Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாலத்தீவில் 'இந்தியாவே வெளியேறு' முழக்கம்: சீனாவுக்கு பெருகும் ஆதரவு - முழு விவரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மாலத்தீவு: 'இந்தியாவே வெளியேறு' முழக்கம் ஏன் எழுந்தது? சீனா என்ன செய்கிறது?

பட மூலாதாரம்,FATHIMATH KHADHEEJA/TWITTER

 
படக்குறிப்பு,

மாலத்தீவில் நடந்த 'இந்தியாவே வெளியேறு' பேரணியில் சிவப்பு சட்டை அணிந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அபிஜித் ஸ்ரீவஸ்தவா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடான மாலத்தீவு, புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய நாடாக இருந்து வருகிறது. இதனால் அந்நாட்டிற்கு பல்வேறு உதவிகளை இந்தியா அளித்து வருகிறது.

இந்நிலையில், அங்கு ஆதிக்கம் செலுத்த சீனாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாலத்தீவில் இந்தியா வெளியேற வேண்டும் என்ற பிரசாரம் பெருகி வருவது உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மாலத்தீவில் நடைபெறும் தேர்தல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முக்கியமான அரசியல் சார்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த சிறிய நாட்டின் தேர்தல் முடிவுகளில் இந்தியாவும் சீனாவும் அதிக கவனம் செலுத்திவருகின்றன.

மாலத்தீவு இரு நாடுகளுக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இரு நாடுகளும் ஏற்கெனவே மாலத்தீவில் அதிக அளவில் முதலீடு செய்து எல்லா வகையிலும் உதவி செய்து வருகின்றன.

மாலத்தீவுடனான உறவுகள் மேம்படும் என இருநாடுகளும் நம்புகின்றன. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப இரு நாடுகளின் வியூகங்களும் மாறுமா? மாலத்தீவில் "இந்தியா அவுட்" என்ற முழக்கம் ஏன் எழுந்தது?

மாலத்தீவு என்ற அந்தச் சிறிய நாட்டில் சுமார் 5.21 லட்சம் பேர் வசிக்கின்றனர். அந்நாட்டின் அதிபர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்கவில்லை.

அந்நாட்டு தேர்தல் விதிகளின்படி, செப்டம்பர் 30ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைப் பொறுத்து, அந்நாட்டின் மீதான இந்தியா மற்றும் சீனாவின் வியூகங்கள் மாறுபடும்.

 

இந்தியா - மாலத்தீவு உறவு எப்படிப்பட்டது?

மாலத்தீவில் அதிபர்

பட மூலாதாரம்,@PPM_HULHUMALE

செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 2,25,486 வாக்காளர்கள் வாக்களித்னர். தற்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் இதில் 86,161 (39.05%) வாக்குகளைப் பெற்றார்.

முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர் முய்ஜு 1,01,635 (46.05%) வாக்குகளைப் பெற்றார். முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய நாடாளுமன்றத் தலைவர் முகமது நஷீதுவின் ஆதரவு பெற்ற இலியாஸ் லபிப் என்ற வேட்பாளர் 15,839 (7.18%) வாக்குகளைப் பெற்றார்.

தேர்தல் விதிகளின்படி, முதல் சுற்றில் அதிக வாக்குகள் பெற்ற இரு வேட்பாளர்களுக்கிடையே இரண்டாவது சுற்றில் போட்டி இருக்கும். இருவரில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவர்தான் மாலத்தீவின் அதிபர் ஆகப் பதவியை ஏற்க முடியும்.

இப்போது நாடாளுமன்றத் தலைவர் முகமது நஷீத்தின் ஆதரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் எந்த வேட்பாளரை ஆதரிப்பார் என்பது மிகுந்த சுவாரஸ்யம் அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

இப்ராஹிம் முகமது சோலிஹ் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணி, இந்தியாவுக்கு முதலில் முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார். ஆனால், முகமது முய்ஜுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி சீனாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது.

 
மாலத்தீவில் அதிபர்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் முகமது முய்ஜு, வாக்குப் பதிவின் போது வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் பெயர் எதிர்பாராத விதமாகவே இந்தத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது. உண்மையில், முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் தான் களத்தில் நின்றிருக்க வேண்டும். ஆனால், அப்துல்லா யாமீன் பெயர் பணமோசடி மற்றும் ஊழல் போன்ற வழக்குகளில் சிக்கியதால், அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆனார்.

தேர்தலில் போட்டியிட அவர் தகுதியற்றவர் என ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து முய்ஜுவின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது. 2013-2015க்கு இடையில் ஆட்சியில் இருந்த அப்துல் யாமீன் மாலத்தீவு, சீனாவுக்கு இடையிலான உறவை மேம்படுத்த பாடுபட்டார்.

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே பொருளாதார, கலாசார, ராணுவ மற்றும் ராஜ்ஜீய உறவுகள் 60 ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத்தீவின் புவியியல் சார்ந்த இடம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வியூகரீதியாக முக்கியமானது. மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவிடம் இருந்து நிதி மற்றும் ராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது.

கடந்த 1965ஆம் ஆண்டில் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இங்கு மன்னராட்சி முறையே நடைமுறையில் இருந்தது. பின்னர் நவம்பர் 1968இல் குடியரசாக மாறியது.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இந்தியா மாலத்தீவுக்கு சமூக-பொருளாதார மேம்பாடு, நவீனமயமாக்கல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் உதவி அளித்துள்ளது.

 

சீனாவுக்கு நட்பு நாடாக மாறிய மாலத்தீவு

மாலத்தீவில் அதிபர்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் 43.3 சதவிகித வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

மாலத்தீவில் 1980களின்போது ஆளும் மவுமூன் அப்துல் கயூமுக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியை அடக்குவதற்கு இந்திய அரசு 'ஆபரேஷன் காக்டஸ்' என்ற பெயரில் உதவி செய்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டன.

பிறகு 2008ஆம் ஆண்டு, மாலத்தீவு புதிய அரசமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு அதன் முதல் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கயூம் தோல்வியடைந்து, முகமது நஷீத் அதிபர் பொறுப்பேற்றார்.

அப்போதிருந்து, முக்கிய கட்சிகளுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. நஷீத் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். அவர் 2012இல் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில், நஷீத் முதலில் நடைபெற்ற வாக்குப் பதிவின்போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். ஆனால் தேர்தல் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. பின்னர் இரண்டாவதாக நடைபெற்ற தேர்தலில் அப்துல்லா யாமீன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு, சீனாவும், மாலத்தீவும் நட்பு நாடுகளாக மாறின.

 

'இந்தியாவே வெளியேறு' முழக்கம்

மாலத்தீவில் அதிபர்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

செப்டம்பர் 9 அன்று நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, அதிபர் வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலிஹ் வாக்களித்தார்.

மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (MDP) வேட்பாளர் இப்ராஹிம் சோலிஹ் 2018இல், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சிக்கு வந்த பிறகு, 'முதலில் இந்தியா' என்ற கொள்கையை எடுத்து, இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக, பொருளாதாரம் மற்றும் ராணுவத் துறைகளில் இந்தியாவுக்கு அவர் முன்னுரிமை அளிக்கத் தொடங்கினார். அதே நேரத்தில், மாலத்தீவுக்கு கடல்சார் கண்காணிப்பு விமானத்தை பரிசாக வழங்கவும், அந்நாட்டு விமானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியாவும் ஒப்புக்கொண்டது.

இருப்பினும், இந்தியாவின் தலையீட்டிற்கு எதிர்க்கட்சியான மாலத்தீவு முன்னேற்றக் கட்சி (பிபிஎம்) மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவுடனான உறவை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ளவும், எந்த உதவியும் பெறக்கூடாது என்றும் அரசுக்கு அக்கட்சிகள் அறிவுறுத்தின.

முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையிலான இந்த இரு கட்சிகளும் 2020 அக்டோபரில் 'இந்தியாவே வெளியேறு' என்ற இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கின.

ஆனால், அதிபர் இப்ராஹிம் சோலிஹ் இந்த பிரசாரத்தை எதிர்த்தார். மாலத்தீவு வெளியுறவு அமைச்சகமும் இந்தியாவுக்கு எதிரான பொய்கள் மற்றும் வெறுப்புப் பிரசாரங்களை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது.

 

சீனாவின் கனவுத் திட்டத்திற்கு ஆதரவு

மாலத்தீவில் அதிபர்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

2013 தேர்தலில், முகமது நஷீத் முதலில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றபோதிலும் தேர்தல் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது.

இந்தியா, 2021ஆம் ஆண்டுக்குள் மாலத்தீவில் 45க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றுள்ளது. மாலத்தீவின் நான்கு முக்கிய தீவுகளை இணைக்கும் பாலங்கள் மற்றும் சாலைகளை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ``தி கிரேட்டர் மேல் கனெக்டிவிட்டி ப்ராஜெக்ட்'' (ஜிஎம்சிபி)க்காக, இந்தியா ரூ. 4,151 கோடி ($500 மில்லியன்) முதலீடு செய்து உதவியது. இதற்கான உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

மார்ச் 2022இல் மாலத்தீவில் பத்து கடலோர ரேடார் அமைப்புகளையும் இந்தியா நிறுவியது. அட்டு தீவில் ஒரு 'போலீஸ் அகாடமியை' தொடங்கவும் இந்தியா உதவியது.

இந்தியாவுக்கு மாலத்தீவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு சீனாவுக்கும் வியூகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. மாலத்தீவில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே பெரிய முதலீடுகளையும் அந்நாட்டு அரசு செய்துள்ளது.

மேலும், 2016ஆம் ஆண்டில் மாலத்தீவு அரசு ரூ. 33 கோடிக்கு (40 லட்சம் டாலர்கள்) 50 ஆண்டு குத்தகைக்கு ஒரு தீவை சீனாவிடம் ஒப்படைத்தது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை மாலத்தீவு வெளிப்படையாக ஆதரித்துள்ளது.

சீனாவிடமிருந்து கட்டுமானத் திட்டங்களுக்காக மாலத்தீவு அரசு சுமார் ரூ. 8,302 கோடி (1 பில்லியன் டாலர்) கடன் வாங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/ce524z2r03mo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலதீவையும் நம்ப வைத்து கழுத்தறுத்துப் போட்டினம் போல கிடக்கு........!  😴

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மாலதீவையும் நம்ப வைத்து கழுத்தறுத்துப் போட்டினம் போல கிடக்கு........!  😴

அதில தானே டில்லிக்காரன் தெறமை!! 😁🤣
 

அடிப்படையில் மாலைதீவு ஒரு இஸ்லாமிய நாடு. மிகுதி யாருக்கும் புரியும்.

அதே காரணமே, பெளத்தம் பெரும்பான்மையான இலங்கையும்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2023 at 16:45, Nathamuni said:

அதில தானே டில்லிக்காரன் தெறமை!! 😁🤣
 

அடிப்படையில் மாலைதீவு ஒரு இஸ்லாமிய நாடு. மிகுதி யாருக்கும் புரியும்.

அதே காரணமே, பெளத்தம் பெரும்பான்மையான இலங்கையும்.

என்னதான் இந்தியா தடமடித்தாலும் இலங்கை , மாலைதீவு, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்தியாவிடமிருந்து உதவிகளை பெறுமே தவிர இந்தியாவை உள்ளத்தால் ஆதரிக்கப்போவதில்லை. அதுவும் இப்போதுள்ள இந்துத்வா கொளகைகளைக்கொண்ட அரசை இஸ்லாமிய நாடுகள் வெறுக்கின்றன. இலங்கை மக்கள்வேறு காரணங்களுக்காக வெறுக்கின்றார்கள். எனவே இவை எல்லாம் சமாளிப்பது இந்தியாவுக்கு இலகுவாக இருக்கப்பபோவதில்லை. 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மாலைத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும்- ஜனாதிபதி மீண்டும் திட்டவட்டம்

மாலைத்தீவில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் முகமது முய்சு வெற்றி பெற்றார். இந்திய ஆதரவாளரான இப்ராகிம் முகமது தோல்வி அடைந்தார். சீன ஆதரவாளரான முகமது முய்சு, தனது பிரசாரத்தின் போது, மாலைத்தீவில் இருந்து இந்திய படைகள் முழுவதும் வெளியேற நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார். தேர்தலில் வென்று ஜனாதிபதியானதும், மாலைத்தீவில் இருந்து இந்திய படைகள் வெளியேற வேண்டும் என முகமது முய்சு தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்திய படைகள் வெளியேற வேண்டும் என மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு மீண்டும் திட்ட வட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, இந்திய இராணுவம் மாலைத்தீவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. வேறு எந்த நாட்டின் இராணுவம் இங்கே இருந்தாலும் எனது நிலைப்பாடு இதுவே தான் என அவர் தெரிவித்தார். சுமார் 70 இந்திய இராணுவ வீரர்கள் மாலைத்தீவில் உள்ள ரேடார் நிலையங்களையும் கண்காணிப்பு விமானங்களையும் பராமரித்து வருகின்றனர். மேலும் இந்தியப் போர்க் கப்பல்கள் மாலைத்தீவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ரோந்து செல்ல உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/278999

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கண்ணிலே நீர் எதற்கு காலமெல்லாம் அழுவதற்கு
    • 18 MAY, 2024 | 04:07 PM   கிழக்கு பல்கலைகழக மாணவர்கள்  உருவாக்கியிருந்த தற்காலிக நினைவகத்தை பொலிஸார் அழித்தமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட காவல்துறை உத்தியோகத்தர் வெளிப்படுத்திய வன்முறை அவமரியாதை தற்காலிக நினைவகத்தை தண்டனை குறித்த அச்சமின்றி அவர் அழிப்பது போன்றவை கவனத்தை ஈர்த்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அவர்களே உங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும்  பொலிஸ்மா அதிபரும் சட்டம் மற்றும் அரசியல் அமைப்பை மீறுகின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/183882
    • சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான தீர்மானம் மிக்க போட்டி தோனியின் பிரியாவிடை போட்டியாகவும் இது அமையலாம்! 18 MAY, 2024 | 03:36 PM   (நெவில் அன்தனி) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான தீர்மானம் மிக்க இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று (18) இரவு பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (19 புள்ளிகள்) ராஜஸ்தான் றோயல்ஸ் (16 புள்ளிகள்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (15 புள்ளிகள்) ஆகிய 3 அணிகள் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதை ஏற்கனவே உறுதி செய்துகொண்டுள்ளன. இந் நிலையில் ப்ளே ஓவ் சுற்று தகுதியைப் பெறப் போகும் நான்காவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டியிலேயே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி, சீரான காலநிலை நிலவும் பட்சத்தில் இந்த வருடத்திற்கான அதிசிறந்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்ல இன்னும் ஒரே ஒரு புள்ளியே சென்னைக்கு தேவைப்படுகிறது. இந்தப் போட்டி ஒருவேளை மழையினால் கைவிடப்பட்டால் ப்ளே ஓவ் சுற்றுக்குள் நான்காவது அணியாக சென்னை நுழையும். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டினால் மாத்திரமே ப்ளே ஒவ் வாய்ப்பை பெற முடியும். உதாரணத்திற்கு வெற்றி இலக்கு 200 ஓட்டங்களாக இருந்தால் பெங்களூர் 2 18 ஓட்டங்களால் வெற்றிபெறவேண்டும். பதிலளித்து துடுப்பெடுத்தாடினால் 18.1 ஓவர்களுக்குள் வெற்றிபெற வேண்டும். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற போட்டிகள் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. கடந்த 5 போட்டிகளில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரே ஒரு தடவையே சென்னையை வெற்றிகொண்டுள்ளது. ஆனால், இந்தப் போட்டி நொக் அவுட்டுக்கு ஒப்பானதாக இருப்பதால் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்த கடுமையாக முயற்சிக்கும். இரண்டு அணிகளினதும் இந்த வருட ஐபிஎல் முடிவுகளைப் பார்க்கும்போது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு கடந்த 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் கடந்த 5 போட்டிகளில் மேடு பள்ளங்களை சந்தித்து வந்துள்ளது. எவ்வாறாயினும் கடந்த போட்டி முடிவுகளை வைத்து எந்த அணி வெற்றிபெறும் என்பதை அனுமானிக்க முடியாது. இன்றைய போட்டியில் எந்த அணி சகலதுறைகளிலும் சிறப்பாக விளையாடுகின்றதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும். இது இவ்வாறிருக்க, இன்றைய போட்டியுடன் சென்னை வெளியேறினால் அப் போட்டி 43 வயதை அண்மித்துக்கொண்டிருக்கும் மஹேந்த்ர சிங் தோனிக்கு பிரியாவிடை போட்டியாக அமையும் என கருதகப்படுகிறது. ஆனால், அது நிச்சயம் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஒருவேளை இது அவரது கடைசியாகப் போட்டியாக இருந்தால் தோனியும் கோஹ்லியும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடும் கடைசிப் போட்டியாகவும் இது அமையும். அணிகள் (பெரும்பாலும்) சென்னை சுப்பர் கிங்ஸ்: ருத்துராஜ் கய்க்வாட் (தலைவர்), ரச்சின் ரவிந்த்ரா, டெரில் மிச்செல் அல்லது அஜின்கியா ரஹானே, ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ். தோனி, மிச்செல் சென்ட்னர், ஷர்துல் தாகூர், மஹீஷ் தீக்ஷன, துஷார் தேஷ்பாண்டே. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்: விராத் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ் (தலைவர்), க்ளென் மெக்ஸ்வெல், ரஜாத் பட்டிடார், மஹிபால் லொம்ரோர், கெமரன் க்றீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள், கரண் ஷர்மா, மொஹமத் சிராஜ், லொக்கி பேர்கசன். https://www.virakesari.lk/article/183877
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.