Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: பயணிகள் ரயில் தடம் புரண்டதால் எட்டு பேர் காயம்! பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பில் பயணிகள் ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் போலான் மாவட்டத்தின் பேஷி பகுதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் இன்ஜின் உட்பட 8 பெட்டிகள் தடம் புரண்டன. அந்த இடம் மலைப்பாங்கான பகுதியில் உள்ளதால் மீட்புக் குழுவினர் சிரமத்தை எதிர்கொள்வதாக துணை ஆணையர் போலன் ஆகா சமியுல்ல…

  2. ஜி-20 மாநாட்டைப் புறக்கணிக்கும் உலகத் தலைவர்கள்: மோடிக்கு பின்னடைவா? SelvamSep 01, 2023 07:56AM இந்தியாவில் செப்டம்பர் 9 -10 தேதிகளில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் ரஷ்ய அதிபரைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பேசுப்பொருளாக மாறியுள்ளது; இந்தியப் பிரதமர் மோடிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இதில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த குழுவினரும் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். டெல…

  3. வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியுறவுத்துறை அதிர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. பதிவு: நவம்பர் 22, 2019 16:53 PM புதுடெல்லி குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில் நாள்தோறும் சராசரியாக 15 இந்தியர்கள் உயிரிழப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், வளைகுடா நாடுகளில் 2014ஆம் ஆண்டு முதல் 33,988 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 823 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2014-ஆம் ஆண்டில் 5388 பேரும்…

  4. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி சட்டபூர்வமானது எனவும் இதனை அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. பெண் வழக்கறிஞர் புனீத் கவுர் தண்டா என்பவர் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ஒரு மனுவை இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தார். இந்த மனுவில் “மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியானது எனவும் சட்டப்பூர்வமானது என்றும் அறிவித்து, அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். அரசியல் கட்ச…

  5. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு 8.45 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் உடனே டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே இதய சிகிச்சைப் பிரிவு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமர் இருந்த மன்மோகன் சிங், ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்தவர். அத்துடன் மத்திய நிதியமைச்சராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. …

  6. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் சிறைத்தண்டனை இரத்து! மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீட்டின் சிறைத்தண்டனையை இரத்துச் செய்து அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடுகடந்து இலங்கையில் வாழும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீட்டிற்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுச் சிறைத்தண்டனையே தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மாலைத்தீவில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த முஹம்மது நஷீட், பின்னர் ஆட்சியை பிடித்த அதிபர் யாமீன் அப்துல் கய்யூம் அரசாங்கத்தால் பயங்கரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு 13 ஆண்டு சிறைக்காவலில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை முறையான வகையில்…

  7. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அலட்சியம் காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோதி பேசினார். சென்னை அருகே புதன்கிழமை நடந்த அதிமுக தலைமையிலான கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோதி, "தமிழகம் நலம்பெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஜெயலலிதா கனவு கண்ட முன்னேற்ற பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்" என்று பேசினார். சென்னை சென்ட்ரலு…

  8. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்தை, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது. மேலும், இதனை நிறைவேற்ற ஐரோப்பிய யூனியனின் ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து ஜெர்மனி செயல்பட்டு வருகின்றது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும். அதேநேரம் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள அவருக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். எனினும், தற்போது வரை இத்தீர்மானம் மீது ஐரோப்பி…

  9. இந்திய ராணுவத்தை ‘மோடி கி சேனா’ என்று அழைப்பவர்கள் துரோகிகள்: யோகிக்கு வி.கே.சிங் சாட்டையடி பதில் Published : 04 Apr 2019 18:58 IST Updated : 04 Apr 2019 20:20 IST புதுடெல்லி மார்ச் 31, 2019 புகைப்படம். யோகி ஆதித்யநாத், வி.கே.சிங்.| பிடிஐ. ஏப்ரல் 1-ம் தேதி காஜியாபாத்தில் தேர்தல் கூட்டத்தில் இந்திய ராணுவத்தை உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘மோடி கி சேனா’ (மோடியின் படை) என்று வர்ணித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்ப, தேர்தல் ஆணையம் யோகிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தவறவிடாதீர் மோடி மீண்டும் பிரதமரானால் நாடு சர்வாதிகார ஆட்சிக்கு மாறும்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை …

  10. அரசு பணியில் உள்ள பெண்கள், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாலும், 6 மாதம் பிரசவ விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Published:Today at 6 AMUpdated:Today at 6 AM மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை முறையில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. தற்போது அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகள் பராமரிப்புக்கு பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் கிடையாது. இந்நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாலும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என…

  11. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்திய நிர்வாகத்தின்கீழ் உள்ள காஷ்மீரில் போராட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளியன்று வீதிகளில் திரண்ட நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு நாட்களில் காவல்துறை ஒரு புல்லட்டைக்கூட சுடுவதற்காக பயன்படுத்தவில்லை என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான மற்றும் உள்நோக்கங்களைக் கொண்ட செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் வேண்டுகோள் விடுப்பதா…

    • 4 replies
    • 952 views
  12. பட மூலாதாரம், DEEPAK SHARMA 58 நிமிடங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 38 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கிஷ்த்வார் மாவட்ட துணை ஆட்சியர் பங்கஜ் சர்மா பிபிசி நிருபர் மஜித் ஜஹாங்கிரிடம் தெரிவித்தார். குறைந்தது 70 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிஷ்த்வார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி அந்தப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிதான் மசைல் மாதா யாத்திரை தொடங்கும் இடமாகும். கிஷ்த்வார் மாவட்ட துணை ஆட்சியர் பங்…

  13. இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு! அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம் 80-ஜி(2),(பி) பிரிவின் கீழ், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் வெளியிட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இராமர் கோயில் கட்டுவதற்கு பெரிய கம்பனிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற வழிவகை ஏற்பட்டிருப்பதாகவும் நன்கொடைத் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரி விலக்கு கிடைக்கும் என்றும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத…

  14. புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மீண்டும் கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடிப்பு: தலைநகரில் நடந்த அவலம்; தவறுதலாக நடந்துவிட்டதாக விளக்கம் புலம்பெயர் தொழிலாளர்களை மனிதநேயத்தோடு நடத்த வேண்டும் என்று சமூகத்தில் குரல்கள் வலுத்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்களை மனிதர்களென்றும் பாராமல் அவர்கள் மீது கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடித்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே தெரிந்தபின், தவறுதலாக நடந்துவிட்டது, எந்திரக்கோளாறால் அவர்கள் மீது குழாய் பழுதடைந்து மருந்து தெளிக்கப்பட்டது என்று தெற்கு டெல்லி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நொய்டா, டெல்லி பகுதியில் பணியாற்றிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்…

  15. '1965' போர்: சிறப்பு ஆபரேஷனில் சறுக்கிய பாகிஸ்தான் - இந்தியா சுற்றி வளைத்தது எப்படி? ரெஹான் ஃபைசல் பிபிசி செய்தியாளர், டெல்லி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEFENCE.PK படக்குறிப்பு, விமானத்திலிருந்து குதிக்கும் வீரர்கள் 1965 செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தானின் பி -57 விமானம் இந்திய நிலைகள் மீது குண்டு வீச புறப்பட்டபோது, மூன்று சி - 130 ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களும் அதைப் பின்தொடர்ந்து, இந்திய எல்லையை நெருங்கின. ஒவ்வொரு விமானத்திலும் சிறப்புப் படைக் குழுவின் அறுபது கமாண்டோக்கள் இருந்தனர். இரவ…

  16. காந்தியை கொன்ற கோட்சே பற்றி விலகாத மர்மங்கள் - ஓர் அலசல் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MONDADORI VIA GETTY IMAGES படக்குறிப்பு, நாதுராம் கோட்சே உயர்நிலைப் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தையல்காரராகப் பணிபுரிந்தார் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மாலை. இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய தலைவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வெளியே வந்தபோது, அவரை நாதுராம் விநாயக் கோட்சே சுட்டுக் கொன்றார். 38 வயதான அவர் ஒரு வலதுசாரி கட்சியான இந்து மகாசபாவில் உறுப்பினராக இருந்தார். முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும்…

  17. திரௌபதி முர்மு: பாஜகவின் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் - யார் இவர்? 21 ஜூன் 2022 பட மூலாதாரம்,TWITTER குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த முர்மு பழங்குடியினத் தலைவர். குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார். "முதன்முறையாக, பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவை அறிவிக்கிறோம்" என்று நட்டா கூறினார். …

  18. உக்ரைன்- ரஷ்யா போரில்... இந்தியாவின் நிலைப்பாடு, கண்காணிக்கப் பட்டது. இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் காரணமாக நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றை உலக நாடுகள் கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதேவேளை கொரோனா தொற்றை அடுத்து ஊரடங்கு காலம் தொடங்கியதில் இருந்து சுமார் 80 கோடி பேருக்கு இந்தியா உணவளித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்பினாலும் அதற்காக இந்தியாவின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் சமரசம் செய்ய முடியாது என்றும் ஜெய்சங்கர் தெரிவித…

  19. 5ஜி சேவை இந்தியாவில் இன்று தொடக்கம்: இனி மொபைல் சேவை எப்படி வேகம் பிடிக்கும்? 1 செப்டெம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடக்கி வைத்தார். இன்று முதல், நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் 5ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும். டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 6வது இந்திய கைபேசி மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைக்கும் பிரதமர், 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தினார். 5ஜி சேவை அறிமுகமாகப் போகும் சூழலில், அது பற்றிய பல கேள்விகள் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மக்கள் மனங்கள…

  20. ஜி-20 தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு! இந்தியா தலைமை ஏற்கும் காலகட்டத்தில் ஜி20 அமைப்பு, உலக அளவிலான மாற்றத்திற்கு தூண்டுகோலாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 17ஆவது உச்சி மாநாட்டின் நிறைவு கூட்டத்தி; பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த கவுரவம் என்று பெருமிதம் தெரிவித்தார். அடுத்த ஒரு வருடத்தில் ஜி20 நாடுகளின் கூட்டு நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்தியா செயல்படும் என்றும் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ஜி20 மாநாட்டை உலகளவிலான …

  21. பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் பா.ஜ.கவுக்கும் கவலைதான்: அமித் ஷா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி: பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பிரச்சனைக்கு விரைவில் மத்திய அரசு தீர்வு கொண்டுவர…

  22. 13 MAY, 2024 | 10:05 AM நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாகவும் அவர்களும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்பதால் அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த …

  23. ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு: அரியணை ஏறுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி ஐ.ஏ.என்.எஸ்ஹைதராபாத், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. அதேசமயம், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி இழக்கிறது. ராஜகசேகர் ரெட்டியிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடு, தற்போது அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுக்கிறார். மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 108 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 21 இடங…

  24. நாகாலாந்து மாநிலத்துக்கு தனி பாஸ்போர்ட் மற்றும் தனி கொடி பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நாகாலிம் அல்லது அகன்ற நாகாலாந்து கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்- மூய்வா) பிரிவுடன் மத்திய அரசு 2015-ம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் 4 ஆண்டுகளாக இறுதி செய்யப்படாமலேயே இருந்து வந்தது. இதனிடையே நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிலோ கிலோன்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா-நாகாலாந்து இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. 1) நாகாலாந்துக்கு தனி அரசியல் சாசனம் 2…

  25. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்ஞாயிற்றுக்கிழமை இரவு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட நபர்களில் அம்மாநிலத்தின் இரு முன்னாள் முதலமைச்சர்களும் அடங்குவர். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் ஆகியோர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை ஸ்ரீநகரில் உள்ள செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் உறுதிபடுத்தினார். ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும்வரை இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.