அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்? ஜெனி ஃப்ரீடா A health worker takes a nasal swab sample ( AP Photo/Aijaz Rahi ) வேகமாகத் தொற்றுவது, தடுப்பூசி அதிக திறனோடு செயல்படாதது, ஆன்டிபாடி காக்டெயில் மருந்து வேலை செய்யாதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவினால் இதன் மூலம் மூன்றாம் அலை பரவும் என்று கணிக்கின்றனர். இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கம் சற்று தணியத் தொடங்கினாலும் மூன்றாம் அலை விரைவில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா ப்ளஸ் என்ற புதிய உருமாறிய வைரஸ் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்தலாம் என்…
-
- 0 replies
- 161 views
-
-
பிரபல தொழிலதிபர்களின் சொத்துக்கள்... பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு! பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ்மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து முடக்கப்பட்ட 9 ஆயிரத்து 41 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றியுள்ளதாக அமுலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. இது குறித்து அமுலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், 18 ஆயிரத்து 170 கோடியே 2 இலட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதில் 329 கோடியே 67 இலட்சம் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 9,041.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பொதுத்துறை வழங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விஜய்மல்லையா வழக்கில் 25 ஆம் திகதிக்…
-
- 0 replies
- 174 views
-
-
இலவச தடுப்பூசி திட்டம் ஆரம்பம்! நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ள தடுப்பூசிகளை மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில் போட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் தடுப்பூசி போட CoWin தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், நேரடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று பதிவு செய்து போட்டுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1223971
-
- 0 replies
- 211 views
-
-
இந்தியாவுக்கு உதவுவதாக, சேகரித்த நிதியை... பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறதா பாகிஸ்தான்? கொவிட் -19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுடன் இணைந்த தொண்டு நிறுவனங்கள், கோடிக்கணக்கில் நிதி திரட்டின. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம், ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுவதற்கும் வெளிப்படையான பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போலி செய்திகளையும் பிரச்சாரங்களையும் முறியடிக்கும் டிஸின்போலாபின் அறிக்கையின்படி, பாகிஸ்தானுடன் இணைந்த தொண்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் அமைந்துள்ளன. கொவிட் -19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்ற போலிக்காரணத்தில் அவர்கள் பெரும…
-
- 0 replies
- 219 views
-
-
கொவிட் -19 க்கு இடையில் காஷ்மீரில் வருடாந்த 'கீர் பவானி மேளா' அனுஸ்டிப்பு மத்திய காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தின் துல்முல்லா பகுதியில் ஆண்டுதோறும் இடம்பெறம் 'கீர் பவானி மேளா' இடம்பெற்றது. கொவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் பெருந்தொகை மக்கள் கூட்டங்கள் இன்றி இந்த அனுஸ்டிப்புகள் இடம்பெற்றன. இருப்பினும், சிலர் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். துல்லமுல்லா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரக்னியா தேவியின் கோவிலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பக்தர்கள் சுகாதார முறைகளை பின்பற்றி திரண்டனர். தெய்வத்தின் புனித சடங்குகள் மற்றும் ஆரத்தி ஆகியவை கோவிலில் குருக்கள் பாரம்பரிய முறையில் நடத்தப்பட்டன. இந்த மத சடங்கினை சமூக ஊடகங்கள் மூலம் கோவிலுக்கு வரமுடியாமல…
-
- 0 replies
- 827 views
-
-
உத்தரகண்ட் பனிச்சரிவு: `15 அணுகுண்டின் வேகத்தில் இருந்தது` - ஆய்வில் தகவல் பட மூலாதாரம், Getty Images கடந்த பிப்ரவரி மாதம் உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், இமய மலையில் இருந்து ஒரு பெரிய பனி படர்ந்த பாறை பெயர்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த பனிச்சரிவால் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர், மேலும் அப்பகுதியில் கட்டுமானத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நீர் மின் நிலையமும் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பேரழிவை சில காணொளிகள் மூலம் நீங்கள் கண்டிருக்கலாம். 50 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு சர்வதேச குழு, இந்த பனிச்சரிவை முழுமையாக மதிப்பீடு செய்து என்ன நடந்தது என விரிவான விவரங்க…
-
- 0 replies
- 337 views
-
-
கும்பமேளாவில், கலந்து கொண்டவர்களுக்கு... போலியான கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டமை கண்டுப்பிடிப்பு! கும்பமேளாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு போலியான கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் முறைக்கேடுகள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், இது குறித்து விசாரணை நடத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழு மேற்கொண்ட விசாரணைகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு போலி கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய கொரோனா பரிசோதனை கருவி, ஏறக்குறைய 700 பேருக்கு மேல் பயன்படுத்தப்பட்டிருப்பத…
-
- 1 reply
- 642 views
-
-
பயங்கரவாதத்தால்... உலக அமைதி, சீர்கெடுகிறது – ராஜ்நாத் சிங் பயங்கரவாதத்தால் உலக அமைதி சீர்கெடுகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் எல்லைகளை மதித்து நடக்க வேண்டும். தங்களுடைய பிரச்சினைகளை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். உலகின் அமைதி பயங்கரவாதத்தால் சீர்கெடுகிறது. அதைவிட பெரிய சவாலாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புகளும், நாடுகளும் உள்ளன. பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள், நிதியுதவி செய்பவர்கள், பாதுகாப்பு அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வே…
-
- 0 replies
- 163 views
-
-
2 மாதங்களுக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மஹால் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை தாக்கம் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்ட தாஜ்மஹால் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020 மார்ச் 17 ஆம் திகதி தொற்றுநோயின் முதல் அலையின் போது மூடப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 21, அன்று பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது. எனினும் அதன் பின்னர் இந்தியாவில் கொவிட்-19 தொற்று இரண்டாம் அலையின் காரணமாக உத்தரபிரதேச ஆக்ராவில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னமான தாஜ்மஹால் இந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி மீண்டும் மூடப்பட்டது. இந் நிலையிலேயே இன்று புதன்கிழமை தாஜ்மஹால் மீண்டும் கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 333 views
-
-
இலங்கையை எவ்வாறு கையாள்வது? அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்கிறது டில்லி 20 Views இந்து சமுத்திரத்தில் சீனா ஆழமாக கால்பதிப்பதால் இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை வருவதாக புதுடில்லி வட்டாரங்களை ஆதாரங்காட்டி இந்தியாவின் பிரபல தினசரியான ‘தி பிரின்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ‘தி பிரின்ட்’ மேலும் தெரிவித்துள்ளதாவது; “ராஜபக்க்ஷ அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்துயுர் கொடுக்கும் நோக்கத்துடன் காணப்பட்ட புதுடில்லி, தற்போது இந்தியாவை சமநிலையில் வைத்திருப்பதை கைவிட்டுவிட்டு சீனாவின் பக்கம் சாய்வது குறித்த உறுதியான நிலைப்பாட்டை கொழும்பு எடுத்துள்ளதாக கருதுகின…
-
- 5 replies
- 715 views
-
-
இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மற்றுமொறு குழந்தை- மீட்கும் பணி தீவிரம் உத்தரப்பிரதேசம்- ஆக்ரா, தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) காலை, விளையாடிக்கொண்டிருந்த குறித்த குழந்தை தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பதேஹாபாத்திலுள்ள நிபோஹாரா பொலிஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர். குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையை மீட்கும் பணியினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2021/1222553
-
- 2 replies
- 298 views
-
-
இந்தியாவில் வேகமாக பரவிவந்த டெல்டா வைரஸ் புதிய உருமாற்றம் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ், தற்போது டெல்டா-பிளஸ் வைரஸாக உருமாற்றம் அடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் ஆய்வு நிறுவன மருத்துவ அறிவியல் விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா, தனது ருவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளதாவது, “டெல்டா வகை வைரஸில் இருந்து இந்த புதிய உருமாறிய வகை உருவாகியிருக்கிறது. எனினும் இந்தியாவில், இந்த டெல்டா-பிளஸ் வகை வைரஸ் அதிக அளவில் பரவவில்லை. ஆகையினால் தற்போது இதனால் ஆபதில்லை. இதேவேளை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய பகுதிகளிலும் இந்த வகை உருமாற்றம்…
-
- 0 replies
- 389 views
-
-
பஹ்ரைனால்... வேலை அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதிதாக வேலை அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கை பஹ்ரைனால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மே 24 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட இந்த தடை மறு அறிவிப்பு வரை தொடரும் என தொழிலாளர் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மே மாத இறுதியில், கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பஹ்ரைன், சிவப்பு பட்டியலில் பல நாடுகளை இணைத்துள்ளது. இருப்பினும் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து குடியுரிமை பெற்ற நபர்கள் பஹ்ரைனுக்குள் இருந்தால், அவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் வேலை அனும…
-
- 0 replies
- 634 views
-
-
கையைத் தட்டு, கோயில் கட்டு என்ற ஒன்றியப் பிரதமர் இப்போது எங்கிருக்கிறார்?''- யவனிகா ஶ்ரீராம் சு. அருண் பிரசாத் யவனிகா ஸ்ரீராம் “மக்களின் நிலையழிப்பு ஊரின் நடமாட்டமற்ற வெறுமையில், மனித அச்சமாகவும், அவமானகரமான உயிரிழப்புமாகவும் ஆகிப்போனது துயரமானது.” தொண்ணூறுகளுக்குப் பிறகு எழுத வந்த நவீனத் தமிழ் கவிஞர்களில் தனித்துவமானவர் யவனிகா ஸ்ரீராம். ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர். உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை. சமீபத்தில் ‘அடுத்த பிரதிகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்…
-
- 0 replies
- 485 views
-
-
சட்டவிரோதமாக... இந்தியாவில் தங்கியிருந்த, 30இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது! கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கயிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த மார்ச் மாதம் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனையடுத்து பெங்களுர் சென்ற நிலையில், அங்கிருந்து கர்நாடகாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் 6 முதல் 7 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavanne…
-
- 0 replies
- 337 views
-
-
இந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து திரிணமூலுக்கு திரும்பிய முகுல் ராய் புகழாரம் பாஜகவின் தேசிய துணைத் தலைவரான முகுல் ராய், தாய்க் கட்சியான திரிணமூல் காங்கிரஸில் இன்று இணைந்தார். மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் ஒரே தலைவர் மம்தா பானர்ஜி என்று அவர் புகழாரம் சூட்டினார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தவர், பாஜகவ…
-
- 1 reply
- 539 views
-
-
தடுப்பூசிகள் குறித்த அனைத்துவிதமான தகவல்களையும் ஐ.நா-வின் சா்வதேச தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் ஈவின் (eVIN) Electronic Vaccine Intelligence Network என்ற மின்னணு அமைப்பின் வாயிலாக மத்திய அரசு பராமரித்துவருகிறது. கொரோனா தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் முறை உள்ளிட்ட தடுப்பூசி குறித்த எந்தத் தகவலையும் மாநில மற்றும் யூனியன் அரசுகள் மத்திய அரசின் ஒப்புதலின்றி பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று மத்திய அரசு கடுமையான உத்தரவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாளுக்கு நாள் கடுமையாகப் போராடிவருகிறது, இந்தியா. இதைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளும், முகக்கவசங்களும்தான் ஒரே தீர்வு என்பதை அறிந்து அதைக் கூடிய விரைவில் ஒட்டுமொத்த …
-
- 0 replies
- 364 views
-
-
புதிய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்! புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அவரது நியமனம் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஓய்வு பெற்றதை அடுத்து தேர்தல் ஆணையர் பதவி வெற்றிடமானது. தற்போது அந்த இடத்திற்கு அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பதவி வகிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1221412
-
- 0 replies
- 231 views
-
-
இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது -நேபாள அரசு! இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்சினைக் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் உள்ள எல்லை பிரச்சினைக்கு வரலாற்று ஒப்பந்தங்கள், வரைபடங்கள், மற்றும் உண்மை ஆவணங்கள் வாயிலாக தீர்வு காணப்படும். எங்களுக்கும், இந்தியாவிற்கும் இடையே தவறான புரிதல்கள் காரணமாக சில பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவற்றுக்கு தீர்வு காணப்பட்டதுடன், எதிர்கால இலக்கை நோக்கி, நாங்கள் ஒற்றுமையுடன் பயணிக்கிறோம். அண்டை நாடுகள், தங்கள…
-
- 0 replies
- 349 views
-
-
யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை! முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது. இதற்கான உத்தரவை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பிறப்பித்துள்ளார். சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேற்படி பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1221330
-
- 0 replies
- 231 views
-
-
இந்தியாவை தாக்கும் மற்றுமொரு பூஞ்சை தொற்று! இந்தியாவில் முதன் முறையாக தோல்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள ஒருவருக்கு குறித்த நோய் தாக்கம் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட் நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து முற்றிலுமாக குணமடைந்த அவருக்கு காது பகுதியில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் தோல் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களுக்கு கறுப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்றுக்கள் கண்டறியப்…
-
- 1 reply
- 458 views
-
-
இந்திய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி இந்தியாவின், புனேயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்களன்று பிற்பகல் 03.45 (10:15 GMT) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அனர்த்தத்தின்போது சுமார் 37 தொழிலாளர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தீப் பரவலின் பின்னர் பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் பணிகளையும் மீட்பு நடவடிக்கையினையும் முன்னெடுத்தனர். தொழிற்சாலையில் குளோரின் டை ஆக்சைட் பயன்படுத்திய விதத்தில் தவறு நேர்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் தீ விபத்துக்கான உறுதி…
-
- 0 replies
- 183 views
-
-
மாநிலங்களுக்கான தடுப்பூசியை மத்திய அரசே வழங்கும் – மோடி மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசே வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக நேற்று (திங்கட்கிழமை) மாலை உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளது. அத்துடன் மேலும் மூன்று தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 21 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான செலவை அரவே ஏற்றுக்கொள்ளும். இந்த பணிகளுக்காக ஏற்கனவே 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய வரவு செலவு திட்ட…
-
- 0 replies
- 183 views
-
-
புதிய நாடாளுமன்ற கட்டடம் : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு! புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டட பணிகளுக்கு, சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியல் மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயற்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு மேற்படி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக இந…
-
- 0 replies
- 186 views
-
-
பொதுத்துறை வங்கிகளின்... பங்குகளை விற்க அரசு திட்டம்! மூன்று பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தில் பொதுத்துறை வங்களை தனியார் மயப்படுத்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க்ஆப் இந்தியா (BANK OF INDIA) ஆகிய நிறுவனங்கள் விற்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் மதிப்பு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1220917
-
- 0 replies
- 162 views
-