அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுள் 447 பேருக்கே பக்க விளைவுகள் ஏற்பட்டன – மத்திய அரசு நாடு முழுவதும் இதுவரை 2.24 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும் இதில் 447 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஜனவரி 17 ஆம் திகதிவரை நாடு முழுவதும் 2 இலட்சத்து 24 ஆயிரத்து 301 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் நாளில் மட்டும் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 229 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த 2 நாட்களில் வெறும் 447 பேருக்கு மட்டுமே தடுப்பூசி …
-
- 0 replies
- 300 views
-
-
ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ` கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. இதிலிருந்தே `கேரள மாடல் முன்னுதாரணமானது' என்பது தெரியவரும்' என்கிறார் மலப்புரம் மாவட்ட ஆட்சியர். என்ன நடக்கிறது கேரளாவில்? மூன்று மடங்காக உயர்ந்த பாதிப்பு இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் கடந்த சில நாள்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 25 ஆம் தேதி நிலவரப்படி 37,593 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 46,164 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழு…
-
- 0 replies
- 314 views
-
-
உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். மோர்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், 71 சதவீதமானவர்கள் மோடியை பிரபலமான தலைவராக அங்கீகரித்துள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ ஜனாதிபதி 66 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 13 உலகத் தலைவர்களைக் கொண்ட குறித்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 26 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளமையும் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2022/126312…
-
- 0 replies
- 159 views
-
-
உக்ரைன் அதிபருடன்... பேச்சுவார்த்தை, நடத்தும் மோடி! உக்ரைன்- ரஷ்யா இடையில் 12 நாட்களாக போர் சூழல் நீடித்து வருகின்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். போர் சூழல் காரணமாக இதுவரை 15 இலட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பின் ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி ருவிட்டரில் தெரிவித்துள்ளாா். அதேநேரம் போரை நிறைவுக்கு கொண்டுவர ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த சூழலில் இந்தியா உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1270727
-
- 0 replies
- 195 views
-
-
மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல் - 155 பேர் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 155 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. #MadhyaPradeshElections #Congress போபால்: மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். மத்தியப்பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நவம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ண…
-
- 0 replies
- 226 views
-
-
ரஃபேல் விவகாரம்: காங்கிரஸ் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெற்றார் அனில் அம்பானி! ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவுனரான அனில் அம்பானி திரும்பப்பெற்றுள்ளார். ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடுகள் காணப்படுவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக குற்றம் சுமத்திவருகின்றது. இந்நிலையில், இதனை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மீது அனில் அம்பானி அவதூறு வழக்கினை தொடர்ந்திருந்தார். இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நிறைவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அனில் அம்பானியின் குறித்த முடிவு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலி…
-
- 0 replies
- 228 views
-
-
ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ததற்கு நேருதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மும்பையில் பிரசார கூட்டம் ஒன்றில் அமித் ஷா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது- காஷ்மீரில் சில இடங்களை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு நேருதான் காரணம். 1947-ல் அவர் நேரம் காலம் தெரியாமல் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தினார். இது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு வழி செய்து விட்டது. காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் கையாண்டிருக்க வேண்டும். ஏனென்றால், அதற்கு முன்பாக படேல் கையில் எடுத்த அனைத்த…
-
- 0 replies
- 293 views
-
-
மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்! கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப் பரிசோதனைக்கு அனுமதியளித்துள்ளதுடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பு மருந்தை ஊசியால் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியைத் தவிர்க்கலாம் என்றும், 0.1 மில்லி அளவிலான மருந்தை மூக்குக்குள் செலுத்திக்கொண்டாலே நோய் எதிர்ப்புத்திறன் உருவாகிவிடும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/மூக்கு-வழியே-செலுத்தும்/
-
- 0 replies
- 351 views
-
-
சவால்களை... எதிர்கொள்ள, ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன – பிபின் ராவத் நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். சுதந்திரத் தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்ட நிலையில், இதன்போது உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆயுதப் படைகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும், எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார்நிலையில் உள்ளன. முப்படைகளுக்கு இடையிலான கூட்டுத்தன்மையை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது அவர்களின் ஒட்டுமொத்த…
-
- 0 replies
- 213 views
-
-
பாலஸ்தீனத்திற்கான... இந்திய தூதரக அதிகாரி, மர்மமான முறையில் உயிரிழப்பு! பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி முகுல் அர்யா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பாலஸ்தீன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவருடைய உடலை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகுல் ஆர்யா ரஷ்யா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் யுனெஸ்கோவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1270711
-
- 0 replies
- 170 views
-
-
பாமாயில் தொடர்பாக இந்தோனீசியா எடுத்துள்ள முக்கிய முடிவு - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ வரும் 28 ஆம் தேதி முதல் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் மற்றும் அதன் மூலப்பொருளான பாமோலின் ஏற்றுமதியை தடை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் நாட்டில் பாமாயில் உற்பத்தி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் 'மலிவாகவும் ஏராளமாகவும்' பாமாயில் கிடைப்பதை உறுதி செய்த பின்னரே ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் உணவுப் ப…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் : பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி! கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் 72 ஆய்வகங்கள் செயற்பட்டு வருகிறது. இங்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் விஞ்ஞான ஆராய்ச்சி கழகம் பயோ-டெக்னாலஜி துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி கழகம் மேலும் 49 ஆய்வகங்கள் செயற்படும். அதே போல் தனியார் ஆய்வகங்களும் கொரோனா வைரஸ் சோதனையை இலவசமாக செய்ய கேட்டு கொள்ளப்படுவார்கள். 51 தனியார் ஆய்வகங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதிக…
-
- 0 replies
- 547 views
-
-
செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி! டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், புகைமூட்டம் நிறைந்த நகரத்தில் மேக விதைப்பு சோதனையை மேற்கொண்ட பின்னர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கம், தெரிவித்துள்ளது. டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிக்கு 1 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் செலவானதாகக் கூறப்படுகிறது. கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தினால் இயக்கப்படும் ஒரு சிறிய, ஒற்றை-இயக்கி விமானம் செவ்வாயன்று வடமேற்கு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் பறந்து, மழையை பொழிய வைக்…
-
- 0 replies
- 56 views
-
-
கொரோனா வைரஸ் : இந்தியாவிற்கு உதவி செய்யும் சர்வதேச நாடுகள்! இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து செல்கின்ற நிலையில், பல நாடுகளும் உதவிகரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் ரஷ்யா. பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா ஆகிய நாடுகள் அனுப்பிவைத்துள்ள மருத்துவ உதவி பொருட்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. இதன்படி 120 ஒக்சிஜன் செறிவூட்டும் சாதனங்கள், வெண்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உதவி பொருட்களுடன் பிரித்தானிய விமானம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவை வந்தடைந்துள்ளது. குறித்த மருத்துவ பொருட்கள் டெல்லி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதுவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்களும் இந்தியாவிடம் அளி…
-
- 0 replies
- 203 views
-
-
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இராணுவ தளவாடங்களுக்கு தடை! வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 108 இராணுவ தளவாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (திங்கட்கிழமை) ஒப்புதல் அளித்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சிறிய ரக போர் கப்பல்கள், பீரங்கி என்ஜின், ரேடார்கள் உள்ளிட்ட 108 இராணுவ தளவாடங்களுக்கான இரண்டாவது இறக்குமதி தடை பட்டியலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இது பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபாட்டுடன் பங…
-
- 0 replies
- 152 views
-
-
செளதிக் பிஸ்வாஸ் பிபிசி நியூஸ் இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. முந்தைய சில ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விட கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்பிட்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பெருந்தொற்று காலத்தில் இறந்தவர்களில் கோவிட்-19 பாதிப்பால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கூறுவது கடினமென்றாலும், அந்தத் தொற்றால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்பை அளவிடுவதற்கான எண்ணிக்கையாக இது உள்ளது. இதுவரை இந்தியாவில் 4,14,000-க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 தொற்று காரண…
-
- 0 replies
- 459 views
-
-
நிலைமாறா பொருளாதாரக் கொள்கை : அசுர வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்தியா By NANTHINI 19 OCT, 2022 | 12:10 PM (எம். மனோசித்ரா) உலகில் நிலப்பரப்பின் அடிப்படையில் 7ஆவது பெரிய நாடாகவும், சனத்தொகை அடிப்படையில் 2ஆவது பெரிய நாடாகவும் காணப்படும் இந்தியா வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தையே கொண்டுள்ளது. எனினும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டால் கூட நிலைமாறா பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி, 2047ஆம் ஆண்டாகும்போது, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 40 டிரில்லியன் டொலர் வரை விரிவாக்கும் இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CI…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
சல்மானுக்கு போன் போட்ட இம்ரான்.. சவுதி, அமீரக உதவியை நாட முடிவு.. நீடிக்கும் பதற்றம்! பாகிஸ்தானில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி அரேபியா மற்றும் அரபு அமீரகத்தின் உதவியை நாடி இருக்கிறார். நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி இந்திய விமானப்படை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு முயன்று வருகிறது. இதில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் பெற முயன்று வருவதாக செய்திகள் வருகிறது.இந்த நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மா…
-
- 0 replies
- 721 views
-
-
இந்திய மாலுமிகள் கடத்தல் விவகாரம் – உறுதி செய்தார் சுஸ்மா சுவராஜ் நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐவர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட இந்திய தூதர் அபய் தாக்கூருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். T.M apecus என்ற இந்திய கப்பலை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் கடந்தமாதம் கடத்தியிருந்தனர். இது குறித்து கப்பலில் பணியாற்றிய மாலுமியின் மனைவியான பாக்யஸ்ரீ தாஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜுயிடம் தன் கணவரை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்…
-
- 0 replies
- 245 views
-
-
ஆந்திரா சிறையில் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் – பிணை வழங்கக் கோரி மனுத்தாக்கல் In இந்தியா August 3, 2019 7:08 am GMT 0 Comments 1128 by : Yuganthini ஆந்திரா சிறையில் 27 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சார்பில் பிணை செய்யகோரி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்- ராஜமுந்திரியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சல்லா எடுகொண்டலும் ஒருவர் ஆவார். கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி முதல் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சை பெற வேண்டியு…
-
- 0 replies
- 454 views
-
-
காஷ்மீர் விவகாரம் ; பயங்கரவாதிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என போர்க் கப்பல்கள் ஆயத்தபடுத்திய இந்தியா ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்பதற்காக இந்திய கடற்படையினர் போர்க் கப்பல்களை கிழக்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் எச்சரிக்கையுடன் நிறுத்தி வைத்துள்ளனர். அத்துடன் ஜம்முகாஷ்மீர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளனர். அப் பகுதியின் நிலைமை அமைதியாக இருந்தபோதிலும், எந்தவொரு அசம்பாவித நடவடிக்கைகளும் இடம்பெறாமல் தடுப்பதற்கே இவ்வாறு பாதுகாப்பு படையினர் கடைமையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை காஷ்மீர் வி…
-
- 0 replies
- 369 views
-
-
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய கோடிக்கணக்கான பக்தர்கள்! திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக வெள்ளிக்கிழமை (14) பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 2025 மகா கும்பமேளா நிகழ்வு தொடங்கியதில் இருந்து 491.4 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதியின் சங்கமம்) நீராடியுள்ளதாக உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, கிட்டத்தட்ட 8.54 மில்லியன் மக்கள் வியாழக்கிழமை மாத்திரம் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல் துறை சுட்டிக்கட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாத பெளர்ணமியில் தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்வ…
-
- 0 replies
- 280 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ வேண்டுகோளின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி மீது குற்றம் சாட்டப்பட்டது. பெல்ஜியத்தில் இருந்து தொழிலதிபர் மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த இந்திய ஏஜென்சிகள், அமலாக்க…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா – 125 குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை! ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 125 குடும்பங்களை தனிமைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்தும், பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 539 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றி வரும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக 125 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய சுகா…
-
- 0 replies
- 243 views
-
-
ஒரு தலைக்காதல்: டிக் டாக் பெண் பிரபலம் கொலை டிக் டாக்கில் பிரபலமான பெண் ஒருவர் அரியானாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 10:25 AM புதுடெல்லி இந்தியாவின் அரியானா மாநிலத்தின் குந்தில் என்னும் பகுதியில் அழுகு நிலையம் நடத்தி வந்தவர் ஷிவானி. இவருடன் இணைந்து, அவருடைய நண்பரான நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளார். அப்போது, சோதித்து பார்த்த போது, அங்கிருந்த கட்டிலின் படுக்கையில் ஷிவானியின் உடல் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்த…
-
- 0 replies
- 327 views
-