Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (09) மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். நேற்று (08) மாலைதீவை சென்றடைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.பி. தோரதென…

    • 0 replies
    • 270 views
  2. மதமாவது ? மொழியாவது ? இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள் தான் !! அதிரடி ஆர்.எஸ்.எஸ். !! தெலுங்கானா மாநிலம் இப்ராகிம்பட்டினத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டு நாள் ‘விஜய சங்கல்ப சிபிரம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் , . “இந்தியா பாரம்பரியமாகவே ‘இந்துத்துவா’ நாடுதான்; அதனடிப்படையில் நாட்டின் 130 கோடி மக்களையும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் ‘இந்து சமூகம்’ என்றே ஆர்எஸ்எஸ் கருதுகிறது” என்று கூறினார். “ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒருவரை, ‘இந்து’ என்று அழைக்கும் போது, இந்தியாவை தங்கள் தாய்நாடாக கருதி அதை நேசிப்பவர்கள் என்றே அர்த்தம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “பாரதத்…

  3. இஸ்லாமிய பயங்கரவாதமே உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் – ட்ரம்ப் இஸ்லாமிய பயங்கரவாதம்தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதில் இருந்து நாடுகளை பாதுகாக்க இணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டு நாள் விஜயமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகை தந்துள்ள ட்ரம்ப் அகமதாபாத் கிரிகெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவிற்கு எப்போதும் உண்மையான நட்பு நாடாக அமெரிக்க விளங்கும் என உறுதியளித்தார். இந்தியாவை அமெரிக்க நேசிக்கிறது எனவும், இந்தியா மீது அமெரிக்க மதிப்புகொள்வதாகவும் தெரிவித்த ட…

  4. சத்தீஸ்கரில் எஸ்.பி.ஐ. பெயரில் போலி வங்கிக் கிளை நடத்திய கும்பல் - உண்மை வெளிப்பட்டது எப்படி? சத்தீஸ்கரில் உள்ள பன்பராஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி யாதவ் கடந்த வாரம் வரை 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - சப்போரா கிளை' என்றழைக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தார். ஆனால், அது உண்மையில் வங்கியே இல்லை என்பதை அவரால் இன்னும் நம்ப முடியவில்லை. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள் சிலர் போலீஸாருடன் அந்த வங்கிக் கிளைக்கு வந்தபோதுதான், ஜோதிக்கு அந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்து, வங்கி ஊழியர்கள், தனது பணி நியமனக் கடிதம் என அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 200கி.மீ. தொலைவில் உள்ள சக்தி மாவட்டத்தில் உள்ள சப்போரா கிராமத…

  5. கங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி கங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு முற்படும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்காக உலக வங்கியும், இந்திய அரசும் கடன் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. இரண்டாவது தேசிய சின்னமான கங்கைநதி மாசுபடுவதைத் தடுக்கவும், 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நதிப்படுகையின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என கூறப்படுகின்றது. 400 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் 381 மில்லியன் கடன் மற்றும் 19 மில்லியன் டொலர் வரை முன்மொழியப்பட்ட உத்தரவாதம் ஆகியவை அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமட், அரசாங்கத்…

  6. காபூலில் இருந்து... இந்திய தூதர்களை மீட்டது, சவாலாக இருந்தது – ஜெய்சங்கர் காபூலில் இருந்து இந்திய தூதர் உள்ளிட்ட அதிகாரிகளை பத்திரமாக மீட்டது சவாலான பணியாக இருந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நான்கு நாள் சுற்றுப்பயணமாக நிவ்யோர்க் சென்றுள்ள அவர் அங்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், ‘ஆப்கான் நிலைவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், காபூல் விமான நிலையத்தில் சேவைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா …

  7. சிக்கிம் மாநிலத்தில் சிக்கியிருந்த 2500 சுற்றுலாப்பயணிகள் மீட்பு December 29, 2018 பனிப் பொழிவு காரணமாக சிக்கிம் மாநிலத்தில் சிக்கியிருந்த 2500 சுற்றுலாப் பயணிகளை மீட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடுமையான குளிர் நிலவிவருவதனால் பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசுகிறது. அத்துடன் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதனால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா-சீன எல்லைக்கு மிகவும் அருகாமையில் உள்ள நதுலா என்ற இடத்தில் நிறு…

  8. நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் February 28, 2019 நிகோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி மாதம் அந்தமான் நிகோபார் தீவுகளில் 6 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/114719/

  9. அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா விதித்துள்ள வரி அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த வரி அதிகரிப்பை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாட தான் எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக இந்திய கடந்த சில ஆண்டுகளாக அதிக வரியை விதித்துவந்துள்ள நிலையில், அண்மையில் அதனை அதிகளவில் அதிகரித்துள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜப்பானில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பக்க அமர்வு…

    • 0 replies
    • 698 views
  10. 400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் எதிரிகளின் இலக்குகளை தரையில் இருந்து தாக்கும் வல்லமை கொண்டது எஸ் 400 ரக ஏவுகனைகள் 2018-ல் எஸ்-400 ஏவுகனைகள் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. NEW DELHI: தரையில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரமுள்ள எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் எஸ் - 400 ரக ஏவுகனைகளை 2023 ஏப்ரலுக்குள் ரஷ்யா வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் கடந்த 2018 அக்டோபர் 5-ம்தேதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ரஷ்யாவிடம் இருந்து ஏவுகனைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா நெருக்கடி கொடுத்திருந்த நிலையில் அதனை மீறி இந்தியா இந்த நடவடிக்கையை எட…

    • 0 replies
    • 713 views
  11. இந்திய கடற்படைத் தளங்களை உளவு பார்க்கும் சீனக் கப்பல்! இந்திய கடற்படைத் தளங்களை உளவு பார்ப்பதற்காக சீனக் கப்பலொன்று அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் கடற்பரப்பில் புகுந்த அந்தக் கப்பல் அங்கேயே சில தினங்கள் தங்கியிருந்து உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அந்தமான்- நிகோபார் தீவுகளின் அருகே காணப்படுகின்ற இந்திய கடற்படையின் தளத்தை உளவுபார்க்க குறித்த கப்பல் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய உளவுத்துறையினர் மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். சீனாவின் அதிநவீன உளவு கப்பல் இந்திய கடல்பகுதியில் ஊடுருவியிருப்பது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகி…

  12. சர்வதேச மத சுதந்திரத்திற்கான 2020 ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது அமெரிக்கா. அதில் கூறிஇருப்பதாவது: மத சுதந்திர விசயத்தில் கவலைப்பட வேண்டிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினரை தாக்குவோர் மீது எந்தநடவடிக்கையும் இல்லை. மத சுதந்திரத்தை நசுக்குவதில் வடகொரியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. வழிபாட்டு தலங்களை தகர்க்க வேண்டாம் என வியட்நாமை கேட்டுக்கொண்டு வருகிறோம். உய்கூர்இஸ்லாமியர், கிறிஸ்தவர், கம்யூ., கட்சிக்கே உண்மையா இருக்க சீனாவின் விருப்பமாக இருக்கிறது என அந்த அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்து உள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2529808 https://www.uscirf.gov/sites/default/files/USCIRF 2020 Annual Report_42720_new_0.pdf …

    • 0 replies
    • 318 views
  13. பிச்சை எடுத்தோ, திருடியோ, கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள் - டெல்லி உயர்நீதிமன்றம் பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள், பணம் கொடுத்து வாங்குங்கள்... எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவின் 2வது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. டெல்லியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்சிஜன் இல்லாததன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உயி…

  14. ஃபிரோஸ் காந்தி நினைவு தினம்: இந்திரா காந்தியின் விதவை கோலத்துக்கு என்ன காரணம்? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEHRU MEMORIAL MUSEUM AND LIBRARY அது 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி. இந்திரா காந்தி அப்போதுதான் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி பாலம் விமானப்படை தளத்தை வந்தடைந்தார். அவரிடம் உடனடியாக ஃபிரோஸ் காந்திக்கு மற்றொரு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஃபிரோஸ் சேர்க்கப்பட்டிருந்த வெல்லிங்டன் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஃபிரோஸின் உதவியாளர் உஷா பகத் இருந்தார். "இரவு முழுவதும் …

  15. முகலாய மன்னர் ஒளரங்கசீப் - ஹீராபாய் காதல் வரலாறு: கண்டவுடன் காதல் வலையில் விழுந்த இளவரசர் வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MEDIEVAL INDIAN HISTORY (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 57ஆவது கட்டுரை இது.) முதல் பார்வையிலேயே ஏற்பட்ட காதலின் கதை இது. அதுவும் 49 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாய பேரரசர் ஔரங்கசீப் ஆலம்கீரின் காதல்…

  16. 10 NOV, 2023 | 11:50 AM 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார் ” என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ம் தேது நடைபெற்றது. அதேபோல மிசோரம் மாநில சட்டபேரவையும் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நவம்பர் 7அன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 70தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கான தேர்தல் வருகிற நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மத்திய பி…

  17. பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றன என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா, ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் ஃபைஸ் ஹமீது ஆகியோரும் சென்றுள்ளனர். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இம்ரான் கான் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தில் அதிபர் டிரம்பை சந்தித்து அவர் பேசினார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை, இம்ரான்கான் சந்தித்து பேசியபோது இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துவது எ…

    • 0 replies
    • 656 views
  18. காலக்கெடு நிறைவு: கண்ணீருடன் விடைபெற்று அட்டாரி வழியாக நாடு திரும்பிய பாகிஸ்தானியர்கள்! 28 Apr, 2025 | 10:45 AM புதுடெல்லி: இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாட்டிற்குதிரும்பி சென்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) பஹல்காமில் நடந்த கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியாஇ பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்தது. அதன்படி சார்க் விசாக்கள் ஏப்.26ம் தேதி நிறைவடைந்தது. மற்ற விசாக்கள் . நேற்றுடன் முடிவடைந்தன.மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்.29 ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த முடிவுகளால் இரு நாடுகள…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மசூத் அசார் கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி 9 மே 2025 ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார், முதன்முதலில் ஜனவரி 29, 1994 அன்று வங்கதேச விமானத்தில் டாக்காவிலிருந்து டெல்லிக்கு வந்தார். அவரிடம் போர்த்துகீசிய பாஸ்போர்ட் இருந்தது. இந்திரா காந்தி விமான நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் அவரைப் பார்த்து, "நீங்கள் பார்க்க ஒரு போர்த்துகீசியர் போல இல்லை" என்றார். மசூத் உடனே, "நான் குஜராத்தி பூர்வீகம் கொண்டவன்" என்றார். அதைக் கேட்ட பிறகு, அவரை மீண்டும் ஏறெடுத்துப் பார்க்காமல், பாஸ்போர்ட்டில் சீல் வைத்தார் அந்த அதிகாரி. இந்தியா வந்த சில நாட்களுக்குள், ஸ்ரீநகரின் தெருக்களில் உலாவத் தொடங்கினார் மச…

  20. கொரோனா வைரஸ்: ஊரடங்கை மீறி கோயில் தேர் இழுக்க கூடிய கூட்டம் இம்ரான் குரேஷி பிபிசி ANI கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மீறி கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றின் தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கோவிட்-19 தொற்றுக்கு இந்தியாவில் நிகழ்ந்த முதல் மரணம் கலபுரகி மாவட்டத்தில்தான். அந்த மாவட்ட நிர்வாகம் தற்போது திருவிழா நடத்தப்பட்ட ரெவூர் கிராமத்தின் எல்லைகளை மூடி அதை தனிமைப்படுத்திவிட்டது. மேலும் சித்தபுர் தாலுகாவின் வட்டாச்சியர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர், சமூக விலகளை மீறும் வகையில், தேர் திருவிழாவை தடுக்காமல் இருந்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். …

  21. நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல் பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர். இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை ந…

  22. பெண்கள் சந்திக்கும் பாலியல் அச்சுறுத்தல்கள்: பரிந்துரைகளை ஆராய புதிய குழு நியமனம்! பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் அச்சுறுத்தல்களை களைவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்க, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவொன்று அமையப்பெறவுள்ளது என்னும் தகவல்கள் அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இக் குழு அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்த குழுவில் பெண் அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோருடன், மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்ஹரி இடம்பிடித்துள்ளார். முக்கிய அமைச்சர்களை உள்ளடக்கிய இக்குழு, ஏற்கனவே உள்ள பணியிடங்களில் பெண்களுக்கான ப…

  23. குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் December 29, 2018 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ள…

  24. படத்தின் காப்புரிமை Getty Images முத்தலாக் மசோதா குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நடந்து முடிந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேறியது. இந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதாக முறைப்படி அறிவித்தார். இதையடுத்து அவைத் தலைவராக உள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு எதிர்தக் கட்சித் தலைவர் குலாம் நபி ஆச…

  25. பங்களாதேஷில் பாரிய தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசம் – 50 ஆயிரம் மக்கள் பாதிப்பு! பங்களாதேஷில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள சாலண்டிகா குடிசைப் பகுதி ஒன்றிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கினால் வீடுகளின் கூரைகள் அமைக்கப்பட்டமை காரணமாக தீயினை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த பாரிய தீ விபத்து காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வீடுகளை இழந்தவர்கள் தற்போது வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.