Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பூஞ்சை தொற்று :தீவிர சிகிச்சையில் சோனியா காந்தி மின்னம்பலம்2022-06-17 கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகக் காங்கிரஸ் கட்சி இன்று (ஜூன் 17) தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடந்த ஜூன் 1ஆம் தேதி மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அக்கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார். வீட்டுத் தனிமையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூன் 13ஆம் தேதி நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில் சோனியா காந்தி ஜூன் 12ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். …

  2. பிரயாக்ராஜ் வன்முறை: “அவர்கள் எங்கள் குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்” – முகமது ஜாவேதின் மகள் சுமையா 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, முகமது ஜாவேதின் மகள் சுமையா பிரயாக்ராஜில், தன்னார்வலர் முகமது ஜாவேதின் வீட்டின் மீது ஞாயிற்றுக் கிழமையன்று பிரயாக் ராஜ் மேம்பாட்டு அதிகார அமைப்பு புல்டோசர் நடவடிக்கையை மேற்கொண்டது. ஜூன் 10 நடந்த வன்முறைக்கு அவர்தான் முக்கிய காரணம் என்று நிர்வாகம் கூறுகிறது. அங்கு நடந்த விஷயங்கள் குறித்து, அவருடைய மகள் சுமையா பிபிசி செய்தியாளர் அனந்த் ஜனானேவுக்கு அளித்த பேட்டியின் முழு விவரங்கள்: சுமையா, நீங்கள் இந்த வீட்டில் எத்தனை ஆண்டுகளாக வசிக்கிறீர்கள்? நா…

  3. பிபிசி மானிட்டரிங் . 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AQIS முகமது நபியை "அவமதிக்கும்" யாரையும் கொலை செய்வோம் எனவும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் எனவும், அல்-கய்தாவின் தெற்கு ஆசிய கிளை எச்சரித்துள்ளது. இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்துக்கு அல்-கய்தாவின் நேரடி எதிர்வினையாக இது உள்ளது. முகமது நபிகள் குறித்த கருத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் எதிர்வினையைத் தொடர்ந்து, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா அக்கட்சியிலிருந்து சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டார். டெ…

  4. அஃப்ரீன் பாத்திமா வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உபி அரசு - யார் இவர்? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFREEN FATIMA படக்குறிப்பு, அஃப்ரீன் பாத்திமா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மாணவர் தலைவர் அஃப்ரீன் பாத்திமா வீட்டை அரசு இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இவரது தந்தை ஜாவேத் முகமது வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியின் தலைவர். முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா தெரிவித்த ஆட்சேபகரமான கருத்துகளைக் கண்டித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை பிரயாக்ராஜில் நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு சதித்திட்டம் தீட்டியதாக ஜாவேத…

  5. புதிதாக... 10 இலட்சம் பேருக்கு, மத்திய அரசுப் பணியில்... வேலை வாய்ப்பு – மோடி நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புதிதாக 10 இலட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணியில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசுப் பணிகளில் 10 இலட்சம் பேரை நியமனம் செய்ய வேண்டும் என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய அரசுத் துறைகள், அமைச்சகங்கள் ஆகியவற்றை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசுத் துறைகளிலும், அமைச்சகங்களிலும் காலியாக உள்ள இலட்சக்கணக்கான பணியிடங்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாட்டில், மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண…

  6. நேஷனல் ஹெரால்டு: சோனியா குடும்பத்தை சோதிக்கும் ஊழல் புகாரின் பின்னணி என்ன? சோயா மதீன் பிபிசி செய்திகள், டெல்லி 13 ஜூன் 2022, 05:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, நேஷனல் ஹெரால்டு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று, திங்கள்கிழமை அரசு முகமையான அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ளார். இதனையொட்டி, நிதி தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரித்துவரும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 'நேஷனல் ஹெரால்டு' வழக்கு குறித…

  7. இந்தியாவிற்கு... அழுத்தம் கொடுக்க, உலகில் எந்த சக்தியும்... இல்லை – பியுஷ் கோயல் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், கொரோனா காலத்தில் ஏழை நாடுகளை காக்க உலக வர்த்தக அமைப்பு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் இதனால் ஏற்படும் சவாலை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை மீனவர்களுக்கான மானியத்தை குறைப்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் முன்மொழிவுக்கு பியூஷ் கோயல் எதிர்ப்பும் வெளியிட்டார். https://athavannews.…

  8. குடியரசுத் தலைவர் தேர்தல் : தேசிய ஜனநாயகக் கூட்டணி, வெற்றி பெற அதிக வாய்ப்பு குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் சோனியா காந்தி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட எந்தப் பெயரையும் காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை என்றாலும் வேற்றுமைகளை மறந்து நாட்டின் நலன் கருத வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் 15 ஆம் திகதி எ…

  9. நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவத்தினர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிசம்பர் 2021இல் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பலருக்கும் ஒன்றாக இறுதிச்சடங்கு நடந்தது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு தவறான ராணுவ நடவடிக்கையில் குடிமக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு தொடர்பாக ராணுவத்தினர் 30 பேர் மீது நாகலாந்து காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு மேஜரும் அடக்கம். மோன் மாவட்டத்தில் உள்ள திஜித் காவல் நிலையத…

  10. ஹேமு விக்ரமாதித்யா வரலாறு: முகலாய படைகளைத் தோற்கடித்து டெல்லியை கைப்பற்றிய இந்து அரசர் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 20 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 44வது கட்டுரை இது.) ஹரியாணா மாநிலம் ரேவாரியில் வசித்தவர் ஹேமு. இடைக்கால இந்தியாவில் போட்டி முஸ்லிம் ஆட்சியாளர்களிடையே குறுகிய காலத்திற்கு 'இந்து ராஜ்ஜியத்தை' நிறுவிய பெருமை ஹேமுவுக…

  11. வான் தாக்குதலை... வானத்திலேயே முறியடிக்கும், ஏவுகணையை... உருவாக்கும் இந்தியா வான்வழி தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையில் ஏவுகணையை உருவாக்கி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் குறித்த ஏவுகணையை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வாறு தயாரித்துள்ள இந்த உள்நாட்டு ஏவுகணை 300 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரியின் வான் தாக்குதலை முறியடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மற்றொரு ஏவுகணை 160 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது என்றும் இந்தியா அறிவித்துள்ளது. ஒஸ்ட்ரா எம்.கே. 2 மற்றும் எம்.கே.3 ஆகிய இந்த இரண்டு ஏவுகணைகளும் அடுத்த இரண்டு ஆண்ட…

  12. சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிரிவினைவாதிகளை வெளியேற்ற 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்கு மேற்கொண்டது. அந்த நடவடிக்கையின் பெயர் ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்.

  13. சோலோகமி: தன்னைத் தானே மணந்துகொள்ள இருக்கும் குஜராத்திப் பெண் கிளப்பும் விவாதங்கள் கீதா பாண்டே பிபிசி செய்திகள், டில்லி 3 ஜூன் 2022 பட மூலாதாரம்,KSHAMA BINDU தனிநபர்கள் தம்மைத்தாமே மணந்துகொள்ளும் 'சோலோகமி' எனும் திருமண முறை மேற்கில் பிரபலமாகி வரும் ஒன்று. இப்போது இது இந்தியாவில் கால் பதித்துள்ளது. ஜூன் 11ம் தேதி, மேற்கு குஜராத்தின் வதோதரா நகரில், க்ஷாமா பிந்துவின் திருமணம் பாரம்பரிய இந்து முறைப்படி நடைபெற உள்ளது. அப்போது, மணப்பெண்ணுக்கான சிவப்புப் புடவையணிந்து, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, புனிதத் தீயை ஏழுமுறை அவர் வலம் வரப்போவதாக என்னிடம் தொலைபேசியி…

  14. பிர்ஸா முண்டா: பழங்குடிகளால் கடவுளாக போற்றப்படும் இவர் யார்? ஆனந்த் தத் பிபிசி ஹிந்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAJYASABHA.NIC.IN படக்குறிப்பு, பிர்ஸா முண்டா பிர்ஸா முண்டா, 1800களில் கடைசி ஆண்டுகளில் பழங்குடி சமூகங்களுக்காக வாழ்ந்தவர். ஜூன் 9ஆம் தேதி அவரது நினைவு தினம். பிபிசியின் இந்த சிறப்புக் கட்டுரை மூலம் அவரது ஆளுமை மற்றும் சமூகத்திற்கு அவரது பங்களிப்பு பற்றி அறிந்து கொள்வோம். பழங்குடி சமூகத்தின் ஒரு நாயகனாகத் திகழ்ந்த பிர்ஸா முண்டாவை, பழங்குடி மக்கள் இன்றும் பெருமையுடன் நினைவில் கொள்கிறார்கள். பழங்குடியினரின் நலன்களுக்காகப் பாடுப…

  15. பிகாரில் மகனின் சடலத்தைப் பெற மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால் பிச்சை எடுத்த தம்பதி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI பிகார் மாநிலத்தில் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தங்களது மகனின் சடலத்தைப் பெற, மருத்துவமனை ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க, வயதான தம்பதி பிச்சை எடுக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் வட மாநிலங்களில் ஒன்றான பிகாரில், வயதான தம்பதியினர் பிச்சை எடுக்கும் காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியது. பிகாரின் சமஸ்திபுர் மாநகரில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மருத்துவமனையில் உள்ள தங்களது மகனின் சடலத்தைப் பெறுவதற்காக, இறந்தவரின் பெற்றோர், வீடு வீ…

  16. இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் இந்தியாவில் முதன்முறையாக விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களை தவிர சிங்கம், புலி உள்ளிட்ட சில விலங்குகளுக்கும் கடந்த காலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன. இந்நிலையில், இந்தியாவில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய ஆராய்ச்சி மையம் ஒன்று விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இதன்படி, இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டில் தயாரான விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியானது டெல்டா மற்றும் ஒமிக்ரோன் வகை கொரோனாவை அழிக்கும் திறன் படைத்த நோயெதிர்ப்பு ஆ…

  17. கடன் செயலி மோசடி: கடன் வாங்கி விட்டு உயிர் பயத்தில் வாழும் இந்தியர்கள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எளிதாகவும் விரைவாகவும் கடன் கிடைக்கும் என்று கூறி கடன் செயலிகள் மக்களைக் கவருகின்றன கடந்த மார்ச் மாதம் ராஜ், ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கியபோது, அது தமது நிதிப் பிரச்னைகளை விரைவில் தீர்க்கும் என்று நினைத்தார். ஆனால் அது அவரது வாழ்க்கையை மிகவும் மோசமாக்கி விட்டது. புனேவைச் சேர்ந்த இவர் இந்தியாவின் பல டிஜிட்டல் கடன் மோசடிகளில் சிக்கியவர். பலரைப் போலவே, ராஜ் (உண்மையான பெயர் அல்ல) விரைவான, எளிதான கடன் வழங்கும் முறையால் கவரப்பட்டார். அவர் செய்ய வேண்…

  18. முகமது நபிக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய கருத்து : கட்டார், குவைத், ஈரான், சவுதி கடும் கண்டனம் முகமது நபிக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகளான பாஜக தலைவர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு அரபு நாடுகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. இதனை தொடர்ந்து, குவைத், கட்டார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டன. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்த மூன்று நாடுகளிலும், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் ஆட்சேபனைக்கு வழிவகுத்தன. இந்த சர்ச்சை விவகாரத்தில் அரபு நாடுளுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அரபு நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து, பாஜ…

  19. பாஜக-வின் மத நல்லிணக்க அறிக்கை, நபிகள் பற்றி பேசிய நிர்வாகிகள் நீக்கம்: என்ன நடக்கிறது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AJAY AGGARWAL/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES படக்குறிப்பு, நுபுர் ஷர்மா முகமது நபி பற்றி சர்ச்சைக்கிடமாகப் பேசி, கான்பூரில் ஒரு கலவரத்துக்கு வழி வகுத்ததாக குற்றம்சாட்டப்படும் ஒரு பாஜக செய்தித் தொடர்பாளர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசியதாக மற்றொரு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது மட்டுமல்ல, எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் சித்தாந்தத்தையோ, ஆட்களையோ பாஜக முன்னிறுத்தவில்லை என்று ஓர் அறிக்க…

  20. வங்கதேசத்தில் சிட்டகாங் அருகே வெடித்துச் சிதறிய கன்டெய்னர்கள்: குறைந்தது 40 பேர் பலி 5 ஜூன் 2022, 09:06 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேசத்தின் சிட்டகாங் நகர் அருகே உள்ள ஒரு சேமிப்பு கிடங்கில் உண்டான தீ மற்றும் வெடிப்புச் சம்பவத்தால் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். சீதாகுண்டா எனும் இடத்தில் இருக்கும் இந்த சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்கள் வெடித்துச் சிதறியதால், நேற்று இரவு உண்டான தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். உள்ளூர் நேரப்படி சனி இரவு ஒன்பது மணிய…

  21. கான்பூரில்... இரு மதத்தினர் இடையே... வன்முறை: 24 போ் கைது; 800 போ் மீது வழக்குப் பதிவு உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இரு மதத்தினர் இடையே நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. பெண் ஊடகப்பேச்சாளர் நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை வெளியிட்டதை அடுத்து வன்முறை பதிவாகியது. இந்த வன்முறை தொடர்பாக 800 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என கான்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். …

  22. இந்தியாவில்... மத சுதந்திரம் பற்றிய, அமெரிக்காவின் விமர்சனத்துக்கு... மத்திய அரசு பதில்! இந்தியாவில் மத சுதந்திரம் பற்றிய அமெரிக்காவின் விமர்சனத்துக்கு மத்திய அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கண்டனம் வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அமெரிக்காவின் அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். அத்தோடு இது போன்ற பாரபட்சமான பார்வைகளை... அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் மத சுதந்திரத்துக்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்ப…

  23. ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு எனப் புகார் - இதுவரை நடந்தவை சுரேகா அப்புரி, பல்லா சதீஷ் பிபிசி தெலுங்கு செய்தியாளர்கள் 4 ஜூன் 2022, 04:49 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, ஹைதராபாத் மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் ஜோயல் டேவிஸ் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மே 28-ஆம் தேதியன்று காரில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஜூன் 3-ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள ஊடகங்களுக்கு காவல்துறை தகவல் அளித்தது. ஐந்து பேர் இந்தக் குற்றத்தைச் செய்திருக்கலாம் என அடையாளம் காணப்பட்டதாகவும் அவர…

  24. காசோலை மோசடி விவகாரம் - தோனி உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (ஜூன் 2) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) காசோலை மோசடி தொடா்பாக கிரிக்கெட் வீரா் மகேந்திர சிங் தோனி உட்பட 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது. பிகாரின் பெகுசராய் பகுதியில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா என்ற நிறுவனம் மீது எஸ்.கே.எண்டர்பிரைசஸ் என்ற முகமை புகாா் மனு அளித்துள்ளது. அந்தப் புகாா் மனுவின்படி, நியூ குளோபல் பிரட்யூஸ் இந்திய…

  25. அயோத்தியில்... "ராமர் கோயில்" கருவறைக்கு, முதல்வர்... அடிக்கல் நாட்டினார்! உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பின்னர், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2023ஆம் ஆண்டுக்குள் கீழ் தளத்தில் ராமர் கோயில் கருவறை கட்டி முடிக்கப்படும் என ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் ரிபேந்திர மிர்ஸா தெரிவித்தார். அத்தோடு அதே ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.