Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவில் தற்போது வேகமெடுத்துள்ள கொரோனா பரவலைத் தடுக்க அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும செப்ரெம்பர் மாதம் வரை நீடிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தற்போது 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24-ம் திகதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் திகதி வரை நீடிக்கும். இந்தநிலையில், அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் நிறுவனம், ‘இந்தியாவில் நாடு தழுவிய அளவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி மற்றும் செப்ரெம்பர் மாத இரண்டாவது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில்தான் நீக்கப்படலாம். இந்திய சுகாதாரத்துறை மற்றும் அரசின் திட்டங்களின் செயல்பாட்டால் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத…

  2. புதுடில்லி: காஸியாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, டில்லியில் மத பிரசங்க கூட்டத்தில் பங்கேற்ற, தப்லிக் - இ - ஜமாத் உறுப்பினர்கள், மருத்துவமனைக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், அநாகரிகமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த மார்ச், 8 - 10ம் தேதிகளில், டில்லியில், நிஜாமுதீன் பகுதியில், தப்லிக் - இ - ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மத பிரசங்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை முடித்து அவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளதால், நாடு முழுவதும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காஸியாபாத் மருத்துவமனை சார்பில், போலீசுக்கு புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.…

  3. தென்காசியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கை மீறி வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய முயன்ற 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர். தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதியின்றி ஏராளமானோர் தொழுகைக்காக கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் நடுப்பேட்டையில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றனர். பின்னர் ஐமாத் தலைவரை அழைத்து, அனைவரும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால், அங்கு வந்திருந்த இஸ்லாமியர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தை கலைக்கவும், தாக்கு…

    • 0 replies
    • 230 views
  4. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் நோய்த்தொற்று வேகமாக பரவினால் நிலைமையை நிர்வகிக்க முடியாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பதிவு: ஏப்ரல் 04, 2020 16:48 PM மும்பை மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தானே மாவட்டத்தில் 25 பேரும், புனேயில் 11 பேரும், அகமதுநகரில் 3 பேரும், வாஷிம், ரத்னகிரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்றில் முத…

  5. கொரோனா பாதித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் தம்பதிக்கு வைரஸ் பாதிப்பில்லாமல் ஆரோக்கியமுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பதிவு: ஏப்ரல் 04, 2020 16:12 PM புதுடெல்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர் புதிய தனி வார்டு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவசரகால பணிக்காக, அதே மருத்துவமனையில் மருத்துவரின் 9 மாத கர்ப்பிணி மனைவி பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணிநேரத்தில், மனைவிக்கும…

  6. ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன என விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி விடுத்து உள்ளனர். பதிவு: ஏப்ரல் 02, 2020 17:15 PM புதுடெல்லி 800 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் ஏப்ரல் 1 ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டனர், கொரோனா தொற்றுநோயின் முக்கிய அம்சங்கள் குறித்து கவனத்தை ஈர்த்ததுடன், இது தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியது. அதில் கையொப்பமிட்டவர்களில் டிஐஎஃப்ஆர், மும்பை, என்சிபிஎஸ், பெங்களூரு, ஐஐடி, ஐஐஎஸ்இஆர், ஐஐஎஸ்சி, பெங்களூரு, மற்றும் அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய மருத்துவர்கள் சங்க உறுப்பினர்கள் அதில் அ…

  7. செங்கல்பட்டு: செங்கல்பட்டு டவுன் காவல் நிலையம் எதிரில், பல ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. தற்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உழவர் சந்தை மற்றும் தூய கொலம்பா பள்ளி ஆகிய பகுதகிளில் சமூக இடைவெளியில் காய்கறி கடைகள் அமைக்க கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டார்.ஆனால், பள்ளி வளாகத்தில் மட்டும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், அருகில் உள்ள வேணுகோபால் கிளப்பில் காய்கறி கடை இயக்கப்படுகிறது. அங்கு கொரோனா பற்றி அச்சமில்லாமல் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு காய்கறி வாங்கி செல்கிறார்கள். குறிப்பாக, வியாபாரிகளும், பொதுமக்களும், முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி விடாமல் உள்ளனர்.அதேபோல், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் இட நெருக்கடியாக இர…

  8. இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம். அவர்களுக்குத்தான் உத்தரவாதமான வருவாய், இடைவெளி விடுவதற்கு ஏற்ற வீடுகள், மருத்துவக் காப்பீடு, தண்ணீர் வசதி போன்றவையெல்லாம் இருக்கின்றன. மேற்கூறிய ஏதும் அற்றவர்களைப் பசி, தொற்று ஆகியவற்றுக்கு ஆளாகும்படி தூக்கியெறியும் ஒரு உத்தியைத் தேர்ந்தெடுத்ததை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? ஊரடங்குக்கு உத்தரவிடும்போது கோடிக்கணக்கான முறைசாராப் பணியாளர்களையும் நிராதரவான மக்களையும் அரசு நினைத்துப் பார்த்ததா? இவர்களில் பலர் பல்வேறு இடங்களுக்குச் சுற்றிச் சுற்றிப் புலம்பெயர்பவர்கள். இந…

  9. மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்ப…

  10. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டு மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் காணொளி மூலமான உரையொன்றின்போதே பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார். அந்த காணொளி உரையில் நரேந்திர மோடி மேலும் கூறுகையில், ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி. அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஊரடங்கால் 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றும…

    • 8 replies
    • 469 views
  11. கொரோனா வைரசினால் உயிரிழந்தவரின் உடல் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் பகுதிகளில் இருந்து நோய் தொற்றுவதற்கான வாய்ப்பில்லை என இந்தியாவின் மேற்குவங்காள அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரச அதிகாரிகளிற்கும் பொதுமக்களிற்கும் விடுத்துள்ள அறிவுறுத்தலில் மம்தா பானர்ஜி அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினது அறிவுறுத்தல்களை மேற்கோள்காட்டி மாநில அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினால் இறந்தவரின் உடல் காரணமாக எவருக்கும் தொற்று ஏற்படாது என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபரின் உடல் காரணமாக சுகாதார பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் அயலவர்களிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. உடலை எரி…

    • 0 replies
    • 226 views
  12. கொரோனா வைரஸைத் தடுக்க இந்திய மக்களின் ஒத்துழைப்பு எம். காசிநாதன் / 2020 மார்ச் 31 நான்கு பிரிவுகளைக் கொண்ட 1897 ஆம் வருட ‘தொற்று நோய்ச் சட்டம்’ தற்போது இந்தியாவின் ‘பாதுகாப்புக் கவசமாக’ மாறியிருக்கிறது. மனித குலத்துக்கு மாபெரும் பேரிடராக, மறக்க முடியாத பேரிடராக மாறியிருக்கும் கொரோனா வைரஸால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த இரண்டாவது சுற்றில் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. முத‌ற்சுற்றில், தாக்குதலுக்கு உள்ளான சீனா, மெல்ல மெல்ல சகஜ வாழ்க்கையை நோக்கி நகருகின்றது. இந்தியா சகஜ வாழ்க்கையை ஒத்தி வைத்து விட்டு, 21 நாள் ஊரடங்கில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி விடுத்த ‘மார்ச் 22 ஆம் திகதி ‘சுய ஊரடங்கு’ ஜனநாயக நாடான இந்தியா என்பதை பறைசாற…

  13. ஓசூர்: ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து இன்றி, ஓசூர் பகுதியில் விளையும் குடைமிளகாயை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் குப்பையில் கொட்டுகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஓசூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மலர்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் உள்ளது. ஓசூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குடை மிளகாயை விவசாயிகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல், குப்பைகளில் கொட்டி விட்டு செல்கின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு விவசாயி 40 முதல் 50 டன் அளவிலான குடை மிளகாய்களை பறித்து விற்பனைக்கு அனுப்புகிறார். ஓசூர் பகுதிகளில் சாகு…

  14. கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன. முதியவர் திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் பாதித்தது. இங்குதான் வேகமாகவும் பரவியது. இந்தநிலையில் அங்குள்ள பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88) தம்பதியருக்கும் கொரோனா வைரஸ் பாதித்தது. கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இருந்து ஊர் திரும்பிய மகன், மருமகள், பேரன் மூலம்தான் தாமஸ் ஆபிரகாம், மரியம்மா தம்பதியருக்கு கொரோனா வைரஸ் ப…

  15. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை அடையாளம் கண்டது மத்திய அரசு இந்தியாவில் கொரோனாவால் சுமார் ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நோய் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. டெல்லியில் த…

  16. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மும்பையில் உள்ள தாராவி பகுதியை சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார். மும்பை தாராவி பகுதி மும்பை: இந்தியாவில் ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 143 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பரவும் வேகம் தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் 335 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிப்பு காரணமாக அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, அம்மாநிலத்தின் தாராவி பகுதியை சேர்ந்த நபர்…

  17. கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழலின், தான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் திருப்பித் தர தயாராக இருப்பதாக' நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கியில், 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்து, லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர், விஜய் மல்லையா, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனுக்கு, நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழலில், நான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் திரும்பத் தர தயாராக இருக்கிறேன். என் சொத்து முடக்கத்தை அமலாக்கத் துறை நீக்கி, அத்தொகையை பெற்றுக் கொள்ள வழி செய்ய வேண்டும்' என, அவர் கேட்டுக் கொண்ட…

    • 0 replies
    • 244 views
  18. அமராவதி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியாவில், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கார்பரேட் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என, அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். சட்டத்தில் இடம் இருக்கு! ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாவது: ஆந்திராவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். பாதிக்கப்படவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தனிமைப்படுத்…

  19. HEALTH இந்தியா:தெருக்களில் வாழும் மருத்துவர்கள் இந்தியாவில், கொறோனாவைரஸ் தொற்றலாம் என்ற அச்சத்தில் மருத்துவர்கள், தாதிகள் போன்ற சுகாதார சேவை முன்னணிப் பணியாளர்கள் தங்கியிருக்கும் வாடகை வீடுகளிலிருந்து சொந்தக்காரர்களால் வெளியேற்றப்பட்டுத் தெருக்களில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல மருத்துவர்கள் தாம் பணி புரியும் வைத்தியசலைகளில், தரைகளிலும், கழிப்பறைகளிலும் படுத்துறங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வீட்டுச் சொந்தக்காரர்கள் மட்டுமல்லாது, அயலவர்கள், டக்சி ஓட்டுனர்கள் ஆகியோரினாலும், சுகாதாரப் பணியாளர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள். சிலர் அவரவர்களின் சொந்த வீடுகளிலுமிருந்து தனிமைப்படுத்தப்படுவதும், வீடுகளிலிருந…

    • 0 replies
    • 341 views
  20. பரேலி; கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, உத்தரபிரதேசத்துக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும் அதிர்ச்சி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தங்கியுள்ள பிற மாநில தொழிலாளர்கள் வேலையின்றி உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். போக்குவரத்து தடை செய்யபட்டுள்ளதால் கால்நடையாகவே சொந்த ஊருக்கு திரும்பும் நிலை உள்ளது. இதனால் சமூக தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இவ்வாறு டெல்லியில் தங்கியிருந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பரேலி மாவட்ட பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.அவர்களால் உத்தரப் பிரதே…

  21. கொரோனா அச்சத்தில் சானிடைசரை தவறாக பயன்படுத்தியதில் தீக்காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சானிடைசர் புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,100ஐ கடந்து நிலையில், பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. மராட்டியம், கேரளா மற்றும் டெல்லியில் அதிக அளவில் பாதிக்கப்பட்டோர் உள்ளதுடன் தொடர்ந்து எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. இதனால் வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. இதனை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது. கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். இதன்படி, கைகளை தூய்மைப்படுத்த உதவும் வகையில் ஹேண்…

  22. கர்நாடகாவில் கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் ஜிபிஎஸ் இணைப்புடன் ஒரு மணி நேரத்துக்கு ஒரு செல்பி எடுத்த அரசுக்கு அனுப்ப வேண்டும் என மாநில மருத்துவ கல்வி மந்திரி தெரிவித்துள்ளார். கோப்பு படம் பெங்களூரு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை 251 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் கட்டாயம் தங்கள் வீடுகளில் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும், சிலர் ஊ…

  23. கொவிட் -19' எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவின் பூனே வைராலஜி ஆய்வு நிறுவனம் கொவிட் 19 வைரஸ் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இதுவரையில் 5 இலட்சத்து 97 ஆயிரத்து 458 பேர் (28ஆம் திகதி அறிக்கை) உலகவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 ஆயிரத்து 370 நபர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் கட்ட பரவல் ஆரம்பிக்கும் நிலைமை உள்ளதாகவும் சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலும் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ள நிலையில் ஆசியா…

    • 4 replies
    • 475 views
  24. உலகை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை தகவலின்படி இன்று (மார்ச் 24) மாலை நிலவரப்படி 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 476 பேர் இந்தியர்கள், 43 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதிகபட்சமாகக் கேரளாவில் 87 பேரும், மகாராஷ்டிராவில் 86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைMOHFW.GOV.IN இந்நிலையில், கோவிட்-19 குறித்து நாட்டு மக்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்குப் பிரதமர் மோதி பேச உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கடந்த மார்ச் 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி இரவு நாட்டு மக்களுடன் உரையாற்றினார். …

  25. பொது இடங்களுக்கு சென்று முகத்தை மூடாமல் தும்மி வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியரை இன்போசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கோப்பு படம் பெங்களூரு: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 900-க்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரசுக்கு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த முஜீப் முகமது தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை பதிவு செய்தார…

    • 2 replies
    • 520 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.