அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption ஜாகிர் நாயக் இந்தியாவில் சில குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துமாறு மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத்தை ரஷ்யாவில் சந்தித்தபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தினார். பண மோசடி உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தங்கியுள்ளார். அவருக்கு அங்கு நிரந்தர வசிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து …
-
- 1 reply
- 322 views
-
-
பாகிஸ்தானுக்குள், இந்தியர்கள் விசா இன்றிச் செல்ல அனுமதி! பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருதுவாரா தர்பார் சாஹிப் தலத்திற்கு இந்திய பக்தர்கள் விசா இல்லாமல் சென்று வழிபட இரு நாடுகளும் ஒப்புக்குக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் கர்தார்பூர் வழித்தடத்தில் இடம்பெற்றது. இதன்போது ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என்றும் பின்னர் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் கர்தார்பூர் வழித்தடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இது தொடர்பான வரைவு ஒப்பந்தம் இதுவரை இறுதி செய்யவிப்ப…
-
- 5 replies
- 641 views
-
-
8 அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு.. குங்குமம், தேங்காய் உடைத்து பூஜை. இந்திய விமானப் படையில் 8 அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இன்று சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், மலை, காடு போன்ற கடுமையான பகுதிகளிலும் எதிரிகளை தாக்க பயன்படும். பதன்கோட் விமானப்படை தளத்தில் இன்று காலை நடைபெற்ற ஹெலிகாப்டர்கள் சேர்ப்பு விழாவில், விமானப்படை தளபதி, பி.எஸ்.தனோவா முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். வாட்டர் சல்யூட் அடித்து, இந்த ஹெலிகாப்டர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி ஆர்.நம்பியார் பதான்கோட் விமான நிலையத்தில் வைத்து ஹெலிகாப்டர்களுக்கு 'பூஜை' நடத்தினார். ஹெலிகாப்டர்க…
-
- 15 replies
- 1.2k views
-
-
காஷ்மீரிலா கை வைக்கிறீர்கள்.. இனி எங்களை பற்றி பேச, இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்ட பிறகு, இலங்கையின் அதிகாரப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு இந்தியாவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று அந்த நாட்டின் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். காஷ்மீரில் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும், வட மாகாணத்தில் தமிழர்களே அதிகம். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், ஒடுக்குமுறைகள் கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.சம உரிமை கேட்டு, இலங்கையில் நடைபெற்ற நீண்ட உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் கூட, இன்னும் இந்த பிரச்சனை நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது.இல…
-
- 5 replies
- 1.3k views
-
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷுக்கு நிவாரண உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, வௌ்ள நிவாரண நிதியாக 50 ஆயிரம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜுலை மாதம் தொடக்கம் பங்களாதேஷில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு இந்த நன்கொடை வழங்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பங்களாதேஷுக்கு-நன்கொடை-வழங்க-நடவடிக்கை/175-237884
-
- 0 replies
- 488 views
-
-
படத்தின் காப்புரிமை GURPREET CHAWLA / BBC பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பட்டாலாவிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்புக்கு பின்னர், தொழிற்சாலை கட்டடம் இடிந்தது. பல தொழிலாளர்கள் இதில் சிக்கியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், உள்ளூர் நிர்வாகமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. படத்தின் காப்புரிமை GURPREET CHAWLA/BBC இதுவரை 19 பேர் இறந்துள்…
-
- 0 replies
- 224 views
-
-
ப சிதம்பரத்தை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது. கர்நாடகா காங்கிரஸில் வலிமையான தலைவர்களில் ஒருவராக திகழும் டிகே சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 4 நாள்கள் விசாரணைக்கு பிறகு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த அமைச்சராக இருந்தவர் டிகே சிவக்குமார். இவர் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள வலிமையான தலைவராக திகழ்கிறார்.அண்மையில் பணமோசடி தடுப்பு சட்டத்தில் கீழ் விசாரணைக்கு ஆஜராகுமாறு டிகே சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிவக்குமார் தாக்…
-
- 2 replies
- 409 views
-
-
ஹரியானா மாநிலம் குருகிராமில் மாநில போக்குவரத்து போலீஸார் புதிய மோட்டார் வாகன சட்டப்படி, வாகன ஓட்டி ஒருவருக்கு 23,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த மாதத் தொடக்கத்திலிருந்து மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது. இச்சூழலில், புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று திங்கள்கிழமை காலை சுமார் ஒரு மணியளவில் ஓட்டுநர் உரிமமின்றி,…
-
- 1 reply
- 790 views
-
-
இந்தியாவுடன் ஒருபோதும் போரை தொடங்கமாட்டோம்: இம்ரான்கான் இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போரை தொடங்கமாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) லாகூர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்ரான்கான் மேலும் கூறியுள்ளதாவது, “எந்த பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வை கொடுக்காது என்பதை இந்தியாவுக்கு நான் கூற விரும்புகிறேன். போரில் வெற்றி பெறுபவர் கூட ஒரு தோல்வியாளர்தான். ஏனெனில் புதிய பிரச்சினைகளுக்கு போர் வழிவகுக்கும் இதனால்இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போரை தொடங்கமாட்டோம். இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றன. பதற்றம் அதிகரித்தால் உலகம் …
-
- 0 replies
- 327 views
-
-
Published by J Anojan on 2019-09-02 16:26:22 ’பேட் பிடிக்க முடிந்த கையால் வாள் பிடிக்க முடியாதா?’ என்று ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக முன்னாள் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய இந்திய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவைத் திரும்பப் பெற்றது. மாநிலத்தையும், லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் க…
-
- 0 replies
- 329 views
-
-
படத்தின் காப்புரிமைPAKISTAN FOREIGN MINISTRY Image captionகுல்பூஷன் ஜாதவ் குடும்பத்துடன் சந்திப்பு. (கோப்புப் படம்) பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்திய தூதர அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது பாகிஸ்தான். இது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட தகவல்: "இந்திய உளவாளியும், பணியில் உள்ள இந்திய கடற்படை அதிகாரியும், இந்திய உளவு நிறுவனமான 'ரா' வுக்காக செயல்பட்டவருமான கமாண்டர் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிக்கு சர்வதேச நீதிமன்ற உத்தரவுப்படி வாய்ப்பு வழங்கப்பட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையர் அலுவலக பொறுப்பு அதிகாரியான கௌரவ் அலுவாலியா,…
-
- 0 replies
- 492 views
-
-
சிங்கம் ரிட்டர்ன்: மீண்டும் போர் விமானத்தை இயக்கினார் அபிநந்தன்.. விமானப்படை தளபதியும் உடன் பறந்தார்.! ரெல்லி: மிக்-21 விமானத்தை மீண்டும் இயக்கி பயிற்சி பெற்று அசத்தினார் விங் கமாண்டர் அபிநந்தன். ஏர் சீப் மார்ஷல் தனோவா அபிநந்தனுடன் இணைந்து விமானத்தில் பறந்தது சிறப்பாகும்.கடந்த பிப்ரவரி 27ம் தேதி, இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் அதிநவீன எப்-16 ரக விமானத்தில், அந்த நாட்டு படையினர் இந்திய எல்லைக்குள் புகுந்தபோது, அதை தனது மிக்-21 வகை போர் விமானத்தை கொண்டு எதிர்த்து விரட்டியடித்தார் அபிநந்தன். ஆனால் எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பாரசூட்டில் குதித்து தப்பினார் அபிநந்தன். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் …
-
- 5 replies
- 595 views
-
-
திகார் சிறைக்கு, தயவு செய்து அனுப்ப வேண்டாம்- ப.சிதம்பரம். தன்னை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திகார் சிறைக்கு மாத்திரம் அனுப்ப வேண்டாமென ப.சிதம்பரம் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தனக்கு 74 வயதாகின்றமையினால் தயவு செய்து திகார் சிறைக்கு மாத்திரம் அனுப்ப வேண்டாம் என சிதம்பரம் வலியுறுத்துவதாக அவரது சட்டத்தரணி கபில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, ”அமலாக்கத்துறை வழக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. அதுவரை 3 நாட்கள் வீட்டுக் காவலில் அனுப்புங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம…
-
- 1 reply
- 458 views
-
-
இந்தியாவுக்கு வாங்க.. சீன அதிபருக்கு மோடி அன்பு அழைப்பு.. மாமல்லபுரத்தில் மீட்டிங்.. 3 நாள் கேம்ப். டெல்லி: மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா பராமரித்து வரும் பூடானின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து அப்பகுதியை விட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை வெளியேற மறுத்துவிட்டது.இதையடுத்து இந்தியா கடுமையாக போராடி அவர்களை வெளியேற்றியது. இந்த விவகாரத்தில் இந்தியா மீது போர் தொடுக்கவும் சீனா தயாரானது அதை எதிர்கொள்ள இந்தியாவும் தயாரானது. எனினும் சீன ராணுவத்தினர் டோக்லாமை விட்டு வெளியேறியதால் போர் மூளவில்லை. டோக்லாம் இந்த ப…
-
- 0 replies
- 404 views
-
-
காஷ்மீர் விவகாரம்: இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பாகிஸ்தானில் பேரணி காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. ஜமாத், இஸ்லாமி என்ற கட்சியின் ஏற்பாட்டில் கராச்சி நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. பேரணியில் பங்கேற்றவர்கள் காஷ்மீரை இந்தியாவில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். குறித்த பேரணியில் 1000க்கும் மேற்கொண்டோர் பங்பேற்றிருந்தனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரத்தை கடந்த மாதம் 5ஆம் திகதி மத்திய அரசு இரத்து செய்தது. இதற்கு …
-
- 0 replies
- 201 views
-
-
இந்திய கடற்படைத் தளங்களை உளவு பார்க்கும் சீனக் கப்பல்! இந்திய கடற்படைத் தளங்களை உளவு பார்ப்பதற்காக சீனக் கப்பலொன்று அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் கடற்பரப்பில் புகுந்த அந்தக் கப்பல் அங்கேயே சில தினங்கள் தங்கியிருந்து உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அந்தமான்- நிகோபார் தீவுகளின் அருகே காணப்படுகின்ற இந்திய கடற்படையின் தளத்தை உளவுபார்க்க குறித்த கப்பல் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய உளவுத்துறையினர் மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். சீனாவின் அதிநவீன உளவு கப்பல் இந்திய கடல்பகுதியில் ஊடுருவியிருப்பது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகி…
-
- 0 replies
- 519 views
-
-
வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 10 வருட சிறை: வருகிறது புதிய சட்டம். வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் வைத்தியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் இருக்கின்ற நிலையில் புதிய சட்ட வரைபுக்கு மத்திய அரசு தயாராகிறது. வைத்தியர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைத் தாக்கினால் 3 முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என சட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. இதேபோல் வைத்தியசாலைகள் மீது நடத்தப்பட…
-
- 0 replies
- 496 views
-
-
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமனம்தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டார். ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் ஆளுநர் நரசிம்மன் இருந்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இவரே ஆந்திரம், தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கானாவுக்கு ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார்.கேரள ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் ஹிமாச்சல் பிரதேச…
-
- 4 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தானைச் சேர்ந்த குருத்வாரா தம்பு சாஹெப் என்பவரின் மகள் கடந்த சில நாள்களுக்கு முன் கடத்தப்பட்டுள்ளார். இறுதியில் அந்தப் பெண், துப்பாக்கி முனையில் குண்டர்கள் சிலரால் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், மதமாற்றப்பட்டு, அந்தப் பெண் கட்டாயத் திருமணம் செய்துவைக்கபட்டுள்ளார். அந்தப் பெண்ணை விடுவிக்காவிட்டால் குடும்பத்துடன் கவர்னர் மாளிகை முன் தற்கொலை செய்துகொள்வோம் என்று அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். Victim's family ``சில குண்டர்கள் எங்கள் வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, என் இளைய மகளைக் கடத்தியதால் எங்கள் குடும்பம் ஒரு சோகமான சம்பவத்தை எதிர்கொண்டது. அவர்கள் அவளை சித்ரவ…
-
- 2 replies
- 559 views
-
-
முடிவுக்கு வரும் ரகசியம்.. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை நாளை முதல், இந்திய அதிகாரிகள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: கருப்பு பணம் மீட்பு நடவடிக்கைகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த யார் யாரெல்லாம் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து இருந்தார்களோ அவர்களுடைய அனைத்து தகவல்களையும் அந்த வங்கி இந்திய அதிகாரிகளுக்கு வழங்க உள்ளது.செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த தகவல்களை ஸ்விஸ் வங்கி வழங்க உள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 453 views
-
-
ஈழப்போரின் வெற்றிக்கு காரணம் என்ன? : கூறுகிறது இந்தியா
-
- 0 replies
- 931 views
-
-
புதுடெல்லி: பாகிஸ்தான் திடீரென ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதால் இருநாடுகளிடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவ தளபதி இன்று காஷ்மீர் செல்ல இருப்பது பரபரப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கி மத்திய அரசு கடந்த 5ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அன்று முதல் காஷ்மீரில் முன்னாள் முதல்வர், கட்சி தலைவர்கள் 174 பேர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவினர் ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச…
-
- 0 replies
- 254 views
-
-
அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல்! டெல்லியில் அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி டெல்லி மாநகர அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அரச-பேருந்துகளில்-பெண்கள/
-
- 0 replies
- 544 views
-
-
தீவிரவாதிகளை எங்கள் நாட்டுக்குள் திணிப்பதை நிறுத்துங்கள்: பாக். (Pakistan) மீது சீறும் இந்திய அரசு! ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டின் தலைவர்கள் மிகவும் ‘பொறுப்பற்ற கருத்துகளை' சொல்லி வருவதாகவும், ஐ.நா-வுக்கு அது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் எழுதியுள்ள கடிதத்திற்கு எந்தவித மதிப்பும் இல்லை என்றும் சாடியுள்ளது இந்திய அரசு தரப்பு. குறிப்பாக ஐ.நா சபைக்கு எழுதப்பட்ட கடிதத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் ஆகியோரின் கருத்துகளும் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. “இந்தியாவின் உள் விவகாரத்துக்கு உட்பட்ட ஒரு விஷயம் குறித்து பாகிஸ்தான் தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் கருத்த…
-
- 0 replies
- 251 views
-
-
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு.. சற்றுநேரத்தில் கைது? ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிக்கப்பட்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். ஐஎன்எக்…
-
- 17 replies
- 1.7k views
-