Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. படக்குறிப்பு, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் கூடுதலாக இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அந்த வாகனங்களை நான்கு சக்கர வாகனங்கள் என அரசு கருதுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசிக்காக 25 செப்டெம்பர் 2023 சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனம் இருப்பதாகக் குறிப்பிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்…

  2. அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிந்துவிட்டதாக இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, அ.தி.மு.க. அறிவித்துள்ளது. கூட்டணியாக இருந்த பாரதீய ஜனதா கட்சிக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 69 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் பா.ஜ.கவுடனான கூட்டணி தேவையில்லை என்பதையே வலியுறுத்திவந்தனர். இதற்குப் பிறகு, பா.ஜ.கவுடனான கூட்டணியிலி…

  3. 24 SEP, 2023 | 02:33 PM பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருவதால், பெங்களூருவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டம் நடத்தின. கர்நாடக மாநில விவசாய சங்கத்தினர், கரும்பு விவசா…

  4. பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் சீமான் மீது வழக்குப்பதிவு - ’லீக்’கானது 2011 எஃப்.ஐ.ஆர்! 23rd Sep, 2023 at 9:20 PM விஜயலட்சுமி, சீமான் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது அளித்த புகாரின் அடிப்படியில் 2011ல் பதிவான முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) விபரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் 6 முறை தனக்குக் கட்டாயக் கருகலைப்பு செய்யப்பட்டதாகவும் ஆர்9 வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கடந்த சில ஆண்டுகள் இந்த வி…

  5. 22 SEP, 2023 | 10:47 AM புறா வளர்ப்பால் இரண்டு நுரையீரலும் செயலிழந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு சுமார் 8 மணிநேரமாக நடைபெற்ற அறுவை சிசிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள உறுப்பு மாற்று சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு (ILD) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த குஜாரத்தை சேர்ந்த திம்பால் ஷா என்ற 42 வயது பெண்மணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மிகவும் கடினமான, சிக்கலான இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். திடீரென ஏற்பட்ட இவரது நோய்க்கும், புறாக்களுக்கும்…

  6. 18 SEP, 2023 | 04:14 PM சென்னை: "பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்களது தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்த ஒரு செயலையும், கருத்தையும் தன்மானம் …

  7. படக்குறிப்பு, வேத சமஸ்கிருத கல்வி வாரிய பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் துவங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் வேத சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் தொடங்க மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பாடசாலையை மீண்டும் தொடங்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள், புராண வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சமஸ்கிருத பிராந்திய மையம் தமிழகத்தில் எடுபடாது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் உட்பட சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன…

  8. இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதன்போதே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328078

  9. இதுக்கு ஒரு என்ட்கார்டே இல்லையா.. விஜயலட்சுமி விவகாரத்தில் நாளை சீமான் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்? Mathivanan MaranPublished: Sunday, September 17, 2023, 12:27 [IST] சீமானுடன் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. 2008-ம் ஆண்டு சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டு 3 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்; பின்னர் ஏமாற்றிவிட்டார் என 2011-ல் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தார். அப்போது பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் திடீரென விஜயலட்சுமி தமது புகாரை திரும்பப் பெற்றதால் ஓய்ந்தது. 12 ஆண்டுக்கு பின் புகார்: ஆனால் சீமான் மீது பல்வேறு புகார்களை தொடர்ந்து வீடியோ பதிவுகளில் முன்வைத்து வந்தார் விஜயலட்சுமி. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆண்டுகளுக்கு முன் சொன்ன …

  10. 16 SEP, 2023 | 12:11 PM கோவை: தமிழகத்தில் சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி உக்கடத்தில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலின் முன் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முபினின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் தொடர்புடையவர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று (செப்.16) காலை 6.30 மண…

  11. படக்குறிப்பு, காட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலும், காட்டுயிர்களுக்கான பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காப்பதிலும் அளப்பரிய பணியை யானைகள் செய்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வாழ்விட பாதிப்புகளால் காட்டை விட்டு வெளியேறிய 128 யானைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலிகளில் சிக்குவது, ரயிலில் அடிபடுவது எனப் பல செயற்கை காரணங்களால் இறந்துள்ளன. அதேபோல, யானை – மனித எதிர்கொள்ளல் காரணமாக, 466 மனிதர்கள் இறந்துள்ளதாக தமிழ்நாடு வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். அதிகரிக்கும் மனித – யானை எ…

  12. அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 12 மார்ச் 2021 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை. 1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தபோது அது அடுத்த தெருவுக்கு கூட செய்தி இல்லை. நடராஜன் - பங்காரு அம்மாள் இணையருக்கு ஒரு மகன். அவ்வளவுதான். 1969 பிப்ரவரி 3-ம் தேதி அவர் இறந்தபோது அது பல கோடி மக்களுக்குப் பெருந்துயரம். அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இந்த எண்ணிக்கை கின்ன…

  13. விடுதலையான சாந்தன், முருகன் உள்ளிட்ட 4 இலங்கையர்கள் இன்னும் சிறப்பு முகாமில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு நான்கு இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த போதிலும் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இலங்கைக்கு மீள திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்த, சாந்தனின் ஆவணங்கள் மீதான பரிசீலனை தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 1999ம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இந்திய உயர் நீதிமன்றினால் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஏழு பேரில் பேரறிவாளன் கடந்த ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்டார். நளின…

  14. படக்குறிப்பு, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அருகே தரைதட்டி தத்தளித்துக் கொண்டிருக்கும் மிதவைப் படகு. கட்டுரை தகவல் எழுதியவர், சு.மகேஷ் பதவி, பிபிசிக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் தத்தளித்து வரும் மிதவை படகை மீட்கும் நடவடிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவடையும் என கூடங்குளம் அனுமின் நிலைய வளாக இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2வது அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 3, 4, 5 மற்றும் 6வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. …

  15. பட மூலாதாரம்,UDHAY/TWITTER கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 3 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 செப்டெம்பர் 2023 சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து அமைப்புகள் பலவும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் உ…

  16. பட்டியலினத்தோர் பற்றி சர்ச்சை பேச்சு; சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பட்டியலினத்தோர் குறித்து தவறாக பேசியதூ தொடர்பான வழக்கில், ஈரோடு நீதிமன்றத்தில் இன்று சீமான் ஆஜராகினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பட்டியலினத்தவர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்துப் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்…

  17. படக்குறிப்பு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் சென்னைக்கு 80 ஆண்டுகளாக குடிநீர் வழங்கி வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், லிங்கேஷ் குமார். வே பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, கடந்த 80 ஆண்டுகளாக சென்னைக்கு குடிநீர் வழங்கி வருகிறது. காவிரி நீருக்காக கர்நாடகத்துடன் பல சச்சரவுகள் இருக்கும் நிலையில், மிக சுமூகமான முறையில், ஆந்திராவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 40 ஆண்டுகளாக பூண்டி நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. சென்னையின் குடிநீர் த…

  18. பட மூலாதாரம்,NAAM TAMILAR கட்டுரை தகவல் எழுதியவர், ச. பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 49 நிமிடங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், தானும் சீமானும் கணவன்-மனைவியாக வாழ்ந்ததாகவும், தனது அனுமதி இல்லாமலேயே சீமான் தனக்கு 7 முறை கருச்சிதைவு செய்ததாகவும், நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருந்தார். தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள சென்னையைச் சேர்ந்த நடிகை விஜயலட்சுமி, ‘…

  19. பட மூலாதாரம்,TAMIL NADU FOREST DEPARTMENT படக்குறிப்பு, நீலகிரியில் மட்டுமே அதிக அளவிலான புலிகள் இருப்பதை வனத்துறையினர் பதிவு செய்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தனது மாடு இறந்த கோபத்தில், இறந்த மாட்டின் உடலில் விஷம் வைத்து இரண்டு புலிகளை விவசாயி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 புலிகளோடு சேர்த்து ஒரு மாதத்தில் மட்டுமே நீலகிரியில் ஆறு புலிகள் மரணித்துள்ளதால், சூழலியலாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் க…

  20. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, விண்கலம் வெற்றிகரமாக தனது இலக்குப்பாதையில் பயணிப்பதாக நிகர் ஷாஜி கூறியதும், அரங்கில் இருந்த விஞ்ஞானிகள் ஆரவாரமாகக் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 2 செப்டெம்பர் 2023, 13:04 GMT புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்டது. விண்கலம் ஏவப்பட்ட சிறிது நேரத்தில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். …

  21. படக்குறிப்பு, ஒவ்வொரு சிறப்பு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமாக சொல்லிக் கொடுக்கிறார் ஆசிரியர் பாக்கியலட்சுமி. கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆசிரியர் என்றதும் உங்கள் மனதில் ஏற்படும் பிம்பங்கள் எதிலும் பொருந்தாத, சவால்கள் நிறைந்த நிஜவாழ்க்கையை வாழ்பவர் சென்னையை சேர்ந்த பாக்கியலட்சுமி(56). மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்து, அவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைக்கும் ஆசிரியர்களை அதிகமாக கொண்டாடும் சமூகத்தில், இவரின் சாதனை வித்தியாசமானது. சென்னையில், பல மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், மற்றவரின் துணை இன்றி, உடை உடுத்தவும், உணவை தாங்களாகவே உண்ணவும், சிறுநீர் கழ…

  22. சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் By செய்திப்பிரிவுModified: 28 Aug, 23 02:31 pm சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "2011-ல் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில் பிரிவு 420-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் மேல் நடவடிக்கைக்காக ந…

  23. ஒரே நாடு ஒரே தேர்தல்: அதிமுக பலிகடா ஆகப் போகிறது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் அதில் அதிமுக பலி கடா ஆகிவிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” முறையை அமலுக்கு கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பலமாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.