அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
ஹிஜாப் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியீடு! ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது. ஹிஜாப் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணை தொடர்ச்சியாக 11 நாட்கள் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வெளியாகவுள்ளது. அதேநேரம் பெங்களூரில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும், போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும் காவல் துறை தடை விதித்துள்ளது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து …
-
- 0 replies
- 150 views
-
-
ஹிஜாப் விவகாரம் : இந்தியாவின் உள் விவகாரங்களில் நுழையும் அல்கொய்தா! கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தில் கோஷமிட்ட மாணவி ஒருவரை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி பாராட்டும் காணொலி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த காணொலியில், “ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும். இந்தப் பெண் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான காணொலிகளை பார்த்தேன். அவரது துணிவு குறித்து அறிந்து கவிதை எழுதி பாராட்ட முடிவு செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியாவின் உள் விவகாரங்களில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளமைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த மாணவியின் தந்தை அல்கொய்தாவோடு தங்களு…
-
- 0 replies
- 164 views
-
-
ஹிந்து, சீக்கியர், புத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் – அமித் ஷா சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறிய ஹிந்து, சீக்கியர், ஜெயின், புத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என உறுதியளிப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை பா.ஜ.க. அரசு கொண்டுவந்தே தீரும் என கூறினார். தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொய் பிரசாரம் செய்து வருவதாக கூறிய அவர், ஹிந்து, சீக்கியர்கள், புத்த மற்றும் கிறிஸ்தவ அகத…
-
- 1 reply
- 432 views
-
-
ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: 69 பேர் உயிரிழப்பு, ரூ.700 கோடிக்கு மேல் சேதம். ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 37 பேர் காணாமற் போயுள்ளனர் என்றும், 110 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், காணமற் போனவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும், அம் மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். அத்துடன் கனமழை காரணமாக மண்டி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக துனாக் மற்றும் பக்சயெட் பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 78 views
-
-
ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சிலநாட்களாக நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலையினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, மரமொன்று வேருடன் சாய்ந்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குல்லு மாவட்டத்தில் உள்ள மணிகரன் என்ற பகுதியிலேயே நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் அப்பகுதியில் காணப்பட்ட மிகவும் பழமையான மரமொன்றே இவ்வாறு வேருடன் சாய்ந்து விழுந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும், 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 120 views
-
-
ஹுமாயுன் வரலாறு: பழைய கோட்டை படிக்கட்டுகளில் கால் தவறி இறந்த மன்னனின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஹுமாயூன் பற்றிய ஒரு கதை மிகவும் பிரபலமானது. ஒருமுறை அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. அவரது தந்தை பாபர் படுக்கையை மூன்று முறை சுற்றி வந்து, 'அல்லாஹ், உயிருக்கு ஈடாக உயிரைக் கொடுக்க முடியுமானால், என் மகன் ஹுமாயூனின் உயிருக்கு ஈடாக பாபரான நான் என் உயிரைக் கொடுப்பேன்' என்று கூறி பிரார்த்தனை செய்தார். ”அந்த நாளில் இருந்து …
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: நாடு கடத்தப்பட்ட ராஜீவ் சக்சேனா கைது! ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த டுபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் எனப்படும் குறித்த வழக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் அவரை அமலாக்கத்துறை இன்று (வியாழக்கிழமை) கைது செய்துள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகொப்டர்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் 450 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, இவ்விடயம் தொடர…
-
- 1 reply
- 421 views
-
-
ஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர். ஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென புதிதாக சாலைகள் போடப்படும் என பேசி மத்திய பிரதேச மாநில அமைச்சர் பி.சி.சர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவை எதிர்த்து பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்திருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் அமைச்சர் பி.சி.சர்மா பாஜக எம்.பியும், நடிகையுமான ஹேமமாலினி கன்னத்தை உவமையாக கொண்டு பேட்டியளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சாலை பழுதடைந்துள்ளதாக வந்த புகார்களை அடுத்து ஆய்வு நடத்திய அமைச்சர் சர்மா, தற்போதுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக பாஜக தலைவர் விஜய்வர்கியாவின் கன்னங்களை ப…
-
- 0 replies
- 286 views
-
-
ஹேமு விக்ரமாதித்யா வரலாறு: முகலாய படைகளைத் தோற்கடித்து டெல்லியை கைப்பற்றிய இந்து அரசர் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 20 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 44வது கட்டுரை இது.) ஹரியாணா மாநிலம் ரேவாரியில் வசித்தவர் ஹேமு. இடைக்கால இந்தியாவில் போட்டி முஸ்லிம் ஆட்சியாளர்களிடையே குறுகிய காலத்திற்கு 'இந்து ராஜ்ஜியத்தை' நிறுவிய பெருமை ஹேமுவுக…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்க இந்தியா முயற்சி! சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பசுமை வாயு வெளியீட்டைக் குறைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதேபோன்று ரயில்வே நிர்வாகமும் 2030ஆம் ஆண்டுக்குள், கார்பன் வெளியீடு இல்லாத பசுமைப் போக்குவரத்துக்காக ரயில் போக்குவரத்தை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அதாவது, இருபக்கமும் டீசலால் இயங்கும் இன்ஜின்கள் உள்ள ரயில் தொடரில், குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒப்பந்தம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த திட்டத்தின் ஊடாக வ…
-
- 0 replies
- 189 views
-
-
ஹைதராபாத் என்கவுன்டர் 'போலி': உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் அறிக்கை - முழு விவரம் 20 மே 2022, 12:05 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு போலியான நடவடிக்கை என்று அது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதிவு செய்து கொண்டது. அந்த அறிக்கையை சீலிட்ட கவரிலேயே வைத்திருக்க வேண்டும் என்று தெலங்கான அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் விடுத்…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: '100 ஊடகத்தினரும் வந்து ஒரே கேள்வியை கேட்க வேண்டுமா?' ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட பெண்ணின் தங்கை, ஒரே கேள்வியை 100 ஊடகங்கள் தங்களிடம் கேட்டு, ஏற்கனவே மனவருத்தத்தில் உள்ள தங்களை மேலும் காயப்…
-
- 2 replies
- 2k views
- 1 follower
-
-
ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தெலங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா, இன்று அதிகாலை 3 மணியளவில் கு…
-
- 66 replies
- 6.3k views
- 1 follower
-
-
ஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் எம். காசிநாதன் / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:31 ஹைதாராபத் கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரைச் சுட்டுக் கொன்ற பொலிஸாருக்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள், பூத்தூவி வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன. பெண் மருத்துவர் மிருகத்தனமாகக் கொல்லப்பட்ட விதம், பெண் பிள்ளைகளைப் பெற்றோரையும் வேலைக்குச் செல்லும் பெண்களையும் பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியது. இந்திய நாடாளுமன்றத்தில், பெண் எம்.பிக்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பி, “பெண்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். நாட்டின் தலைநகரான டெல்லியில் நிருபையா வன்புணர்வு, …
-
- 0 replies
- 231 views
-
-
ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு எனப் புகார் - இதுவரை நடந்தவை சுரேகா அப்புரி, பல்லா சதீஷ் பிபிசி தெலுங்கு செய்தியாளர்கள் 4 ஜூன் 2022, 04:49 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, ஹைதராபாத் மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் ஜோயல் டேவிஸ் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மே 28-ஆம் தேதியன்று காரில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஜூன் 3-ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள ஊடகங்களுக்கு காவல்துறை தகவல் அளித்தது. ஐந்து பேர் இந்தக் குற்றத்தைச் செய்திருக்கலாம் என அடையாளம் காணப்பட்டதாகவும் அவர…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,UGC AND AKKINENI NAGARJUNA/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா பதவி, பிபிசி செய்தியாளர் 41 நிமிடங்களுக்கு முன்னர் ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) ஹைதராபாத்தில் மடப்பூர் பகுதியில் உள்ள ‘என் கன்வென்ஷன்’ (N Convention Center) மையத்தை இடித்தது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை ஆறு மணியளவில், ஹைட்ரா முகமை, ஹைதராபாத் பெருநகர வளர்ச்சிக் கழகம்- ஜிஹெச்எம்சி, நீர் வடிகால், நகரத் திட்டமிடல், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ‘என் கன்வென்ஷன்’ மையத்தை அடைந்தனர். ‘என் கன்வென்ஷன்’ மையம் குளத்தில் கட்டப்பட்டிருந்ததாகக் கூறி அதிகாரிகள் அதனை…
-
-
- 1 reply
- 253 views
- 1 follower
-
-
அதிவேக ஏவுகணை வாகனம் ; வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அறிவிப்பு! ஹைபா்சோனிக் தொழில்நுட்பத்திலான ஏவுகணை செலுத்து வாகனம் நேற்று (திங்கட்கிழமை) வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒலியின் வேகத்தைவிட சுமாா் 6 மடங்கு வேகத்தில் ஏவுகணையை ஏவும் திறன் கொண்ட குறித்த வாகனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணை வாகனம் நீண்ட தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பரிசோதனையின்போது எந்தவித குறைபாடுகளுமின்றி ஹைபா்சோனிக் வாகனம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்…
-
- 3 replies
- 477 views
-
-
ஹொங்கொங்கிற்கான.. ஏயார் இந்தியா, விமான சேவை இரத்து! ஹொங்கொங்கிற்கான ஏயார் இந்தியா விமான சேவையை அந்நிறுவனம் இரத்து செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹொங்கொங் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விமான சேவையின் குறைந்த அளவிலான தேவை ஆகியவற்றை முன்னிட்டு அந்நாட்டிற்கான ஏர் இந்தியா விமான சேவை இரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று வருகிற 19 ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதி ஹொங்கொங்கில் இருந்து நாடு திரும்பும் ஏயார் இந்தியா விமான சேவையும் இரத்து செய்யப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளது. https://athavannews.com/2022/1277068
-
- 0 replies
- 163 views
-
-
பட மூலாதாரம்,TIFR கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1966 ஜனவரி 23 ஆம் தேதி ஹோமி பாபா, டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் (TIFR) அலுவலகத்தின் நான்காவது மாடியில் நாள் முழுவதும் வேலை செய்துகொண்டிருந்தார். "அன்று பாபா என்னிடம் சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். நான்கு நாட்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்க இருந்த இந்திரா காந்தியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக அவர் என்னிடம் கூறினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்று அவர் பாபாவிடம் கூறினார். அவர் இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட…
-
- 0 replies
- 445 views
- 1 follower
-
-
ஹோலி பண்டிகையின் போது 7 பள்ளி மாணவர்கள் மீது இரசாயண பொடி வீச்சு – 4 பேரின் நிலை கவலைக்கிடம். நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது. அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம்,…
-
- 0 replies
- 93 views
-