Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை அவரது அலுவலகத்துக்குள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோத மணல் மாஃபியாக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலையில் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அவரது அலுவலகத்துக்குள் புகுந்த இரண்டு பேர் அரிவாளால் லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகே இருந்தவர்கள் திருநெல்…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதாவால் எழுந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு அரசு அடுத்த சிக்கலை எதிர்கொண்டுள்ளது. விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் மது பரிமாற அனுமதி என்று தமிழ்நாடு அரசிதழில் வெளியான அறிவிப்பு பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்த பிறகும் கூட சந்தேகங்கள் தீரவில்லை. எதிர்க்கட்சிகள் பலவும் தமிழ்நாடு அரசைக் கண்டித்திருப்பதுடன் பல கேள்விகளையும் முன்வைத்துள்ளன. தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி என்று காட்சி ஊடகங்களில் வெளியான செ…

  3. பட மூலாதாரம்,M.K.STALIN கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் பெரும் எதிர்ப்புக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொழிலாளர் நிலையை மேலும் மோசமாக்கும் என தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கா…

  4. ஆணவ படுகொலை: பெற்ற தாயையும், மகனையும் கொடூரமாக கொன்ற தந்தை! monishaApr 15, 2023 18:55PM கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தந்தையே மகனை கொடூரமாக வெட்டி ஆணவக் கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (45). இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இவருடைய மகன் சுபாஷ் (25) திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுஷா என்பவரை காதலித்துள்ளார். ஆனால், சுபாஷ் மற்றும் அனுஷா இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். பட்டியலினத்தோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்த அரசிய…

  6. கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் யானை - மனித மோதல்களால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து செய்தி வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு மத்தியில் யானைக்கு வைக்கப்பட்ட பெயர் ஒன்று தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வந்த கருப்பன் என்கிற ஆண் யானை வனத்துறையால் பிடிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதிகளில் கருப்பன் என்கிற ஆண் யானை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ச…

  7. தமிழ்நாட்டையும் – தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் – மோடியிடம் கோரிக்கை! தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை கடலுக்கு அடியில் தமிழ்நாட்டின் தென் பகுதியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். மேலும், பொருளாதார ரீதியில் இந்தியாவை மற்றும் இலங்கையை சாலை மூலம் இணைப்பத…

  8. படக்குறிப்பு, மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் துவங்கப்படுவதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியதாக மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், ஆளுநர் மாளிகை அதை மறுக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது அந்தத் துறையின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசும் போது ஒரு தகவலைத் தெரிவித்தார். அதாவது, "கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சித்த மருத்துவப் பல்கலைக்…

  9. பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை காவல்துறை தலைமைக் காவலர் ஒருவர், தனது மகளுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அந்தக் குழந்தைக்கு உறுப்புக் குறைபாடு ஏற்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டுகிறார். இதற்குக் காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 13) அன்று தலைமைச் செயலக வாசலில் மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால்தான், அவரது புகாரை மருத்துவத்துறை மற்றும் காவல்துறை ஏற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கா…

  10. 15 ஏப்ரல் 2023, 05:49 GMT காணொளிக் குறிப்பு, செரிப்ரல் பால்சி குறைபாட்டை வென்ற சாதனை இளைஞர் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், பெருமூளை வாதம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய, பல ஊனமுற்ற விளையாட்டு வீரர். குறைந்த அறிவுத்திறன் மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு கடுமையான வரம்புகள் உள்ளதால், அவர் இந்த சவால்களை சமாளித்து திறமையான விளையாட்டு வீரராக மாறினார். அறிவுசார் மற்றும் உடல் ரீதியான சவால்கள் காரணமாக, குறைந்த அளவிலான பயிற்சி வாய்ப்பை சர்வதேச விளையாட்டு விருது பெறும் திறனுக்கு மாற்றுவதற்கான அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் கடுமையான ஒழுக்கத்தை கடைப்பிடித்ததன் மூலம் இந்த அசாதாரண சாதனை நிரூபிக்கப்பட்டுள்ளது. …

  11. தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடை! தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமுலாக்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதிவரை இந்த தடை அமுலில் இருக்கும் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக, குறித்த காலப்பகுதியில், 15 ஆயிரம் விசைப்படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, இந்திய மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. …

    • 0 replies
    • 278 views
  12. இந்திய எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல் சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பட மூலாதாரம்,PERUMAL MURUGAN படக்குறிப்பு, பெருமாள் முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 14 மார்ச் 2023, 13:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது. தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. …

  13. பட மூலாதாரம்,M.K.STALIN கட்டுரை தகவல் எழுதியவர்,பரணி தரன் பதவி,பிபிசி தமிழ் 14 ஏப்ரல் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது மாநில ஆளுநர்கள் குறித்த கால வரம்புக்குள் ஒப்புதல் வழங்கும் வகையில் அவர்களுக்கு குடியரசு தலைவர் அறிவுரை வழங்கவும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை நிறைவேற்றிய தனித்தீர்மானம் போல, பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாத மற்ற மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக கேரளா…

  14. பட மூலாதாரம்,MAY17IYAKKAM கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் வெளியான பிறகு, அதில் வந்த சம்பவங்கள், கதையில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்கள் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டது. அப்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட பெயர்களில் ஒன்று, புலவர் கலியபெருமாள். விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரம் இந்த நபரை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மற்றொரு பெயர், தமிழரசன். படத்தில் வரும் ரயில் விபத்து உட்பட சில காட்சிகளில் இவர் சார்ந்த குறிப்புகள் படத்தில் ஆங்காங…

  15. Published By: NANTHINI 08 APR, 2023 | 12:20 PM இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சட்ட விரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம் என்பவற்றில் ஈடுபட்டதாகவும், விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சென்னையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபர் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினால் (NIA) கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சென்னையில் இந்த சந்தேக நபருக்கு சொந்தமான பல இடங்களில் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு (NIA) சோதனை நடத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சோதனையின்போது பெருந்தொகை பணம், தங்கக் கட்டிகள், டிஜிட்டல் சாதனங்கள்…

  16. படக்குறிப்பு, ஆர்.என். ரவி, தமிழ்நாடு ஆளுநர் (கோப்புப்படம்) 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதைத் தடைசெய்யும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பாகவே அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாக ஆளுநர் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடுவதைத் தடை செய்யும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபடும் பலர் அதற்காக கடன் வாங்கி, அந்தக் கடனைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும்…

  17. பிரதமர் மோடிஎட்டாம் திகதி சென்னை விஜயம் – ட்ரோன்கள் வான்வழி விமானங்கள் பறக்க தடை Published By: Rajeeban 06 Apr, 2023 | 11:19 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி வரும் 8 ஆம் திகதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடிதமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் . இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். அவரை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்கள் பார…

  18. பிரதமர் வருகை: காங்கிரஸ் கருப்பு பலூன்கள் பறிமுதல்! monishaApr 08, 2023 08:10AM பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்பு பலூன்களை போலீஸ் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டிற்கு இன்று வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை பார்வையிடும் பிரதமர், பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES 7 ஏப்ரல் 2023, 14:36 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பான வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்(சிபிஐ) ஆஜராக சிறப்பு அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதுதொடர்பாக நகர வழக்கறிஞர் டி.நரசிம்ம மூர்த்தி தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 11ஆம் தேதியன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 27ஆம் தேதி வழக்குரைஞரை நியமித்து உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசு. “208/2004 எண்ணிட்ட இந்த வழக்கில், சொத்துகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றமும் உத்தரவு பி…

  20. பட மூலாதாரம்,TNDIPR 5 ஏப்ரல் 2023, 08:38 GMT புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அனைத்து கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். தீர்மானத்திற்கு பதில் அளித்தபோது, தானும் ஒரு 'டெல்டாகாரன்' என்பதால், இந்த திட்டத்தை செயல்படுத்த எந்தவிதத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய தி…

  21. மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி – மெரினாவில் காந்தி சிலை இடமாற்றம் !! மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக, மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டுள்ளது. மெட்ரோ பணி முடிந்ததும் அதே இடத்தில் மீண்டும் காந்தி சிலை நிறுவப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் காந்தி சிலை அருகே நடைபெறுவதால் சிலை சேதம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். அதேநேரத்தில், கலங்கரை விளக்கம், சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரங்கப்பாதை கட்டுமானப் பணி விரைவில் தொடங்கவுள்ளது. https://athavannews.com/2023/1…

  22. "இந்த குழந்தையை வளர்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்" - மரபணு குறைபாடுள்ள பெண்ணின் தன்னம்பிக்கை கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேமா ராகேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்த குழந்தை சமூகத்தில் தாக்கு பிடிப்பது என்பது கடினமான காரியம், இந்த குழந்தை நீண்ட நாள் உயிர் வாழ முடியாது என்று என்னை பற்றி சொன்னார்கள். ஆனால் இன்று எனக்கு 23 வயதாகிறது. நான் எம்.காம் முதலாம் ஆண்டு படிக்கிறேன். 3 வருடங்களாக தொழில்முறையாக பாட்டு கற்றுக் கொள்கிறேன். வருங்காலத்தில் ஒரு நாள் பாடகியாக இந்த சமூகத்தின் முன் வந்து நிற்பேன்," என உள்ளத்தில் இருந்து உறுதியோடு கூறுகிறார் மதுரையை சேர்ந்த பார்க…

  23. கலாஷேத்ரா பாலியல் புகார்; தலைமறைவான ஹரிபத்மன் கைது! சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் அளிக்கப்பட்ட உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சொந்தமான ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து முன்னாள் மாணவிகள் சிலரும் கலாஷேத்ராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கலாஷேத்ரா…

  24. கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2020-ம் தேதி மார்ச் 14 இந்தோனேஷியாவில் பெருநிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்த 54 வயதான அவர், அதே நிறுவனம் தென் அமெரிக்காவில் தொடங்கவிருந்த புதிய ஆந்த்ராசைட் புரொஜெக்டிற்காக (Anthracite Project) பெரு நாட்டிற்கு செல்லும் வழியில் சொந்த ஊரான சென்னைக்கு வந்திருந்தார். புதிய புராஜெக்டில் சேரும் முன்பாக, தாய், தந்தையரை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது அவரது எண்ணம். அதற்காக, சென்னை வந்திறங்கிய அவர் அதன் பிறகு, தான் இதுகாறும் பணிபுரிந்து வந்த இந்தோனேஷியாவுக்கோ அல்லது புதிய புராஜெக்டிற்காக பெருவுக்கோ செல்லவே இல்…

  25. கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் ”நாம் வாழும் இந்த பூமிக்கு இதற்கு முன்னதாக நாம் வந்திருக்கிறோமா என்று நமக்கு தெரியாது, இதற்கு பிறகு மற்றொரு முறை வருவோமா என்பதும் நமக்கு தெரியாது. எனவே இருக்கும் இந்த ஒரு வாழ்வை அனுபவித்து வாழ வேண்டும். நம்மை ஈர்க்கும் அனைத்து விஷயங்களுக்குள்ளும் இறங்கி முயற்சித்து விட வேண்டும்” என்கின்றனர் முத்துபாண்டியும், அவரது மகள் ஹரிணியும். சென்னை, ரெட் ஹில்ஸ் பகுதிக்கு 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் பண்டிக்காவனூர் ஊராட்சியில், `ஆனந்த இல்லம்’ என்ற பெயரில் ஹெச்.ஐ.வி., குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தை கவனித்துகொள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.