Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொரோனாவால் வேலையிழந்தவர் இன்று லட்சத்தில் வருமானம் ஈட்டுகிறார்: யார் இந்த இசாக் முண்டா? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISAK MUNDA படக்குறிப்பு, ஐசக் முண்டா ஒரிசாவைச் சேர்ந்த தினக் கூலித் தொழிலாளி இசாக் முண்டா. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் இருந்தவர், பின் யூட்யூப்சேனல் ஆரம்பித்து வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைந்து யூட்யூப் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனது முதல் வீடியோவைப் பதிவிட்ட இசாக் முண்டாவுக்கு அந்த சமயத்தில் எந்த ஆதரவும் இல்லை. ஓரிசாவைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தில், ஒரு தினக்கூலியாக பணிபுரிந்து வந்த இசாக், கொரோனா ஊரடங்கு க…

  2. ஆயுத உற்பத்தியில்... தன்னிறைவை, நோக்கி நகரும் இந்தியா! ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்வது 47 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ‘சிப்ரி’ நிறுவனம் உலக நாடுகளின் ஆயுதக் கொள்முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், கடந்த 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில் இந்தியாவின் இராணுவ தளவாடங்கள் இறக்குமதி 21 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ரஷ்ய ஆயுத இறக்குமதி 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில் 69 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1272036

  3. ஹிஜாப் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியீடு! ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது. ஹிஜாப் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணை தொடர்ச்சியாக 11 நாட்கள் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வெளியாகவுள்ளது. அதேநேரம் பெங்களூரில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும், போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும் காவல் துறை தடை விதித்துள்ளது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து …

  4. ஏவுகணை சோதனை: பாகிஸ்தானுக்கு பாராட்டு, இந்தியாவுக்கு சில கேள்விகள் - ஓர் அலசல் சஹர் பலோச் பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. பாகிஸ்தான் அப்படி செய்யாதது, புத்திசாலித்தனமான முடிவு மட்டுமின்றி ஒரு விவேகமான முடிவாகும்," என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 2022ஆம் ஆண்டு மார…

  5. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய... மருத்துவ மாணவர்கள், உச்சநீதிமன்றில் பொதுநல மனுத்தாக்கல்! உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கை எடுத்து வருவதால் அங்கு மருத்துவம் படித்துவந்த ஏராளமான இந்திய மாணவா்கள் படிப்பை பாதியில் கைவிட்டு நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் தனிமனித சுதந்திரம் மற்றும் வாழ்வுக்கான பாதுகாப்புக்கான அடிப்படை உரிமை அளிக்கிறது. அதனடிப்படையில் இந்த மாணவா்கள்…

  6. ஐந்து மாநில தேர்தல்கள் சொல்லும் செய்திகள் என்ன..? - சாவித்திரி கண்ணன் எங்கே பாஜகவின் ஆட்சி நடந்ததோ, அங்கெல்லாம் அவங்க ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள்! அதாவது, அதிகாரத்தால், அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வது என்பது பாஜகவின் பார்முலா! பஞ்சாப்பில் பாஜகவை பஞ்சராக்கிவிட்டார்கள் மக்கள்! மற்ற மாநிலங்களில் எப்படி வெற்றியை கொய்தது பாஜக? பஞ்சாபில் பாஜக வசம் ஆட்சி இல்லாதால் அவர்களால் அங்கே வெற்றி பெற முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு நடந்த மேற்கு வங்க தேர்தலிலும் இதை நாம் பார்த்தோம். பஞ்சாப்பில் சென்ற சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று வந்த காங்கிரஸ் இந்த தேர்தலில் மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது! சித்துவும்…

  7. இது 2024 எம்.பி தேர்தலுக்கான முன்மாதிரி: மோடி மின்னம்பலம்2022-03-11 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். ஐந்து மாநிலத்தில் சட்டப்பேரவையில் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழலில் நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வந்தனர். அப்போது பிரதமர் மோடி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். “இன்று மகிழ்ச்சியான நாள். ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திய அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. இந…

  8. தேர்தல் நடந்த 5 இந்திய மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் நிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம் என, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதி தொடங்கியது. மார்ச் 7ஆம் தேதி 7வது …

    • 4 replies
    • 473 views
  9. உக்ரைனுக்கு தேவையான... மனிதாபிமான உதவிபொருட்களை அனுப்பியது இந்தியா! இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு இரண்டாவது தவணையாக மனிதாபிமான உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார். இதன்படி உணவு, மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படை விமானம் ருமேனியா சென்றடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புகாரெஸ்ட் விமான நிலையம் வந்தடைந்த உதவிப் பொருட்களை ருமேனிய அதிகாரிகளிடம் வழங்க உள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1271255 ################ ################ ############### ஸ்ரீலங்கா இன…

  10. நீட்.. நுழைவுத் தேர்வு எழுத, இனி வயது எல்லை இல்லை! இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது எல்லை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பாணையை அதற்கேற்ற வகையில் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மருத்துவம் படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும், நாட்டில் மருத்துவக் கல்வியை வலுப்படுத்த உதவும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாணடவியா கூறியுள்ளார். பொது பிரிவினருக்கு 25 வயது, மற்ற இடஒதுக்கீடு பிரிவினருக்கு 30 …

  11. யார் இந்த கங்குபாய்? கணவனால் விற்கப்பட்ட 16 வயது பெண். மாஃபியா ராணியாக மாறியது எப்படி? பிரசாந்த் முத்துராமன் பிபிசி தமிழ் 8 மார்ச் 2022 பட மூலாதாரம்,PEN PRODUCTIONS படக்குறிப்பு, கங்குபாய் திரைப்படம் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகியுள்ள கங்குபாய் திரைப்படத்தின் மூலம் இணையத்தில் தேடுபொருளாகியிருக்கிறார் கங்காபாய். எழுத்தாளர் சைதி ஹுசைன் எழுதிய மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற புத்தகத்தில் இடம்பெற்ற கதையை அடிப்படையாகக் கொண்டுதான் இது படமாகி இருக்கிறது என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். உண்மையில் என்ன சொல்கிறது இந்தப் புத்தகம்? உண்மையான கங்குபாயின் கதை …

  12. இந்தியா... ஆயுத உற்பத்தியில், தற்சார்பு நிலையை அடைய வேண்டும் – நரவனே இந்தியா ஆயுத உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், உக்ரைன் போரை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் இந்தியா போர்களை எதிர்கொள்ள ஆயுதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். சொந்த நாட்டின் ஆயுத உற்பத்தியை வைத்து போரை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் போர்கள் மூளலாம் . அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை உக்ரைன் போர் நமக்கு உணர்த்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1271079 ################## …

  13. இந்தியா – சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு! இந்தியா – சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஜனவரி மாதம் இரு நாடுகள் இடையே 14ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், சுமூக முடிவு எட்டப்படாதமையினால் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. கடந்த 2020 ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீன இராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. https://athavannews.com/2022/1271114

  14. ரிசர்வ் வங்கி கையேடு: எத்தனை விதமான நிதி மோசடிகள்? தற்காத்துக்கொள்வது எப்படி? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வாடிக்கையாளர் கல்வி மற்றும் பாதுகாப்புத் துறையின் பொது விழிப்புணர்வு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, நிதி மோசடிகளை எப்படி தடுப்பது என்பது குறித்த கையேட்டை வெளியிட்டுள்ளது, 'BE(A)WARE' என்ற தலைப்பில் கையேடு வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள கையேட்டில் வங்கி சார்ந்த 14 வகையான நிதி மோசடி வகைகள், வங்கி சாராத 6 நிதி மோசடி வகைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன, இந்த மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் குறிப…

  15. பாலஸ்தீனத்திற்கான... இந்திய தூதரக அதிகாரி, மர்மமான முறையில் உயிரிழப்பு! பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி முகுல் அர்யா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பாலஸ்தீன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவருடைய உடலை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகுல் ஆர்யா ரஷ்யா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் யுனெஸ்கோவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1270711

  16. உக்ரைன் அதிபருடன்... பேச்சுவார்த்தை, நடத்தும் மோடி! உக்ரைன்- ரஷ்யா இடையில் 12 நாட்களாக போர் சூழல் நீடித்து வருகின்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். போர் சூழல் காரணமாக இதுவரை 15 இலட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பின் ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி ருவிட்டரில் தெரிவித்துள்ளாா். அதேநேரம் போரை நிறைவுக்கு கொண்டுவர ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த சூழலில் இந்தியா உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1270727

  17. உக்ரைன் மீதான போரை நிறைவுக்கு கொண்டுவர... இந்தியா, ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் – டொமினிக் ராப் உக்ரைன் மீதான போரை நிறைவுக்கு கொண்டுவர இந்தியா, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய துணைப் பிரதமர் டொமினிக் ராப், ரஷ்யாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள இரு நாடுகளும், உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினரான சீனாவும் உறுப்பினரான இந்தியாவும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரு நாடுகளும் ரஷ்யாவுக்கு அழுத்தம் தர வேண்டும் …

  18. ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா… காரணம் என்ன உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இதற்கான காரணங்கள் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 3ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ்-வை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நட…

    • 5 replies
    • 428 views
  19. பதுங்கு குழிகளில் உணவும் தண்ணீரும் இல்லாமல் தவித்தோம் – உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் தகவல் March 6, 2022 உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், பதுங்கு குழிகளில் உணவும் தண்ணீரும் இல்லாமல் தவித்ததாகவும், அங்கிருந்து தப்பிக்க பூஜ்ஜிய வெப்பநிலையில் நடந்ததாகவும் கூறியுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நூர் ஹாசன், “நான் இந்தியாவைச் சேர்ந்த 50 மாணவர்களுடன் இணைந்து, ருமேனிய எல்லையை அடைய மார்ச் 1 ஆம் தேதி கிவ் நகரில் உள்ள எனது கல்லூரியில் இருந்து பஸ்ஸை வாடகைக்கு எடுத்தோம். உக்ரேனிய இராணுவத்தின் பல சோதனைகளுக்குப் பிறகே நாங்கள் எல்லையை அடைந்தோம்” என்று தன் துயர் பயணத்தை ந…

  20. இந்திய மாணவர்கள் எவரும்... வீட்டை விட்டு, வெளியே வர வேண்டாம்! இந்தியத் தூதரகம் அழைப்புவிடுக்கும் வரை உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது. சுமி நகரில் சுமார் 700 மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில். வாகன வசதி கிடைக்காத அவர்கள் நடந்தே நாட்டின் எல்லை வரை செல்ல முடிவெடுத்து ஒரு குழுவாக சென்றுள்ளனர். இது தொடர்பாக படங்கள் வெளியான நிலையில் குண்டுகள் பொழியும் சூழலில் மாணவர்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறும் இந்திய தூதரகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுடன் தூதரகங்கள் மூலம் தொடர்பு கொண்டு வருவதாகவும் அவர்களுக்கு அழ…

  21. பாகிஸ்தானில் மசூதியில்... நடத்தப் பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், 30பேர் உயிரிழப்பு: 50பேர் காயம்! பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியைட் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 30பேர் உயிரிழந்துள்ளதோடு 50பேர் காயமடைந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகையின் போது மசூதியில் குண்டுவெடிப்பு நடந்ததாக அதிகாரிகள் தெரித்தனர். மேலும் துப்பாக்கி ஏந்தியவர்கள் உள்ளே, பிரதான மண்டபத்தில் நிரம்பியிருந்த வழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அறிய முடிகின்றது. எனினும், எந்த குழுவும் உடனடியாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. மத்திய பெஷாவரில் உள்ள மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள…

  22. ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக.... இந்தியாவை, தெளிவான தீர்மானத்தினை எடுக்குமாறு அமெரிக்கா வலியுறுத்து! ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக தெளிவான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு அமெரிக்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா சபையில் மூன்று முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா நடுநிலையாக செயற்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா மீது பொருளாதார தடையை அறிவிக்கவும் ஜோபைடன் அரசுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான தெளிவான தீர்மானத்தினை எடுக்குமாறு அமெரிக்கா…

    • 4 replies
    • 405 views
  23. உக்ரைன்-ரஷ்ய போர் : பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இந்தியர்கள்! கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இராணுவ செய்தி தொடர்பாளர், ”இந்திய மாணவர்களின் பெரும் குழுவை உக்ரைன் இராணுவ அதிகாரிகள் கார்கிவ்வில் வலுக்கட்டாயமாக வைத்துள்ளனர். உண்மையில் அவர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ரஷ்ய இராணுவத்தினர் தயாராக உள்ளன. ரஷ்ய பிரதேசத்தில் இருந்து தனது சொந்த இராணுவ போக்குவரத்து விமானங்கள் அல்லது இந்திய விமானங்கள் மூலம் அவர்களை …

  24. இந்தியாவின் வலிமை அதிகரித்து வருகிறது – மோடி இந்தியாவின் வலிமை அதிகரித்து வருதால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முடிந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியுள்ள நம் மக்களை மீட்க, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். இந்த பணியை விரைவுப்படுத்த நான்கு மத்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பியுள்ளேன். இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நம் நாட…

  25. இந்தியாவில்... பணம் படைத்தவர்களின், எண்ணிக்கை அதிகரிப்பு! இந்தியாவில் பணம் படைத்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் மாத்திரம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைட் பிராங்க் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் உலக அளவில் சொத்து விவர அறிக்கையை தயாரித்துள்ளது. குறித்த அறிக்கையில், 3 கோடி டொலர் மற்றும் அதற்கு மேல் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களை பெரும் பணக்காரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 828 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 6 லட்சத்து 10 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கடந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.