அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3268 topics in this forum
-
'ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு' - CUET நுழைவுத் தேர்வு விவாதம் ஆவதன் பின்னணி என்ன? மோகன் பிபிசி தமிழுக்காக 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொதுவான நுழைவுத் தேர்வு (கியூட்) நடத்தப்படும் என இந்திய கல்வித் துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது. அதுவே இப்போது விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. இந்திய கல்வித்துறையின் அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் ஆளும் திமுக உள்பட மாநில கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசின் கீழ் வரும் பல்கல…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
26 OCT, 2023 | 11:09 AM இந்தியா சமீபத்தில் ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. அப்போது அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தின் அழைப்பிதழில் முதன் முதலாக குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டது. அதன்பின் அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில், பாடசாலை பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) உருவாக்கிய உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து இக்குழுவின் தலைவரும், …
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
நாடாளுமன்ற தொகுதியில் பிரதமரை எதிர்த்து விவசாயிகள் போட்டி வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுகின்றார்கள். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றார். இந்நிலையில், இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, மோடியை எதிர்த்து விவசாயிகள் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், “தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். தற்போது, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரத…
-
- 0 replies
- 502 views
-
-
படத்தின் காப்புரிமை AFP இரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான தடைக்கு விலக்கு அளிப்பதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு மே மாதத்தில் முடிகிறது என்றும், அதன்பிறகு அவை அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரான் நாட்டின் வருவாயில் பிரதானப் பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதன் மூலம், அந்த வருவாய் கிட…
-
- 0 replies
- 764 views
-
-
இந்தியாவை அறிவோம்: மகாராஷ்டிரம் வெ.சந்திரமோகன் இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் மாநிலம். தலைநகர் மும்பை. மெளரியப் பேரரசர்கள், சாதவாகனர்கள், வாகாடகப் பேரரசர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், தேவகிரி யாதவப் பேரரசர்கள், முகலாயர்கள், மராத்தாக்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்த மாநிலம். கி.பி.7-ம் நூற்றண்டில் இந்தியாவுக்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங் எழுதிய பயணக் குறிப்பில் மகாராஷ்டிரம் எனும் பெயர் முதலில் பதிவானது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி, பம்பாய் மாநிலம் உருவாக்கப்பட்டது. எனினும் மராத்தி, குஜராத்தி, கட்சி, கொங்கணி என்று பல்வேறு மொழிகள் பேசும் பிரதேசங்களை உள்ளடக்கியதாக அது இருந்தது. சம்யுக்தா மகாராஷ்டிர சமிதி…
-
- 0 replies
- 603 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை, இரானால் பிடிக்கப்பட்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 23 பேர் கொண்ட குழுவுடன் பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல்விதிகளை மீறியதாகவும், உள்ளூர் மீன்பிடிப்படகு மீது மோதியதாகவும் கூறி, அதனை இரான் பிடித்துவைத்துள்ளது. இந்நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் விடுவித்து, தாய் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், "இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இரான் அரசுடன் தொடர்ந்து தொட…
-
- 0 replies
- 529 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவரைச் சந்தித்ததை ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்ட இந்திய மத்திய அமைச்சர். 1987 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய சிவில் விமான போக்குவரத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ருவிற்றர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில் 1987 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இளம் அதிகாரியாக கடமையாற்றிய நான், இன மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா மேற்கொண்டு வரும் கடும் முயற்சிகளை எடுத்துக் கூறி, டெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன் என மேலும் ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Hardeep Singh P…
-
- 0 replies
- 432 views
-
-
வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தற்போது லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடி, பலமுறை ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.இதற்கிடையே, ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது.இந்நிலையில், நிரவ…
-
- 0 replies
- 391 views
-
-
பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்- அ.தி.மு.க., தி.மு.க. பங்கேற்பு by : Litharsan பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவுள்ளார். அதேபோல், தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார். இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்துவரும் நிலையில், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு இராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் …
-
- 0 replies
- 269 views
-
-
ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்க இந்தியா முயற்சி! சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பசுமை வாயு வெளியீட்டைக் குறைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதேபோன்று ரயில்வே நிர்வாகமும் 2030ஆம் ஆண்டுக்குள், கார்பன் வெளியீடு இல்லாத பசுமைப் போக்குவரத்துக்காக ரயில் போக்குவரத்தை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அதாவது, இருபக்கமும் டீசலால் இயங்கும் இன்ஜின்கள் உள்ள ரயில் தொடரில், குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒப்பந்தம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த திட்டத்தின் ஊடாக வ…
-
- 0 replies
- 189 views
-
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷுக்கு நிவாரண உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, வௌ்ள நிவாரண நிதியாக 50 ஆயிரம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜுலை மாதம் தொடக்கம் பங்களாதேஷில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு இந்த நன்கொடை வழங்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பங்களாதேஷுக்கு-நன்கொடை-வழங்க-நடவடிக்கை/175-237884
-
- 0 replies
- 487 views
-
-
பிரிட்டிஷ் காலனித்துவம் 40 ஆண்டுகளில் 100 மில்லியன் இந்தியர்களைக் கொன்றது எப்படி? 1880 முதல் 1920 வரை, இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவக் கொள்கைகள் சோவியத் யூனியன், மாவோயிஸ்ட் சீனா மற்றும் வட கொரியாவில் ஏற்பட்ட அனைத்து பஞ்சங்களையும் விட அதிகமான உயிர்களைக் கொன்றன. டிலான் சல்லிவன் மற்றும் ஜேசன் ஹிக்கல் ஆகியோரால் மெக்குவாரி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளியில் துணை உறுப்பினர். சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ICTA-UAB) பேராசிரியர் மற்றும் ராயல் கலை சங்கத்தின் உறுப்பினர். 2 டிசம்பர் 2022 அன்று வெளியிடப்பட்டது2 டிச., 2022 பின்னர் படிக்க கட்டுரைகளைச் சேமித்து, உங்கள் சொந்த வாசிப்புப் பட்டியலை உருவாக்கவும். சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்ய…
-
- 0 replies
- 126 views
-
-
மூத்த மருத்துவர்களால் நோயாளிகளைத் தொட முடியாது. ஏனென்றால் அவர்கள் 50 வயதைத் தாண்டியிருப்பார்கள். கொரோனா தொற்று நோய் என்பதால், 50 வயதுக்கு அதிகமானோரைத் தாக்கினால் இறப்புக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸை எதிர்கொள்ள இறுதியாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களை களமிறக்க வேண்டும் என்றும், இதற்காக அவர்களது தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாராயணா ஹெல்த்தின் நிறுவனரும், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணருமான தேவி பிரசாத் ஷெட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத…
-
- 0 replies
- 465 views
-
-
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியது! by : Litharsan இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்ததுடன் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 553 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 547 பேர் குணமடை…
-
- 0 replies
- 290 views
-
-
அந்தமான் தீவுகள்: அருகிவரும் பழங்குடியினரை தாக்கியது கொரோனா வைரஸ் - விரிவான தகவல்கள் Getty Images கொரோனா வைரஸ் இந்தியாவின் அந்தமான் தீவுக்கூட்டத்தின் தொலைதூரத்தில் வசிக்கும் பழங்குடியினரைத் தாக்கியுள்ளது. அருகி வரும் பழங்குடி இனமான கிரேட்டர் அந்தமானீஸை சேர்ந்த பத்து பேருக்கு கடந்த ஒரு வாரத்தில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக பிபிசியிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொலைதூர தீவில் வசிக்கும் அவர்களில் நான்கு பேருக்கு கடந்த வாரம் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. முன்னதாக, நகர்ப்புற பகுதியில் வசித்த மேலும் 6 பேருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 371 views
-
-
இந்தியாவுக்கு உதவுவதாக, சேகரித்த நிதியை... பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறதா பாகிஸ்தான்? கொவிட் -19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுடன் இணைந்த தொண்டு நிறுவனங்கள், கோடிக்கணக்கில் நிதி திரட்டின. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம், ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுவதற்கும் வெளிப்படையான பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போலி செய்திகளையும் பிரச்சாரங்களையும் முறியடிக்கும் டிஸின்போலாபின் அறிக்கையின்படி, பாகிஸ்தானுடன் இணைந்த தொண்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் அமைந்துள்ளன. கொவிட் -19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்ற போலிக்காரணத்தில் அவர்கள் பெரும…
-
- 0 replies
- 217 views
-
-
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜெகதீப் தன்கரை என்டிஏ வேட்பாளராக அறிவித்த பாஜக - யார் இவர்? 16 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMO INDIA இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான என்டிஏ வேட்பாளர் ஆக மேற்கு வங்க மாநில ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் பெயரை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷ…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
சத்ரபதி சிவாஜி: ஔரங்கசீப்பின் சிறையில் இருந்து தப்பியவர், முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எப்படி? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DR. KAMAL GOKHALE படக்குறிப்பு, சத்ரபதி சிவாஜி ஒரு நபர் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்துடன் மோதுவது மட்டுமல்லாமல், அதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதை கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பேரரசு, அந்தக் காலத்தில் அனேகமாக உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த பேரரசாக இருந்தது. …
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
மத தலைவர்களை கொல்ல சதி செய்த மூவர் கைது January 19, 2019 தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை கொல்ல சதி செய்ததாக, டெல்லியில் 3 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர். குடியரசு தின விழாக்கள் மற்றும் அணிவகுப்பு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்புகளின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த ஒரு குழு சதி செய்திருப்பதாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விசாரணையில் அவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் எனவும் …
-
- 0 replies
- 324 views
-
-
பட மூலாதாரம்,MAPLE PRESS கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 1 செப்டெம்பர் 2024, 07:19 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது 40 ஆண்டுகால ஆட்சியில் ஏறக்குறைய முழு இந்திய துணைக் கண்டத்தையும் ஒரே அரசின் கீழ் இணைத்தவர் என்று அசோகரை பற்றிப் பெருமையாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாடு, கேரளாவை தவிர இன்றைய முழு இந்தியா, இன்றைய பாகிஸ்தான், மற்றும் குறைந்தபட்சம் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி, அசோகரின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதுமட்டுமின்றி, அந்த நேரத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் பின்பற்றுபவர்களைக் கொண்டிருந்த ஒரு மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் …
-
- 0 replies
- 669 views
- 1 follower
-
-
மும்பை – வெள்ளத்தில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் சிக்கியது – 500 பேர் மீட்கப்பட்டனர்… July 27, 2019 மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. கனமழையால் சாலைகள், தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்படைந்தது. இதற்கிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பதல்பூரில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளத்தில் சிக்கியது. அதில் 700க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்து வருகின்றனர். பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்பு மற்றும் ஆர்.பி.எப்., படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், கடற்படை ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்துசென்றன. …
-
- 0 replies
- 396 views
-
-
ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி – முதல்வராகிறார் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கனிமவளங்கள் நிறைந்த மாநிலமான ஜார்க்கண்டில் 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. 81 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 64 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்தில் ஆளும் பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ், ஜே.எம்.எம் கட்சியும் மாறி மாறி முன்னிலை வகித்தன. பின்னர் நண்பகல் முதல் ஜே.எம்.எம், காங்கிரஸ் கூட்டணி வலுவாக முன்னிலை பெற்று முன்னேறியது. மாலை 6.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 4…
-
- 0 replies
- 272 views
-
-
பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு எல்லா தேர்தலைக் காட்டிலும் பீகார் தேர்தல் விறுவிறுப்போடு கடந்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக தேர்தல் ஆணையர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு இடம் இரண்டு இடம் வெற்றி பெற்றாலே மாநில கட்சிகளை சூறையாடி தன் ஆட்சியை நிறுவும் பாஜக குறைந்த இடங்களை வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்குவது என்று பீகார் தேர்தலின் திருப்புமுனையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் லாலு பிரசாத் யாதவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கல்லூரியில் தொடங்கிய லாலுவின் முற்போக்கு அரசியல் பயணம் பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள புல்வாரியா எனும் கிராமத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குட…
-
- 0 replies
- 361 views
-
-
அசாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை கொல்லும் காளான்கள் - என்ன நடக்கிறது? திலீப் ஷர்மா மற்றும் சோயா மாதீன் அசாம், டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் 8ஆம் தேதி, அஞ்சலி காரியா தனது மகளுடன் இரவு உணவை உண்ண உட்காரும்போது, அதுதான் அவளுடன் உண்ண போகும் கடைசி உணவை என அவருக்கு தெரியவில்லை. அசாம் மாநிலத்தின் சபதோலி கிராமத்தில் நீண்ட நேர வேலைக்கு பிறகு, மலைகளில் உள்ள வளைவுகளை கடந்து, தனது வீட்டிற்கு சென்றார். பின், சாப்பிட்டு, உறங்கி விட்டார். அன்று அதிகாலை மூன்று மணிக்கு, தனது ஆறு வயது மகள் சுஷ்மிதா வாந்தி எடுக்கும் சத்தத்தில் எழுந்தார். பிறகு, சுஷ்மித…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
722 கோடி ரூபாய் செலவில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம்..! உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று (புதன்கிழமை) இரவு மும்பையில் ஆடம்பரமாக திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. பெரிய திருமண மண்டபங்களே தோற்றுப்போகும் அளவிற்கு வண்ண விளக்குகளால் ‘அன்டிலா’ பங்களா ஜொலித்ததுடன், மலர்கள் அலங்காரம் கண்ணை கவர்ந்ததுடன் பங்களா அமைந்துள்ள வீதியெங்கும் தோரணங்கள் களை கட்டி காணப்படதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஷா அம்பானி திருமணத்துக்காக அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிகைக்குமான செலவு…
-
- 0 replies
- 487 views
-