Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கைக் கடற்படையினர்... தாக்குதல் நடத்துவதை நிறுத்த, நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்து! தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாகி சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் …

  2. ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 18 நிமிடங்களுக்கு முன்னர் திருச்செங்கோட்டில் கிறிஸ்துவ தேவாலயம் செயல்பட்டு வந்த இடத்தில் திடீரென பிள்ளையார் சிலை வைக்கப்பட்ட சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிரடிப்படை குவிப்பு, ஆர்.டி.ஓ விசாரணை, பிள்ளையார் சிலை அகற்றம், கைது என அந்த பகுதியே பதற்றத்துடன் காணப்பட்டது. என்ன நடந்தது? நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கிரி வல பாதையில் கடந்த 30 ஆண்டுகளாக `இமானுவேல் ஜெப வீடு' என்ற பெயரில் தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதை சபையின் போதகராக இருக்கும் எசேக்கியேல் பாலகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் கிரி வல பாதையை விரிவாக்கம் செய்யும் பணியில…

  3. தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை – மத்திய அரசு தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில், இதுவரை உத்தியோகப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில், இது குறித்து மக்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி எழுப்பப்பட்டது. குறித்த கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்தை பிரிக்கும் எந்த கோர…

  4. தமிழக சட்டசபையின்... நூற்றாண்டு விழா இன்று! தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு தலைமை செயலக வளாகத்தில் 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை உயர் பொலிஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்…

  5. தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் எடுப்பதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஓய்கிறது என கருதப்பட்ட நிலையில் 10 மாநிலங்களுக்குட்பட்ட 46 மாவட்டங்களில் மீண்டும் வைரஸ் தொற்று வேகம் எடுத்து பரவி வருகிறது. இதனால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை வகித்த சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ராஜேஷ் பூஷண், கேரளா, தமிழ்நாடு, மகராஷ்ட்ரா, ஒடிசா, அஸ்ஸாம், மீசோரம், மேகாலயா, ஆந்திரா, மணிப்பூர்…

  6. ஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழ அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஒக்சிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தற்போது ஒக்சிஜன் தேவை குறைவடைந்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் மேற்படி ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அதுவரை ஒக்சிஜன் உற்பத்தி தொடரும் எனத் தெரிவித்துள்ளது. https://athavan…

  7. சீமான், திருமுருகன் காந்தி, கோவை ராமகிருஷ்ணன்: பெகாசஸ் உளவு செயலிக்கு இலக்கான தமிழ்நாட்டு தலைவர்கள் 56 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெகாசஸ் உளவு செயலி மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பக்கசார்பற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'மே 17' இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு. ராமகிருஷ்ணன், திராவிடர் கழக பொருளாளர் குமரேசன் ஆகியரது தொலைபேசிகள் பெகாசஸ்…

  8. "ரஜினிக்கு அப்பவே ஆலோசனை சொன்னேன்!"- ரகசியம் சொல்லும் சீமான்! "என்னை பி.ஜே.பியின் ‘பி' டீம் என்பவர்கள்தான் மெயின் டீமாக இருக்கிறார்கள்." - சீமான் 'இந்துத்துவ அஜென்டாபடிதான் சீமான் செயல்படுகிறார்' என்கிற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றனவே? ‘‘அதெல்லாம் சும்மா கிளப்பிவிடுவது. நான் இறை நம்பிக்கையற்று நீண்டகாலம் பயணம் செய்தவன். இன மீட்சி என்று வரும்போது தமிழர் வழிபாட்டை மீட்பதற்காக சில வேலைகளைச் செய்தேன். உடனே, ‘பாருங்கள், சீமான் இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்' என விமர்சனம் செய்கிறார்கள். நான் என் மெய்யியல் கோட்பா…

  9. இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதே நீதி: ராமதாஸ் மின்னம்பலம்2021-07-31 இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதே நீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65 பேர், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2009ல் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியர்கள் தாமதப்படுத்தாமல் விண்ணப்பங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஒன்றிய அரசு …

  10. பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்! மின்னம்பலம்2021-07-28 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கொரோனா பரவல் மற்றும் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு …

  11. ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக ``ஒன்றியம் எனும் வார்த்தையை கூறியே, ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மமதா பானர்ஜியைப் போல பா.ஜ.க அரசை எதிர்ப்பதற்கு தி.மு.க முன்வர வேண்டும்," என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்திய அரசுடன் மென்மைப்போக்கை தி.மு.க கடைப்பிடிக்கிறதா? பா.ஜ.க வழியில் தி.மு.கவா? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். கடந்த ஜூன் 4 ஆம் தேதி நடந்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இந்தச் சந்திப்பை நான் பெருமைக்குரியதாகப் பார்க்கிறேன். பேரறிவாளன் உள்பட ஏழு பேர் வ…

  12. தமிழ் எழுத்துகளால் வள்ளுவர் படம்: ஓவியரைப் பாராட்டிய முதல்வர் மின்னம்பலம்2021-07-22 தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்த ஓவியர் கணேஷை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தன்மை வாய்ந்த புத்தகம் இருந்தாலும், எந்த மதத்தையும் சாராமல் அனைவருக்கும் பொதுவான ஒரு நூல் என்றால், அது உலக பொதுமறையான திருக்குறள்தான். அந்த நூலை உலகுக்குத் தந்தவர் திருவள்ளுவர். திமுக தலைமையிலான அரசு எப்போதுமே திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் முன்னுரிமை அளிக்கும். இந்த நிலையில், ஓவியர் கணேஷ் என்பவர் தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துகள் வரையுள்ள 741 எ…

  13. தமிழகம் முழுவதும் உள்ள... தனியார் வைத்தியசாலைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயற்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் தனியார் வைத்தியசாலைகளில் சி.எஸ்.ஆர். நிதிப்பங்களிப்பில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் எதிர்வரும் 28ஆம் திகதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ளது. சென்னை-கோ…

  14. தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை! July 24, 2021 தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடு வாழ் தமிழர்கள், இலங்கை தமிழ் அகதிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். அதன்போது, “தலைநிமிரும் தமிழகம்” என்ற திட்டப்படி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க…

  15. தமிழக அரசின் முடிவுக்காக... காத்திருக்கும் வி.கே.சிங்! சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை நிர்மாணிக்க ஸ்ரீபெரும்புதூரில் தமிழக அரசு முதலில் நிலத்தை தெரிவு செய்தது. மாநில அரசின் வேண்டுகோளின் பேரில், இந்திய விமான நிலைய ஆணையம், சர்வதேச சிவில் விமான அமைப்பிடம் இதற்கான செயல்பாட்டு …

  16. சிறையில் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த நளினி மின்னம்பலம்2021-07-22 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினியும் முருகனும் நீண்ட நாள் விடுப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றால், அதைச் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (ஜூலை 21) ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கைதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர், ஆண்கள் சிறையில் உள்ள சமையல் கூடம், கைதிகள் அறைகள், கைதிகளுக்கான தொழில் வாய்ப்பு, சிறை நடைமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செ…

  17. சிறை சித்ரவதை - யாரும் அறியாத சவுக்கு சங்கரின் மறுபக்கம்

    • 0 replies
    • 635 views
  18. தூத்துக்குடி: அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் வருகை ஏன்? மின்னம்பலம்2021-07-20 தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான ‘சிந்துஷாஸ்ட்ரா’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் வருகை தந்துள்ளது. இக்கப்பலின் வருகை பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளித்துள்ளது; பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வருகையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சமீபகாலமாக வங்காள ‌விரிகுடா பெருங்கடலில் இலங்கையையொட்டி சீனா தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இலங்கையில் உள்ள துறைமுகங்களை சீன நிறுவனங்கள், குத்தகைக்கு எடுத்துள்ளன. இந்தியாவின் வடக்குப் பகுதியான ‘லடாக்’ …

  19. சிறப்புக் கட்டுரை: தமிழ்நாடு என்ற வரலாற்று அடையாளம்! மின்னம்பலம்2021-07-19 ராஜன் குறை தமிழ்நாடு என்பது திராவிட பண்பாட்டைச் சார்ந்தவர்களாகவும், தமிழ் மொழி பேசுபவர்களாகவும் தங்களை உணரும் வரலாற்று தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதி வாழும் நிலப்பகுதி, மாநிலம். எந்தவொரு மக்கள் தொகுதியும் இவ்விதமான வரலாற்று தன்னுணர்வு கொள்ளும் வரலாறே அதன் மெய்யான வரலாறு. அதன் பிறகு வரலாற்று எழுதியல் மூலமாக அது தன் தொன்மையான வரலாற்றைத் தொகுத்து எழுதிக் கொள்கிறது. எந்த ஒரு நிலப்பகுதியின் தொன்மையான வரலாறும் அதில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் வாழும் மக்கள் கொள்ளும் தன்னுணர்வுக்கு ஏற்ப அதன் வரலாறாக எழுதப்படும். உதாரணமாக காலனீய ஆட்சிக்காலத்தில் இந்தியர்கள் என்ற ஒரு மக்கள் தொகுதி அரசியல்…

  20. ஏழுபேரின்... விடுதலை குறித்து, நடவடிக்கை – ஸ்டாலின் அறிவிப்பு! முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை விவகாரத்தில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து பேசியப்பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமை தாங்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேநேரம் ஏழுபேரின் விடுதலை விவகாரத்தில் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும…

  21. தமிழகத்தில்... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலுக்கு வந்தது! தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜுலை மாதம் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1229315

  22. தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் – ஸ்டாலின் காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேகதாது விவகாரம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிலையில், இதன்போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘மேகதாது அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்று கர்நாடகம் கூறுவதில் துளியளவும் உண்மையில்லை. தமிழ்நாட்டிற்கு காவிரி என்பது வாழ்வுரிமை என்பதால், மேகதாது அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். கர்நாடகத்துக்கு மட…

  23. பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை - திண்டுக்கல் ஐ லியோனி சென்னை: பள்ளி புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி, பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். பிரச்சாரம் - சர்ச்சை தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பிரசாரத்தின் சமயத்தில் பெண்கள் குறித்து அவர் பேசி…

  24. தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகவுள்ள ஓலா மின்சார இருசக்கர வாகனம்: என்ன முக்கியத்துவம்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,OLA இந்தியாவின் முன்னணி வாடகை வாகன சேவை நிறுவனமான ஓலா, தனது மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பதற்கான முன்பதிவைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்து வரும் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகனத் தொழிற்சாலையில் இதற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதாக ஓலா தெரிவித்துள்ளது. ரூ.499-க்கு மின்சார இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால், இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வாகனத்தின் விலை தற்போது சந்தையில் விற்பனையாகும் மின்சார இருசக…

  25. இந்திய சிறப்பு முகாமில் இருந்த 10 இலங்கை தமிழர்கள் விடுதலை...! தமிழக எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், நே்ற்றிரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ளதாக தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உள்ளனர். இவர்கள், “பொய் வழக்கில் கைது செய்த எங்களை அந்த வழக்கின் தண்டனை காலம் முடிந்தும் ஏதாவது ஒரு காரணத்தைச் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.