Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை ! கோவிட்-19 விரைவு பரிசோதனை கருவி விற்பனையில் இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான சண்டை நீதிமன்றம் வரை செல்லாமல் மட்டும் இருந்திருந்தால் இலட்சத்தோடு ஒன்றாய் இவ்வூழல் புதைந்திருக்கும். கொரோனா முடக்கத்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கும் சூழலில் இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் பார்த்திருக்கின்றன தனியார் நிறுவனங்கள். கோவிட்-19 விரைவு பரிசோதனை கருவி ஏற்றுமதி – இறக்குமதியில் …

  2. கரோனாவுடனே குடித்தனம் நடத்தப் பழகுவோம்! கரோனா பொதுமுடக்கம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நமக்கு வெவ்வேறு பாடங்களைத் தந்திருக்கிறது. அது கரோனாவைத் துரத்துவதையும், போரிடுவதையும் தாண்டி அதனுடனே இரண்டறக் கலந்து வாழ்வதைப் பற்றிய பாடத்தையே தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறது. கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, இந்த நிலை நீடிக்கும் என்பதே பேருண்மை. முடங்கிப்போன வாழ்க்கை எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி கரோனா செலவினங்களுக்காக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அடுத்தது ரயில் பெட்டிகள் கரோனா தனிமை வார்டுகளுக்கான படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி பூட்டப்பட்டுவிட்டன. இ…

  3. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் வைக்கபட்டத்தற்கு அமெரிக்காவிற்கு இந்தியா கடும் கண்டனம் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) ஆண்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளது அதில் இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என பர்மா, சீனா, எரித்ரியா, இந்தியா, ஈரான், நைஜீரியா, வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, சிரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வியட்நாம் என 14 நாடுகளை பட்டியலிட்டு உள்ளது. சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் செயலற்ற நிலைக்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்டது தான் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம். …

  4. கொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சையில் உதவும் தப்லிக் ஜமாத் அமைப்பினர் டெல்லியின் தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குணமடைந்த பலர் தங்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாக்களை (ஊநீர்) வழங்கி வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்னும் பலருக்கு அந்த பிளாஸ்மாக்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்க முடியும். இந்தியாவின் பல மாநிலங்களில் தொற்று பரவ தப்லிக் ஜமாத் அமைப்பினரே காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர். எனவே தற்போது இந்தியாவின் பல மாநிலங…

  5. நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல் பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர். இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை ந…

  6. சர்வதேச மத சுதந்திரத்திற்கான 2020 ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது அமெரிக்கா. அதில் கூறிஇருப்பதாவது: மத சுதந்திர விசயத்தில் கவலைப்பட வேண்டிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினரை தாக்குவோர் மீது எந்தநடவடிக்கையும் இல்லை. மத சுதந்திரத்தை நசுக்குவதில் வடகொரியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. வழிபாட்டு தலங்களை தகர்க்க வேண்டாம் என வியட்நாமை கேட்டுக்கொண்டு வருகிறோம். உய்கூர்இஸ்லாமியர், கிறிஸ்தவர், கம்யூ., கட்சிக்கே உண்மையா இருக்க சீனாவின் விருப்பமாக இருக்கிறது என அந்த அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்து உள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2529808 https://www.uscirf.gov/sites/default/files/USCIRF 2020 Annual Report_42720_new_0.pdf …

    • 0 replies
    • 319 views
  7. கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கூட்டுமருந்து சிகிச்சை அளிக்கப்படு கிறது. இந்த சிகிச்சையில் மலேரியாமற்றும் மூட்டு வலி பிரச்சினை களுக்கு தீர்வு அளிக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை இடம்பெறுகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் திடீரென்று கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டரும் பயனளிக்காததால், சிகிச்சை…

  8. கொரோனா வைரஸ் மருந்திற்கான ஆய்வு: இந்தியா எப்படி பெரிய பங்கு வகிக்கிறது தெரியுமா? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி Getty Images அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து, கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் மருந்தை உருவாக்க பணியாற்றி வருவதாக நேற்று இரவு, அமெரிக்க உள்துறை அமைச்சரான மைக் பாம்பே கூறினார். இது முற்றிலும் ஆச்சரியம் அளிக்கும் வகையிலான தகவல் இல்லை. ஏன் தெரியுமா? கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, நோய்களுக்கு மருந்து உருவாக்கும் ஒரு கூட்டு திட்டத்தை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செய்து வருகின்றன. டெங்கு, இன்புளூவென்சா, காசநோய் ஆகியவற்றை குணப்படுத்த இவர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர். டெங்குவிற்கான மருந்தை சோதித்து பார்க்கும் திட்டமும் வருங்காலத்தில…

  9. கொரோனா பாதிப்பிற்கு முஸ்லிம்களை குறை சொல்லாதீர்கள்:ஆர்.எஸ்.எஸ் தலைவர் - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தை மையப்படுத்தி மொத்த சமூகத்தையும் குறை சொல்லாதீர்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தில் கலந்துக்கொண்ட சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றதில் அந்தந்த ஊர்களில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று பரவியது. நோய் தொற்று பரவியது குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஒரு சிலர் செய்த தவறுக்காக மொத்த சமூகத்தையும் குறை சொல்ல முடியாது. மேலும் பாரபட்ச…

    • 0 replies
    • 300 views
  10. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே – மோடி கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பேசிய மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதற்கமைய, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று இடம்பெற்றது. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையி…

  11. வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவி, மதரீதியாகப் பிரச்சினையாக்கப்படும் நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி தப்லீக் ஜமாத்மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமியர்களால்தான் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதாக செய்திகள் வெளியாயின. அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸை தப்லீக் உறுப்பினர்கள் பரப்பி வருகின்றனர் என்று இந்துக்கள் கூறுவதாக ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருவதால் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. இது தொடர்பான …

    • 1 reply
    • 305 views
  12. கொரோனா மீண்டும் மே மாதம் உச்சம் பெற்று பின் படிப்படியாக குறைவடையும் என்கிறது ஆய்வு! இந்தியாவில் கொரோனா மீண்டும் மே மாதம் உச்சம் பெற்று பின் படிப்படியாக குறைவடையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மே 3ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தற்போது கொரோனா பரவும் வேகமும் சற்று குறைந்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு இருமடங்காக ஆவதற்கு, முன்பு 3.4 நாட்கள் எடுத்துக் கொண்ட நிலையில், தற்போது அது 7.5 நாட்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இத்தாலியில் ஏற்பட்ட பாதிப்பை அடிப்படையாக கொண்டு, ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, மே 22ஆம் திகதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரத்தை தாண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மே 15ம்…

  13. கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு முதலிடம்! by : Litharsan உலகத் தலைவர்களில் கொரோனாவைச் சிறப்பாகக் கையாள்வதில் பிரதமர் நரேந்திர மோடி 68 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி உலக நாடுகளை உலுக்கிவருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை சிறப்பாகக் கையாளும் உலக தலைவர்கள் யார்? என்பது குறித்து மோர்னிங் கென்சல்ற் (morningconsult) என்ற சர்வதேச நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி 68 புள்ளிகளுடன் முதல…

  14. கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலை பரிசோதித்து அறிவதற்காக மலிவு விலை சோதனை முறை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் உள்ளதா, இல்லையா என்பதை முதற்கட்டமாக பரிசோதித்து அறிவதற்கு உலக நாடுகள் பலவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்று அழைக்கப்படுகிற துரித பரிசோதனை கருவியை பயன்படுத்துகின்றன. இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலை விரைவாக கண்டுபிடிக்கலாம். ஆனால் சீனாவில் தயாரிக்கப்படுகிற இந்த கருவி ரூ.750-க்கு அதிகம், தென்கொரியாவில் தயாரிக்கப்படுகிற கருவி ரூ.350-க்கு அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் அங்கமான ச…

    • 3 replies
    • 502 views
  15. கொரோனா இந்தியா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது NurPhoto / getty இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,393 ஆக அதிகரித்துள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வியாழக்கிழமை காலை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 681 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 4,257 பேர் குணமடைந்துள்ளனர். 16,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மத்திய அரசு நேற்று பிறப்பித்த அவசர சட்டத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். …

  16. ஊரடங்கால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றுநீரின் தரம் மேம்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 12:09 PM லக்னோ வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர, மார்ச் 25 ந்தேதி முதல் மத்திய, மாநில அரசுகள், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ள நிலையில், மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.இதனால், பெரும்பாலான சாலைகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படு கின்றன.இதையடுத்து, காற்று மாசு, பெருமளவு குறைந்து காணப்படுகிறது.வாகன போக்குவரத்து இல்லாமல், டில்லி உள்ளிட்ட, 90 நகரங்களில் காற்று மாசு, பெருமளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் கங்கை, யமுனை ஆறுகளின் கரைகளில் உள்ள தொழிற்சாலைகள் மூட…

  17. புதுடில்லி: இந்தியாவிலேயே முதல்முறையாக டில்லியை சேர்ந்த கொரோனா வைரஸ் பாதித்த நபர் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக குணமடைந்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில், பிளாஸ்மா சிகிச்சை முறையையும் மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெற்று, அதிலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும் பட்சத்தில், கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு ஆற்றல் ரத்தத்தில் உருவாகி எளிதில் குணமடைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒருவர் 400 மி.லி பிளாஸ…

  18. ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா – 125 குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை! ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 125 குடும்பங்களை தனிமைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்தும், பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 539 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றி வரும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக 125 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய சுகா…

  19. பாக்கிஸ்தான் பிரதமர் தன்னை கொரோனா வைரஸ் மருத்துவபரிசோதனைக்கு பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளார் என அவரின் கொரோனாவைரஸ் தொடர்பான ஆலோசகர் மருத்துவர் பைசால் சுல்தான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இம்ரான்கானை சந்தித்த நன்கொடையாளர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இம்ரான்கானை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அவரின் மருத்துவர் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில் உள்ளன என குறிப்பிட்டுள்ள அவரின் மருத்துவ மருத்துவபரிசோதனை முடிவுகள் வெளியானதும் அதனடிப்படையில் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/80467

    • 0 replies
    • 307 views
  20. கிளம்பியாச்சு.. 6.50 லட்சம் ரேபிற் ரெஸ்ற் கிற்-கள்.. ஓன் தி வே, சீனாவில் இருந்து இந்தியா நோக்கி விரைகிறது..! டெல்லி: எத்தனையோ பிரச்சனைகள், குழப்பங்களை தாண்டி.. ஒருவழியாக நமக்கு ரேபிற் ரெஸ்ற் கிற்-கள் வரப்போகிறது.. சீனாவின் காங்ச்சோவிலிருந்து சுமார் 6.50 லட்சம் ரேபிற் ரெஸ்ற் கிற்-களுடன் சரக்கு விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது என்ற நல்ல செய்தி நமக்கு கிடைத்தள்ளது. அநேகமாக இந்த சரக்கு விமானம் இன்று சாயங்காலம் நம் நாட்டுக்கு வந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. .சீனாவில் வெடித்து கிளம்பிய வைரஸ் உலக நாடுகளை மரண பீதியில் நடுங்க வைத்து வருகின்றது.. இந்த கொரோனாவுக்கு இதுவரைக்கும் எந்த தடுப்பு மருந்தும் இல்லை... குணமாக்கும் மருந்தும் இல்லை.. …

  21. மஹராஷ்டிராவில் 53 ஊடகவியலாளர்கள் கொரோனாவுக்கு இலக்கு! மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 171 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 53 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உடபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் முன்னின்று செயற்படும் அதேவேளை, ஊடகங்களும் இந்த இக்கட்டான நிலையிலும் மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளைக் கொண்டு சேர்க்கின்றன. இதன்போது செய்தியாளர்கள் களத்திற்கு நேராகச் சென்று ச…

  22. இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியது! by : Litharsan இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்ததுடன் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 553 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 547 பேர் குணமடை…

    • 0 replies
    • 292 views
  23. மே 3 வரை ஊரடங்கு விதிகளில் தளர்வு இல்லை என அறிவிப்பு! by : Benitlas எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரை ஊரடங்கு விதிகளில் தளர்வு இல்லை என பஞ்சாப், கர்நாடக மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 14ஆம் திகதி வரை 21 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து, மளிகை, மற்றும் உணவு பொருட்களுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டதுடன், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. …

    • 0 replies
    • 357 views
  24. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு கொரோனா டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 893ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்திருக்கின்றது. அவர்களில் 43 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று டெல்லி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒன்பது பேர் 50 முதல் 60 வயது நிரம்பியவர்கள் என்றும், பத்து பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 31 ஆயிரத்து 878 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் இரு வார…

  25. புதுடில்லி: டில்லி நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடந்த மதவழிபாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம், கொரோனா பெருமளவில் பரவியது. இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக மாறியுள்ளது. இது குறித்த முக்கிய அம்சங்கள் 1. தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய பிரசார குழு சார்பில், மார்ச் 1 முதல் 15 வரை நடந்த மதரீதியிலான மாநாட்டில், இந்தோனேஷியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 2.தபிலீகி ஜமாத் தலைமையகத்தில் இருந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 24 பேருக்கு கொரோனா இருந்தது கடந்த ஞாயிறு அன்றே தெரியவந்தது. 3.இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என திங்கள் இர…

    • 32 replies
    • 3.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.