Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவில் வேவுபார்த்த குற்றச்சாட்டின கீழ் இலங்கை சேர்ந்த அருண் செல்வராஜனிற்கு இந்திய நீதிமன்றம் ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமீம் அன்சாரி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட அருண் செல்வராஜனிற்கே நீதிமன்றம் ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. 2012 இல் தஞ்சாவூரை சேர்ந்த தமிம் அன்சாரி இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய சிரேஸ் அதிகாரியான அமீர் சுபைர் சித்திக்கின் உத்தரவில் செயற்பட்ட புலானாய்வாளர்களிற்காக வேவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் 2014 இல் இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் தூதரக அதிகாரியின் உத்தரவின் கீழ் சென்னையில் பல முக்கிய இடங்களை வேவுபார்த்த குற்றச்சாட்டின் கீழ…

    • 0 replies
    • 262 views
  2. நிர்பயா கொலை வழக்கு – குற்றவாளிகளை தூக்கிலிட தயாராகுமாறு சிறை நிர்வாகம் உத்தரவு நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 20ஆம் திகதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்களைத் தூக்கிலிடும் பணியில் ஈடுபட மூன்று நாட்களில் தயாராகுமாறு மீரட் சிறை ஊழியருக்கு திகார் சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012இல் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் குமார் சிங் (22), பவன் குமார் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு எதிர்வரும் 20ஆம் திகதி காலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் அண்மையில்…

  3. பிராந்திய நலனுக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆங்கிலத்தில் சுருக்கமாக சார்க் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை உறுப்பினர்களாக உள்ளனர். சார்க் நாடுகள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், கொரோனாவை எதிர்கொள்வது தொடர்பாக திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது- சார்க் நாடுகள் தங்களது குடிமக்களின் உடல்நிலை குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தலாம். ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகிறது. பல்…

    • 5 replies
    • 462 views
  4. போக்சோ சட்டத்தில் புதிய விதிமுறைகள்! பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை மேலும் கடுமையாக்குவதற்கான புதிய விதிகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சட்டத் திருத்தங்களை அமுல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. பாடசாலைகள், குழந்தைகள் காப்பகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விவரங்களை பொலிஸார் மூலம் உறுதி செய்வதை கட்டாயமக்குவது, சிறார் ஆபாச படங்கள் தொடர்பான வீடியோ உள்ளிட்டவற்றை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு…

  5. சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் 17, கேரளா 17, மகாராஷ்டிரா 19, உத்தரபிரதேசம் 11, டெல்லி 6, ஆந்திரா 4, கர்நாடகா 4, லடாக் 3, காஷ்மீர் 1, பஞ்சாப் 1 ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மேலும் பீதியை அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடுமையா…

    • 0 replies
    • 125 views
  6. கொரோனா அச்சுறுத்தல்: டெல்லியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் 31ஆம் திகதி வரை மூடப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தேர்வுகள் நடைபெறும் வகுப்புகள் தவிர ஏனைய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது எனத் தெரிவித்துள்ள அவர், திரையரங்குகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பரில் கொரோனா வைரஸ் தாக்கியது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 117 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதுவரை 4,635 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர…

  7. காசியில் மசூதியை அகற்றி காசி விஸ்வநாதர் கோவில் கட்டப்படும்.. அடுத்த குண்டை வீசிய சு.சாமி.!! காசியில் மசூதியை அகற்றிவிட்டு காசி விஸ்வநாதர் கோவில் கட்டப்படும் என்று சு.சாமி திருச்சியில் புதிதாக ஒரு குண்டை வீசி விட்டு சென்றிருக்கிறார். முஸ்லீம்களுக்கு அடுத்த சிக்கல் காசியில் காத்திருக்கிறது என்கிறார்கள் சு.சாமி ஆதரவாளர்கள். சென்னையில் இருந்து திருச்சி வந்த சுப்பிரமணியசாமி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது. “அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி ஏப்ரல் 2ம் தேதி தொடங்க இருக்கிறது. அந்த பணி 2 ஆண்டுகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தனியாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கமிட்டி ராமர் கோவில் கட்டும்…

  8. கொரோனா தொற்று – இந்தியாவில் முதல் உயிரிழப்பு பதிவு? உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்றுவந்த கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் ஐதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து கர்நாடகா அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், இது குறித்து கர்நாடகா அரசு சார்பில் வெளியான செய்தி குறிப்பில், “சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடகா மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த முகமது உசைன் சித்திக், 76, என்ற முதியவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரின் சளி, ரத்…

  9. லண்டனில் வசித்து வரும் புஷ்பம் பிரியா சௌத்ரி என்ற பெண், பீகாரின் புதிய முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவித்து பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளார். பீகார் மாநிலத்தில் தற்போது ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் அக்டோபர் மாதம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. பீகார் என்றால…

  10. இந்தியர்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்து திரும்பினால் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படலாம் என இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவும் அச்சத்தால், இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ராஜரீக அதிகாரிகள், ஐநா அல்லது சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்கள், பணி நிமித்தப் பயணம், அலுவல் திட்ட ரீதியான விசாக்களை தவிர்த்து அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. "வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்கள் விசா இன்றி இந்தியாவுக்கு பயணம் செய்ய வழங்கப்பட்ட வசதி ஏப்ரல் 15, 2020 வரை இடைநிறுத்திவைக்கப்படுகிறது. இத்தாலி, சீனா, இரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்…

  11. மத்திய பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் இராஜினாமா மத்திய பிரதேசத்தில் முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட 16 அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர். மத்திய பிரதேசத்தில் அரசியல் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. முதல்வர் கமல்நாத்திற்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு பெற்ற 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்ளூருக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் கமல்நாத் தனது இல்லத்தில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் திக்விஜய்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 அமைச்சர்களும் இராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்…

  12. கவுகாத்தி : கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, அண்டை நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மணிப்பூர் அரசு, மியான்மர் எல்லையை, காலவரையின்றி மூடியுள்ளது. அந்த வழியாக வெளிநாட்டவர் உள்ளே வருவதற்கு தடை விதித்துள்ளது. எல்லை பகுதிக்கு செல்ல வேண்டாம் என மக்கள் கேட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மிசோரம் மாநில அரசும் மியான்மர் மற்றும் வங்கதேச எல்லைகளை மூடியுள்ளதுடன், கொரோனா பரவலை தடுப்பதற்காக வெளிநாட்டினர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அருணாச்சல பிரதேச அரசும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு வழங்கப்படும் அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. மறுஉத்தரவு வரும் வரை, அனுமதி வழங்கப்படாது என தெரிவித்துள்ளத…

    • 0 replies
    • 311 views
  13. இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளாவில் எர்ணாகுளம் ஜம்மு, கர்நாடகாவில் பெங்ளூர், பஞ்சாப் மற்றும் புணே ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் சீனா உள…

  14. வினாக்களுடன் கடந்து சென்ற மகளிர் தினம் எம். காசிநாதன் / 2020 மார்ச் 09 மகளிர் தினம் 2020; இந்தியாவில் உள்ள மகளிருக்கு, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மகளிர் தினமாகவே கடந்து போயிருக்கிறது. இந்திய அரசியல் நிர்ணய சபையில், 13 பெண் உறுப்பினர்கள் அங்கம் வகித்து இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்குத் துணை நின்றுள்ளார்கள்; நாட்டின் குடியரசுத் தலைவராக பிரதீபா பட்டீலும் பிரதமராக இந்திரா காந்தியும் பொறுப்பேற்றுப் பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் மக்களவையிலும் சட்டமன்றங்களிலும் ‘மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு’ வழங்கும் சட்டமூலம் மட்டும், இன்னும் கரை சேரவில்லை. இந்த முறையாவது சட்டமூலம் நிறைவேற்றப்படுமா என்ற ஏக்கம் நாடுமுழுவதும் பரவ…

  15. மோடியின் அழைப்பை ஏற்கமறுத்தார் பருவநிலை மாற்ற ஆர்வலரான 8 வயதுச் சிறுமி! சாதனைப் பெண்கள் பிரசாரத்தில் சேர பிரதமர் மோடியின் அழைப்பை 8 வயது பருவநிலை மாற்ற ஆர்வலர் ஏற்க மறுத்துள்ளார். இந்நிலையில் இதற்கான காரணத்தையும் அவர் அறிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சாதனைப் பெண்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை டுவிற்றர் தளத்தில் பகிரும் வகையில் பிரசாரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ‘அவள் நமக்கு உத்வேகம் அளிக்கிறாள்’ என்ற பெயரில் நடைபெறும் இந்தப் பிரசாரத்தில் இணையுமாறு மணிப்பூர் மாநில பருவநிலை மாற்ற ஆர்வலரும் இந்தியாவின் கிரேட்டா என அழைக்கப்படுபவருமான 8 வயது லிசிபிரியா கங்குஜம் என்பவருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை லிசிபிரியா நி…

  16. தமிழகத்தை ஆண்ட ராஜேந்திர சோழன், வட நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கங்கை வரை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினான். கடற்படையைக் கட்டியமைத்த அந்த மன்னின் படம் மத்திய பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி-யான தருண் விஜய், தமிழ் மீது ஆர்வம் கொண்டவர். குறிப்பாக, திருக்குறள் மீது பற்றுக் கொண்ட அவர், திருவள்ளுவர் குறித்து வட இந்தியர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவினார். தன்னைச் சந்திக்கும் பிரபலங்கள் மற்றும் தான் சந்திக்கும் முக்கிய நபர்களுக்கு திருவள்ளுவர் சிலையையும் திருக்குறளையும் பரிசளிப்பதை தருண் விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலைய…

    • 0 replies
    • 576 views
  17. டெல்லி: யார் வேண்டுமானாலும் வரலாம் என வரவேற்கும் ஒரு நாட்டை இந்த உலகில் காட்ட முடியுமா என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் முதலில் போராட்டம் நடந்தது. ஆனால், அங்கு போராட்டம் அடங்கிய நிலையில், நாட்டின் பல இடங்களில் போராட்டம் பரவியது. டெல்லியில் இதுதொடர்பாக நடந்த போராட்டத்தின்போது, அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வன்முறையில் முடிந்தது. இதில் தலைமை காவலர் ரத்தன் லால் , உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உள்பட மொத்தம் 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக வெளிந…

  18. கொரோனா தொற்று பாதித்திருக்கலாம் என்ற நிலையில், அவர்கள் இருவரும் மருத்துவமனையை விட்டு தப்பிச் சென்றது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் நோய்க்கு இந்தியாவில் இதுவரை 31 பேர் ஆளாகியிருக்கின்றனர். நோய் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நபர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அயர்லாந்தைச் சேர்ந்த இரண்டு நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த அயர்லாந்தைச் சேர்ந்த நபருக்…

    • 0 replies
    • 214 views
  19. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யுமாறு உத்தரவு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய பொலிஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் அனுமதியின்றி நடைபெறும் இந்த போராட்டத்தின் ஊடாக பொதுமக்கள் பாதிக்கபடுவதாகவும் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சட்டத்தரணி கோபிநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் திருப்பூர் போராட்டம் காரணமாக பள்ளிக்குழந்தைகள், பொத…

  20. இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மார்ச் 10ம் தேதி முதல் சில நிபந்தனைகளை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அந்தந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆய்வகங்களில் இருந்து, கோவிட்-19 தொற்றால் எந்த பாதிப்பும் இல்லை என சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளால் பரவலாக கட்டுப்படுத்தப்படும் வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்றும் இந்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதிலும் 28,529 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாட…

    • 0 replies
    • 247 views
  21. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 16 போ் இத்தாலியைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 12 நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு மட்டுமே மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இனி அனைத்து நாடுகளின் பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவா் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, டெலிலியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்…

  22. மோடி அரசு இனப்படுகொலை செய்துள்ளது – மம்தா பானர்ஜி by : Krushnamoorthy Dushanthini டெல்லி வன்முறை பிரதமர் நரேந்திர மோடி அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல் வன்முறையாக உருவெடுத்ததில் 46 பேர் வரையில் உயிரிழந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி மேற்படி விமர்சித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “டெல்லியில் நடந்த வகுப்புவாத வன்முறை மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை என்றும், குஜராத் கலவரத்தைப் போன்று நாடு முழுவதும் கலவரத்தை ஏற்ப…

    • 3 replies
    • 574 views
  23. ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாள பிப்ரவரி 20 அன்று, பெங்களூரில் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழங்கினார் 19 வயதான மாணவி அமுல்யா லியோனா. மேடையில் பேசிக் கொண்டிருந்த அமுல்யா, தனது பேச்சை முடிக்கக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை, மேடையில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 A-ன் கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்போது காவலில் உள்ளார். அமுல்யா பேசும் அந்த முழு வீடியோவையும் பார்த்தபோது, தான் எழுப்பிய முழக்கம் குறித்து விளக்க முயற்சிக்கிறார் அவர் என்பது தெரிகிறது. ஆனால் அதைக் கேட்க யாரும் தயாராக இல்லை. அது மட்டுமல்ல, அவர் எழுப்பிய 'பாரத் ஜிந்தாபாத்' எ…

    • 1 reply
    • 328 views
  24. நிர்பயா கொலை வழக்கு – குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு by : Dhackshala நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (புதன்கிழமை) நிராகரித்துள்ளார். இதன் மூலமாக நான்கு குற்றவாளிகளின் கருணை …

    • 0 replies
    • 348 views
  25. இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று! இந்தியாவில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த இருவரே மேற்படி கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் மிகப்பெரிய நெருக்கடி நிலையை இந்தியா எதிர்கொள்ளும் எனவும், இங்கு வைரஸ் தாக்கம் எளிதில் பரவும் சாத்தியம் காணப்படுவதாகவும் உலக சுகாதார மையம் அண்மையில் எச்சரித்திருந்தது. கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.