Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 04 SEP, 2024 | 12:19 PM கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலத்தைநிறைவேற்ற ஏதுவாக 2 நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்துக்கு ஆளும் திரிணமூல் காங்…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெள்ளத்தில் தத்தளிக்கும் விஜயவாடா நகரம் கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீநிவாஸ் பதவி, பிபிசிக்காக 2 செப்டெம்பர் 2024, 13:56 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆந்திராவில் தலைநகர் அமராவதி மற்றும் அருகிலுள்ள விஜயவாடா ஆகிய இரண்டு பகுதிகளும் நீரில் மூழ்கின. கிருஷ்ணா, குண்டூர், ஏலூர் மாவட்டங்களில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. விஜயவாடாவில் புடமேரு ஆறு நிரம்பியதால் சிங்நகர், வ…

  3. பட மூலாதாரம்,MAPLE PRESS கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 1 செப்டெம்பர் 2024, 07:19 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது 40 ஆண்டுகால ஆட்சியில் ஏறக்குறைய முழு இந்திய துணைக் கண்டத்தையும் ஒரே அரசின் கீழ் இணைத்தவர் என்று அசோகரை பற்றிப் பெருமையாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாடு, கேரளாவை தவிர இன்றைய முழு இந்தியா, இன்றைய பாகிஸ்தான், மற்றும் குறைந்தபட்சம் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி, அசோகரின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதுமட்டுமின்றி, அந்த நேரத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் பின்பற்றுபவர்களைக் கொண்டிருந்த ஒரு மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் …

  4. படக்குறிப்பு, விசாகப்பட்டினம் கடற்கரையில் கடல் உள்வாங்குவதால் வெளிப்படும் பாறைகள் கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆகஸ்ட் 28-ம் தேதி விசாகப்பட்டினத்தில் ஆர்.கே கடற்கரைக்குச் சென்று காளிமாதா கோவில் எதிரே அமர்ந்த போது, கடல் உள்வாங்கியது போன்று இருந்தது. அதனால்தான் அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்ட பாறைகள், அன்று அதிகம் தெரிந்தன. கடல் உள்வாங்கியதால் வெளியே அதிகமாக தெரிந்த பாறைகளின் மீது கடற்கரைக்கு வருபவர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். நல்லபாபு என்ற மீனவர் சிறிய தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. ஏன் பாறைக…

  5. 31 AUG, 2024 | 08:16 AM புதுடெல்லி: பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்ற சகாப்தம் முடிந்துவிட்டதாக தான் நினைப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 'மூலோபாய புதிர்கள்: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மறுவடிவமைத்தல்' என்ற தூதர் ராஜீவ் சிக்ரியின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அப்போது அவர் "பாகிஸ்தானுடனான இடைவிடாத பேச்சுவார்த்தையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானின் செயல்களுக்கு விளைவுகள் உண்டு. ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரைஇ சட்டப்பிரிவு 370 நிறைவேற்றப்பட்டுவிட…

  6. Published By: DIGITAL DESK 3 30 AUG, 2024 | 09:03 AM புதுடெல்லி: இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை கௌதம் அதானி முந்தினார். ஹுருன் இந்தியாவின் நிறுவனம் 2024 ஜூலை மாத கணக்குப்படி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலை வியாழக்கிழமை (29) வெளியிட்டது. இந்த பட்டியலில் 2020ல் 4வது இடத்தில் இருந்த கௌதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியை முந்தினார். அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 11.60 இலட்சம் கோடி சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அதானியின் சொத்து கடந்த ஓராண்டில் 95 சதவீதம் உயர்ந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு அவரது சொத்த…

  7. பெண்கள் கழிவறையைில் ரகசிய கெமரா – 300ற்கும் மேற்பட்ட வீடியோக்கள் கசிவு.witter இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. திரும்பும் திசைகளில் எல்லாம் சிறுமிகள் தொடக்கம் வயோதிப பெண்கள் வரை அனைவரும் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவிகள் விடுதி கழிவறையில் (Washroom) ரகசிய கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேமராவில் மாணவிகள் வீடியோக்கள் ரகசியமாக பதிவாகி இருந்ததாகவும், பின்னர் அவை கசிந்து சில மாணவர்களுக்கு விற்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல்…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத்தை நவீனப்படுத்தும் நோக்கில் இந்தியா செயலாற்றி வருகிறது (பிரதிநிதித்துவப் படம்) 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ் அரிகாட் வெள்ளிக்கிழமை கடற்படையில் இணைய உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஐ.என்.எஸ் அரிகாட் கடற்படையில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பலையடுத்து, கடற்படையில் இணையவுள்ள இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும். அரிஹந்த் கப்பல் 2009-இல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்தியக் கடற்படை ஏற்கனவே இரண்டு போர்க்கப்பல்களி…

  9. காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்- ஆய்வில் தகவல். இந்தியாவில் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் வாழும் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2021-ம் ஆண்டின் காற்று மாசுப்பாட்டை காட்டிலும் 2022-ம் ஆண்டில் காற்று மாசுபாடு 19.3 சதவீதம் குறைந்துள்ளது. காற்று மாசுபாடு இதேபோன்று நிலைத்திருந்தால் இந்தியாவில் வாழும் மக்கள் சராசரியாக 3.4 வருட வாழ்நாளை இழக்க நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் அதிக மக்கள் தொகையின் காரணமாக காற்று மாசுபாட்டிற்கான சுமையை இந்தியா எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  10. படக்குறிப்பு, மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலையை மோதி திறந்து வைத்தார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை கீழே விழுந்து உடைந்துள்ளது. 2023ம் ஆண்டு இந்திய கடற்படை தினமான டிசம்பர் 4ம் தேதி அன்று இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த சிலையை கடற்படையினர் தான் அமைத்தனர் என்றும், காற்றின் காரணமாக அது கீழே விழுந்தது உடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். கூடிய விரைவில் அங்கே புதிய சிலை திறக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். …

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பலோச் விடுதலைப் படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது (பிரதிநிதித்துவப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத், ஜார்ஜ் ரைட் பதவி, பிபிசி செய்திகள், இஸ்லமாபாத் 27 நிமிடங்களுக்கு முன்னர் தென்மேற்கு பாகிஸ்தானில் ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வாகனங்களில் சென்று கொண்டிருந்த நபர்களை கட்டாயமாக வெளியேற்றி அவர்களின் அடையாள அட்டைகள் சோதனையிடப்பட்ட பிறகு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் இரவு முழுவதும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே அந்த பகுதியில் வக…

  12. பட மூலாதாரம்,UGC AND AKKINENI NAGARJUNA/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா பதவி, பிபிசி செய்தியாளர் 41 நிமிடங்களுக்கு முன்னர் ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) ஹைதராபாத்தில் மடப்பூர் பகுதியில் உள்ள ‘என் கன்வென்ஷன்’ (N Convention Center) மையத்தை இடித்தது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை ஆறு மணியளவில், ஹைட்ரா முகமை, ஹைதராபாத் பெருநகர வளர்ச்சிக் கழகம்- ஜிஹெச்எம்சி, நீர் வடிகால், நகரத் திட்டமிடல், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ‘என் கன்வென்ஷன்’ மையத்தை அடைந்தனர். ‘என் கன்வென்ஷன்’ மையம் குளத்தில் கட்டப்பட்டிருந்ததாகக் கூறி அதிகாரிகள் அதனை…

  13. இந்தியாவில் 156 மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி தீர்மானம். இந்தியாவில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 156 மருந்துகளுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளின் பயன்பாடு மனித உடலுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி குறித்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் 328 மருந்துகளுக்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397047

  14. பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும். மருத்துவ மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின்போது இனி கருப்பு நிற உடை அணிய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்கள் கருப்பு நிற அங்கியும், கருப்பு நிற தொப்பியும் அணிந்து பட்டங்களை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில்,பட்டமளிப்பு விழாவின்போது கருப்பு நிற உடை அணிவது ஐரோப்பிய நாடுகளில் தொடங்கிய கலாசாரம் எனவும், இந்த நடைமுறையானது ஆங…

  15. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை – சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா? மக்கள்தொகை கணக்கெடுப்பானது தாமதப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் மத்திய அரசு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். பீகார் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஏற்கெனவே சாதிவாரி கணக்கீடு நடத்தப்பட்டுள்ளன. பீகார் மாநில புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், கர்நாடக மாநில புள்ளி விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் தெலுங்கானா, தமிழ்நாடு, மேற்குவங்கம், மற்றும் கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சாதிவ…

  16. பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 4 வயது நிரம்பிய 2 சிறுமிகள் – 72 பேர் கைது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாப்பூரில் நான்கு வயதே நிரம்பிய 2 பாடசாலை சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் நடந்த மிகப் பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலையில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் நேற்…

  17. உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், 20 வயது செவிலியர் வேலை செய்துவந்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு 7 மணிக்கு பணிக்குச் சென்றிருக்கிறார் அந்தப் பெண் செவிலியர். அன்று இரவு, மருத்துவமனையின் மற்றொரு செவிலியர் மெஹ்னாஸ், டாக்டர் ஷாநவாஸ் என்பவரை அவரது அறையில் சந்திக்கும்படி, அந்தச் செவிலியரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்தச் செவியிலியர் மறுத்ததால், மெஹ்னாஸ், வார்டு பாய் ஜுனைத் ஆகியோர், மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள அறைக்கு வலுக்கட்டாயமாக அந்தச் செவிலியரை இழுத்துச் சென்று அடைத்து வெளியிலிருந்து பூட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து, டாக்டர் ஷாநவாஸ் அந்த அறைக்குள் நுழைந்து, உள்பக்கமாகப் பூட்டி பாலியல…

  18. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தல்! இந்தியா – ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, அடுத்த மாதம் 3 ஆம், 10 ஆம் மற்றும் அக்டோபர் முதலாம் திகதி என மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அக்டோபர் 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளதுடன், ஜம்மு-காஷ்மீர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக தனித்து போ…

  19. பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA படக்குறிப்பு, உதய்பூர் நகரின் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது கட்டுரை தகவல் எழுதியவர், மோஹர் சிங் மீனா பதவி, ஜெய்பூரிலிருந்து, பிபிசி இந்திக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் அறியப்பட்ட கன்ஹையா லால் கொலை வழக்குக்குப் பிறகு, ராஜஸ்தானின் உதய்பூர் மீண்டும் வகுப்புவாத பதற்றத்தால் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை உதய்பூர் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் பெரிதான நிலையில், அன்று மாலையில் தீ வைப்பு, கல் வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்கள் ஆகியவை நடைபெற்றன. இதனால் எழுந்த அச்சத்தின் கார…

  20. ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி! 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து வீரர்களையும் மோடி பாராட்டியுள்ளார். ஜி20 உச்சி மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகளை நடத்துவதற்கான உட்கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள ப…

  21. கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் பதவி, ஜம்முவிலிருந்து திரும்பிய பிபிசி நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரியாசி, கதுவா, ரஜோரி, டோடா – இவை ஜம்முவில் சமீபத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த பகுதிகள். ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலை செப்டம்பர் மாத இறுதியில் நடத்த மத்திய தேர்தல் ஆணையம் தயாராகி வரும் வேளையில் இந்தத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தப் பிரச்னை விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். கதுவாவை தவிர, இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் பிடிபடவோ, கொல்லப்ப…

  22. இந்தியாவில் தீவிரமடைந்து வரும் வைத்தியர்களின் போராட்டம்! கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி கோரி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் மற்றும் பொது மக்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களின் போது வன்முறைச் சம்பவங்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இன்று(17) காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மரு…

  23. 16 AUG, 2024 | 01:59 PM புதுடெல்லி: காணாமல் போன உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த செவிலியர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அவரது உடல் புதருக்குள் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும், அவர் வசம் இருந்த பணம் மற்றும் செல்போனை குற்றவாளி எடுத்துச் சென்றுள்ளார். காணாமல் போன செவிலியர் குறித்து அவரது சகோதரி கடந்த மாதம் 31-ம் தேதி உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், அவரது உடல் அழுகிய நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்து ந…

  24. மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை – உடன் அமுலுக்கு வரும் சட்டம். ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல் மந்திரி பிராவதி பரிடா பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் உடனே அமலுக்கு வருகிறது எனவும் குறிப்பிடடுள்ளார். அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளா, பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. தற்போது இந்தப் பட்டி…

    • 7 replies
    • 519 views
  25. 78 வது சுதந்திர தினம் – வளர்ந்த பாரதம் எனும் கருப்பொருளில் கோலாகல கொண்டாட்டம். ஜனநாயக இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். இந்தியாவை பிரித்தானியர்கள் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்களிடமிருந்து 1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பிறகு 78 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் முதல் தேசியக் கொடியை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி டெல்லி செங்கோட்டையில் ஏற்றினார். அன்றிருந்து வருடந்தோறும் ஒகஸ்ட் 15 ஆம் திகதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதற்கமைய , இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, கொண்டாட்டங்கள் ‘வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் நடைபெறுகின்றன. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.