அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
மன்மோகன் சிங்... திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி! இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை மன்மோகன் சிங் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244770
-
- 0 replies
- 547 views
-
-
ஏர் இந்தியாவை வாங்கிய டாடாவுக்கு முன்னுள்ள சவால்கள் என்ன? சல்மான் ராவி பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உப்பு தயாரிப்பிலிருந்து உயரே பறப்பது வரை அனைத்தும் சாத்தியம் என்று மீண்டும் ஒரு முறை மார்தட்டிக்கொள்ளலாம் டாடா குழுமம். ஏர் இந்தியாவின் சின்னமான மஹாராஜா மீண்டும் அதிகாரப்பூர்வமாக டாடா நிறுவனத்திடம் வந்துள்ளது இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை அதிகத் தொகைக்கு வாங்கிய டாடா சன்ஸ் நிறுவனம் இப்போது மீண்டும் அதன் அதிகாரப்பூர்வ உரிமையாளராகிறது. ஜே ஆர் டி டாடா-வால் உருவாக்கப்பட்ட ஏர் இந்தியாவை மீண்டும் உரிமை கொள்வதில் …
-
- 0 replies
- 417 views
- 1 follower
-
-
ஏர் இந்தியாவின்... கடன் தொகையை, ஏற்றது மத்திய அரசு! ஏர் இந்தியாவின் 16 ஆயிரம் கோடி கடன் நிலுவைத் தொகையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் முக்கியப் பங்குகள் 100 சதவீதமும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இதர சொத்துக்கள் குறித்து தீர்மானிக்க Air India asset holding company Ltd என்ற நிறுவனத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் ஏர் இந்தியாவிற்கு சொந்தமான கட்டடங்கள், நிலம் போன்றவற்றை விற்பனை செய்து, கிடைக்கும் தொகையை பயன்டுத்தி கடன்களை அடைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244194
-
- 0 replies
- 173 views
-
-
பாகிஸ்தானின் அணுசக்தி தந்தை அப்துல் காதர் கான் காலமானார் பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் தந்தை என்று கருதப்படும் அப்துல் காதர் கான், தனது 85 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். உலகின் முதல் இஸ்லாமிய அணு ஆயுத சக்தியாக பாகிஸ்தானை மாற்றியமைத்ததற்காகவும், போட்டி மற்றும் சக அணு ஆயுத நாடான இந்தியாவுக்கு எதிரான தனது செல்வாக்கை வலுப்படுத்தியதற்காகவும் அப்துல் காதர் கான் ஒரு தேசிய ஹீரோ என்று பாராட்டப்பட்டார். ஆனால் பின்னர் ஈரான், வட கொரியா மற்றும் லிபியாவுக்கு தொழில்நுட்பத்தை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். தனது வாழ்வின் கடைசி ஆண்டுகளை பலத்த பாதுகாப்புடன் கழித்த அணு விஞ்ஞானி, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நி…
-
- 0 replies
- 276 views
-
-
ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் நர்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோவால் கைது : மும்பை சொகுசுக் கப்பலில் போதை விருந்து? 3 அக்டோபர் 2021, 11:23 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INSTAGRAM படக்குறிப்பு, தன் மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான் (வலது) பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிடம் அரசின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நர்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோவால் ( என்.சி.பி.) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு முதல் அவர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருந்தார். போதையூட்டும் பொருட்களின் கட்டுப்பாடு மற்றும் வரைமுறை தொடர்பான என்.டி.பி.எஸ் (Narcotic Dr…
-
- 4 replies
- 532 views
- 1 follower
-
-
நிலக்கரி பற்றாக்குறை சிக்கலில் மின் உற்பத்தி: மீள்வதற்கு என்ன செய்யப்போகிறது இந்தியா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 50 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய மின் தொகுப்பு எதிர்கொள்ளும் தீவிர சிக்கல். இந்தியாவில் உள்ள சுமார் 135 அனல் மின் நிலையங்கள் நிலக்கரிப் பற்றாக்குறையால் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது இந்தியா? இந்தியாவின் மின்சாரத் தேவையில் பெரும்பகுதி அனல் மின் நிலையங்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் ந…
-
- 1 reply
- 282 views
- 1 follower
-
-
ஒக்டோபர் 15 முதல் சுற்றலா பயணிகளின் வருகைக்கு இந்தியா அனுமதி எதிர்வரும் ஒக்டோபர் 15 முதல் இந்தியா சுற்றுலா பயணிகளின் வருகைக்காக தனது எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளது. கொவிட்-19 தொற்று நோய் பரவலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் கடந்த 2020 மார்ச் மாதம் பயணத் தடை உட்பட கடுமையான முடக்கல் உத்தரவுகளை பிறப்பித்தது. இந் நிலையில் புதிய அறிவிப்பின் மூலம் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக முடங்கியுள்ள இந்திய சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி பெறுவதுடன், சர்வதேச சுற்றுலா பயணிகளும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். “பல்வேறு உள்ளீடுகளை பரிசீலித்த பின்னர், 2021 ஒக்டோபர் 15 முதல் பட்டய விமானங்கள் மூலம்…
-
- 0 replies
- 268 views
-
-
லக்கீம்பூர் வன்முறை சம்பவம் குறித்த, வழக்கு விசாரணையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு! லக்கீம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுமாறு நேற்றைய தினம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து குறித்த வழக்கு சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லக்கீம்பூர் வன்முறை சம்பவம் காரணமாக எட்டுபேர் உயிரிழந்துள்ளதுடன், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. https://athavannews.com/2021/1243571
-
- 0 replies
- 190 views
-
-
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு: 200 பேர் காயம் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்…
-
- 0 replies
- 152 views
-
-
பண்டோரா பேப்பர்ஸில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் - அடுத்தது என்ன? ஜுபைர் அஹமது பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,STU FORSTER-ICC/GETTYIMAGES கசிந்துள்ள பண்டோரா பேப்பர்ஸ் குறித்து இந்திய அரசு பல-அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பண்டோரா பேப்பர்களில் தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட 300 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் (சிபிடிடி) தலைவர் ஜேபி மொஹபத்ரா விசாரணைக் குழுவை வழிநடத்துவார். CBDT தவிர, அமலாக்க இயக்க…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
காஷ்மீரில் ஒரே நாளில் நடந்த மூன்று கொலைகள் - அச்சத்தில் மக்கள் ரியாஸ் மஸ்ரூர் பிபிசி செய்தியாளர், ஸ்ரீநகர் 39 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, 68 வயதான பிரபல மருந்தக உரிமையாளர் மாக்கன் லால் பிந்த்ரு , காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரால் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் உள்ளூரைச் சேராத வர்த்தகர் ஒருவரும் அடங்குவார். கடந்த வார தொடக்கத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பிரபல மருந்தக உரிமையாளரான 68 வயதான மாக்கன் லால் பிந்த்ரு, செவ்வாய்க்…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
இந்திய இசை கருவிகளின் சத்தத்தை... வாகனங்களின் ஒலிப்பான் சத்தமாக மாற்ற நடவடிக்கை இந்திய இசை கருவிகளின் சத்தம் மாத்திரமே வாகனங்களின் ஒலிப்பான் சத்தமாக பயன்படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதற்காக புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அமைச்சர் நிதின் கட்கரி மேலும் கூறியுள்ளதாவது, ஆம்புலன்சுகள் மற்றும் பொலிஸ் துறையினரால் பயன்படுத்தப்படும் சைரன்களின் சத்தத்தை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அகில இந்திய வானொலியில் ஒலிபரப…
-
- 1 reply
- 220 views
-
-
சீன விமானப்படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது – சவுத்ரி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன விமானப்படையினரின் நடமாட்டம் அதிரித்துள்ளதாக விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார். விமானப்படையின் 89 ஆவது ஆண்டு விழா தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்திய விமானப்படை விமானங்களும், முழு அளவில் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு உஷார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ரஃபேல் விமானங்களும், அப்பாச்சி ரக ஹெலிகொப்டர்களும் விமானப்படையில் இணைத்தது, இந்தியாவின் போர் திறனை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1243185
-
- 0 replies
- 134 views
-
-
பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப் பிரதேசம்- சித்தாபூர் மாவட்டத்திலுள்ள ஹர்கான் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் எந்த உத்தரவும் குற்றப்பத்திரிக்கையும் இன்றி கடந்த 28 மணி நேரம் தன்னை பொலிஸ் காவலில் வைத்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியதை தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸ்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். குறித்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும்,…
-
- 0 replies
- 152 views
-
-
கர்நாடகாவில் அசுத்தமான குடிநீரைக் குடித்தமையினால் 6 பேர் உயிரிழப்பு- பலர் கவலைக்கிடம்! கர்நாடகா- ஹூவினஹடகலி தாலுகாவிலுள்ள மகரப்பி கிராமத்தில், அசுத்தமான தண்ணீரை குடித்தமையினால், இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட கிராமத்திலுள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்கு புதிய குழாய் பதிக்கும்போது, பழைய குழாய்கள் சேதமடைந்து கழிவுநீர் குடிநீரில் கலந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே குடிநீரைக் குடித்த பலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2021/1243149
-
- 0 replies
- 151 views
-
-
பிரித்தானியாவில் இருந்து இந்தியா வருவோரை... தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்! பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து இந்தியா வருவோர் தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியா புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா சோதனை செய்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவிற்கு வருகை தந்தவுடன் ஒருமுறையும் எட்டாவது நாளில் ஒரு தடவையும் பி.சி.ஆர் பரிசோதனையை …
-
- 0 replies
- 117 views
-
-
ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்! ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு- காஷ்மீர்- கரன்நகர் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அதேபோன்று, படமலோ பகுதியிலும் நேற்று இரவு 8 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயம…
-
- 0 replies
- 185 views
-
-
கேரளாவில் கிருஷ்ணர் படங்களை வரையும் முஸ்லிம் பெண் இம்ரான் குரேஷி பிபிசி ஹிந்தி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JASNA SALEEM ஜஸ்னா சலீம் தனக்குப் பிடித்த ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசினால் குழந்தை போல துள்ளிக் குதித்து மகிழ்ச்சியாகி விடுகிறார். அந்த ஒரு விஷயம் குழந்தை கிருஷ்ணர். கைகளை வெண்ணைப் பானைக்குள் விட்டபடி, முகத்தில் வெண்ணெயைப் பூசிக் கொண்டிருப்பாரே, அதே கிருஷ்ணர்தான். ஜஸ்னா சலீமுக்கு 28 வயது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். பால கிருஷ்ணரின் ஓவியங்களை கடந்த ஆறு ஆண்டுகளாக வரைந்து வருகிறார். இப்போது ஒரு கோயிலுக்கு தாம் வரைந்த கிர…
-
- 3 replies
- 740 views
- 1 follower
-
-
இந்திய தேசபிதா அண்ணல் காந்தி அடிகளின் 153 ஆவது பிறந்தநாள் இன்று..! உலகுக்கு அகிம்சையை போதித்த இந்தியாவின் தேசபிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 153வது ஜனனதினம் இன்றாகும். அதனை முன்னிட்டு இன்றையதினம் இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்தவகையில் மகாத்மா காந்தியின் 153 வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியார், மன்னார் மற்றும் மலையகத்தில் இடம்பெற்றன. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவு தூபியில் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அண…
-
- 0 replies
- 221 views
-
-
லடாக் விவகாரம் : சீனாவின் குற்றச்சாட்டை புறக்கணிக்கும் இந்தியா! கிழக்கு லடாக் பதற்றத்துக்கு இந்தியாதான் மூலக் காரணம் என சீனா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாடு உண்மைக்கு புறம்பானது என இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, சீனாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனவும், இரு நாடுகளுக்கு இடையேயான அனைத்து ஒப்பந்தங்களையும் மதிக்காமல், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் முந்தைய நிலையை தன்னிச்சையாக சீனா மாற்ற முயன்றதும், சீன பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளுமே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைதியான சூழல் பாதிக்கப்பட்டமைக்கு முக்கிய காரணமாகும் எனத் தெரிவித்தார். எல்லைப…
-
- 0 replies
- 196 views
-
-
டெல்லியில்... பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை! டெல்லியில் ஜனவரி முதலாம் திகதிவரை எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசுகளை வெடிப்பதினால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக கொரோனா நோயாளிகள் கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மக்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் நேற்று முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளது. மேலும் பட்டாசுகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241802
-
- 0 replies
- 146 views
-
-
உலகெங்கும் வாழும் மக்களின் சராசரி உயரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் இந்தியாவிலோ 2005-06 முதல் 2015-16 வரையிலான பத்தாண்டு காலகட்டத்தில் ஆண் மற்றும் பெண்களின் சராசரி உயரம் குறிப்பிடத்தகுந்த அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய மக்களின் உயரம் குறித்த ஆய்வு ஒன்று சமீபத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் மற்றும் சமூக ஆரோக்கிய மையம்(Centre of Social Medicine and Community Health) சார்பில் நடத்தப்பட்டது. ஒருவர் உயரமாக வளர்வது என்பதுகூட அவரது சமூக மற்றும் சுற்றுப்புறக் காரணிகளை மையமாகக்கொண்டே அமைகிறது என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் வாழும் மக்களின் சராசரி உயரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் …
-
- 0 replies
- 397 views
-
-
13 இந்திய மாலுமிகள், இந்தோனேஷியாவில் சிறைப்பிடிப்பு! கச்சா எண்ணெய்யை பிரித்தெடுப்பதற்கு பணம் செலுத்தாத காரணத்தினால் தமிழகத்தை சேர்ந்த மாலுமி உள்ளிட்ட 13 இந்திய மாலுமிகள் இந்தோனேஷியாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த மாலுமிகளை கம்போடியாவுக்கு நாடு கடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு தங்களை காக்க வேண்டும் என மாலுமிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கச்சா எண்ணெயை பிரித்தெடுப்பதில் கம்போடியா அரசுக்கும் அப்ஸரா என்ற எண்ணெய் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை நிலவி வருகின்றது. இந்நிலையில், எம்டி என்ற ஸ்ட்ரோவோலஸ் என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் ஊழியர்கள் கச்சா எண்ணெயை திருடியுள்ளதாக சர்வதேச காவல்துறையினர் சிவப்பு எச்…
-
- 0 replies
- 175 views
-
-
சட்டவிரோதமாக பகிரப்படும் அணுஆயுத தொழில்நுட்பம் குறித்து இந்தியா வலியுறுத்து! அணுஆயுத மூலக்கூறுகள், அது தொடர்பான தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாக பகிரப்படுவது குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தம் குறித்து இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், அணு ஆயுதங்களின் வலையமைப்புகள், அதன் விநியோக முறை, மூலக்கூறுகள், தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாக பகிரப்படுவது குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அணு ஆயுதமற்ற …
-
- 0 replies
- 134 views
-
-
ஆகாஷ் ஏவுகணை, பரிசோதனை வெற்றி! ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது. தரையில் இருந்து ஆளில்லா விமானங்களை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஒடிசாவில் சந்திப்பூரில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆளில்லாத ட்ரோனை குறித்த ஏவுகணை தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளது. https://athavannews.com/2021/1241618
-
- 2 replies
- 501 views
-