Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆப்கானில் இருந்து... இந்தியாவிற்கு, வந்தவர்களுக்கு கொரோனா! ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் இருந்து 83 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்கள் சாவ்லா என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்களுக்கு கொரோனா பாரிசோதனை செய்யப்பட்டது. இதன்போதே 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த 10 பேரும் இந்தோ திபெத்திய பொலிஸ் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1235975

  2. அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் - பலர் படுகாயம் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் 12 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்த மோதல் நடந்ததாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புக்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய இராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது. இந்த மோதலில் …

  3. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதியிடம் செங்கோலை வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம் 27 மே 2023 புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைக்கிறார். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தயாரிக்கப்பட்ட செங்கோல் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக, அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த செங்கோலை பிரதமரிடம் வழங்க திருவாவடுதுறை ஆதீனம் தலைமையிலான குழு டெல்லி சென்றது. …

  4. காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் – இம்ரான் கான் மீண்டும் அழைப்பு! காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தால் உள்ளூர் மக்கள் 6 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தனர். 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குறித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இம்ரான் கான், ”இந்திய ஆக்கிரமிப்பு…

  5. இந்தியா – பாகிஸ்தான்: சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள் சீனா வலியுறுத்தல் இந்தியாவும் – பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கெங் ஷூவாங் (Geng Shuang) தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கெங் ஷூவாங் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், “இந்தியாவும் – பாகிஸ்தானும் தெற்கு ஆசியாவில் முக்கியமான நாடுகள். இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ இரு நாடுகளிடையே நிலையான இருதரப்பு நல்லுறவு நிலவுவது அவசியம். தெற்கு ஆசியா கடைப்பிடித்து வரும் ஒ…

  6. 13 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 13 ஏப்ரல் 2024 பரகல பிரபாகர் இந்தியாவின் முக்கியமான பொருளாதார நிபுணர் மற்றும் பகுப்பாய்வாளர் ஆவார். இவர் தி க்ரூக்ட் டிம்பர் ஆப் நியூ இந்தியா (The Crooked Timber of New India) நெருக்கடியில் குடியரசு உள்ளது தொடர்பான கட்டுரைகள் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் இந்திய குடியரசு நெருக்கடியில் உள்ளது, இந்திய ஜனநாயகம் நெருக்கடியில் உள்ளது, அரசமைப்பு நெருக்கடியில் உள்ளது போன்ற பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், எதிர்காலம் குறித்தும் பிபிசிக்கு அவர் நேர்காணல் ஒன்றையும் அளித்துள்ளார். அந்த நேர்காணலில் இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்திற்கு நெருக்கடி, தேர்தல் பத்திர விவகாரம் உள்ள…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES AND SOCIAL MEDIA 11 ஜூலை 2024 "ஒருவேளை என்னை மன்னித்தால், இந்தக் கொலை தொடர்பான உண்மைகளை என்னால் வெளியே கொண்டு வர முடியும்." பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்டதில் முக்கியப் பங்கு வகித்த, மன்னிக்கப்பட்ட சாட்சியான மசூத் மஹ்மூத் தனது அறிக்கையில் கூறிய வார்த்தைகள் இவை. பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தில், திங்களன்று வெளியிடப்பட்ட 'சுல்பிகர் அலி பூட்டோ- அதிபர் குறிப்பு வழக்கின்' தீர்ப்பில் 'கயமை மற்றும் பொய் சாட்சியால் பாதிக்கப்பட்டவர் சுல்பிகர் அலி பூட்டோ' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நியாயமான விசாரணையின்றி ஒரு நிரபராதி தூக்கிலிடப்பட்டார்' என்றும், 'சுல்பிகர் பூட்டோவை தூக்கிலிட…

  8. படத்தின் காப்புரிமை Jean-Francois DEROUBAIX காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய பதான்கோட் நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. தீபக் கஜூரியா, பர்வேஷ் குமார், சாஞ்ஜி ராம், ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரீந்தர் ஆகியோருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையோடு, தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வித…

  9. தமிழுக்கு இந்திய நாடாளுமன்றில் பா.ஜ.க அவமரியாதை! மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரில் தி.மு.க.வை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். இதன்போது ‘தமிழ் வாழ்க’ எனக்கூறி பதவியேற்றமைக்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷமிட்டமையினால், அவைவையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. 17ஆவது மக்களவையின் இரண்டாம் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பதில் சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். அவர்கள் பதவியேற்ற பின்னர் தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பெயர்களை சொல்லி வாழ்க என்று குறிப்பிட்டனர். இந்…

  10. கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார். 4-வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் இன்று (திங்கள் கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார். பதவி விலகியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் கோஷ், “இறந்து போன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க நான் விரும்பவில்லை” என்று கூறினார். முன்னதாக, நேற்று (ஞாய…

  11. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதி வரை சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் அடைக்கப்படுவதற்கு எதிரான ப.சிதம்பரத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை அடுத்து ப.சிதம்பரம் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதாக ப.சிதம்பரம் கூறிய நிலையில் சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்…

  12. இந்தியாவில் தொடரும் அடை மழையால் 110 பேர் உயிரிழப்பு! இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்து வரும் அடை மழையினால் உண்டான வெள்ளப் பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களில் சிக்கி மொத்தமாக 110 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி பீகாரில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 23 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 35 பேரும் உயிரிழந்துள்ளளதுடன் மொத்தமாக நாடு முழுவதும் 4 நாட்களில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் தலைநகர் பாட்னா, பாகல்பூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்தது, சுவர் இடிந்து விழுந்தது உட்பட மழை தொடர்பான …

  13. 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 90 சதவீதம் பேர், அதவாது சுமார் 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது. ப்ளும் வெண்ட்சர்ஸ் (Blume Ventures) எனும் முதலீட்டு` நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் வெறும் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நுகர்வோர்களாக இருக்கும் 30 கோடி மக்கள் பெரும் தயக்கத்துடனேயே செலவு செய்கின்றனர். ஏறத்தாழ 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க …

  14. அயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம் உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, அங்குள்ள ராமர் சிலை தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும் என, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது. உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கோயில் கட்டும் பணி, விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதையடுத்து, கோயில் கட்டப்படவுள்ள இடத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். இதன்போது, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில், “ரா…

  15. புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 2,500 பேருக்கான தனிப்பிரிவுகளை ஏற்படுத்த முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனா உட்பட 70 நாடுகளில் வேகமாக பரவி வரும் உயிர் கொல்லியான 'கொரோனா வைரஸ்' தாக்குதலுக்கு பலியானவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சீனாவில் கொரோனாவுக்கு இதுவரை 2,943 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது நேற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டில்லியில் ஒருவருக்கும், தெலுங்கானாவில் ஒருவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 18ம் தேதி விசாகபட்டினத்தில் நடைபெறவிருந்த சர்வதேச கடற்படை…

    • 2 replies
    • 319 views
  16. கொவிட் -19' எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவின் பூனே வைராலஜி ஆய்வு நிறுவனம் கொவிட் 19 வைரஸ் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இதுவரையில் 5 இலட்சத்து 97 ஆயிரத்து 458 பேர் (28ஆம் திகதி அறிக்கை) உலகவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 ஆயிரத்து 370 நபர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் கட்ட பரவல் ஆரம்பிக்கும் நிலைமை உள்ளதாகவும் சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலும் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ள நிலையில் ஆசியா…

    • 4 replies
    • 471 views
  17. தற்கொலைத் தாக்குதல் திட்டம்: கைதான ஐ.எஸ். பயங்கரவாதி வீட்டில் கிடைத்த வெடிபொருட்களால் அதிர்ச்சி ! டெல்லி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் வீட்டிலிருந்து தற்கொலைப்படை அங்கிகள் மற்றும் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, இரண்டு தற்கொலைப் படை அங்கிகள், ஒரு பெல்ட், 9 கிலோ வெடிபொருட்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். கொடி உட்பட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தும் நோக்கில் தற்கொலைப் படை அங்கிகள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும், டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பயங்கரவாதி ச…

  18. கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 200 ரூபாய் – சீரம் இன்ஸ்டிடியூட் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இந்திய மதிப்பில் 200 ரூபாய் என சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தொடங்க தீர்மானித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கான விலையினை, அதனை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு முதற்கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை க…

  19. மின்சார கார்களின் விலை... பெற்றோல் காருக்கு இணையாக குறைந்து விடும் – நிதின் கட்கரி மின்சார கார்களின் விலை பெற்றோல் காருக்கு இணையாக குறைந்து விடும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘மின்சார கார் உற்பத்திக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குவதுடன், முக்கிய நெடுஞ்சாலைகளில் மின்கார்களுக்கான சார்ஜிங் மையங்களை திறக்க உள்ளதால் இது சாத்தியமாகும் எனத் தெரிவித்துள்ளார். மின்சார கார்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும், அவற்றுக்கான லித்தியம் பேட்டரிகளின் விலை குறைந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த கொள்கை முடிவை அரசு ஏற்கனவே எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ச…

  20. என்டிஆரின் மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுப்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் இளைய மகள் காந்தாமனேனி உமா மகேஸ்வரி இறந்த நிலையில், அவரது ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், நடிகருமான மறைந்த என்டிஆரின் 12 பிள்ளைகளில் இளையவர்தான் உமா மகேஸ்வரி. ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மனைவியின் தங்கை ஆவார். அவரது இறப்பு செய்து குறித்து அவரது சகோதரரும், நடிகருமான பாலகிர…

  21. உத்தரகாண்டில்... இந்தியா, அமெரிக்கா கூட்டுப் போர்ப் பயிற்சி. இரு நாடுகளினதும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் வழக்கமான ‘யுதாபியஸ்’ தொடர் போர்ப் பயிற்சிகளை உத்தரகாண்டில் உள்ள சீனா எல்லைக்கு அருகில் உள்ள அவுலி பகுதியில் நடத்தவுள்ளது. பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்த பயிற்சியானது, இரு நாட்டுப் படைகளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முறியடிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கூடுதல் துருப்புக்கள் மற்றும் தளவாடங்கள் குவிக்கப்பட்ட பகுதியாக இந்த மலைப்பகுதி காணப்படுவதோடு அங்கு ஒக்டோபர் 18முதல் 31வரை பயிற்சி நடைபெறும் என்று அதிகா…

  22. அதானி மின்சார ஒப்பந்தத்தை வங்கதேசம் மறுபரிசீலனை செய்ய முயல்வது ஏன்? முன்னி அக்தர் பிபிசி வங்கமொழி சேவை 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கதேச அரசுக்கு அந்நாட்டு மின்சார மேம்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தை அரசு பரிசீலித்துவருவதாக நம்பப்படுகிறது. அதானி குழும பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதிக்குள் வங்கதேசம் வந்து இந்தப் பிரச்னை குறித்து விவாதி…

  23. இராமாயண கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த கேரளா.. உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலரத்தில் இருக்கும் பிரம்மாண்ட பறவை சிற்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய பறவை சிற்பம் இதுவே. சிற்பியும் பிரபல திரைப்பட இயக்குனருமான ராஜீவ் அன்சலின் மனதில் உதித்த யோசனையே ஜடாயு சிலை. ஜடாயு இயற்கை பூங்கா என்று அறியப்படும் ஜடாயு எர்த் சென்டர் பெரும் வரவேட்பை பெற்று வருகிறது வருகிறது இந்தச் சிற்பத்தையும் அதனோடு சேர்ந்த வளாகத்தையும் மலை உச்சியில் அமைக்க ஏறக்குறைய 15 வருடங்கள் ஆகியுள்ளது. ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ஜடாயுவின் கதை அங்குள்ள பாறையில் ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும…

  24. 07 NOV, 2023 | 11:14 AM காஷ்மீரில்பிணையில் விடுதலையாகும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 14 சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் சுமார் 5000 விசாரணைக் கைதிகள் உள்ளனர். இதில் 740 பேர் தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். வழக்கு விசாரணையின்போது சில தீவிரவாதிகள் பிணையில் விடுதலையாகின்றனர். அப்போது அவர்கள் தலைமறைவாகி மீண்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க பிணையில் விடுதலையாகும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறையை காஷ்மீர் போலீஸார் தொடங்கி உள்ளனர். காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்ப…

  25. தினகரன் - நரேந்திர மோதி தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் - அமித்ஷா திட்டவட்டம் பிரதமர் மோதியும் அமித்ஷாவும் ஆணவப்போக்குடன் செயல்படுவதாகவும் அவர்களின் செயல்பாடுகள் காரணமாகாவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்ததாகவும் நேற்று முன்தினம் மகாராஷ்டிர மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிஷோர் திவாரி கூறியிருந்தார். அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெறவேண்டுமானால் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சியின் கருத்தரங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.