அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
பட மூலாதாரம்,V BHATI / GETTY படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் லப்சங்கர் மகேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், பார்கவ் பாரிக் பதவி, பிபிசிக்காக 28 அக்டோபர் 2023, 12:15 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் உளவாளியாகச் செயல்பட்டு வந்த ஒருவர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்து குஜராத்தில் குடியேறிய அவர், குடியுரிமையும் பெற்றார். தற்போது உளவு பார்த்த வழக்கில் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் தாராபூரைச் சே…
-
- 0 replies
- 503 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எல்லை வரையறை குறித்த சீனா-பூடான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கட்டுரை தகவல் எழுதியவர், ராகேவேந்திர ராவ் பதவி, பிபிசி நிருபர் 17 நிமிடங்களுக்கு முன்னர் பூடான் வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயும் பல வருடங்களாக இருந்துவரும் எல்லைப் பிரச்னை முடிவுக்கு வரலாம் என ஊகங்கள் எழுந்து வருகின்றன. மேலும், சீனவுக்கும் பூடானிற்கும் இடையே விரைவில் தூதரக உறவுகள் (Diplomatic Relations) ஏற்படுவதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. இந்த இரண்டு விஷயங்களும் இந்தியாவிற்கு மேலும் தலைவலியைதான் தரப்போகின்றன. சீனாவிற்கும் பூடானிற்கும் …
-
- 2 replies
- 657 views
- 1 follower
-
-
27 OCT, 2023 | 12:55 PM அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22 ஆம் திகதி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான அழைப்பிதழை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை குழுவினர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து வழங்கினர். நீண்டகால சட்ட போராட்டத்துக்குப்பின் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இடம் கையகப்படுத்தப்பட்டு, அங்கு கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் ராமர் கோயில் கருவறையில் அடுத்தாண்டு ஜனவரி 22 ஆம் திகதி ராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்ய, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை குழுவினர் முடிவு செய்தனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று அவரது இல்…
-
- 1 reply
- 150 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,CMO ANDHRA PRADESH படக்குறிப்பு, ஆந்திரா மாநிலத்தில் நவம்பர் 15 ஆம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் கட்டுரை தகவல் எழுதியவர், சங்கர் வாடிஷட்டி பதவி, பிபிசிக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் சாதிவாரி கணக்கெடுப்பை முடித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பிகார் அரசு. அதனைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதசே அரசும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாராகி விட்டது. ஆனால், இதில் பிகார் அரசு பின்பற்றும் கொள்கைக்கும் ஆந்திர அரசு முன்மொழிந்த கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளது. பிகாரில், இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருவாய்த் துறையினர் தலைமையில் பணிக…
-
- 0 replies
- 549 views
- 1 follower
-
-
26 OCT, 2023 | 11:09 AM இந்தியா சமீபத்தில் ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. அப்போது அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தின் அழைப்பிதழில் முதன் முதலாக குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டது. அதன்பின் அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில், பாடசாலை பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) உருவாக்கிய உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து இக்குழுவின் தலைவரும், …
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெனரல் லீ ஷாங்ஃபூ கட்டுரை தகவல் எழுதியவர், டெஸ்ஸா வோங் பதவி, ஆசியா டிஜிட்டல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ அண்மைகாலமாக பொதுவெளியில் தென்படாதது குறித்து அமெரிக்காவின் உயர்மட்ட தூதரக அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளது, சீன ராணுவத்தின் ஊழல் ஒழிப்பு பற்றிய ஊகங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. ஜெனரல் லி கடந்த இரண்டு வாரங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் காணப்படவில்லை, முக்கியமான பல கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹம் இமானுவேல், லி…
-
- 2 replies
- 330 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி, பல தசாப்தங்களாக எல்லாவிதமான துன்பங்களுடன் போராடி வரும் மக்களுக்கு மகிழ்ச்சியடைவதற்கான ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் திங்கள் கிழமை சென்னையில் உள்ள எம்ஏசிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை முதல் முறையாக தோற்கடித்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் பதற்றத்துடன் இருந்து வருகின்றன. மேலும…
-
- 1 reply
- 426 views
- 1 follower
-
-
24 OCT, 2023 | 11:12 AM கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், மாநிலம் முழுவதும் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கொண்டு ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகா முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்ததை அடுத்து, கல்வி நிறுவனங்களில் சீருடையை தவிர பிற ஆடைகள் அணியக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் ந…
-
- 6 replies
- 455 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தர்ஹாப் அஸ்கர் பதவி, பிபிசி உருது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியுள்ளார். 2019-ல் மருத்துவச் சிகிச்சைக்காக லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்குத் திரும்பவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில், பாகிஸ்தானின் அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலை உட்பட பல விஷயங்கள் மாறிவிட்டன. கடந்த நான்கு வருடங்களில் அரசியல் கட்சிகளின் கதைகள் மட்டும் மாறாமல் அரசாங்கங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. சில நிறுவனங்கள் வலுப்பெற்றபோது, நம் கையில் எதுவும் இல…
-
- 1 reply
- 159 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் பதவி, பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் தொடர்ந்து நான்காவது ஆண்டாக, குளிர்காலத்தில் இந்தியா மற்றும் சீனாவின் ராணுவங்கள் இருநாடுகளுக்கும் இடையேயான மெய்யான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. 2020-ல் இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய எல்லைப் பிரச்னை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. எல்லையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பும் இதுவரை 20 சுற்று ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி சில பகுதிகளில் பின்வாங்கியுள்ளன. இரு நாடுகளின் …
-
- 1 reply
- 248 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, உலகளாவிய பட்டினி குறியீட்டு அறிக்கை குறித்து ஸ்மிதி இரானி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 22 அக்டோபர் 2023, 06:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகளாவிய பட்டினி குறியீட்டின் அண்மைய அறிக்கை குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் பட்டினியின் நிலைமை தீவிரமாக உள்ளது. 125 நாடுகளின் பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 107வது இடத்தில் இருந்தது. வெள்ளிக்கிழமையன்று,…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
இந்தியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு. இந்தியா உடனான எல்லைப் பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை சீனா தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், போர்களை எதிர்த்துப் போராடி வெற்றிபெறும் திறனை சீனா வலுப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளளது. 2049 ஆம் ஆண்டுக்குள் உலகத் தரம் வாய்ந்த இராணுவத்தை உருவாக்குவதே சீனாவின் இலக்கு என்றும் பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்திய, சீன எல்லையில் உள்ள டோக்லாம் அருகே நிலத்தடி சேமிப்பு வசதிகள், புதிய சாலைகள், பூட்டானின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் புதிய கிராமங்களையும் சீனா உருவாக்கி வருவதாகவும் தெரிவிக…
-
- 0 replies
- 133 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் அஹ்மத் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜெர்மன் பொருளாதார நிபுணர் இ.எஃப். ஷூமேக்கர் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக சிறியவற்றை உருவாக்குவதை வலியுறுத்தினார், அதை அவர் தனது 'சிறியது அழகானது' புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார். சிறியது அழகானது என்ற சொற்றொடர் செமி கண்டக்டர் சிப்பை பொருத்தவரை முற்றிலும் உண்மை. ஐபிஎம் போன்ற ஒன்றிரண்டு தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மனித முடியைவிடப் பல மடங்கு மெல்லிய நானோ சிப்பை உருவாக்கியுள்ளனர். தினசரி பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்கள், இயந்திரங்களில் மைக்ரோசிப்…
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
2006-ல் சிறுமிகள் உட்பட 19 பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை, மேல்முறையீட்டில் வழக்கிலிருந்து விடுத்திருக்கிறது அகமதாபாத் உயர் நீதிமன்றம். இந்தியா மட்டுமல்லாமல் உலகையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று 2006-ம் ஆண்டு நடந்த நிதாரி கொடூரம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சிறு கிராமம் நிதாரி. இந்த கிராமத்தில் இருந்த ஓர் வீட்டின் பின்புறமுள்ள சாக்கடையில், மனித உடல் பாகங்கள் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், டிசம்பர் 29, 2006 அன்று, அந்தச் சாக்கடையிலிருந்து எட்டு சிறுமிகளின் எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர். …
-
- 1 reply
- 341 views
-
-
புதுடெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றம், சட்டமன்றங்களே முடிவு செய்யும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வெளியாகி உள்ளன. தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு 4 வெவ்வேறு தீர்ப்புகளை செவ்வாய்க்கிழமை வழங்கியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "உச்ச நீதிமன்றத்தால் சிறப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது. அதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் ஷரத்தை சேர்க்கவும் முடியாது. திருமணங்கள் தொடர்பான சட்டங்…
-
- 0 replies
- 309 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டில் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், அந்தத் தருணத்தில் என்ன நடந்தது என்பதை இப்போது வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம் விவரிக்கிறது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் உர்ஜித் படேல். ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது துணை ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், அவர் ராஜினாமா செய்த…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஷங்கர் வடிஷெட்டி பதவி, பிபிசிக்காக 13 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலின் விளைவுகள் ஆந்திராவிலும் தெரிகிறது. குண்டூர் மாவட்டத்தின் கொத்தரெட்டிபாலத்தில் வசிக்கும் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை யூதர்கள் என்று கூறிக் கொள்கின்றனர். இவர்கள் தங்களை பெனே எப்ரைம் பழங்குடியினர் என்று அழைக்கின்றனர். இவர்கள் இஸ்ரேலில் இருந்து இங்கு வந்து குடியேறியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் பெனே ஜேக்கப் ஜெப ஆலயத்தில் யூத பாரம்பரியத்தைப் பின்பற்றுகின்றனர். இங்கு யூதர்களின் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன, ஹீப்ரூ மொழி மட…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,அபயன் ஜி எஸ் கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றிற்குச் சொந்தமான ஒரு விரிவான கல்லறைத் தளத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பகால இந்தியர்கள் எவ்வாறு வாழ்ந்து இறந்தார்கள் என்பதற்கான தகவல்களை இந்தக் கல்லறைகள் நமக்குத் தரலாம் என்பதைப் பற்றி பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் ஆராய்கிறார். 2019 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், குறைந்த மக்கள் தொகை கொண்ட கட்ச் பகுதியில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திற்கு அருகில், மணல் மண் குன்றை அகழ்வாராய்ச்சி செய்யும் போது, அங்கு …
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்தப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வாக இருக்கும் என்கிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையில், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டைத்தான் இந்தியா நீண்டகாலமாக எடுத்துவந்திருக்கிறது. 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலுடன் மோடி அரசு நெருக்கம் காட்டிவருகிறது. மோடி கடந்த வாரம் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையினர் தாக்குதல் மேற்கொண்டதை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு இந்…
-
- 0 replies
- 179 views
-
-
பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஏஜே கோக்ஸ்டெஃப் பதவி, பிபிசி நியூஸ் 58 நிமிடங்களுக்கு முன்னர் மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளார். பதவி விலகும் அதிபர் இப்ராகிம் முகமது சோலி தோல்வியை ஏற்றுக்கொண்டார். முகமது முய்சு நவம்பர் 17ஆம் தேதி அதிபராக பதவியேற்கிறார். அதுவரை இப்ராகிம் சோலி தற்காலிக அதிபராக இருப்பார். முகமது முய்சு சீனாவின் ஆதரவாளர் என்று கருதப்படுகிறார். அதேசமயம் இப்ராஹிம் முகமது சோலியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகள் வலுப்பெற்றன. செயல் உத்தி காரணங்களுக்காக சீனாவும் இந்தியாவும் மாலத்தீவில் தேர்தல்களை உன்னிப்பாக…
-
- 2 replies
- 279 views
- 1 follower
-
-
04 OCT, 2023 | 11:46 AM இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம்மில் உள்ள லாச்சென் பள்ளத்தாக்கில் இன்று (4) காலை மேகவெடிப்பு காரணமாக டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் இராணுவ வாகனங்கள் சில நீரில் மூழ்கின. அதிலிருந்த 23 இராணுவ வீரர்களைக் காணவில்லை. இதனை ராணுவம் உறுதி செய்துள்ளது. இது குறித்து குவாஹாட்டி இராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "புதன்கிழமை காலை சிக்கிம் மாநிலத்தின் லான்சன் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் இராணுவ வாகனங்கள் மூழ்கின. 23 ராணுவ வீரர்கள் மாயமான நிலையில். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, இளவரசி குத்லுன் குறித்த 'குத்லுன்: தி வாரியர் பிரின்சஸ்' திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியானது. கட்டுரை தகவல் எழுதியவர், டாலியா வெண்டுரா பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் காய்டு மன்னரின் மகள் ஐகியார்னே பற்றி அறிந்திருப்பீர்கள். தாதர மொழியில் அதற்கு "பிரகாசமான நிலவு" என்று பொருள். இந்த இளவரசி மிகவும் அழகாகவும், பலசாலியாகவும், தைரியமாகவும் இருந்தார். அவருடைய தந்தையின் ஆட்சியில் அவரை விஞ்சும் பலம் பொருந்திய ஆண்மகன் எவருமில்லை. வீரதீர செயல்களில் சிறந்து விளங்கினார். இப்படித்தான் மார்கோ போலோ தனது "புத்தக ஆஃப் வொண்டர்ஸ்" என்ற நூலில் உலகின் மிக சக்தி வாய்ந்த வம்சங்கள் ஒன்றில் பிறந்த இளவ…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,URMILESH படக்குறிப்பு, பத்திரிகையாளர் ஊர்மிளேஷ் 3 அக்டோபர் 2023 இன்று காலை முதல் நியூஸ்க்ளிக் என்ற செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய பல பத்திரிகையாளர்களின் வீடுகளில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரிகையாளர்களிடம் நடத்திய சோதனைக்கு பிறகு அவர்களிடமிருந்து தொலைபேசி, மடிக்கணினி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நியூஸ்க்ளிக் ஊடகத்தின் மீது டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தகவல் வெளியிட்டுள்ளது. நியூஸ்க்ளிக்குடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. …
-
- 1 reply
- 373 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே பதவி, பிபிசி செய்தியாளர், பாட்னாவிலிருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிகாரில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களின்படி, பீகாரின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தில் மிகப்பெரிய மக்கள்தொகை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 36% ஆகும். பட மூலாதாரம்,ANI பிகாரின்…
-
- 2 replies
- 329 views
- 1 follower
-
-
மும்பை ஐ.ஐ.டி கேன்டீனில் சைவ உணவு சாப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்ட மாணவருக்கு, ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மும்பை ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கேன்டீனில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சைவ உணவு சாப்பிடுபவர்கள் அமரும் இடத்தில், அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த இடத்தில் `இது சைவ உணவு சாப்பிடுபவர்கள் இடம்' என்று பேப்பரில் எழுதி ஒட்டி வைத்தனர். இதனால் ஐ.ஐ.டி கேன்டீனில் உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து கேன்டீன் நிர்வாகம் `பாரபட்சம் எதுவும் காட்டப்படவில்லை. சைவ உணவு, அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனித்தனியாக இடம் ஒ…
-
- 0 replies
- 290 views
-