Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் – அமித் தேவ் ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என விமானப் படையின் மேற்கு கமாண்டப் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், ‘இந்திய விமானப் படையும், இராணுவமும் இணைந்து 1947 ஒக்டோபர் 27 இல் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இப்போதுள்ள ஜம்மு – காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்களை அந்நாடு சரியாக நடத்துவதில்லை. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட ஜம்மு – காஷ்மீர் முழுவதும் விரைவில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வர…

  2. கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் பதவி, ஜம்முவிலிருந்து திரும்பிய பிபிசி நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரியாசி, கதுவா, ரஜோரி, டோடா – இவை ஜம்முவில் சமீபத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த பகுதிகள். ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலை செப்டம்பர் மாத இறுதியில் நடத்த மத்திய தேர்தல் ஆணையம் தயாராகி வரும் வேளையில் இந்தத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தப் பிரச்னை விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். கதுவாவை தவிர, இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் பிடிபடவோ, கொல்லப்ப…

  3. ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்! ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு- காஷ்மீர்- கரன்நகர் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அதேபோன்று, படமலோ பகுதியிலும் நேற்று இரவு 8 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயம…

  4. ஜம்மு காஷ்மீரில் 4,000 பேர் கைது – சிறைகளில் இடமில்லை August 19, 2019 கடந்த இரண்டு வாரங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 4,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கைதானவர்களைக் காவலில் வைக்க காஷ்மீர் மாநிலச் சிறைகளில் இடமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசுத் தரப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டம் என்ற சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சட்டப்பிரிவின்படி கைது செய்யப்பட்டவர்களை இரண்டு வருடங்கள் வரை…

  5. ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் இன்று -இணைய சேவை நிறுத்தம் October 8, 2018 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அங்கு இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு ஒக்டோபர் 8,10,13,16 ஆகிய திகதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் ந டைபெறும் எனவும் பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் திகதி முதல் 9 கட்டங்களாகவும் நடைபெறவுள்ளது. அதன்படி நகராட்சி அமைப்புகளில் உள்ள 1,145 வார்டுகளில் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய இந்த வார்டுகளில் 4 …

  6. ஸ்ரீநகர்: காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் காணாமல் போன ராணுவத்தைச் சேர்ந்த வீரரின் உடல், குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். ஷா பகுதியில் இருந்து காணாமல் செவ்வாய்க்கிழமை போயிருந்ததாக கூறப்பட்ட பிராந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஹிலால் அஹ்மத் பட்-டின் உடல் அனந்தநாக் மாவட்டத்தின் உட்ரசோ பகுதியில் உள்ள சங்லான் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவ வீரரின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, இது குறித்து விவரமறிந்த வட்டாரங்கள் கூறும்போது, “ராணுவ வீரர்கள் இருவர் அனந்தநாக் ஒட்டிய வனப்பகுதியில் கட…

  7. பட மூலாதாரம், DEEPAK SHARMA 58 நிமிடங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 38 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கிஷ்த்வார் மாவட்ட துணை ஆட்சியர் பங்கஜ் சர்மா பிபிசி நிருபர் மஜித் ஜஹாங்கிரிடம் தெரிவித்தார். குறைந்தது 70 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிஷ்த்வார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி அந்தப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிதான் மசைல் மாதா யாத்திரை தொடங்கும் இடமாகும். கிஷ்த்வார் மாவட்ட துணை ஆட்சியர் பங்…

  8. ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலுடன் தமக்கு தொடர்பில்லை – பாகிஸ்தான் : February 15, 2019 ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கும் தங்களுக்கு தொடர்பில்லை என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விடுமுறைக்குச் சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் 78 வாகனங்களில் அணிவகுத்துச் சென்றபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று வேகமாக வந்து மோதியதில் 44 வீரர்கள் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்த nநிலையில் இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்…

  9. ஜம்மு காஷ்மீரில் பதற்றம்! இராணுவ அதிகாரி படுகொலை! ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் இன்று காலை இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த இராணுவ அதிகாரியைப் படுகொலை செய்த 4 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாகத் தேடிவருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2024/1395697

  10. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியில், பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும்… October 2, 2019 ஜம்மு காஷ்மீரில் ஒருமுறை வளர்ச்சி தொடங்கினால் பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார். அதன்போது, காஷ்மீரில் தற்போது இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி இந்திய எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டும் முயற்ச…

  11. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்திய நிர்வாகத்தின்கீழ் உள்ள காஷ்மீரில் போராட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளியன்று வீதிகளில் திரண்ட நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு நாட்களில் காவல்துறை ஒரு புல்லட்டைக்கூட சுடுவதற்காக பயன்படுத்தவில்லை என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான மற்றும் உள்நோக்கங்களைக் கொண்ட செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் வேண்டுகோள் விடுப்பதா…

    • 4 replies
    • 952 views
  12. ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் -வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் October 20, 2018 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருந்தது.மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தலில் போட்டியிட ஒருவர் மட்டுமே முன்வந்தமையினால் 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வாக்கு…

  13. ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: அவசரமாக கூடுகிறது மத்திய அமைச்சரவை குழு ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆராயும் வகையில், மத்திய அமைச்சரவை குழு அவசரமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை கூடியுள்ளது. ஜம்மு காஷ்மீர், புல்வமா பகுதியில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இப்பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக குறித்த பகுதியின் பாதுகாப்பு குறித்து ஆராயும் வகையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 44 படை வீரர்களின் உயிரை காவுகொண்ட குறித்த பயங்கரவாதத் தாக்குதலை ஜெய்ஷ், முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இக்கொடூரத் தாக்குதலுக…

  14. ஜம்மு காஷ்மீர் பூஞ்ச்சில் பாக். அத்துமீறலில் இந்திய வீரர் பலி: இந்த மாதத்தில் 3வது வீரர் பலி ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார், 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். பூஞ்ச், ரஜவ்ரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்த மாதத்தில் 3வது வீரர் பலியாகியுள்ளார். சனிக்கிழமை இரவு ஷாபூர்-கெர்னி செக்டாரில் பாக்.ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடும் ஷெல் தாக்குதலும் நடத்தினர். இதனையடுத்து இந்திய ராணுவமும் வலுவான பதிலடி கொடுத்தது. இந்தத் …

  15. ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் (J&K Public Safety Act) அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டிருப்பதற்கு மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி கண்டனம் தெரிவித்துள்ளது. ஃபரூக் அப்துல்லா மீது இந்த சட்டத்தை ஏவியிருப்பது, இந்திய அரசு அப்பட்டமாக சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை காட்டுவதாக அம்னஸ்டி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நடந்துவரும் மனித உரிமை மீறல் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இது நடந்துள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. "ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் வீட்டுச் சிறையில் உள்ள ஃபரூக் அப்துல்லா பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக அவரது கைது ஆணை குறிப்பிடுகிறது. மாற்றம் வரும் என்ற வாக்குறுதிக்கு மாற்றாக, அரசிய…

  16. ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா கட் செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று பகல் 11 மணிக்கு அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். கிருஷ்ணகாதி பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதேபோல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்திலுள்…

    • 0 replies
    • 245 views
  17. ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.முக்கிய அறிவிப்பு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர், ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இதன்போது தொடக்க உரை நிகழ்த்திய ஆணையத் தலைவர் மிஷேல் பச்சலெட் அம்மையார், “ஜம்மு காஷ்மீரில், சட்டப்பிரிவு 370யை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். மேலும் காஷ்மீர் மக்கள் மீது இணையம், தொலைபேசி கட்டுப்பாடுகள் விதித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது. ஆகையால் இந்திய அரசு தற்போதைய ஊரடங்கு உத்தரவுகளைத் தளர…

  18. ஜம்மு காஷ்மீர்: அல் பதர் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கித்தாக்குதலில் அல் பதர் தீவிரவாத இயக்கத்தின் கொமாண்டர் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மாலை கத்போரா பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குறித்த துப்பாக்கிச்சூட்டில் அல் பதர் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான ஜீனத்துல் இஸ்லாம் மற்றும் ஷகீல் தார் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு தீவிரவாத குற்றச்செயல்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவ…

  19. பட மூலாதாரம்,@ADGPI படக்குறிப்பு, இந்திய ராணுவ அதிகாரிகள் கட்டுரை தகவல் எழுதியவர், மஜித் ஜஹாங்கீர் பதவி, ஸ்ரீநகரில் இருந்து பிபிசி ஹிந்திக்காக 35 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் 9 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றது. அவர்களில் மூவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்ததையடுத்து, இராணுவம் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியது. மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மக்கள் எருமைப் பகுதியின் டோபா கிராமத்தில் வசித்து வந்தனர். …

  20. ஜம்மு விமானப்படைத்தளத்தில் இரு வெடிப்பு சம்பவங்கள் June 27, 2021 ஜம்மு விமானப்படைத் தளத்தின் தொழில்நுட்ப பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு குறைந்த சக்தியுடைய வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தில் எவருக்கேனும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஒரு வெடிப்பு சம்பவத்தால் கட்டடம் ஒன்றின் மேற்கூரைக்கு சிறிய சேதம் ஏற்பட்டதாகவும், இன்னொரு வெடிப்புச் சம்பவம் திறந்த வெளியில் இடம்பெற்றதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு சம்பவங்களால் எந்தக் கருவிக்கும் சேதம் ஏற்பமவில்லை எனத் தெரிவித்துள்ள இந்திய விமானப…

  21. ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு! ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம்காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். காவல் நிலையத்தில் திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். குறித்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை,…

  22. ஜம்மு-காஷ்மீரில் படையினர் சென்ற பஸ் மீது தாக்குதல் - 34 பேர் பலி ; மேலும் பலர் வைத்தியசாலையில் இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த விபத்தில் சிக்கி 44 பேர் காயமடைந்தும் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் 2500 பேர் சென்று கொண்டு இருந்தனர். …

  23. ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்! ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15) அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 48 மணி நேரத்திற்குள் யூனியன் பிரதேசத்தில் நடக்கும் இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும். ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தொ…

  24. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தல்! இந்தியா – ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, அடுத்த மாதம் 3 ஆம், 10 ஆம் மற்றும் அக்டோபர் முதலாம் திகதி என மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அக்டோபர் 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளதுடன், ஜம்மு-காஷ்மீர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக தனித்து போ…

  25. ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசிய பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு தலீபான் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை இந்திய மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து, ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. மேலும், சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரியுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷென்பாஸ் ஷெரீப் கடந்த சில…

    • 0 replies
    • 277 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.