீயபுரம் எஸ்.ஐ. சசிகுமார், நாவல்பட்டி காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர், ரோந்துப் பணியில் இருந்த முதல் நிலை காவலர் சங்கர் ராஜபாண்டியன, ஜீயபுரம் போக்குவரத்துக் காவல் நிலைய காவலர் சித்தார்த்தன் ஆகிய 4 பேரும் பணியில் இருந்த போது, உயர் அதிகாரிகளிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் முக்கொம்பு பகுதிக்குச் சென்று காவிரி ஆற்றின் கரையில் குளித்துவிட்டு அங்கேயே அமர்ந்து மது அருந்தி உள்ளனர்…

  12. 01 JUL, 2024 | 02:34 PM சென்னை: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை விடுதலை செய்து தாயகத்துக்கு அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மற்றும் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 பேரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள இலங்கைக் கடற்படையினர், அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். ஒரு குற்றமும் செய்யாத தமிழக மீனவர்கள் மீது பொய்யான கொலை வ…

  13. தமிழகத்திற்கான ஒக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை அதிகரித்தது மத்திய அரசு! தமிழகத்திற்கான ஒக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தமிழக அரசுக்கு தேவையான ஒக்சிஜன் அளவு போதுமானதாக இல்லை என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 131 டன் பிராணவாயு தமிழகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் 25 டன் ஒக்சிஜனும் அடங்குகிறது. இதனையடுத்து தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒக்சிஜன் அளவு 650 டன் ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1218190

  14. அமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு மேலானவரா? அமைச்சர் காமராஜுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் சாட்டையடி 'நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை' என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 'அமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு மேலானவரா' என்று கண்டனம் தெரிவித்தது. எஸ்.வி.எஸ்.குமார் என்ற ஒப்பந்ததாரரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடிசெய்ததாக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப்பதிவுசெய்யுமாறு உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை மே 3ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தது. அதன்படி, வழக்கு உச்சநீதிமன்ற…

  15. 05 JAN, 2025 | 03:53 PM இலங்கையில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபை தேர்தல்களை மிக விரைவாக நடத்தி தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மகாநாட்டில் இது தொடர்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த மகாநாடு ஜனவரி 3ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை விழுப்புரத்தில் கட்சியின் தேசிய மத்தியகுழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மகாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்க…

  16. 2026 தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளராக விஜயின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு! 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யை தமிழக வெற்றிக் கழகம் (TVK) இன்று (04) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலமாக அதிமுக – பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. TVK இன் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழ கத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்க…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES 36 நிமிடங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க முடியுமா என்று அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது இருக்கும் நடைமுறையில், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் பதில் கோரியுள்ளது. அருண்குமார் அகர்வால் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து நீதிபதிகள் பி.ஆர்.கவ…

  18. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுத்த 20 ரூபாய் டோக்கன் ‘ஒர்க் அவுட்’ ஆகிவிட்டது: தினகரன் அணி மாவட்டச் செயலாளரின் பேச்சால் பரபரப்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தோம், அது ஒர்க் அவுட் ஆகிவிட்டது என தினகரன் அணியின் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் தொகுதிகளில் உள்ள தினகரன் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முசிறியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜசேகரன் பேசியதாக தினகரன் ஆதரவாளர்கள் வட்டாரம் தெரிவித்ததாவது: …

  19. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க திட்டம்: தகுதி நீக்கம் மூலம் அதிரடிக்கு முடிவு ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தகுதி நீக்கம் முடிவுக்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை: ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. சசிகலா தரப்பினரால் அதை தடுத்து நிறுத்த முடிய…

  20. மக்களவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியானது. முன்னதாக திமுக வேட்பாளர் பட்டியலும் வெளியானது. இரண்டு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலிலும் முஸ்லிம்கள் யாரும் இல்லை. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் ஏதும் இடம்பெறாத நிலையில், முஸ்லிம்கள் யாருக்கும் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்படவில்லை. மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்கள் 1. திரு…

  21. மியான்மரில் வேலை மோசடி: மேலும் சில தமிழர்கள் தவிப்பு - ஆயுதக்குழு பகுதியில் என்ன நடக்கிறது? பரணி தரன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மியான்மிரில் மோசடி நிறுவனங்களின் பிடியில் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் இருந்து தாய்லாந்துக்கு தப்பி அங்கிருந்து இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு உதவியுடன் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் தாயகம் திரும்பிய பிறகு தெரிவித்த புகார்களால், மியான்மரில் உள்ள மோசடி நிறுவனங்கள் இந்தியர்களை வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு மேலும் ஐந்து தமிழர்கள்…

  22. Published By: Digital Desk 1 05 Oct, 2025 | 11:32 AM இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது. குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (03) இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழகம் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும் அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. இது தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம்…

  23. சட்டசபை தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்:சட்ட நிபுணர்கள் கருத்து சட்டசபையில், முதல்வர் கோரிய நம்பிக்கை தீர்மானம் செல்லுமா என்ற சர்ச்சை எழுந்து உள்ளது. எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றி விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சட்டசபையில் நேற்று, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். தி.மு.க., சார்பில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. அதற்கு, சபாநாயகர் சம்மதிக்கவில்லை. தி.மு.க.,வினரின் ரகளையை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்…

  24. முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 23 நிமிடங்களுக்கு முன்னர் தீபாவளியை ஒட்டி ஏற்படும் காற்று மாசுபாடு கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஒலி மாசுபாடு சில இடங்களில் அதிகரித்திருக்கிறது. இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பெருநகரங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவு, அந்தந்த மாநில மாசுக் கட்டுப்பாட்டுத் துறையால் கண்காணிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு ஏழு நாட்களுக்கு முன்பாகவும் 7 நாட்கள் பின்பாகவும் ஒலி மாசுபாடும் காற்றுத் தர மாசுபாடும் கண்காணிக்கப்படுகிறத…

  25. கோவை: அணியாகப் போட்டியிட்டு திமுக, அதிமுகவை வீழ்த்தி பேரூராட்சியை கைப்பற்றிய சுயேச்சைகள் மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக, அதிமுக என்கிற இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி கோவை மாவட்டம் மோப்பேரிபாளையம் பேரூராட்சியை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மாநகராட்சியும் ஏழு நகராட்சிகளையும் 31 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.