அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3312 topics in this forum
-
மக்களின் பாதுகாப்பிற்காக எல்லைப் பகுதியில் பதுங்குக் குழிகளை அமைத்தது இந்தியா! இந்திய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பூஞ்ச் மாவட்டத்தில பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஜம்மு – காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய இராணுவ நிலைகளையும், மக்கள் வசிக்கும் பகுதிகளையும் குறிவைத்து சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பிற்காக பதுங்குக் கு…
-
- 1 reply
- 482 views
-
-
மாநிலங்களுக்கான தடுப்பூசியை மத்திய அரசே வழங்கும் – மோடி மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசே வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக நேற்று (திங்கட்கிழமை) மாலை உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளது. அத்துடன் மேலும் மூன்று தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 21 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான செலவை அரவே ஏற்றுக்கொள்ளும். இந்த பணிகளுக்காக ஏற்கனவே 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய வரவு செலவு திட்ட…
-
- 0 replies
- 187 views
-
-
Published By: SETHU 10 AUG, 2023 | 09:21 AM பாகிஸ்தான் பாராளுமன்றம் அந்நாட்டு ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பரிந்துரையின்படி, அரசியலமைப்பின் 58(1) ஆவது பிரிவின்படி ஜனாதிபதி ஆரிவ் அல்வி, பாராளுமன்றத்தை கலைத்துள்ளார் என நேற்று நள்ளிரவு ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் அரசாங்கம் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் 2022 ஏப்ரலில் கவிழ்க்கப்பட்டதையடுத்து, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமயிலான அரசாங்கம் ஆட்சியிலிருந்தது. பாராளுமன்ற பொதுத் தேர்தல் மூலம் புதிய பிரதமர் தெரிவாகும் வரை இடைக்கால பிரதமர் ஒருவரை தெரிவுசெய்வதற்காக எதிர்க்கட்சியினருடன் பேச்ச…
-
- 2 replies
- 230 views
- 1 follower
-
-
ராஸ்தான் மாநிலம் உதயப்பூரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் குலாப் சந்த் கடாரியா | படம்: ஏஎன்ஐ. Published : 21 Jan 2019 15:47 IST Updated : 21 Jan 2019 15:51 IST ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக எதிர்கட்சித் தலைவராக உள்ள குலாப் சந்த் கடாரியா, ''முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ராஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு குலாப் சந்த் கடாரியா பேசியதாவது: தவறவிடாதீர் …
-
- 0 replies
- 371 views
-
-
Published By: DIGITAL DESK 3 12 JAN, 2024 | 11:28 AM புத்தரின் மறு அவதாரம் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நேபாள மதத்தலைவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 'குட்டிப் புத்தர்' என்று அழைக்கப்படும் ராம் பகதூர் போம்ஜன் என்ற மதத்தலைவரே சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவின் தெற்கே உள்ள பாரா மாவட்டத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் சீடராக வசித்து வந்த "சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில்" அவருக்கு எதிராக 2020 ஆம் ஆண்டு கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. …
-
- 2 replies
- 329 views
- 1 follower
-
-
உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 107 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராரா-வில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா என்பவரின் பிரார்த்தனை கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பக்தர்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. சிக்கந்தராராவின் முகல்கடி எனும் கிராமம், தேசி…
-
- 7 replies
- 848 views
- 1 follower
-
-
''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு!! বাংলায় পড়ুনहिंदी में पढ़ेंRead in English எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் நிலைமையை பொறுத்து மாறலாம் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து சதிச் செயல்களில் ஈடுபட்ட…
-
- 1 reply
- 564 views
-
-
இந்திய ராணுவ வீரர்கள் தான் என்னுடைய குடும்பம், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண விரும்புகிறேன் என காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி குறிப்பிட்டார். காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 123 கி.மீ. தூரத்தில் குரெஸ் ராணுவ முகாம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா தலைமையிலான ஆட்சி மலர்ந்து பிரதமரானதும், முதன் முறையாக மோடி இங்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பிரதமர் மோடி பேசியதாவது: தீபாவளியை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடுவது ஒரு பாரம்பரியம் . அதை ராணுவ வீரர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். ஆகவே இங்கு வந்துள்ளேன். நீங்கள் தான் என் குடும்பம். நாட்டில் பல எல்லைப்பகுதிகள் உள்ளன.ஆனால் நீங்கள் இருக்கும் இந்த ப…
-
- 0 replies
- 308 views
-
-
‘கொரோனா’ வைரஸ் – கர்நாடகாவில் அதி உச்ச எச்சரிக்கை ‘கொரோனா’ வைரஸ் பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும், கர்நாடக அரசு, அதி உச்ச எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய வைரஸ் பரவாமல் தடுக்க, மாவட்டம், தாலுகா, பேரூராட்சி வைத்தியசாலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினமும் 24 மணி நேரம் பணியாற்றும்படி, லைத்தியசாலைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மிதமான காய்ச்சல், இருமல் இருந்தால் அலட்சியப்படுத்தாமல், வைத்தியசாலைக்கு சென்று பரிசோதிக்கும்படி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெங்ளூர், மைசூர், தட்சிண கன்னடா, ஹுப்பள்ளி, பெலகாவி, பீதர், கலபுரகி விமான நிலையங்களில், வெளிநாடுகளிலிருந்து வந்திறங்கும் இங்கிருந்து செல்லும் பயணியர் கண்காணிக்கப…
-
- 0 replies
- 239 views
-
-
பட மூலாதாரம், Yousuf Sarfaraz படக்குறிப்பு, மருத்துவமனையின் அலட்சியத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டுரை தகவல் முகமது சர்தாஜ் ஆலம் பிபிசி இந்திக்காக 7 நவம்பர் 2025 ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள அரசு சதார் மருத்துவமனையில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிபிசியிடம் பேசிய மேற்கு சிங்பூம் மாவட்ட மாஜிஸ்திரேட் சந்தன் குமார், எட்டு வயதுக்குட்பட்ட தலசீமியாவால் பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். இந்த வழக்கில், சாய்பாசா சிவில் சர்ஜன், எச…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
இந்தியாவின் பெயரை.... மாற்றுமாறு, வலியுறுத்தும் மனு மீது இன்று விசாரணை! நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனு இன்று (செவ்வாய்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் நாட்டின் பெயரான இந்தியா என்பது ஆங்கில சொல் எனவும் இது ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தை நினைவு படுத்துவதுபோலவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு ஏதுவாக நாட்டின் பெயர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை கை…
-
- 6 replies
- 589 views
-
-
இந்தியாவில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 107 பேர் பலி! இந்தியா – பிகாரில் இன்று (25) இரவு 7 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உத்தர பிரதேசத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் என்று பிகார் அரசு அறிவிவித்துள்ளது. https://newuthayan.com/இந்தியாவில்-ஒரே-நாளில்-ம/
-
- 0 replies
- 404 views
-
-
கொரோனா பாதிப்பு: மணமகன் மரணம் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு கொரோனா பாதிப்பால் மணமகன் மரணம் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 08:34 AM பாட்னா பீகார் மாநில தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை திடீரென்று மரணமடைந்தார். கொரோனா பரிசோதனை நடத்தப்படாமலேயே இறந்த மாப்பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோதனை…
-
- 0 replies
- 246 views
-
-
கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; போலீஸ் தடியடி ரத்தம் சொட்ட, சொட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓடியதால் பரபரப்பு திருவனந்தபுரம், மந்திரி ஜலீல் பதவி விலக கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் ரத்தம் சொட்ட, சொட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கு பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் இந்த விவகாரம் தொடர்பாக மந்திரி கெ.டி.ஜலீலிடம் 2 முறை என்.ஐ.ஏ விசாரணை நடத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நட…
-
- 0 replies
- 315 views
-
-
தடுப்பூசிக்கான செலவைக் கண்டு அரசு மலைத்துப் போகக்கூடாது; மனிதவளத்தின் மீது செய்யப்படும் முதலீடாகக் கருத வேண்டும்: பிரதமர் முன் டி.ஆர்.பாலு பேச்சு சென்னை தடுப்பூசிக்கான செலவின் அளவைப் பார்த்து அரசு மலைத்துப் போகக் கூடாது. இது, அரசு இந்திய மக்களாலான மனிதவளத்தின் மீது செய்யப்படும் முதலீடு என்றுதான் கருத வேண்டும். ஜிஎஸ்டி வரி வருவாய் இவ்வாண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. அரசு ஏனைய தவிர்க்கக் கூடிய செலவினங்கள் அனைத்தையும் ஒத்திவைத்து, கரோனா தடுப்பூசி செலவுக்கு ஒதுக்கீடு செய்வது அவசியம் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு வேண்டுகோள் வைத்தார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று வெளியி…
-
- 0 replies
- 326 views
-
-
அமெரிக்கா பயணமாகிறார்... மோடி! ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்கிறார். குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் குவாட் கூட்டமைப்பில் பேசும் அவர், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பு பணிகள், மற்றும் தடுப்பூசிகளை வழங்குதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசவுள்ளார். அதேநேரம் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் பேசுவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1240545
-
- 0 replies
- 128 views
-
-
ஆவண சரிபார்ப்புக்குப் பின் மாநிலங்களுக்கு உடனடியாக ஜிஎஸ்டி இழப்பீடு! மாநில கணக்காய்வாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபாா்த்து ஒப்புதல் அளித்தவுடன் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையானது மாநிலங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்பட்டு வருவதாக மக்களவையில் நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார். நாட்டில் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் திகதி அமல்படுத்தப்பட்டஜிஎஸ்டி முறையினால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது என்றும் அதைத் தொடர்ந்து வழங்க மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது என்றும் அமைச்சர் நிா்மலா சீதாராம…
-
- 0 replies
- 400 views
-
-
தெலங்கானா ஆளுநர் Vs முதல்வர் கேசிஆர்: "விதிமீறல், சட்ட மீறல்" - கொந்தளிக்கும் தமிழிசை செளந்தரராஜன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கே. சந்திரசேகர ராவுக்கும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இடையிலான மோதலின் உச்சமாக தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அம்மாநிலத்தில் நடைபெற்ற குடியரசு தின தேசிய மூவர்ண கொடியேற்று நிகழ்வில் முதல்வர் பங்கேற்கவில்லை. இந்த விவகாரத்தில் மரபுகளின்படி அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தெலங்கானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், குடியரசு தின நிகழ்வில் முதல்வர் பங்கேற்பது தொடர்பான தகவல் வியாழக்கிழமை காலை வரை ஆ…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
சபரிமலை போராட்டத்தில் கலவரம்.. கல் வீசி தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி.. போலீஸ் குவிப்பு! சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த நபர் பலியாகி உள்ளார். கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடக்கிறது. 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இன்று போராடி வருகிறார்கள். நேற்று மாலையே இதற்கான போராட்டங்கள் தொடங்கிவிட்டது.நேற்று பாஜக சார்பாக கேரளா தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடந்தது. பாஜக மகளிரணி சார்பாக இந்த பெரிய போராட்டம் நடந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வ…
-
- 1 reply
- 311 views
-
-
ஜம்மு-காஷ்மீரில் படையினர் சென்ற பஸ் மீது தாக்குதல் - 34 பேர் பலி ; மேலும் பலர் வைத்தியசாலையில் இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த விபத்தில் சிக்கி 44 பேர் காயமடைந்தும் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் 2500 பேர் சென்று கொண்டு இருந்தனர். …
-
- 1 reply
- 658 views
-
-
சசரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்! பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரீட்சை நிலையத்தில் மோசடி செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டது. மோதல் வன்முறையாக மாறியதால், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது அமித் குமார் என்ற தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் உயிரழந்துள்ளார். PTI செய்திச் சேவையின் தகவல்களுக்கு அமைவாக, பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர…
-
- 1 reply
- 170 views
-
-
அமெரிக்க உளவுத்துறை கொடுத்த வார்னிங்.. அப்படியே நடந்தது.. இந்தியாவிற்குள் கொரோனா வந்தது எப்படி? இந்தியாவில் கொரோனா வைரஸ் தீடீர் என்று வேகம் எடுத்துள்ளது. அதேபோல் உலகம் முழுக்க 80 நாடுகளில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க உளவுத்துறை முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்தது. இந்தியாவில் உள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உளவுத்துறை இந்த எச்சரிக்கையையே விடுத்து இருந்தது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு உளவுத்துறை அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்தது.இந்தியா மீது அமெரிக்க உளவுத்துற…
-
- 0 replies
- 201 views
-
-
பாக்கிஸ்தான் பிரதமர் தன்னை கொரோனா வைரஸ் மருத்துவபரிசோதனைக்கு பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளார் என அவரின் கொரோனாவைரஸ் தொடர்பான ஆலோசகர் மருத்துவர் பைசால் சுல்தான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இம்ரான்கானை சந்தித்த நன்கொடையாளர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இம்ரான்கானை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அவரின் மருத்துவர் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில் உள்ளன என குறிப்பிட்டுள்ள அவரின் மருத்துவ மருத்துவபரிசோதனை முடிவுகள் வெளியானதும் அதனடிப்படையில் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/80467
-
- 0 replies
- 310 views
-
-
கொரோனா பாதிப்பிற்கு முஸ்லிம்களை குறை சொல்லாதீர்கள்:ஆர்.எஸ்.எஸ் தலைவர் - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தை மையப்படுத்தி மொத்த சமூகத்தையும் குறை சொல்லாதீர்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தில் கலந்துக்கொண்ட சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றதில் அந்தந்த ஊர்களில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று பரவியது. நோய் தொற்று பரவியது குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஒரு சிலர் செய்த தவறுக்காக மொத்த சமூகத்தையும் குறை சொல்ல முடியாது. மேலும் பாரபட்ச…
-
- 0 replies
- 303 views
-
-
பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப் 11 Feb, 2026 | 03:23 PM அமெரிக்கா தனது மூலோபாயத் தேவைகளுக்காக பாகிஸ்தானை பயன்படுத்திக்கொண்டு, பின்னர், கழிவறை டிஷ்யூ பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த கால பயங்கரவாதத்தை தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது தவறு. அது மதக் கடமையால் தூண்டப்பட்டது அல்ல, மாறாக அப்போதைய இராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக், முஷாரப் அமெரிக்காவின் ஆதரவைப் பெறச் செய்த தந்திரம் என்றும் அவர் கூற…
-
- 1 reply
- 180 views
- 1 follower
-