தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக சட்டப் போராட்டம்: சீமான் monishaApr 29, 2023 10:25AM மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய நிபுணர் குழு அனுமதி வழங்கியதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்த உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு 234 அடி உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் கரையில் இருந்து 360 மீட்டர் தொலைவில் இருந்து கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருந்தது. மேலும் இதற்காக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது. அதோடு பேனா நினைவுச் சின்னத்திற்கான சுற்றுச்ச…
-
- 2 replies
- 739 views
- 1 follower
-
-
40 நிமிடங்களுக்கு முன்னர் கர்நாடகாவின் ஷிவமோகா பகுதியில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பாஜக வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் மும்முரம் காட்டுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. இதில், பாஜகவின் தேர்தல் இணைப் பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளார். தேர்தலையொட்டி கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். …
-
- 3 replies
- 798 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TNDIPR கட்டுரை தகவல் எழுதியவர்,கவியரசு வி பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு மசோதா மூலம் நீர்நிலைகளை அரசு தனியாருக்கு தாரைவார்ப்பதாக அரசியல் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள விவகாரம் சமீபத்திய சர்ச்சையாக கருதப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளான 21.04.2023 அன்று, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாநிலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைக்கும் வகையிலான, `தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்ட மசோதாவை’ (Tamil …
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம்: திருப்பூர் துரைசாமி christopherApr 29, 2023 09:41AM மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்று வைகோவிற்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் இன்று (ஏப்ரல் 29) எழுதியுள்ள கடிதத்தில், “மதிமுகவை தொடங்கியபோது, வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் சமீபகாலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்துவிட்டனர்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், “கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகை…
-
- 0 replies
- 693 views
-
-
படக்குறிப்பு, அரவிந்தசாமி கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடந்த 13வது பட்டமளிப்பு விழாவில் 'ஆளுநருக்கு பாதுகாப்பு' என்ற பெயரில் பாதுகாப்பு பணியில் இருந்த சில காவலர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவரும் பட்டம் பெற வந்தவருமான அரவிந்தசாமியின் ஆடைகளை களைந்து அறையில் பூட்டி வைத்து அவமானப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த இட…
-
- 1 reply
- 698 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TWITTER@CMOTAMILNADU கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் என்று கூறி வினோத் பாபு என்பவர் பலரிடமும் மோசடியில் ஈடுபட்டதாக புகார் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக தினேஷ் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் வினோத் பாபு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? ராமநாதபுரம் மாவட்டம் கீழசெல்வனூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் பாபு. மாற்றுத் திறனாளியான இவர், அண்மையில் லண்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 சக்க…
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை அவரது அலுவலகத்துக்குள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோத மணல் மாஃபியாக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலையில் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அவரது அலுவலகத்துக்குள் புகுந்த இரண்டு பேர் அரிவாளால் லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகே இருந்தவர்கள் திருநெல்…
-
- 1 reply
- 645 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதாவால் எழுந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு அரசு அடுத்த சிக்கலை எதிர்கொண்டுள்ளது. விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் மது பரிமாற அனுமதி என்று தமிழ்நாடு அரசிதழில் வெளியான அறிவிப்பு பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்த பிறகும் கூட சந்தேகங்கள் தீரவில்லை. எதிர்க்கட்சிகள் பலவும் தமிழ்நாடு அரசைக் கண்டித்திருப்பதுடன் பல கேள்விகளையும் முன்வைத்துள்ளன. தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி என்று காட்சி ஊடகங்களில் வெளியான செ…
-
- 2 replies
- 648 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,M.K.STALIN கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் பெரும் எதிர்ப்புக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொழிலாளர் நிலையை மேலும் மோசமாக்கும் என தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கா…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஆணவ படுகொலை: பெற்ற தாயையும், மகனையும் கொடூரமாக கொன்ற தந்தை! monishaApr 15, 2023 18:55PM கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தந்தையே மகனை கொடூரமாக வெட்டி ஆணவக் கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (45). இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இவருடைய மகன் சுபாஷ் (25) திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுஷா என்பவரை காதலித்துள்ளார். ஆனால், சுபாஷ் மற்றும் அனுஷா இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்…
-
- 3 replies
- 790 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். பட்டியலினத்தோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்த அரசிய…
-
- 0 replies
- 933 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் யானை - மனித மோதல்களால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து செய்தி வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு மத்தியில் யானைக்கு வைக்கப்பட்ட பெயர் ஒன்று தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வந்த கருப்பன் என்கிற ஆண் யானை வனத்துறையால் பிடிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதிகளில் கருப்பன் என்கிற ஆண் யானை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ச…
-
- 0 replies
- 700 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டையும் – தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் – மோடியிடம் கோரிக்கை! தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை கடலுக்கு அடியில் தமிழ்நாட்டின் தென் பகுதியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். மேலும், பொருளாதார ரீதியில் இந்தியாவை மற்றும் இலங்கையை சாலை மூலம் இணைப்பத…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
படக்குறிப்பு, மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் துவங்கப்படுவதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியதாக மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், ஆளுநர் மாளிகை அதை மறுக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது அந்தத் துறையின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசும் போது ஒரு தகவலைத் தெரிவித்தார். அதாவது, "கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சித்த மருத்துவப் பல்கலைக்…
-
- 0 replies
- 492 views
- 1 follower
-
-
பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை காவல்துறை தலைமைக் காவலர் ஒருவர், தனது மகளுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அந்தக் குழந்தைக்கு உறுப்புக் குறைபாடு ஏற்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டுகிறார். இதற்குக் காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 13) அன்று தலைமைச் செயலக வாசலில் மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால்தான், அவரது புகாரை மருத்துவத்துறை மற்றும் காவல்துறை ஏற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கா…
-
- 0 replies
- 688 views
- 1 follower
-
-
15 ஏப்ரல் 2023, 05:49 GMT காணொளிக் குறிப்பு, செரிப்ரல் பால்சி குறைபாட்டை வென்ற சாதனை இளைஞர் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், பெருமூளை வாதம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய, பல ஊனமுற்ற விளையாட்டு வீரர். குறைந்த அறிவுத்திறன் மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு கடுமையான வரம்புகள் உள்ளதால், அவர் இந்த சவால்களை சமாளித்து திறமையான விளையாட்டு வீரராக மாறினார். அறிவுசார் மற்றும் உடல் ரீதியான சவால்கள் காரணமாக, குறைந்த அளவிலான பயிற்சி வாய்ப்பை சர்வதேச விளையாட்டு விருது பெறும் திறனுக்கு மாற்றுவதற்கான அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் கடுமையான ஒழுக்கத்தை கடைப்பிடித்ததன் மூலம் இந்த அசாதாரண சாதனை நிரூபிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 252 views
- 1 follower
-
-
தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடை! தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமுலாக்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதிவரை இந்த தடை அமுலில் இருக்கும் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக, குறித்த காலப்பகுதியில், 15 ஆயிரம் விசைப்படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, இந்திய மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. …
-
- 0 replies
- 287 views
-
-
இந்திய எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல் சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பட மூலாதாரம்,PERUMAL MURUGAN படக்குறிப்பு, பெருமாள் முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 14 மார்ச் 2023, 13:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது. தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. …
-
- 1 reply
- 325 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,M.K.STALIN கட்டுரை தகவல் எழுதியவர்,பரணி தரன் பதவி,பிபிசி தமிழ் 14 ஏப்ரல் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது மாநில ஆளுநர்கள் குறித்த கால வரம்புக்குள் ஒப்புதல் வழங்கும் வகையில் அவர்களுக்கு குடியரசு தலைவர் அறிவுரை வழங்கவும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை நிறைவேற்றிய தனித்தீர்மானம் போல, பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாத மற்ற மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக கேரளா…
-
- 0 replies
- 616 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MAY17IYAKKAM கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் வெளியான பிறகு, அதில் வந்த சம்பவங்கள், கதையில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்கள் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டது. அப்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட பெயர்களில் ஒன்று, புலவர் கலியபெருமாள். விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரம் இந்த நபரை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மற்றொரு பெயர், தமிழரசன். படத்தில் வரும் ரயில் விபத்து உட்பட சில காட்சிகளில் இவர் சார்ந்த குறிப்புகள் படத்தில் ஆங்காங…
-
- 0 replies
- 641 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 08 APR, 2023 | 12:20 PM இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சட்ட விரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம் என்பவற்றில் ஈடுபட்டதாகவும், விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சென்னையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபர் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினால் (NIA) கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சென்னையில் இந்த சந்தேக நபருக்கு சொந்தமான பல இடங்களில் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு (NIA) சோதனை நடத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சோதனையின்போது பெருந்தொகை பணம், தங்கக் கட்டிகள், டிஜிட்டல் சாதனங்கள்…
-
- 3 replies
- 826 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, ஆர்.என். ரவி, தமிழ்நாடு ஆளுநர் (கோப்புப்படம்) 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதைத் தடைசெய்யும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பாகவே அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாக ஆளுநர் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடுவதைத் தடை செய்யும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபடும் பலர் அதற்காக கடன் வாங்கி, அந்தக் கடனைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும்…
-
- 0 replies
- 501 views
- 1 follower
-
-
பிரதமர் மோடிஎட்டாம் திகதி சென்னை விஜயம் – ட்ரோன்கள் வான்வழி விமானங்கள் பறக்க தடை Published By: Rajeeban 06 Apr, 2023 | 11:19 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி வரும் 8 ஆம் திகதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடிதமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் . இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். அவரை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்கள் பார…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
பிரதமர் வருகை: காங்கிரஸ் கருப்பு பலூன்கள் பறிமுதல்! monishaApr 08, 2023 08:10AM பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்பு பலூன்களை போலீஸ் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டிற்கு இன்று வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை பார்வையிடும் பிரதமர், பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட…
-
- 0 replies
- 681 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 ஏப்ரல் 2023, 14:36 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பான வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்(சிபிஐ) ஆஜராக சிறப்பு அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதுதொடர்பாக நகர வழக்கறிஞர் டி.நரசிம்ம மூர்த்தி தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 11ஆம் தேதியன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 27ஆம் தேதி வழக்குரைஞரை நியமித்து உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசு. “208/2004 எண்ணிட்ட இந்த வழக்கில், சொத்துகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றமும் உத்தரவு பி…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-