Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எதிரிகளின் பதுங்குக் குழிகளை தகர்க்கும்... வல்லமை கொண்ட, அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த இந்தியா திட்டம்! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜஸ் விமானத்தில் அமெரிக்க ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக குறித்த விமானத்தில் பிரான்ஸின் ஹம்மமர் வகை ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது அமெரிக்காவின் JDAM எனப்படும் நேரடி தாக்குதல் நடத்தும் குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகைக் குண்டுகள் 80 கிலோமீற்றர் மற்றும் அதற்கு அப்பல் உள்ள எதிரிகளின் பதுங்குக் குழிகள், விமான ஓடு பாதைகளை தகர்க்கவும் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மோசமான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களிலும் இந்த வகைக் குண்டுகளை…

  2. எதிர்வரும் 20 இற்கு பின்னர் – எவையெல்லாம் இயங்கலாம்? எதற்கெல்லாம் தடை? எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் பிறகு ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் எனவும் அதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிடும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் என்னென்ன தளர்வுகள்… அதன் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. * ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட…

  3. எதுவுமே என் கையில் இல்லை; மக்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்: பிரதமர் பேச்சு குறித்து காங்கிரஸ் கிண்டல் பிரதமர் மோடி | கோப்புப் படம். புதுடெல்லி எதுவுமே என் கையில் இல்லை. மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியின் பேச்சில் ஒன்றும் இல்லை. வெறும் பேச்சு மட்டும்தான் என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. அதை விரைவில் தீர்க்கக் கோரி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. …

  4. எந்த நாட்டுப் படைகளுக்கும் மாலைதீவில் அனுமதி இல்லை – மாலைதீவு ஜனாதிபதி! மாலைதீவில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றும் அவர்களுக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டுப் படையையோ உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாலைதீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டங்களுடன் மாலைதீவின் வெளியுறவுக் கொள்கையை ஈடுபடுத்த விருப்பம் இல்லை என்றும் புவிசார் அரசியல் போட்டிக்குள் சிக்கிக்கொள்ள மாலைதீவு மிகவும் சிறியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் நாளை (வெள்ளிக்கிழமை) மாலைதீவு ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1359020

  5. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!! 18- வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக செய்தியாளிடம் பேசிய, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தெரிவித்தார். ஒரே கட்டமாக 22 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படவுள்ளது என்றும் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். …

  6. எனக்கா நிற்க சீட் இல்லை.. ஆபீஸில் வாங்கி போட்ட 300 சேர்களை தூக்கி கொண்டு போன காங்கிரஸ் எம்எல்ஏ! மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் தனக்கு கட்சி மேலிடம் சீட் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் ஆபீஸுக்காக தான் வாங்கிக் கொடுத்திருந்த 300 சேர்களை தூக்கிக் கொண்டு போன செயல் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பெயர் அப்துல் சத்தார் நபி என்பதாகும். இவர் தற்போது சில்லோட் என்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் ஒளரங்காபாத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் கட்சியில் சீட் கிடைக்கவில்லை. கடுப்பான அப்துல் சத்தார் தனது ஆதரவாளர்களோடு கட்சி அலுவலகத்திற்குப் போனார். அங்கு போட்டிருந்த 30…

  7. எனது பாட்டி மற்றும் தந்தையை வன்முறையில் இழந்தவன் நான்: ராகுல்காந்தி ‘எனது பாட்டி மற்றும் தந்தையை வன்முறையில் இழந்தவன் நான், எனவே வன்முறையினால் தனிப்பட்ட முறையில் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். இதில் இருந்து மீண்டு வர எனக்கு கிடைத்த ஒரே வழி தவறு செய்தவர்களை மன்னிப்பது தான்’ என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஜேர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், நேற்று (புதன்கிழமை) ஜேர்மனியை சென்றடைந்தார். அங்கு ஹம்பர்க் நகரில் இடம்பெற்ற கலந்துரையாடல் கூட்டமொன்றில் பங்கேற்று பேசிய ராகுல் மேற்படி தெரிவித்திருந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குற்றவாளிகளான பே…

  8. படக்குறிப்பு, மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான என். சங்கரய்யா சென்னையில் இன்று காலமானார். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான என். சங்கரய்யா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 102. என். சங்கரய்யா 102 வயதைத் தொட்டபோதிலும் ஆரோக்கியமாகவே இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திங்கட்கிழமையன்று ச…

  9. என்டிஆரின் மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுப்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் இளைய மகள் காந்தாமனேனி உமா மகேஸ்வரி இறந்த நிலையில், அவரது ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், நடிகருமான மறைந்த என்டிஆரின் 12 பிள்ளைகளில் இளையவர்தான் உமா மகேஸ்வரி. ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மனைவியின் தங்கை ஆவார். அவரது இறப்பு செய்து குறித்து அவரது சகோதரரும், நடிகருமான பாலகிர…

  10. என்ன பேச வேண்டும் என் பிரதமர்?- இந்தியாவுக்குத் தேவை அதிகாரப் பரவலாக்கல் அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்! ஒரு பேரிடரை எதிர்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் பெரிய படிப்பினை, ‘உண்மையில் நாம் யாராக, என்னவாக இருக்கிறோம்?’ என்பதை நாமே புரிந்துகொள்வதுதான். நம்முடைய எல்லா பலங்கள், பலவீனங்களையும் ஒரு பேரிடர் அம்பலமாக்கிவிடுகிறது. கரோனா கிருமிக்காக ஒட்டுமொத்த நாடும் போராடிவரும் இந்நாட்களில், சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இந்த நாட்டைப் பீடித்திருக்கும் மோசமான ஒரு கிருமி நம் கவனத்தைக் கோருகிறது - அதிகாரக்குவிப்பு; இனியேனும் அதற்கு எதிரான சிகிச்சையை நாம் உடனடியாகத் தொடங்கிட வேண்டும். உலகம் முழுக்க கரோனா பரவியிருப்பதாலேயே உலகத்தின் ஒவ்வொரு நாடும் அதை எப்படி எதிர்கொள…

    • 1 reply
    • 447 views
  11. என்னதான் நடந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மாற்றப்படாது- மோடி திட்டவட்டம் எவ்வளவு அழுத்தங்கள், நெருக்கடிகள் வந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது பிரிவு சிறப்பு அந்தஸ்து இரத்து ஆகியவற்றைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட அவர், அங்கு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “எவ்வளவு அழுத்தங்கள், நெருக்கடிகள் வந்தாலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு இரத்து ஆகியவற்றைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. …

  12. எம்.ஜே. அக்பர் ராஜிநாமா: பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவி விலகியுள்ளார். இதனை டிடி நியூஸ் செய்தி முகமை உறுதிபடுத்தியுள்ளது. Getty Images தன் மீதுதவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தான் நீதிமன்றத்தில் நியாயம் கோரவுள்ளதாகவும் எம்.ஜே. அக்பர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து தான் ராஜிநாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் பணியாற்றவும், நாட்டுக்கு சேவை செய்யவும் தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோதிக…

  13. எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது ! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற எயார் இந்தியா விமான விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை கடந்த 8-ம் திகதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது…

  14. நவம்பர் 1ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை எயார் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுன் இன்று புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சீக்கிய இனப்படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு ஆண்டை முன்னிட்டு எயார் இந்தியா விமானங்கள் தாக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் கனடாவில் இரட்டைக்குடியுரிமை வைத்துள்ள சீக்கியர்களுக்கான நீதி (எஸ்எஃப்ஜெ) என்ற அமைப்பின் நிறுவனரான பன்னுன் கடந்த ஆண்டும் இதே நேரத்தில் இப்படியான எச்சரிக்கை விடுத்திருந்தார். வெடிகுண்டு மிரட்டல்கள் முன்னதாக கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. பின்னர் இவை புரளி என்று த…

  15. எயார் இந்தியாவின் பங்குகளை தனியார் துறையினரிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானம்! எயார் இந்தியாவின் பங்குகளை தனியார் துறையினரிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான ஒப்புதல் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் எயார் இந்தியா விமானச்சேவை நிறுவனம் 7,600 கோடி இந்திய ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கியிருந்தது. இந்த நிலையிலேயே, அந்த நிறுவனத்தின் 95 சதவீத பங்குகளை தனியார் துறையினரிடம் ஒப்படைப்பதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/எயார்-இந்தியாவின்-பங்குக/

  16. எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி விவகாரம்: சட்டமா அதிபர் சி.ஐ.டி.க்கு முக்கிய அறிவுறுத்தல்! by : Jeyachandran Vithushan எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவை கைது செய்ய சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவருடைய மனைவி பிரியங்க நியோமலி விஜயநாயக்கவையும் கைது செய்யவும் அவர்களுக்கான பிடியாணையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் சி.ஐ.டி.க்கு இன்று (திங்கட்கிழமை) அறிவுறுத்தியுள்ளார். விமானக் கொள்வனவு தொடர்பாக ஶ்ரீலங்கன் விமான சேவை மற்றும் ஏயார்பஸ் நிறுவனத்திற்கு இடையில் இடம்பெற்…

    • 0 replies
    • 202 views
  17. பாகிஸ்தான் தனது பொருளாதார தடுமாற்றங்களைச் சீர்த்திருத்த பலவகைகளிலும் போராடி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டுக்குப் புதிய பின்னடைவாக கச்சா எண்ணெய், எரிவாயு எடுக்கும் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. கராச்சி நகரின் அரபிக்கடல் பகுதியில் எரிவாயு, கச்சா எண்ணெய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் அந்நாடு ஈடுபட்டிருந்தது. ஆனால் அவர்கள் இத்தனை காலம் முயன்று பார்த்ததில் எதிர்பார்த்ததைப் போல் தோண்டிய இடத்தில் எரிவாயுவும் இல்லை, கச்சா எண்ணெய்க்கான வாய்ப்பும் இல்லை என்று தெரியவந்ததாக பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சக தெரிவித்துள்ளது. தங்கள் தேவைக்கான எண்ணெய் அங்கு உள்ளது அதனை எடுக்கலாம் என்று தொடங்கிய திட்டம் தோல்வியடைந்தது பாகிஸ்தானுக்கு பெர…

  18. எலோன் மஸ்க்கின் எக்ஸ்... இந்திய அரசாங்கம் மீது வழக்கு தொடர்வு! எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் டுவிட்டர் என்று அழைக்கப்பட்டது), இந்திய அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வ சவாலைத் தொடங்கியுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதன் தணிக்கை திறன்களை சட்டவிரோதமாக விரிவுபடுத்துவதாகக் குற்றம் எக்ஸ் சாட்டியுள்ளது. மார்ச் 5, 2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட சட்டப் பாதுகாப்புகளைத் தவிர்த்து, உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான ஒரு இணையான அமைப்பை புது டெல்லி உருவாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டுகிறது. பில்லியனர் தனது ஏனைய உயர்மட்ட முயற்சிகளான ஸ்டார்லிங்க் மற்றும் டெஸ்லாவை இந்தியாவில் தொடங்கத் தயாராகி வருவதாகக் கூறப்ப…

  19. எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 88 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் அறிவித்துள்ளனர். எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 88 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் அறிவித்துள்ளனர். பங்கதுனி தீவில் இருந்து இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 வங்கதேச படகுகளை ரோந்து பணியில் ஈடுபட்ட வீரர்கள் கைப்பற்றிய நிலையில், படகில் இருந்த சுமார் 360 கிலோகிராம் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேநேரம் 88 வங்கதேச மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்ச்சியாக வி…

  20. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறுவிதமாக பதிலடி : இந்திய இராணுவ தளபதி October 28, 2018 இந்தியாவின் காஷ்மீர் மாநிலாத்தின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறு விதமாக பதிலடி மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீரில் ஆயுததாரிகளுக்கு ஆதரவு தரும் விதமாக பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் தினமும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த கல்வீச்சில் 22 வயது ராஜேந்திர சிங் என்னும் படை வீரர் ப உயிர் இழந்திருந்தார். . இதையடுத்து ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார…

  21. எல்லை பாதுகாப்பை வலுபடுத்த ரஃபேல் விமானங்களை களமிறக்குகிறது இந்தியா! எல்லைப் பகுதியை வலுப்படுத்தும் நோக்கில் ரஃபேல் போர் விமானங்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி 5 ரஃபேல் விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த விமானங்கள் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்தடையவுள்ளன. இதில் 3 விமானங்கள் இரு விமானிகளை கொண்டதாகவும், இரு விமானங்கள் ஒரு விமானியை கொண்டதாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ரஃபேல் விமானங்கள் வானிலிருந்து தரை இலக்குகளையும் வான் இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டது. இந்தியா வர உள்ள விமானங்கள் 300 கிமீ தூரத்தில் தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவு…

  22. மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து நரேந்திர மோதி அரசு 9 ஆயிரம் கோடி மதிப்பிலான இரு கடன்களை பெற்றுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க இக்கடன் பெறப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் மற்றும் பிபி செளத்ரி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாகூர் இவ்வாறு கூறி உள்ளார். பட மூலாதாரம், Getty Images …

  23. கவுகாத்தி : கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, அண்டை நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மணிப்பூர் அரசு, மியான்மர் எல்லையை, காலவரையின்றி மூடியுள்ளது. அந்த வழியாக வெளிநாட்டவர் உள்ளே வருவதற்கு தடை விதித்துள்ளது. எல்லை பகுதிக்கு செல்ல வேண்டாம் என மக்கள் கேட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மிசோரம் மாநில அரசும் மியான்மர் மற்றும் வங்கதேச எல்லைகளை மூடியுள்ளதுடன், கொரோனா பரவலை தடுப்பதற்காக வெளிநாட்டினர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அருணாச்சல பிரதேச அரசும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு வழங்கப்படும் அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. மறுஉத்தரவு வரும் வரை, அனுமதி வழங்கப்படாது என தெரிவித்துள்ளத…

    • 0 replies
    • 310 views
  24. எல்லைப் பகுதியில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது : முதல் முறையாக ஒப்புக்கொள்ளும் சீன அரசு! அசல் எல்லைக்கோட்டு பகுதியில் இந்தியாவுடன் மோதலை ஏற்படுத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் திட்டமிட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் அசல் எல்லைக்கோட்டு பகுதியில் நிகழ்ந்து வரும் மோதல் சீன ஜனாதிபதியின் தனிப்பட்ட தலையீட்டின் காரணமாக திட்டமிடப்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வமான அரசு ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லைப் பகுதியில் சீன அரசு திட்டமிட்டு தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக இந்தியா பலமுறை குற்றம் சுமத்தியிருந்தது. இருப்பினும் சீனா இதனை மறுத்து வந்தது. இந்த நிலையில், சீனா முதன்முறையாக இந்தியாவின் குற்றச்சா…

  25. எல்லைப் பகுதியில்... சீனாவை, எச்சரிக்கும் வகையில் இந்தியா போர் பயிற்சி! சீனாவை எச்சரிக்கும் விதமாக லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய விமானப்படையினர் போர் ஒத்திகை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்ற இந்த போர் ஒத்திகை கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த ஒத்திகையில் சி130 ஜே சூப்பர் மற்றும் ஏஎன் 32 ரக விமானங்கள் பங்கேற்றுள்ளன. மேலும் பாராட்ரூப்பர்ஸ் எனப்படும் விமானத்தில் இருந்து குதிக்கும் பாராசூட் வீரர்கள், எதிரிகளின் இலக்குகளை தாக்குவதுபோல் பயிற்சி எடுத்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1247833

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.