Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாடு தழுவிய போராட்டம்: மோடி பதவியேற்ற கறுப்பு தினம்! மின்னம்பலம் நாடு முழுவதும் நாளை (மே 26) போராட்டம் நடத்த விவசாயிகள் விடுத்த அழைப்புக்கு திமுக உட்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் நாளை பிரதமராக மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் தேதியாக அமையவுள்ளது. எனவே இதைக் கறுப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம் என்று போராட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் நலனுக்காக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்தச் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் கடந்த நவம்பர் 26ஆம் தேதி டெல்…

  2. இந்தியாவில்... இறங்கு முகத்தில், கொரோனா! இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து சென்ற நிலையில், தற்போது இறங்கு முகத்தில் செல்கிறது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் புதிதாக 1 இலட்சத்து 95 ஆயிரத்து 815 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 69 இலட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 40 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 25 இலட்சத்து 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்…

  3. கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக மாநிலங்களுக்கு, மத்திய அரசு மருந்து ஒதுக்கீடு புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வைரஸ் பரவலுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை தொற்றும் பரவி வருகிறது. இந்த தொற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு வழங…

  4. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்து ஏலத்துக்கு விடப்பட்டது ஷேகுபுரா மாவட்டத்திலுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சியொன்று தெரிவித்துள்ளது. பி.எம்.எல்-என் மேலாளர் நவாஸ் ஷெரீப்பின் அசையா சொத்துக்களை ஏலம் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு தேசிய நிர்வாக அமைப்பு (என்.ஏ.பி) தாக்கல் செய்திருந்த மனுவினை, நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து, ஃபெரோஸ்வாட்டானில் 88.4 ஏக்கர் விவசாய நிலங்கள் ஏலத்திற்கு விடப்பட்டன. இதன்போது வர்த்தகர் முகமது போடா,ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10.1 மில்லியன் ரூபாய் ஏலம் எடுத்தார். அதாவது ஷேகுபுரா மாநகராட்சியில், ஏலம் ஏக்…

  5. "ஏர் இந்தியா" நிறுவனத்தின்... வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் திருடப்பட்டன. ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் இணையத்தின் வாயிலாக திருடப்பட்டுள்ளமையினால் சுமார் 45 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை அதிகளவு பயணம் மேற்கொண்டவர்களின் பெயர், பிறந்த திகதி, கிரடிட் அட்டைகளின் விபரங்கள், தொலைபேசி இலக்கம் மற்றும் இரகசிய இலக்கங்கள் ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு ஏர் இந்தியா விமான நிறுவனம் மாத்திரமன்றி சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ், மலேசியா ஏயார்லைன்ஸ், கேத்தே பசிபிக், லூஃப்தன்ஸா, ஃபின் ஆகிய விமான நிறுவனங்களுடைய வாடிக்கையாளர்களின் விபரங்களும் திருடப்பட்டுள்ளம…

  6. `கேரள அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலினத்தவர்; பாராட்டிய சீமான், திருமா!’ - யார் இந்த ராதாகிருஷ்ணன்? சிந்து ஆர் கேரள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் இஞ்சி, சேனைக்கிழங்கு, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு ஆகிய பயிர்களை குத்தகைக்கு எடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார் முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவையில் தேவசம்போர்டு அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள ராதாகிருஷ்ணன். ராக கேரள மாநிலத்தில் தொடர்ந்து இராண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி. இதையடுத்து திருவனந்தபுரத்தில் நேற்று மாலை எளிமையாக நடந்த விழாவில் முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 20 அமைச்சர…

  7. மும்பை கப்பல் விபத்து : உயிரிழப்புகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு! மும்பையில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. டாக்தே புயல் காரணமாக மும்பை கடலுக்குள் எண்ணெய் கிணற்றில் பணியாற்றிய தொழிலாளர்கள் மிதவை கப்பல் ஒன்றில் தங்கியிருந்தனர். குறித்த மிதவை கப்பலானது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில், அதில் பணியாற்றிய 261 பேரும் நீரிழ் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது. குறித்த நபர்களை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 186 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1217260

  8. 20 அமைச்சர்களுடன் பொறுப்பேற்கும் பினராயி விஜயன் மின்னம்பலம் கேரள மாநிலத்தில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் இன்று (மே 20) முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கேரள மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் உட்பட 21 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை இன்று மாலை 3.30 மணிக்குத் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் பதவி ஏற்கவுள்ளது. ஆளுநர் ஆரிஃப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்கவுள்ள நிலையில் இன்று காலை புன்னபுரா வயல…

    • 1 reply
    • 448 views
  9. கொரோனாவால் இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழப்பு இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரேமண்ட் ரபேல் - சோஜா தம்பதிக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. ஜோப்ரெட் வர்கீஸ் கிரிகோரி மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி என பெயர் கொண்ட அந்த சகோதரர்கள் இருவரும் ஒரே மாதிரியாக கணினி பொறியியல் படித்துவிட்டு, ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 24-ம் திகதி ஒரே நாளில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டையர்கள் இருவர…

  10. இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி இந்தியாவில் கொரோனா வரைஸ் தொற்றால் ஒரேநாளில் 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆக உயர்ந்துள்ளது. இதுவே கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பு பதிவான முதல் நாளாகும். இந்நிலையில், ஒரே நாளில் 2,67,334 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாகவும் 3 இலட்சத்தையும் விட குறைவாக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,54,96,330 ஆகும். இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா (5,433,506),…

  11. உத்தரப்பிரதேசத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்ட... ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழப்பு! உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தினேஷ் சந்திர சர்மா தெரிவிக்கையில், ‘ உடல் நிலை சரியில்லாத ஆசிரியர்களும், அரச ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என மே மாதம் முதலாம் திகதி மாநில தலைமைச் செயலர் உறுதியளித்தார். ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடாத ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மீது பணியிடை நீக்கம், ஊதிய பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன…

  12. கொரோனா இரண்டாவது அலை : இதுவரை 200இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு! இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் அதிகபட்சமாக நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் 69 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34 மருத்துவர்களும், டெல்லியில் 27 மருத்துவர்களும் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தோரில் 3 சதவீதமானோருக்கு மாத்திரமே இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி வழங்கப்பட்ட நாளில் இருந்து …

  13. இந்தியாவில்... பயன்பாட்டிற்கு வந்தது, கொரோனா தொற்றுக்கான புதிய தடுப்பு மருந்து! கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2-டிஜி (டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) இதற்கான முதற்கட்ட விநியோகத்தை ஆரம்பித்துள்ளனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு சார்பில் கண்டறியப்பட்ட இந்த மருந்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து இந்த மருந்து இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திரவ வடிவில் இல்லாமல் பவுடர் ( powder) வடிவ…

  14. சீனாவில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பொருட்கள் டெல்லியை வந்தடைந்தன! சீனாவில் இருந்து 3 ஆயிரத்து 600 ஒக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லியை வந்தடைந்துள்ளன. ஒக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து ஒக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருகின்றது. அந்தவகையில் இதுவரை இல்லாத வகையில் சீனாவில் இருந்து ஒக்சிஜன் செறிவூட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி சுமார் 100 டன் எடைக் கொண்ட செறிவூட்டிகள், சீனாவின் ஹொங்கொங் விமானநிலையத்தில் இருந்து போயிங் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேநேரம் மேலும் பல மருத்துவ பொருட்கள் சீனாவில் இருந்து அனுப்பிவைக்கப…

  15. மருத்துவ பொருட்களுக்கு... அதிக விலையை, நிர்ணயிக்கக் கூடாது – இந்தியா வலியுறுத்து! கொரோனா சிகிச்சைக்காக கொள்முதல் செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனா அதிக விலையை நிர்ணயிக்க கூடாது என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹொங்கொங்கிற்கான இந்தியத் தூதர் பிரியங்கா சவுஹான் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தைச் சமாளிக இந்தியாவைச் சேர்ந்த தனியார் மருத்துவ நிறுவனங்கள், சீனாவில் இருந்துதான் அதிக அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. இந்த மருத்துவப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்ட…

  16. இந்தியாவில், கொரோனா பரவ... மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் – WHO இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதமானோர் இந்த…

  17. 2 முதல் 18 வயதானோருக்கு... தடுப்பூசி செலுத்தி, பரிசோதனை செய்ய நடவடிக்கை! இரண்டு வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த பாரத் பயோடெக் நிறுவனம் பரிந்துரைத்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பில் மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”2 முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தி இராண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனைகளை செய்ய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக தன்னார்வலர்களின் 525 குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் வல்லுநர் குழுவால் பரிசோதனை செய்யப்படவுள்ளது. …

  18. இடி, மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு - இந்தியாவில் சம்பவம் இந்தியாவில் வடக்கிழக்கு மாநிலமான அசாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில வனத்துறை தெரிவித்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான கத்தியடோலி வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. புதன்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் யானைகள் உயிரிழந்தாக கூறப்படுகிறது. நேற்று கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஏராளமான யானைகள் உயிரிழப்பு குறித்து தான் கவலைப்படுவதாகவும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் 27,000 க்கும் மேற்பட்ட ஆசியாவைச்…

  19. பொருளாதாரத்தில்... சீனாவை, பின்தள்ளும் இந்தியா! இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதமாக அதிகரிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நாவின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதிப்பிக்கப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடத்தில் 7.5 வீதமாக இருக்கும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் சீனாவை பின் தள்ளும் பொருளாதார வல்லமை மிக்க நாடாக இந்தியா உருவெடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1215250

  20. மியூகோர்மைகோசிஸ்: இந்தியாவில் கோவிட் நோயாளிகளைத் தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’ பட மூலாதாரம், GETTY IMAGES சனிக்கிழமை காலை, மும்பையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அக்‌ஷய் நாயர், மூன்று வாரங்களுக்கு முன்பு கோவிட் -19 தொற்றிலிருந்து மீண்ட 25 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யக் காத்திருந்தார். அறுவை சிகிச்சை அறையின் உள்ளே, காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் ஒருவர் ஏற்கனவே அந்த நீரிழிவு நோய் பாதிப்புள்ள நோயாளிக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவர் அவரது மூக்கில் ஒரு குழாயைவிட்டு, அரிதான ஆனால் ஆபத்தான பூஞ்சை தொற்றான மியூகோர்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றிக் கொண்ட…

  21. கீதா பாண்டே பிபிசி செய்திகள் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக அதிகமாக பரவத் தொடங்கிய வேளையில், இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ஹரித்துவார் நகரில் லட்சக்கணக்கான இந்து பக்தர்கள் கும்பமேளா திருவிழாவுக்காக கூடினார்கள். அப்போது, அந்த திருவிழா இந்தியாவில் கொரோனா வைரஸை அதிகம் பரப்பி விடுமோ என பலரும் அச்சப்பட்டனர். அந்த அச்சம் தற்போது உண்மையாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்தவர்களில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டு இருக்கலாம் எனவும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் அறிக்கைகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. …

  22. இந்தியாவில் கடந்த ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு 'சர்வதேச அளவில் கவலைக்குரிய திரிபு' (variant of global concern) என்று உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. இந்தத் திரிபில் உள்ள B.1.617 மரபணுப் பிறழ்வு பிற திரிபுகளை விட மிகவும் சுலபமாகப் பரவக் கூடியது என்று முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் இது குறித்த மேலதிக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் திரிபின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தி…

  23. திருப்பதி அரச மருத்துவமனையில், ஒக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளர்கள் உயிரிழப்பு! திருப்பதி அரச மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக ஒக்சிஜன் பற்றாக்குறை நிலைவிய நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மேலும் 20 பேர் ஆபத்தான நிலையில், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணா கலநிலைவரங்களை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். இதன்போது பேசிய அவர், சென்னையில் இருந்து வரவேண்டிய ஒக்சிஜ…

  24. சாலைகளில் கொரோனா நோயாளிகள்; பெங்களூரில் மட்டும் 63.7% பாதிப்பு! - கர்நாடகாவின் நிலை என்ன? வருண்.நா கொரோனா ( Twitter/Ani ) கர்நாடகாவில் கண்டறியப்படும் கொரோனா தொற்று எண்ணிக்கையில் 63.7 சதவிகிதத் தொற்றுகள் பெங்களூரு நகர்ப் பகுதிகளிலிருந்தே கண்டறியப்படுகின்றன. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இரண்டரை லட்சத்தைத் தாண்டிக்கொண்டிருந்தது அமெரிக்கா. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-க்கும் குறைவாகவே இருந்தது. அப்போது, `அமெரிக்க மக்கள் அலட்சியமாகச் சுற்றித் திரிகிறார்கள்', `அமெரிக்காவின் நிலைக்கு அதிபர் ட்ரம்ப்தான் காரணம்' என்றெல்லாம் நம்மில் பலரும் பேசிக்கொண்டிருந்தோம். …

  25. லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் 30,983 பாதிக்கப்பட்டுள்ளனர். 36,650 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 290 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,95,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,13,361 பேராக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,162 பேராக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து 10,04,447 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா நோயாளிகளும் மருத்துவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.